வங்க கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது புயலாக வலுப்பெற்றது.
ஃபெஞ்சல் புயல்:
சென்னையிலிருந்து தென்கிழக்கே 300 கி.மீ தொலைவிலும், புதுவையில் இருந்து 270 கி.மீ தொலைவிலும், நாகையில் இருந்து 260 கி.மீ தொலைவிலும், வங்க கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, இன்று பிற்பகல் 2.30 மணியளவில் புயலாக வலுப்பெற்றதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இது , நாளை பிற்பகல் காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே கரையை கடக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், இப்புயலானது 13 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருவதாகவும் , புயல் கரையை கடக்கும்போது, 90 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.