இன்று பிற்பகல் 2.30 மணியளவில், வங்க கடலில் பெஞ்சல் புயல் உருவானதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த பயுலானது, நாளை மதியம் காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே கரையை கடக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், அடுத்த 5 நாட்களுக்கு எங்கெல்லாம் அதிகனமழை , கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது குறித்து பார்ப்போம்.
இன்று மழை பெறும் மாவட்டங்கள்:
செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மாவட்டங்கள் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கன மழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை திருவண்ணாமலை. கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதற்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
நாளை மழை பெறும் மாவட்டங்கள்: 30:11-2024
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி கடலூர் மாவட்டங்கள், புதுவையில் ஒருசில இடங்களில் அதி கன மழைக்கான வாய்ப்பு இருப்பதற்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை திருவண்ணாமலை, வேலூர், பெரம்பலூர் அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை மற்றும் கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
நாளை மறுநாள்: 01:12-2024
நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் கன முதல் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், தேனி மற்றும் மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு இருப்பதற்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.