Breaking News LIVE : திருவண்ணாமலை ஏடிஎம் திருட்டு : கொள்ளை குழு தலைவன் கைது
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் கீழே காணலாம்.
Tiruvannamalai ATM : திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை : கொள்ளை குழு தலைவன் ஆசாத் மற்றும் ஆரிஃப் என்னும் இருவர் கைது
Tiruvannamalai ATM : திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை : கொள்ளை குழு தலைவன் ஆசாத் உட்பட இருவர் கைது
ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான பிரிவுதான் சட்டப்பூர்வ சிவசேனா என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும், தற்போதைய சிவசேனா , ஜனநாயக முறையில் இல்லை என்றும் தேர்தல் ஆணையம் கருத்து தெரிவித்துள்ளது.
உத்தவ் தாக்கரே தலையிலான சிவசேனா தரப்புக்கு, தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
School Leave: திருவாரூர் மாவட்ட பள்ளிகளுக்கு நாளையும், பிப்ரவரி 25 ஆம் தேதியும் விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அறிவித்துள்ளார். திருவாரூரில் பெய்த கனமழை காரணமாக கடந்த பிப்ரவரி மாதம், 2 மற்றும் 3 தேதிகள் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதனை ஈடு செய்யும் வகையில் நாளையும் அதாவது பிப்ரவரி 18ஆம் தேதியும் 25ஆம் தேதியும், பள்ளி செயல்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அறிவிப்பை ரத்து செய்து நாளையும் அதாவது பிப்ரவரி 18ஆம் தேதியும் 25ஆம் தேதியும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6. 1 ஆக பதிவாகியுள்ளது.
நடிகர் ரிஷப் ஷெட்டிக்கு தாதாசாகேப் பால்கே ஈவண்ட்டில் நம்பிக்கைக்குரிய நடிகர் அறிவிப்பு
KS.Alagiri : ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அமைச்சர்கள் பிரச்சாரம் செய்வதில் எந்த தவறும் இல்லை. மாவட்ட செயலாளர்கள் என்ற முறையில் அமைச்சர்கள் பிரச்சாரம் செய்கின்றதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
சிவராத்திரியை முன்னிட்டு திருவாரூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை பள்ளிகள் செயல்படுவதாக இருந்து நிலையில், விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக வனத்துறை துப்பாக்கிச் சூட்டின்போது காணாமல் போன தமிழக மீனவரின் உடல் சேலம் மேட்டூரில் மீட்கப்பட்டுள்ளது. மேட்டூர் அருகே அடிப்பலாறு பகுதியில் உள்ள ஆற்றில் மிதந்த ராஜாவின் உடலை போலீசார் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேட்டூர் அடுத்துள்ள பாலாறு பகுதியில் கர்நாடகா வனத்துறை துப்பாக்கி சூடு நடத்தியதில் தப்பி சென்றதாக கூறப்பட்ட மீனவர் ராஜா என்பவரின் உடல் காவிரி ஆற்றில் சடலமாக மீட்பு. காவிரி ஆற்றில் மிதந்த உடலை மீட்டு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோயில் வழிபாட்டில் பாகுபாடு காட்டக் கூடாது; அனைவரையும் சமமாக நடத்த வேண்டும் என மதுரை கிளை தெரிவித்துள்ளது. அனைத்து தரப்பினரும் அமைதியான முறையில் வழிபாடு நடத்துவதை மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் உறுதி செய்ய வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
CUET தேர்வு எழுதுவதற்கு தமிழக மாணவர்களுக்கு பத்தாம் வகுப்பு மதிப்பெண் உள்ளீடு செய்வதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 2021ல் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற தமிழக மாணவர்கள் மதிப்பெண்களை உள்ளீடு செய்வதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியாவில் செயல்பட்டு வந்த 3 ட்விட்டர் அலுவலகங்களில் 2 அலுவலகங்களை எலான் மஸ்க் மூடியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2 ட்விட்டர் அலுவலகங்களில் பணியாற்றியவர்களை வீட்டில் இருந்து வேலை செய்ய வேண்டும் என எலான் மஸ்க் உத்தரவிட்டுள்ளார்.
பிற மாநில மருத்துவக் கழிவுகளை தமிழகத்தில் கொட்டுவதை முற்றிலும் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. கேரளாவிலிருந்து தமிழகத்திற்குள் மருத்துவக் கழிவுகள் கொட்டுவது தொடர்பான வழக்கில் மதுரைகிளை உத்தரவிட்டுள்ளது.
கட்டட முடிவு சான்று இல்லாமல் மின் இணைப்பு வசதி, குடிநீர் குழாய், பாதாள சாக்கடை இணைப்புகள் வழங்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. 12 மீ. உயரம் வரை உள்ள குடியிருப்பு, 8,070 சதுர அடி பரப்பளவிற்கு உட்பட்ட வீட்டுக்கு இணைப்பு தரலாம் என அரசு தெரிவித்துள்ளது.
சென்னை வடபழனியில் சாலை தடுப்பில் வேன் மோதிய விபத்தில் 10 பேர் காயமடைந்துள்ளனர். ஐடி நிறுவனத்திற்கு பணியாளர்களை ஏற்றிச் சென்ற வேன் விபத்துக்குள்ளானதில் 10 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் 17%க்கு பதில் 19 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல் கொள்முதலுக்கு மத்திய அரசு அனுமதி தருவதாக தகவல் வெளியாகி உள்ளது. மத்திய குழு அறிக்கை அடிப்படையில் அனுமதி கிடைக்கும் என உணவுப்பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.
செங்கல்பட்டு மாமல்லபுரம் அருகே முந்திரி தோட்டத்தில் வேலை செய்த முதிய தம்பதிகளை கொன்று நகை கொள்ளை
சிவிங்கிப் புலி’ திட்டத்தின் கீழ் தென்னாப்பிரிக்காவில் இருந்து 12 சிவிங்கி புலிகள் நாளை (18.பிப்ரவரி.2023) இந்தியாவிற்கு அழைத்துவரப்பட உள்ளதாக மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்திர யாதவ் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் 20ம் தேதி வரை பனிமூட்டம் நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம் தகவல்
குடியரசு தலைவர் திரவுபதி முர்மு 2 நாள் பயணமாக நாளை தமிழ்நாடு வருகிறார்.
ஜம்மு காஷ்மீரில் இன்று அதிகாலை 5.01 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது 3.6 ரிக்டர் என்ற அளவில் பதிவானது.
இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி டெல்லியில் இன்று தொடங்குகிறது. இந்திய நேரப்படி காலை 9.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலிலும், ஹாட் ஸ்டார் செயலியிலும் நேரலையில் காணலாம்.
Background
தமிழ்நாட்டில் தொடர்ந்து 272ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையாகி வருகிறது.
கொரோனா வைரஸ் தொற்றால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்த நிலையில், கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பர் 4 ஆம் தேதி, பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 5உம், டீசல் விலை ரூ. 10உம் மத்திய அரசால் குறைக்கப்பட்டது. அன்றைய தினம் தமிழ்நாட்டில் லிட்டர் பெட்ரோல் ரூ 101.40க்கும் டீசல் விலை ரூ 91.43க்கும் விற்பனையானது.
இதனைத் தொடர்ந்து ஐந்து மாநிலத் தேர்தல் நடைபெற்றதால் விலை உயர்த்தப்படாமல் இருந்தது. குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுக்கு பின்னர் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதன் பின்னரும் விலையில் எந்தவிதமான மாற்றமும் ஏற்படவில்லை.
இன்றைய விலை
இதன் பின்னர் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் கடந்த ஆண்டு மே மாதம் 22ஆம் தேதி மாற்றம் ஏற்பட்டது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8உம், டீசல் விலை ரூபாய்க்கு 6உம் கலால் வரி குறைப்பால் இறக்கம் கண்டது. இச்சூழலில் பெட்ரோல், டீசல் விலை 272ஆவது நாளாக தொடர்ந்து விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது.
அதன்படி இன்று (பிப்ரவரி.17) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. முன்னதாக எரிபொருள் விலை உயர்வால் பால், டீ, காய்கறிகள், இதர உணவுப் பொருள்களின் விலை ஏறியிருந்தது. இச்சூழலில், விலை மாற்றமின்றி பெட்ரோல், டீசல் விலை இருநூற்று ஐம்பது நாள்களை கடந்துள்ளது.
எத்தனால் கலந்த பெட்ரோல்
கடந்த 2018ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்த 'தேசிய உயிரி எரிபொருள் கொள்கை 2030ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனாலைக் கலந்து விற்க இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், அந்த இலக்கு தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக 2025ஆம் ஆண்டு என மாற்றியமைக்கப்பட்டது.
இருபது சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் டிசம்பர் அல்லது ஜனவரி முதல் நாட்டில் கிடைக்கும் என பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எத்தனால் உற்பத்தியை நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். ஏப்ரல் 2023க்கு முன்னதாக டிசம்பர் அல்லது ஜனவரியில் 20 சதவீதம் கலப்பு எரிபொருள் சந்தைக்கு வரும் என்று நான் நம்புகிறேன்" என்றார்.
நெகிழ்வான எரிபொருள் வாகனங்கள் (கலப்பு எரிபொருளில் இயங்கும் வாகனங்கள்) கிடைக்கும் பிரேசிலை உதாரணமாக மேற்கோள் காட்டி பேசிய ஹர்தீப் சிங் பூரி, "நுகர்வோர் விருப்பப்படி எத்தனால் அல்லது பெட்ரோலை எடுத்துக் கொள்ளலாம். இது அரசாங்கத்தின் இறுதி இலக்காக இருக்கும்.
இருப்பினும், அந்த நிலையை அடைய, சில தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. அதற்கான, பணிகள் நடந்து வருகின்றன. எத்தனால் கலப்படம் தொடர்பாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுடன் ஒரு முக்கிய சந்திப்பை நடத்த உள்ளோம். பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலப்பதை அடைவதற்கான இலக்கு தேதியை 2025ஆம் ஆண்டுக்கு ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியா முன்னெடுத்துள்ளது.
பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதற்கு, நமது நாட்டிற்கு 1,000 கோர் லிட்டர் கொள்ளளவு தேவைப்படுகிறது. 450 கோடி லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 400 கோடி லிட்டருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 20 சதவிகித கலப்பிற்கான போதுமான எத்தனால் கைவசம் உள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து பெட்ரோலிலும் 20 சதவீதம் எத்தனால் இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -