Breaking News LIVE: தொடரும் கனமழை... நாளை காரைக்காலில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை!
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் கீழே காணலாம்.
மழையின் காரணமாக நாளை காரைக்கால் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை மாவட்ட ஆட்சியர் முகமதுமன்சூர் அறிவித்துள்ளார்.
அதானி நிறுவனங்களின் தொடர் வெளியீடு பங்கு விற்பனையை திரும்ப பெறுவதாக அறிவித்த நிலையில், அபுதாபியின் IHC-க்கு அதானி ரூ. 3,260 கோடியைத் திருப்பிக் கொடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
உச்சநீதிமன்றத்தில், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக அங்கீகரிக்கக் கோரும் எடப்பாடி பழனிசாமி மனுவை, தள்ளுபடி செய்ய வேண்டும் என பழனிசாமியின் இடையீட்டு மனுவுக்கு தேர்தல் ஆணையம் பதில் மனு அளித்துள்ளது.
இரட்டை இலை சின்னம் தொடர்பாக பழனிசாமியின் கோரிக்கை குறித்து தேர்தல் நடத்தும் அலுவலர் முடிவெடுப்பார்” என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை புது டெல்லியில் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் உடன் சந்தித்தார். இலங்கையில் 13- வது சட்டத் திருத்ததை மாற்றமின்றி அமல்படுத்த கோரிக்கை விடுத்தார்.
திருச்சி அருகே உள்ள மணப்பாறையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்த முருகன் என்பவர் மீது மாடு முட்டி உயிரிழந்துள்ளார்.
விபத்துகளில் தொழிலாளர்கள் உயிரிழந்தது தொடர்பாக மத்திய, மாநில அரசுகளிடம் விளக்கம் கேட்டு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தமிழ்நாடு அரசின் பட்ஜெட் அடுத்த மாதம் தாக்கல் செய்யப்பட்ட உள்ளது - கள ஆய்வில் முதலமைச்சர் திட்ட நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் தகவல்
சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பேருந்துகள் மீது கல்வீசிய 200 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.
ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
அதிமுக நாடாளுமன்ற குழு தலைவர் தம்பிதுரை பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துள்ளார். சிறப்பான பட்ஜெட்டுக்கு பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்ததாக சந்திப்புக்கு பின் தம்பிதுரை தகவல்.
அதானி குழுமத்தால் வங்கிகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு, அதானி குழுமத்துக்கு வழங்கப்பட்ட கடன் விவரத்தை தெரிவிக்க ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
பட்ஜெட் கூட்டத்தொடர் சுமூகமாக நடத்துவது குறித்து மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருகிறார்
மதுரவாயல் - சென்னை துறைமுகம் ஈரடுக்கு உயர்மட்ட பாலம் ரூ,5,855 கோடியில் அமைக்கப்பட உள்ளது
பட்ஜெட் தாக்கத்தின் எதிரொலியால் சென்னையில் ஆபரணத்தங்கம் ரூபாய் 43 ஆயிரத்து 800 ஆக அதிகரித்துள்ளது.
பட்ஜெட் தாக்கத்தின் எதிரொலியால் சென்னையில் ஆபரணத்தங்கம் ரூபாய் 43 ஆயிரத்து 800 ஆக அதிகரித்துள்ளது.
பங்குச்சந்தை ஏற்ற, இறக்கத்தால் நிறுவனத்தின் எதிர்காலம் பாதிக்காது என்று அதானி விளக்கம் அளித்துள்ளார்.
வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் இலங்கை-திரிகோணமலையில் இருந்து கிழக்கு-தென்கிழக்கே சுமார் 115 கிலோ மீட்டர் தொலைவிலும், காரைக்காலில் இருந்து தென்கிழக்கே சுமார் 400 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக பாம்பன் மற்றும் தூத்துக்குடி துறைமுகங்களில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
சென்னை, கடலூர், நாகப்பட்டினம் எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிக்கிறது.
மயிலாடுதுறையில் இன்று மழை காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.
வேலூர் சத்துவாச்சாரி பாரதிநகரில் கட்டப்பட்டு வரும் சுகாதார நலமையத்தை முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு செய்தார். கள ஆய்வில் முதல்வர் திட்டத்தின் கீழ் திடீரென ஆய்வில் ஈடுபட்ட அவர், மாணவர்களுக்கான காலை சிற்றுண்டி உணவு தயாரிப்புக் கூடத்தையும் பார்வையிட்டார். தொடர்ந்து, மாணவர்களுக்கான உணவை தரமான முறையில் செய்ய பணியாளர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தினார்.
திருவாரூரில் மழை காரணமாக இன்று பள்ளிகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாகை மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மழை காரணமாக இன்று (பிப்ரவரி 2ஆம் தேதி )விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.
சிவகாசி, விருதுநகரில் 3 மாடிகளை கொண்ட எலக்ட்ரிகல் கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதம் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
4 வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் தியை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
Background
தமிழ்நாட்டில் தொடர்ந்து 257ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையாகி வருகிறது.
கொரோனா வைரஸ் தொற்றால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்த நிலையில், 2021ஆம் ஆண்டு நவம்பர் 4 ஆம் தேதி, பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 5ம், டீசல் விலை ரூ. 10ம் மத்திய அரசால் குறைக்கப்பட்டது. அன்றைய தினம் தமிழ்நாட்டில் லிட்டர் பெட்ரோல் ரூ 101.40க்கும் டீசல் விலை ரூ 91.43க்கும் விற்பனையானது.
இதனைத் தொடர்ந்து ஐந்து மாநிலத் தேர்தல் நடைபெற்றதால் விலை உயர்த்தப்படாமல் இருந்தது. குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுக்கு பின்னர் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதன் பின்னரும் விலையில் எந்தவிதமான மாற்றமும் ஏற்படவில்லை.
இன்றைய விலை
அதன்படி இன்று (பிப்ரவரி.02) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. முன்னதாக எரிபொருள் விலை உயர்வால் பால், டீ, காய்கறிகள், இதர உணவுப் பொருள்களின் விலை ஏறியிருந்தது. இச்சூழலில், விலை மாற்றமின்றி பெட்ரோல், டீசல் விலை இருநூறு நாள்களை கடந்துள்ளது.
எத்தனால் கலந்த பெட்ரோல்
கடந்த 2018ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்த 'தேசிய உயிரி எரிபொருள் கொள்கை 2030ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனாலைக் கலந்து விற்க இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், அந்த இலக்கு தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக 2025ஆம் ஆண்டு என மாற்றியமைக்கப்பட்டது.
இருபது சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் டிசம்பர் அல்லது ஜனவரி முதல் நாட்டில் கிடைக்கும் என பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எத்தனால் உற்பத்தியை நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். ஏப்ரல் 2023க்கு முன்னதாக டிசம்பர் அல்லது ஜனவரியில் 20 சதவீதம் கலப்பு எரிபொருள் சந்தைக்கு வரும் என்று நான் நம்புகிறேன்" என்றார்.
நெகிழ்வான எரிபொருள் வாகனங்கள் (கலப்பு எரிபொருளில் இயங்கும் வாகனங்கள்) கிடைக்கும் பிரேசிலை உதாரணமாக மேற்கோள் காட்டி பேசிய ஹர்தீப் சிங் பூரி, "நுகர்வோர் விருப்பப்படி எத்தனால் அல்லது பெட்ரோலை எடுத்துக் கொள்ளலாம். இது அரசாங்கத்தின் இறுதி இலக்காக இருக்கும்.
இருப்பினும், அந்த நிலையை அடைய, சில தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. அதற்கான, பணிகள் நடந்து வருகின்றன. எத்தனால் கலப்படம் தொடர்பாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுடன் ஒரு முக்கிய சந்திப்பை நடத்த உள்ளோம். பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலப்பதை அடைவதற்கான இலக்கு தேதியை 2025ஆம் ஆண்டுக்கு ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியா முன்னெடுத்துள்ளது.
பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதற்கு, நமது நாட்டிற்கு 1,000 கோர் லிட்டர் கொள்ளளவு தேவைப்படுகிறது. 450 கோடி லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 400 கோடி லிட்டருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 20 சதவிகித கலப்பிற்கான போதுமான எத்தனால் கைவசம் உள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து பெட்ரோலிலும் 20 சதவீதம் எத்தனால் இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -