நடிகை சமந்தாவின் தந்தை ஜோசப் பிரபு (Joseph Prabhu) உயிரிழந்தார். இன்ஸ்டாகிராமில் அவர் "Until we meet again Dad." என போஸ்டில் குறிப்பிட்டுள்ளார். ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அவர் தந்தையின் மரணத்திற்கு இரங்கல் மற்றும் ஆறுதல் தெரிவித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.




தமிழ், தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகை சமந்தாவின் தந்தை ஜோசப் பிரபு உயிரிழந்ததற்கான காரணம் என்ன என்று தெரியவில்லை. சமந்தா தந்தை குறித்து சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பேசியிருந்தார். சமந்தாவின் தந்தை திடீர் உயிரிழப்பிற்கு ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.சமீபத்தில் சமந்தா நடிப்பில் வெளியான ’citadel honey bunny’  நல்ல வரவேற்பை பெற்றது. 


சமந்தாவின் வாழ்க்கையில் தந்தை ஜோசப் பிரபு, தாய் Ninette Prabhu இருவரும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவர் என்பதை அவர் பல இடங்களில் தெரிவித்துள்ளார். சமீபத்திய நேர்காணலில் அவர் தனது தந்தையின் வளர்ப்பு முறை பற்றி சில விசயங்களை தெரிவித்திருப்பார். சமந்தா அவரது அப்பாவுக்கு இடையே இருந்த சிக்கல் குறித்தும் அவர் பேசியிருந்தார். “ பல நேரங்களில் என்னை பாதுகாப்பாக வளர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்டது என்னுடைய செயல்களுக்கு அங்கீகாரம் வேண்டும் சிறுமியாக நான் இருக்க வேண்டிய சூழலை உருவாக்கியது. என்னுடைய தந்தை பெரும்பாலான இந்திய பெற்றோரின் மனம் கொண்டவர். பிள்ளையை பாதுகாக்க வேண்டும் என்று குழந்தைகளால் செய்ய கூடிய செயல்களையும் செய்ய விடமாட்டார்கள். ஒருமுறை அப்பா என்னிடம், “ நீ அவ்வளவு Smart இல்லை.’ என்று தெரிவித்திருக்கிறார். இது இந்திய பெற்றோர்களுக்கு இருக்கும் மனநிலை. இதனாலேயே வெகு காலத்திற்கு 'I’m not smart and not good enough.’ என நினைத்திருந்தேன். ” என்று தெரிவித்திருந்தார்.



கரன் ஜோகர் உடனான உரையாடல் நிகழ்ச்சியில் சமந்தா சினிமாவிற்கு வந்தது குறித்து தெரிவிக்கையில்,” என் குடும்பம் கடுமையான பொருளாதார நெருக்கடியில் இருந்த காலத்தில் எனக்கு வேறு வழியில்லாமல் போய்விட்டது. எனது கல்வியை தொடர தேவையான நிதி இல்லாமல்போனது. அப்போது என்னிடம் இருந்த வாய்ப்பை பயன்படுத்தினேன். இருப்பினும், நான் அந்த காலங்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். என் அப்பாவுக்கும்தான். அவர் No, I can’t pay your loans,’ என்று சொன்னது என்னுடைய வாழ்க்கையை மாற்றியது. “ என்று குறிப்பிட்டார்.