Breaking News LIVE: தமிழ்நாட்டுக்கு ரூ.1,201 கோடி ஜிஎஸ்டி இழப்பீடு
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் கீழே காணலாம்.
அரசியலுக்கு வரும் பெண்களுக்கு சத்தியவாணிமுத்து ஓர் உதாரணம். அவரின் போராட்ட குணத்தை எண்ணி இன்று பெருமைகொள்கிறோம். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சத்தியவாணிமுத்து நூற்றாண்டு விழாவில் உரையாற்றி வருகிறார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு ஆதரவு தெரிவித்து ஈரோட்டில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.
ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி வீரர்கள்
ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், கே.எல்.ராகுல், இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), ஜடேஜா, குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல், முகமது ஷமி, முகமது சிராஜ், உம்ரான் மாலிக், ஷர்துல் தாக்கூர், அக்ஷர் படேல், ஜெய்தேவ் உனத்கட் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
3 மற்றும் 4வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி வீரர்கள்:
ரோஹித் சர்மா (கேப்டன்), கே.எல்.ராகுல், சுப்மன் கில், சட்டீஸ்கர் புஜாரா, விராட் கோலி, கே.எஸ்.பாரத் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), அஸ்வின், அக்ஷர் படேல், குல்தீப் யாதவ், ஜடேஜா, முகமது ஷமி, முகமது சிராஜ், ஸ்ரேயாஸ் அய்யர், சூர்யகுமார் யாதவ், உமேஷ் யாதவ், ஜெய்தேவ் உனத்கட் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
ஆஸ்திரேலியா அணியுடனான மீதமுள்ள 2 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டித் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
இந்த நிலையில், ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 2வது டெஸ்ட் போட்டியில் ஆடி வரும் விராட்கோலி 2வது இன்னிங்சில் புதிய வரலாறு படைத்தார். அதாவது மூன்று வடிவ கிரிக்கெட் போட்டிகளிலும் சேர்த்து அதிவேகமாக 25 ஆயிரம் ரன்களை கடந்த முதல் கிரிக்கெட் வீரர் என்ற சாதனையை விராட்கோலி படைத்தார்.
தேனியில் முதலாவது புத்தகத் திருவிழா மார்ச் 3ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேனி அருகே பழனிசெட்டிப்பட்டியில் தனியார் திடலில் அரங்குகள் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநிலங்களுக்கான ஜூன் மாத ஜிஎஸ்டி நிலுவைத் தொகையில் தமிழ்நாட்டுக்கு ரூ.1,201 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. மேலும் பென்சில், ஷார்ப்னர் மீதான ஜிஎஸ்டியை 18 சதவீதத்திலிருந்து 12 சதவீதமாக குறைக்க ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கர்நாடக வனத்துறையால் சுட்டுக் கொல்லப்பட்ட மீனவர் ராஜாவின் உடலை பிரேத பரிசோதனை செய்ய உறவினர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர். சேலம் மாவட்ட ஆட்சியரின் பேச்சுவார்த்தையை அடுத்து மீனவர் உடலை பிரேத பரிசோதனை செய்ய உறவினர்கள் ஒப்புதல் அளித்தனர்.
மதுரை பயணத்தை முடிந்துக் கொண்டு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்ம கோவை வந்தடைந்துள்ளார். கோவை ஈஷா மையத்தில் நடைபெறும் சிவராத்திரி விழாவில் தலைமை விருந்தினராக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பங்கேற்கிறார்.
சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் அன்புமணி ராமதாஸ் சந்திப்பு - கல்வி, வேலைவாய்ப்புகளில் வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வலியுறுத்தல்
மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு வந்துள்ள குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சாமி தரிசனம் செய்தார்.
மதுரை வந்துள்ள குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளித்தனர். அவருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 49வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் தொடங்கியது - பான்மசாலா, ஆன்லைன் விளையாட்டுகளுக்கான ஜிஎஸ்டி குறித்து விவாதிக்க வாய்ப்பு
தமிழ்நாட்டிற்கு 2 நாள் சுற்றுப்பயணமாக வந்துள்ள திரௌபதி முர்மு மதுரைக்கு வந்தடைந்தார். அவரது வருகையை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டிற்கு 2 நாள் சுற்றுப்பயணமாக வந்துள்ள திரௌபதி முர்மு மதுரைக்கு வந்தடைந்தார். அவரது வருகையை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
வருகிற மூன்றாம் தேதி வரையில் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி கவியரசன் உத்தரவிட்டார்
தென்னாப்பிரிக்காவில் இருந்து 12 சிவிங்கி புலிகள் இந்தியா கொண்டு வரப்பட்டது - இந்திய விமானப்படை விமானத்தில் மத்தியப்பிரதேச மாநிலம் குவாலியருக்கு சிவிங்கி புலிகள் கொண்டு வரப்பட்டது.
விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரம விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.
திருவண்ணாமலை ஏ.டி.எம். மைய கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் 2 பேரை நீதிபதி முன்பு போலீசார் ஆஜர்படுத்தினர்.
திருவண்ணாமலை ஏ.டி.எம். மைய கொள்ளை சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 2 பேரும் இன்னும் சற்று நேரத்தில் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட உள்ளனர்.
தேனி பெரிய குளத்தில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் துப்புரவு பணியாளர்கள் பணி புறக்கணிப்பு - தகாத வார்த்தைகளால் தங்களை பேசுவதாகவும், 12 மணி நேரம் பணி செய்ய வற்புறுத்துவதாகவும் தெரிவித்து தர்ணா போராட்டம்
குடியரசுத் தலைவரை வரவேற்பதற்காக மதுரை வந்த தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை மதுரை விமான நிலையத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் வரவேற்றார்.
சென்னை மேற்கு மாம்பலத்தில் ஓய்வுப் பெற்ற அரசு ஊழியர் பத்மாவது வீட்டில் 40 சவரன் நகைகள் கொள்ளை - பிளம்மிங் மற்றும் கதவு வேலைக்கு வந்தவர்கள் நகைகளை கொள்ளையடித்து சென்றதாக விசாரணையில் தகவல்
மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்துவற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்காக இ-டெண்டர் கோரிய மெட்ரோ நிறுவனம்- 2 கட்டமாக மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தமிழ்நாடு வருவதை முன்னிட்டு கோவை மற்றும் மதுரையில் பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மகா சிவராத்திரியை முன்னிட்டு சதுரகிரி சுந்தமகாலிங்கம் கோயிலில் குவிந்த பக்தர்கள் - இன்று முதல் பிப்ரவரி 21 ஆம் தேதி வரை பக்தர்கள் தரிசனம் செய்யலாம் என அறிவிப்பு
திருவண்ணாமலையில் 4 ஏடிஎம்களில் கொள்ளை நடைபெற்ற சம்பவம் - கைது செய்யப்பட்ட ஹரியானாவைச் சேர்ந்த 2 பேரிடம் வடக்கு மண்டல ஐஜி கண்ணன் தலைமையிலான குழு விசாரணை
Background
தமிழ்நாட்டில் தொடர்ந்து 273ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையாகி வருகிறது.
பெட்ரோல், டீசல்:
கொரோனா வைரஸ் தொற்றால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்த நிலையில், கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பர் 4 ஆம் தேதி, பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 5உம், டீசல் விலை ரூ. 10உம் மத்திய அரசால் குறைக்கப்பட்டது. அன்றைய தினம் தமிழ்நாட்டில் லிட்டர் பெட்ரோல் ரூ 101.40க்கும் டீசல் விலை ரூ 91.43க்கும் விற்பனையானது.
இதனைத் தொடர்ந்து ஐந்து மாநிலத் தேர்தல் நடைபெற்றதால் விலை உயர்த்தப்படாமல் இருந்தது. குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுக்கு பின்னர் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதன் பின்னரும் விலையில் எந்தவிதமான மாற்றமும் ஏற்படவில்லை.
இன்றைய விலை
இதன் பின்னர் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் கடந்த ஆண்டு மே மாதம் 22ஆம் தேதி மாற்றம் ஏற்பட்டது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8உம், டீசல் விலை ரூபாய்க்கு 6உம் கலால் வரி குறைப்பால் இறக்கம் கண்டது. இச்சூழலில் பெட்ரோல், டீசல் விலை 273ஆவது நாளாக தொடர்ந்து விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது.
அதன்படி இன்று (பிப்ரவரி.18) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. முன்னதாக எரிபொருள் விலை உயர்வால் பால், டீ, காய்கறிகள், இதர உணவுப் பொருள்களின் விலை ஏறியிருந்தது. இச்சூழலில், விலை மாற்றமின்றி பெட்ரோல், டீசல் விலை இருநூற்று ஐம்பது நாள்களை கடந்துள்ளது.
எத்தனால் கலந்த பெட்ரோல்
கடந்த 2018ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்த 'தேசிய உயிரி எரிபொருள் கொள்கை 2030ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனாலைக் கலந்து விற்க இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், அந்த இலக்கு தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக 2025ஆம் ஆண்டு என மாற்றியமைக்கப்பட்டது.
இருபது சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் டிசம்பர் அல்லது ஜனவரி முதல் நாட்டில் கிடைக்கும் என பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எத்தனால் உற்பத்தியை நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். ஏப்ரல் 2023க்கு முன்னதாக டிசம்பர் அல்லது ஜனவரியில் 20 சதவீதம் கலப்பு எரிபொருள் சந்தைக்கு வரும் என்று நான் நம்புகிறேன்" என்றார்.
நெகிழ்வான எரிபொருள் வாகனங்கள் (கலப்பு எரிபொருளில் இயங்கும் வாகனங்கள்) கிடைக்கும் பிரேசிலை உதாரணமாக மேற்கோள் காட்டி பேசிய ஹர்தீப் சிங் பூரி, "நுகர்வோர் விருப்பப்படி எத்தனால் அல்லது பெட்ரோலை எடுத்துக் கொள்ளலாம். இது அரசாங்கத்தின் இறுதி இலக்காக இருக்கும்.
இருப்பினும், அந்த நிலையை அடைய, சில தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. அதற்கான, பணிகள் நடந்து வருகின்றன. எத்தனால் கலப்படம் தொடர்பாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுடன் ஒரு முக்கிய சந்திப்பை நடத்த உள்ளோம். பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலப்பதை அடைவதற்கான இலக்கு தேதியை 2025ஆம் ஆண்டுக்கு ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியா முன்னெடுத்துள்ளது.
பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதற்கு, நமது நாட்டிற்கு 1,000 கோர் லிட்டர் கொள்ளளவு தேவைப்படுகிறது. 450 கோடி லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 400 கோடி லிட்டருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 20 சதவிகித கலப்பிற்கான போதுமான எத்தனால் கைவசம் உள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து பெட்ரோலிலும் 20 சதவீதம் எத்தனால் இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -