Breaking News LIVE: இன்னும் 5 மாதங்களில் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும்- தேர்தல் பரப்புரையில் அமைச்சர் உதயநிதி பேச்சு!
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் கீழே காணலாம்.
கிருஷ்ணகிரி, ஓசூர் அருகே ரயில்வே தண்டவாளத்தில் ரயில் மோதி தாய் - மகள் உயிரிழந்தனர். தாய் சின்னம்மா, மகள் சுசூலா அகியோர் தற்கொலை செய்துகொண்டனரா அல்லது விபத்தா என்று விசாரணை நடந்து வருகிறது.
திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை வழக்கில் கைதான மேலும் இருவருக்கு மார்ச் 7வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. கர்நாடகா மாநிலம் கோலாரில் பதுங்கி இருந்த குர்திஷ் பாஷா மற்றும் அஷ்ரப் உசேன் ஆகியோரை கைது செய்தது தனிப்படை போலீஸ்.
இராணுவ வீரர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக அளுநரைச் சந்தித்து பாரதிய ஜனதா கட்சி மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை புகார் அளித்தார்.
கிண்டியில் ஆளுநர் ஆர்.என். ரவியுடன் கே. அண்ணாமலை சந்தித்து பேசினார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு ஆதரவாக தமிழ்நாடு இளைஞர்நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சூரம்பட்டி பகுதியில் தேர்தல் பரப்புரை மேற்க்கொண்ட்டு வருகிறார்.
திருவண்ணாமலை ஏ.டி.எம். கொள்ளை வழக்கில் கர்நாடகத்தில் பதுங்கியிருந்த இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து முதல்வர் சுக்விந்தர் சிங் சுக்கு கூறும்போது, ''கடந்த 3 ஆண்டுகளாக குறிப்பிட்ட சில, தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்கு ஆவணங்கள் கசிய விடப்பட்டதையும் விற்கப்பட்டதையும் துறை ரீதியான விசாரணை மற்றும் உளவுத்துறை அறிக்கைகள் சுட்டிக் காட்டியுள்ளன. அதேபோல சமீபத்தில் நடத்தப்பட்ட தேர்வுகள் தொடர்பாகவும் புகார்கள் வந்துள்ளன.இதைத் தொடர்ந்து இமாச்சலப் பிரதேச அரசுப் பணியாளர் ஆணையத்தை உடனடியாகக் கலைக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது.
கன்னியாகுமரி, மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் மாசி மாச திருவிழாவை ஐந்தவ சேவா சங்கத்தின் அழைப்பிதழில் பாரதிய ஜனதா கட்சி, இந்து முன்னணி, வி.எச்.பி. நிர்வாகிகள் பெயர்கள் இடம்பெற்றிருந்தன. இதற்கு மக்களிடம் கடும் எதிர்ப்பு எழுந்த்தது. ஒரு கட்சியைச் சேர்ந்தவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதாக கூறப்பட்டது. இந்நிலையில், அழைப்பிதழ் மற்றும் நிகழ்ச்சி நிரலில் மாற்றம் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு, முன்னாள் ஒன்றிய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டது.
கன்னியாகுமரி, மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் மாசி மாச திருவிழாவை ஐந்தவ சேவா சங்கத்தின் அழைப்பிதழில் பாரதிய ஜனதா கட்சி, இந்து முன்னணி, வி.எச்.பி. நிர்வாகிகள் பெயர்கள் இடம்பெற்றிருந்தன. இதற்கு மக்களிடம் கடும் எதிர்ப்பு எழுந்த்தது. ஒரு கட்சியைச் சேர்ந்தவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதாக கூறப்பட்டது. இந்நிலையில், அழைப்பிதழ் மற்றும் நிகழ்ச்சி நிரலில் மாற்றம் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு, முன்னாள் ஒன்றிய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டது.
இராணுவ வீரர் பாபு கொலை, தடா பெரியசாமி இல்லத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது உள்ளிட்டவைகள் தொடர்பாகவும், தி.மு.க. அரசின் மீது குற்றம்சாட்டியும் பா.ஜ.க. மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி -யை சந்திக்கிறார்.
தமிழ்நாடு முழுவதும் வாக்களர் அட்டையை ஆதாருடன் இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இதுவரை 4.02 கோடி பேரின் வாக்களர் அட்டை ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் மன்சூர் அலிகான் பிறந்த நாள் இன்று..
மறைந்த முன்னாள் அமைச்சர் உபயதுல்லா படத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். உபயதுல்லா இல்லத்துக்கு சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். இரண்டு நாள் பயணமாக திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர், தஞ்சைக்கு சென்றுள்ளார்.
வேங்கைவயல் விவகாரத்தை விரைவாக விசாரிக்க கோரி இந்திய குடியரசுக் கட்சி தலைவர் செ.கு. தமிழரசன் தலைமை செயலரிடம் மனு அளித்துளார்.
Roopa IPS vs Rohini IAS: கர்நாடகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய ஐபிஎஸ் ரூபா மற்றும் ஐஏஎஸ் ரோகினி இடையேயான மோதலையடுத்து அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
ஐ.ஏ.எஸ். அதிகாரி ரோகிணி, ஐ.பி.எஸ். அதிகாரி ரூபா இருவரும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கர்நாடக அரசின் நில அளவைத்துறை ஆணையராக இருந்த ஐ.பி.எஸ். ரூபாவின் கணவர், முனீஸ் முட்கில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். நிர்வாகத்துறை முதன்மைச் செயலாளராக முட்கில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
பெங்களூரு சிறையில் இருந்தபோது சசிகலா லஞ்சம் கொடுத்து சிறப்பு சலுகைகளை பெற்றதாக குற்றம் சாட்டியவர் ரூபா.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கு தடை கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. வேறு ஒரு வழக்கில் ஏற்கனவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறி மனுவை நிராகரித்தது சென்னை உயர்நீதிமன்றம்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் பரிசுப் பொருட்கள் கொடுத்ததாக 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் அலுவலர் சிவகுமார் தகவல் - அனுமதி பெறாமல் இயங்கி வந்த 8 பணி மனைகள் அகற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
”மனிதரின் சிந்தனையைத் தீர்மானிப்பது அவரது தாய்மொழியேயாம். எத்தனை மொழிகளும் தத்தம் விருப்பத்தில் கற்றுக்கொள்ளலாம். அத்தனையிலும் அன்னை போல் இருப்பதால்தான் ஒரு மொழிக்கு மாத்திரம் தாய்மொழி என்று பேர். சிந்திப்பதை சொல்லில் வெளிப்படுத்தும் அனைவருக்கும் உலகத் தாய்மொழி நாள் வாழ்த்துகள்” - மநீம தலைவர் கமல்ஹாசன்
ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் பணியில் ஈடுபட உள்ள காவலர்கள் இன்று முதல் தபால் வாக்கு செலுத்த உள்ளனர். மொத்தம் 58 காவலர்களிடம் 12 பி படிவம் பெறப்பட்ட பின், வாக்கு சீட்டுகள் வழங்கப்பட்டு தபால் வாக்கு செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மார்ச் 5,6ஆம் தேதிகளில் மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, தேனி ஆகிய மாவட்டங்களில் முதலமைச்சர் ஸ்டாலின் களஆய்வு மேற்கொள்ள உள்ளார். முதலமைச்சர் என்ற திட்டத்தின் கீழ் 5 மாவட்டங்களில் களஆய்வு மேற்கொள்ள உள்ளார் ஸ்டாலின்.
Cm Stalin Review :மார்ச், 5, 6 தேதிகளில், திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, தேனி ஆகிய 5 மாவட்டங்களில் முதலமைச்சர் ஸ்டாலின் கள ஆய்வு செய்கிறார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் மார்ச் 1ஆம் தேதி மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் முதல்வர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற உள்ளதாக திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள சோளகாட்டில் அடையாளம் தெரியாத 25 வயது இளைஞர் எரித்துக் கொலை - உடலை மீட்டு பெரம்பலூர் நகர காவல்துறையினர் விசாரணை
தேனியில் தனியார் நிறுவன ஊழியர் வெள்ளையப்பனிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.60 லட்சம் கொள்ளை - பணத்தை இரட்டிப்பு செய்து தருவதாக கூறி கொள்ளையடித்து சென்ற 5 பேரை தேடும் பணி தீவிரம்
Gold Rate : தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 குறைவு
தாய்மொழிதான் ஓர் இனத்தின் அடையாளம் எனவும் தொன்மையும் காலத்துகேற்ப தகவமைத்துக் கொள்ளும் திறனும் ஒருங்கே பெற்ற நம் தாய்மொழியாம் தமிழை காப்போம் என உலகத் தாய்மொழி தினத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அன்பு ஜோதி ஆசிரமம் தொடர்பான வழக்கை விசாரிக்க சிபிசிஐடி டிஎஸ்பி அருண் கோபாலன் தலைமையிலான குழுவினர் விழுப்புரம் செல்கின்றனர்.
தருமபுரியில் சிக்கிய மக்னா யானை டாப்சிலிப் வனப்பகுதியில் இருந்து வெளியேறி பொள்ளாச்சி அருகே தஞ்சம் - நாதேகவுண்டானுர் பகுதியில் யானை சுற்றி திரிகிறது
தஞ்சாவூரில் பணிமனை முன்பு ஏஐடியுசி போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - போக்குவரத்து துறையில் புதிய நியமனங்களை ஒப்பந்த முறையில் நியமிக்க எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்
பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், டெல்லி, சண்டிகர், உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களில் போதைப் பொருள் மற்றும் கள்ளநோட்டு கடத்தல்காரர்கள் மீது பதியப்பட்ட வழக்குகள் தொடர்பாக என்.ஐ.ஏ சோதனை நடைபெற்று வருகிறது
Background
சென்னையில் தொடர்ந்து 9வது மாதங்களாக பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையாகி வருவது வாகன ஓட்டிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
9 மாதங்களை கடந்தும் மாறாத விலை
கொரோனா வைரஸ் தொற்றால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் மிகப்பெரிய பொருளாதார பாதிப்பை சந்தித்தனர். இதனை கருத்தில் கொண்டு 2021 ஆம் ஆண்டு நவம்பர் 4 ஆம் தேதி மத்திய அரசால் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 5ம், டீசல் விலை ரூ.10ம் குறைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. அன்றைய தினம் தமிழ்நாட்டில் லிட்டர் பெட்ரோல் ரூ 101.40க்கும் டீசல் விலை ரூ 91.43க்கும் விற்பனையானது.
அதன்பின்னர் 5 மாதங்கள் கழித்து கடந்த ஆண்டு மே மாதம் 22 ஆம் தேதி பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் ஏற்பட்டது. அப்போது கலால் வரி குறைப்பால் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை ரூபாய்க்கு 6ம் குறைந்தது. இந்தசூழலில் பெட்ரோல், டீசல் விலை 276வது நாளாக தொடர்ந்து விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது.
அதன்படி இன்று (பிப்ரவரி 21) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. முன்னதாக எரிபொருள் விலை உயர்வால் பால், டீ, காய்கறிகள், இதர உணவுப் பொருள்களின் விலை ஏறியிருந்தது. இச்சூழலில், விலை மாற்றமின்றி பெட்ரோல், டீசல் விலை கிட்டதட்ட 9 மாதங்களை கடந்தது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எத்தனால் கலந்த பெட்ரோல்
கடந்த 2018 ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்த 'தேசிய உயிரி எரிபொருள் கொள்கை 2030ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனாலைக் கலந்து விற்க இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், அந்த இலக்கு தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக 2025 ஆம் ஆண்டு என மாற்றியமைக்கப்பட்டது.
இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, ”இருபது சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் டிசம்பர் அல்லது ஜனவரி முதல் நாட்டில் கிடைக்கும்” என பெட்ரோலியம் மற்றும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எத்தனால் உற்பத்தியை நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். ஏப்ரல் 2023க்கு முன்னதாக டிசம்பர் அல்லது ஜனவரியில் 20 சதவீதம் கலப்பு எரிபொருள் சந்தைக்கு வரும் என்று நான் நம்புகிறேன்" என் கூறினார்.
நெகிழ்வான எரிபொருள் வாகனங்கள் (கலப்பு எரிபொருளில் இயங்கும் வாகனங்கள்) கிடைக்கும் பிரேசிலை உதாரணமாக மேற்கோள் காட்டி பேசிய ஹர்தீப் சிங் பூரி, "நுகர்வோர் விருப்பப்படி எத்தனால் அல்லது பெட்ரோலை எடுத்துக் கொள்ளலாம். இது அரசாங்கத்தின் இறுதி இலக்காக இருக்கும்.
இருப்பினும், அந்த நிலையை அடைய, சில தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. அதற்கான, பணிகள் நடந்து வருகின்றன. எத்தனால் கலப்படம் தொடர்பாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுடன் ஒரு முக்கிய சந்திப்பை நடத்த உள்ளோம். பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலப்பதை அடைவதற்கான இலக்கு தேதியை 2025ஆம் ஆண்டுக்கு ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியா முன்னெடுத்துள்ளது.
பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதற்கு, நமது நாட்டிற்கு 1,000 கோர் லிட்டர் கொள்ளளவு தேவைப்படுகிறது. 450 கோடி லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 400 கோடி லிட்டருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 20 சதவிகித கலப்பிற்கான போதுமான எத்தனால் கைவசம் உள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து பெட்ரோலிலும் 20 சதவீதம் எத்தனால் இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -