Breaking News LIVE: குன்னூரில் சாலையில் நின்று கொண்டிருந்த 12-ம் வகுப்பு மாணவிக்கு கத்திக்குத்து

Breaking News LIVE: நாட்டில் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை ஏபிபி நாடு லைவ் ப்ளாக்கில் உடனுக்குடன் கீழே காணலாம்.

ABP NADU Last Updated: 29 Apr 2022 11:29 AM
பாலியல் தொந்தரவு : மாணவி தற்கொலை முயற்சி

நெல்லையில் தனியார் கல்லூரி மாணவி ஒருவர் கல்லூரி கட்டடத்தின் மாடியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயற்சி : பாலியல் ரீதியாக தொந்தரவு, தகாத வார்த்தைகளால் திட்டியதாக முதல்வர் மற்றும் அவரது உதவியாளர் மீது பலத்த காயமடைந்த மாணவி புகார் 

விசாரணை கைதி மரணம் : நிவாரணத்தை திருப்பி அளிக்க முடிவு

சென்னையில் விசாரணை கைதி விக்னேஷ் மரணத்தில் ரூ. 1 லட்சம் நிவாரணத்தை திருப்பி அளிக்க குடும்பத்தினர் முடிவெடுத்துள்ளனர். விக்னேஷ் மரணத்தில் காவல்துறை மீது குற்றசாட்டு எழுந்த நிலையில் நிவாரணத் தொகையை நீதிமன்றத்தில் திருப்பி அளிக்க முடிவெடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

அரசுப் பள்ளி மாணவியிடம் சில்மிஷம்: தலைமை ஆசிரியர் போஸ்கோ சட்டத்தில் கைது

தேன்கனிக்கோட்டை அருகே அரசுப் பள்ளி மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட தலைமை ஆசிரியர் போஸ்கோ சட்டத்தில் கைது செய்து அஞ்செட்டி போலீஸாா் விசாரித்து வருகின்றனர். 

கோடநாடு வழக்கு : முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நேர்முக உதவியாளரிடம் விசாரணை!

கோடநாடு வழக்கு தொடர்பாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நேர்முக உதவியாளர் பூங்குன்றனிடம் தனிப்படை போலீசார் விசாரணை

குன்னூரில் 12-ம் வகுப்பு மாணவிக்கு கத்திக்குத்து

நீலகிரி மாவட்டம் குன்னூரில் சாலையில் நின்றுகொண்டிருண்ட 12-ம் வகுப்பு மாணவியை கத்தியால் குத்திவிட்டு தப்பிச்சென்ற இளைஞரை பொதுமக்கள் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

திட்டமிட்டபடி பள்ளி மாணவர்களுக்கு வகுப்பு தேர்வு நடைபெறும்

1 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு திட்டமிட்டபடி மே 6 முதல் மே 13-க்குள் தேர்வு நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது

உயர்ந்தது தங்கம் விலை

இன்று தங்கம் கிராமிற்கு ரூபாய் 34 அதிகரித்து ரூபாய் 4884க்கு விற்கப்படுகிறது. சவரன் தங்கம் ரூபாய் 272 அதிகரித்து ரூபாய் 39,072க்கு விற்கப்படுகிறது.

ரம்ஜான் பண்டிகைக்கு 5 மணி நேரத்தில் விற்றுதீர்ந்த ஆடுகள்.. கடலூரில் விற்பனை ஜோர்!

கடலூர் மாவட்டம் வேப்பூர் வெள்ளி கிழமை ஆட்டு சந்தையில் ரம்ஜான் பண்டிகையால் 5 மணி நேரத்தில்  4 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை

இலங்கையில் தமிழர்களுக்கு உதவ அனுமதி கோரி தீர்மானம்

இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு உதவ மத்திய அரசு அனுமதி தரகோரி சட்டப்பேரவையில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட இருக்கிறது. 

தூத்துக்குடியில் மேலும் 2 அலகுகளில் மின்உற்பத்தி!

நிலக்கரி வந்ததால் தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் மேலும் 2 அலகுகளில் மின்உற்பத்தி தொடங்கியுள்ளது. 

ஸ்ரீரங்கம் கோயில் தேரோட்டம் தொடங்கியது

திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் கோலாகலமாக தொடங்கியது 

ஐபிஎல் தொடர் : லக்னோ - பஞ்சாப் இன்று மோதல்

இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ - பஞ்சாப் அணிகள் நேருக்கு நேர் மோத இருக்கின்றனர். 

டெல்லியில் இன்று உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள் மாநாடு...

அனைத்து மாநில உயர்நீதிமன்றங்களின் 2 நாள் தலைமை நீதிபதிகள் மாநாடு டெல்லியில் இன்று தொடக்கம் 

மருத்துவத்துறை மானிய கோரிக்கை மீது இன்று விவாதம்!

சட்டப்பேரவையில் மருத்துவம் & மக்கள் நல்வாழ்வுத்துறை மானிய கோரிக்கை மீது இன்று விவாதம் நடக்கிறது. 

Background

சென்னையில் 23வது நாளாக தொடர்ந்து விலை மாற்றமின்றி பெட்ரோல் டீசல் விலை விற்கப்படுகிறது. அதன்படி இன்று ஒரு லிட்ர் பெட்ரோல் விலை 110.85 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது. அதேபோல், டீசல் விலை லிட்டருக்கு மாற்றமின்றி 100.94 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.