Breaking News LIVE: மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி: இந்தியா - அயர்லாந்து ஆட்டம் மழையால் நிறுத்தி வைப்பு
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் கீழே காணலாம்.
இந்தியா மற்றும் அயர்லாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான உலக கோப்பை கிரிக்கெட் போட்டி, மழையால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
பண மோசடி புகாரில் கரூர் அன்புநாதன் கைது : ரூ. 6 கோடி மோசடி புகாரில் கரூர் அன்புநாதனை கைது செய்தது குற்றப்பிரிவு போலீஸ்
திருச்சியில் காவலர் மீது அரிவாள் வெட்டு தாக்குதல் நடத்திய இரண்டு ரவுடிகள் துரை, சோமு மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது
அடிப்படை தொண்டர்கள் தான் தலைமையை தேர்ந்தெடுக்க வேண்டும் என சென்னையில் பண்ருட்டி ராமசந்திரன் தலைமையில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பேசியுள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வருகையையொட்டி திருவாரூர் மாவட்டத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள் ட்ரோன் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிப்ரவரி 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் திருச்சி மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்.
விழுப்புரம் அன்புஜோதி ஆசிரமத்தில் காணாமல் போனவர்கள் குறித்த வழக்கில் விசாரணை நிலை அறிக்கையை தாக்கல் செய்ய காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே அகழிக்குள் விழுந்து தாய் மற்றும் குட்டியானை 1 மணி நேர போராட்டத்திற்குப் பின் மீட்பு - பொஸ்பெராவில் ஊருக்குள் வராமல் தடுப்பதற்காக வெட்டப்பட்ட அகழியில் யானைகள் விழுந்தது
உத்தரப்பிரதேச சட்டப்பேரவையில் ஆளுநருக்கு எதிராக எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் முழக்கம் - பட்ஜெட் உரையை படிக்க விடாமல் ஆளுநர் வெளியேற வேண்டும் என முழக்கமிட்டு அமளியில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு
புதுச்சேரி லெனின் வீதியில் உள்ள ஏடிஎம் மையத்தில் வெல்டிங் மிஷினுடன் புகுந்து கொள்ளையடிக்க முயன்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். பணம் எடுக்க வந்த நபரின் அளித்த தகவலின் பேரில் போலீசார் விரைந்து சென்று இளைஞர் அனுவை கைது செய்தனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆற்றில் மூழ்கி இறந்த மாணவியின் தந்தையின் காலில் விழுந்து ஆசிரியர் மன்னிப்பு கேட்டுள்ளார். மாணவி தமிழரசியின் தந்தை ராஜ்குமார் காலில் விழுந்து உதவி தலைமை ஆசிரியர் பரிமளா மன்னிப்பு கோரியுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகேயுள்ள பிலிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மீண்டும் திறப்பு - கடந்த பிப்ரவரி 15 ஆம் தேதி கரூர் மாயனூர் காவிரி ஆற்றில் மூழ்கி இப்பள்ளி மாணவிகள் 4 பேர் பலியான நிலையில் பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது.
நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் குடிநீர் முறையாக வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் - சிந்துபூந்துறை, மேகலிங்கபுரம் பகுதிகளில் உள்ள மக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் செய்ததால் போக்குவரது பாதிப்பு
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி இடையாத்தூர் பொன்மாசி அய்யனார் கோயில் திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி தொடக்கம் - நிகழ்வில் 600 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு
சென்னையில் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் ஓ. பன்னீர்செல்வம் தரப்பு ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது. இந்த கூட்டத்தில் ஓபிஎஸ், மனோஜ் பாண்டியன், வைத்தியலிங்கம், பிரபாகர், மாவட்ட செயலாலர்கள், முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.
மாரடைப்பால் உயிரிழந்த நடிகர் மயில்சாமியின் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “நீண்டகால நண்பர் மயில்சாமி. அவர் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர். அதைவிட சிவனின் பக்தர். ஒவ்வொரு முறையும் சிவராத்திரி அன்று திருவண்ணாமலை சென்றுவிடுவார். அங்கு அவர் ஹீரோவாக நடித்து படம் வெற்றதைபோல சந்தோஷப்படுவார். இது தற்செயலாக நடக்கவில்லை. ஆண்டவனின் கணக்கு. மயில்சாமியின் கடைசி ஆசையை கண்டிப்பாக நிறைவேற்றுவேன்” எனத் தெரிவித்தார்.
விழுப்புரம் அருகே கப்பூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜன்(22)என்ற இளைஞர் செங்கலால் அடித்து கொலை - நண்பர்களுடன் மது அருந்து சென்ற நிலையில், காதல் விவகாரத்தில் கொலை செய்ததாக கார்த்தி மற்றும் சத்தியராஜ் ஆகிய இருவர் காணை காவல் நிலையத்தில் சரண்
திருப்பதி ஏழுமலையான் கோயில் அருகே வராகசுவாமி பக்தர்கள் ஓய்வறை எதிரே உள்ள கழிவறையில் பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெட்ரோல் ஊற்றி தீக்குளித்த பெண்ணை தேவஸ்தான அதிகாரிகள், பொதுமக்கள் காப்பாற்ற முயற்சித்த நிலையில் பெண் உயிரிழந்துள்ளார்.
சென்னை அயனாவரத்தில் வாகன சோதனையில் ஈடுபட்ட காவல் உதவி ஆய்வாளர் சங்கர் மீது இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் இரும்புக் கம்பியால் தாக்கினர். வேகமாக வந்த பைக்கை நிறுத்த முயற்சித்தபோது உதவி ஆய்வாளரை தாக்கப்பட்டார்.
கடந்த பிப்ரவரி 15 ஆம் தேதி கரூர் மாயனூர் காவிரி ஆற்றில் மூழ்கி விராலிமலை அருகேயுள்ள பிலிப்பட்டி அரசு நடுநிலைப்பள்ளி மாணவிகள் 4 பேர் பலியான சம்பவம் - இறப்பு சம்பவத்தால் விடுமுறை விடப்பட்ட நிலையில், பின் பள்ளி இன்று மீண்டும் திறப்பு
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்த ரோந்து வாகனம் மீது அரசு பேருந்து மோதி 2 பேர் பலி - பழுதடைந்த பேருந்தின் சீரமைப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஓட்டுநர் பால் கண்ணன், நடத்துநர் முருகன் உயிரிழந்தனர்.
Background
சென்னையில் தொடர்ந்து 275வது நாளாக பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையாகி வருவது வாகன ஓட்டிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மகிழ்ச்சியில் வாகன ஓட்டிகள்
கொரோனா வைரஸ் தொற்றால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் மிகப்பெரிய பொருளாதார இறக்கத்தை சந்தித்தனர். இதனை கருத்தில் கொண்டு 2021ஆம் ஆண்டு நவம்பர் 4 ஆம் தேதி மத்திய அரசால் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 5ம், டீசல் விலை ரூ.10ம் குறைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. அன்றைய தினம் தமிழ்நாட்டில் லிட்டர் பெட்ரோல் ரூ 101.40க்கும் டீசல் விலை ரூ 91.43க்கும் விற்பனையானது.
அதன்பின்னர் 5 மாதங்கள் கழித்து பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் கடந்த ஆண்டு மே மாதம் 22 ஆம் தேதி மாற்றம் ஏற்பட்டது. அப்போது கலால் வரி குறைப்பால் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை ரூபாய்க்கு 6ம் இறக்கம் கண்டது. இந்தசூழலில் பெட்ரோல், டீசல் விலை 275வது நாளாக தொடர்ந்து விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது.
அதன்படி இன்று (பிப்ரவரி 20) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. முன்னதாக எரிபொருள் விலை உயர்வால் பால், டீ, காய்கறிகள், இதர உணவுப் பொருள்களின் விலை ஏறியிருந்தது. இச்சூழலில், விலை மாற்றமின்றி பெட்ரோல், டீசல் விலை இருநூற்றி ஐம்பது நாள்களை கடந்ததே மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. தற்போது அது 275 நாட்களை அடைந்துள்ளது.
எத்தனால் கலந்த பெட்ரோல்
கடந்த 2018 ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்த 'தேசிய உயிரி எரிபொருள் கொள்கை 2030ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனாலைக் கலந்து விற்க இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், அந்த இலக்கு தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக 2025 ஆம் ஆண்டு என மாற்றியமைக்கப்பட்டது.
இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, ”இருபது சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் டிசம்பர் அல்லது ஜனவரி முதல் நாட்டில் கிடைக்கும்” என பெட்ரோலியம் மற்றும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எத்தனால் உற்பத்தியை நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். ஏப்ரல் 2023க்கு முன்னதாக டிசம்பர் அல்லது ஜனவரியில் 20 சதவீதம் கலப்பு எரிபொருள் சந்தைக்கு வரும் என்று நான் நம்புகிறேன்" என் கூறினார்.
நெகிழ்வான எரிபொருள் வாகனங்கள் (கலப்பு எரிபொருளில் இயங்கும் வாகனங்கள்) கிடைக்கும் பிரேசிலை உதாரணமாக மேற்கோள் காட்டி பேசிய ஹர்தீப் சிங் பூரி, "நுகர்வோர் விருப்பப்படி எத்தனால் அல்லது பெட்ரோலை எடுத்துக் கொள்ளலாம். இது அரசாங்கத்தின் இறுதி இலக்காக இருக்கும்.
இருப்பினும், அந்த நிலையை அடைய, சில தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. அதற்கான, பணிகள் நடந்து வருகின்றன. எத்தனால் கலப்படம் தொடர்பாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுடன் ஒரு முக்கிய சந்திப்பை நடத்த உள்ளோம். பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலப்பதை அடைவதற்கான இலக்கு தேதியை 2025ஆம் ஆண்டுக்கு ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியா முன்னெடுத்துள்ளது.
பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதற்கு, நமது நாட்டிற்கு 1,000 கோர் லிட்டர் கொள்ளளவு தேவைப்படுகிறது. 450 கோடி லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 400 கோடி லிட்டருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 20 சதவிகித கலப்பிற்கான போதுமான எத்தனால் கைவசம் உள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து பெட்ரோலிலும் 20 சதவீதம் எத்தனால் இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -