Breaking News LIVE : வேலூரில் எருது விடும் விழாவில் மாடு முட்டி ராணுவ வீரர் உயிரிழப்பு
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் கீழே காணலாம்.
வேலூரில் எருது விடும் விழாவில் மாடு முட்டி ராணுவ வீரர் உயிரிழப்பு
வேலூர் மாவட்டம் அடுக்கம்பாறை அடுத்த ஆற்காட்டான் குடிசை கிராமத்தில் இன்று நடைபெற்ற எருது விடும் விழாவில் மாடு முட்டியதில் புலிமேடு பகுதியைச் சேர்ந்த ராணுவ வீரர் சுரேஷ்குமார் (28) உயிரிழப்பு
வேலூர் தாலுகா காவல் நிலைய போலீசார் விசாரணை
மதுரையில் தடையை மீறி பாட்டில்களில் பெட்ரோல் விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தெரிவித்துள்ளது. மதுரையில் அடுத்தடுத்து பெட்ரோல் குண்டு சம்பவங்கள் நடந்ததால் பெட்ரோல் நிலையங்களுக்கு காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
கோவையில் நீதிமன்ற வளாகம் அருகே கொலை நடந்த வழக்கில் தேடப்பட்ட 2 பேர் துப்பாக்கியால் சுடப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் தொடர்புடைய கவுதம், ஜோஷ்வா ஆகியோரின் கால்களில் துப்பாக்கியால் சுட்டு போலீசார் பிடித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் மார்ச் மாதத்தில் வெளியிடப்படும் என்றும், தேர்வு முடிவுகள் குறித்து வெளியாகும் ஆதாரமற்ற செய்திகளை பொருட்படுத்த வேண்டாம் என்றும் டிஎன்பிஎஸ்சி அலுவலர் தெரிவித்துள்ளார்.
மெட்ரோ 2ம் கட்ட திட்டத்தில் பசுமை வழிச்சாலை முதல் அடையாறு சந்திப்பு வரை நாளை முதல் சுரங்கும் தோண்டும் பணி நடைபெற இருக்கிறது என்றும் பிப்ரவரி 16 ம் தேதி முதல் 100 நாட்களுக்குள் அடையாறு ஆற்றின் கீழ் சுரங்கம் தோண்டும் பணி நிறைவடையும் என்றும் மெட்ரோ நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
மேலும், பசுமை வழிச்சாளை முதல் அடையாறு சந்திப்பு வரை சுரங்கம் தோண்டும் பணிக்கு காவேடி எனப் பெயரிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி : சங்கராபுரம் அருகே 2.25 ஏக்கர் பரப்பள்ளவில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றம். எட்டு ஜே.சி.பி. எந்திரங்களை கொண்டு போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடைபெற்று வருகிற்து
சிலைகள் என்பது கலை வடிவம் மட்டுமல்ல; வரலாற்றில் நீக்கமற நிறைந்திருக்கும் மனிதர்களது வாழ்வையும் தொண்டையும் தியாகத்தையும் எதிர்காலத்துக்கு எடுத்துச் செல்கின்ற சின்னங்கள்!
வீரபாண்டிய கட்டபொம்மன், மருதிருவர், செக்கிழுத்த செம்மல் வ.உ.சி ஆகியோரின் சிலைகளைத் திறந்து வைத்தேன் பெருமையோடு!
மேனாள் சட்டமன்ற உறுப்பினர்கள் வி.கே.பழனிசாமி கவுண்டர், பொள்ளாச்சி மகாலிங்கம், முன்னாள் அமைச்சர் சி.சுப்பிரமணியம், விடுதலைப் போராட்ட வீரர் தளி பாளையக்காரர் மலையாண்டி வெங்கிடுபதி எத்தலப்பர் நாயக்கர் ஆகியோருக்கு திருவுருவச் சிலைகளுடன் கூடிய அரங்கங்கள் அமைக்க அடிக்கல் நாட்டி – பெருங்காமநல்லூரில் கட்டப்பட்டுள்ள தியாகிகள் நினைவு மண்டபத்தையும் திறந்து வைத்தேன்.
Adani Shares : அதானி நிறுவனப் பங்குகளின் நிலை இன்றும் சரிவு
குஜராத் இளம்பெண் கிருத்திகா கடத்தல் வழக்கு சினிமாவை மிஞ்சும் அளவுக்கு உள்ளதாக இருக்கிறது - சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கருத்து
இளம்பெண் கிருத்திகா கடத்தல் முன்ஜாமீன் மற்றும் ஜாமின் கோரி அவரது பெற்றோர் உறவினர் மன அளித்திருந்தனர். இந்த வழக்கில் விசாரணை தெளிவாக நடக்க வேண்டியிருப்பதால் யாருக்கும் ஜாமீன் வழங்கக் கூடாது என்று காவல் துறை தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதையெடுத்து, அரசு தரப்பு கோரிக்கையை ஏற்ற நீதிமன்றம் வழக்கு விசாரணையை அடுத்த வாரத்திற்கு ஒத்திவைத்தது.
திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு அருகே மின்சார ரயிலில் கோளாறு ஏற்பட்டு நடுவழியில் நிறுத்தம்.ரயில் பயணிகள் கீழே இறங்கி கால்நடையாக திருவாலங்காடு ரயில் நிலையத்தை அடைந்தனர்.
கரூரில் குடல்புழு நீக்க முகாமில் மாத்திரை சாப்பிட்ட 10 மாணவர்களுக்கு வாந்தி மயக்கம். கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி. மாணவர்கள் நலமாக உள்ளனர்
குஜராத் கலவரம் தொடர்பாக அண்மையில் பி.பி.சி வெளியிட்ட ஆவணப்படம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. வருவாய் தொடர்பான ஆவணங்கள் குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை என தகவல்.
ஹிண்டன்பர்க் ரிசர்வ் நிறுவன அறிக்கை வெளியானதை தொடர்ந்து பங்குச்சந்தையில் அதானி குழும பங்கு விலைகள் சரிந்து வருகின்றன. கடந்த 13 வர்த்தக நாட்களில் அதானி குழும நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.10 லட்சம் கோடிக்கு மேல் சரிந்துவிட்டது.
டெல்லியில் உள்ள பிபிசி ஊடக அலுவலகத்தில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்திவருகின்றனர் என்று தகவல் வெளியாகிவுள்ளது.
சென்னை பெரம்பூர் நகைக்கடையில் நடைபெற்ற கொள்ளை சம்பவம் குறித்து காவல் ஆணையர் சங்கர் ஜிவால் விளக்கம். வெளிமாநில கொள்ளையர்கள் திட்டமிட்டு கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியிருப்பதாக பேட்டி.
அரக்கோணம் அருகே எஞ்சின் கோளாறு காரணமாக மின்சார ரயில் நடுவழியில் நிறுத்தம்.
உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் 2 சக்கர வாகனங்களில் 50 சதவீத வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
திருடுபோன ரூ.12.50 லட்சம் மதிப்புள்ள 150 செல்போன்கள் மீட்கப்பட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு
நாமக்கல்லில் உள்ள குமாரபாளையம் கொங்குநகர் பகுதியில் வீடு புகுந்து 120 சவரன், ரூ. 3 லட்சம் கொள்ளை. ஜவுளி உற்பத்தியாளர் மணிகண்டன் வீட்டில் புகுந்த கும்பல் 120 சவரன், ரூ.3 லட்சம், வெள்ளிப் பொருட்களை கொள்ளையடித்தது.
நில அபகரிப்பு வழக்கு தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ். வழக்கின் விவரங்களை ஆராயாமல் சென்னை ஐகோர்ட் தீர்ப்பு வழங்கியதாக தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வாதம்.
டாடா சுமோ மட்டுமல்லாமல் மற்றொரு காரையும் வேறு ஒரு இடத்தில் இருந்து கொள்ளையர்கள் திருடிச் சென்றுள்ளதாக போலீஸ் தகவல் அளித்துள்ளனர்.
திருப்பதியில் காரை திருடிக் கொண்டு வந்து திருவண்ணாமலையில் ஏ.டி.எம்.மில் கொள்ளையர்கள் கைவரிசை காட்டிட்யுள்ளனர்.
சென்னை ஐஐடியில் மகாராஷ்ட்ராவைச் சேர்ந்த ஸ்ரீவன் சன்னி என்ற மாணவர் தூக்கிட்டு தற்கொலை - 2 ஆம் ஆண்டு படித்து வந்த அவர் மன உளைச்சலால் தற்கொலை என தகவல். கோட்டூர்புரம் போலீசார் உடலைக் கைப்பற்றி விசாரணை
சென்னை கிண்டியில் காந்தி மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டபொம்மன் மற்றும் மருது சகோதரர்களின் சிலையை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார். அதோடு, கோவை சிறையில் வ.உ.சி இழுத்த பொலிவூட்டப்பட்ட செக்கு மற்றும் வ.உ.சி.யின் மார்பளவு சிலையையும் திறந்து வைத்தார்.
அதானி விவகாரத்தில் மறைப்பதற்கு ஏதுமில்லை என்பதால் அச்சம் ஏதுமில்லை என்று மத்திய அமைச்சர் அமித்ஷா பதிலளித்துள்ளார்.
ராகுல்காந்தி விமானம் தரையிறங்க உத்தரபிரதேச அரசு அனுமதி மறுத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் தியாகத்தை நாங்கள் என்றைக்கும் மறக்கமாட்டோம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்காமல் சட்டமன்றத்தை ஆளுநர் அவதிப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு - ஆன்லைன் சூதாட்டத்தால் கடந்த ஒரு வாரத்தில் 4 பேர் தற்கொலை செய்துள்ளனர். இதெல்லாம் ஆளுநருக்கு தெரியவில்லையா என சரமாரி கேள்வி
நாடாளுமன்றம், சட்டமன்ற, உள்ளாட்சி தேர்தலில் தோற்கடிக்கப்பட்ட சின்னம் தான் இரட்டை இலை சின்னம் - இரட்டை இலை சின்னம் அதிமுகவுக்கு சாதகமா என்ற கேள்விக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில்
பொய் வாக்குறுதிகள் கொடுத்து திமுக வெற்றி பெற்றதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் - இதுவரை 85% வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்ட நிலையில் எஞ்சிய வாக்குறுதிகள் ஓராண்டுக்குள் நிறைவேற்றப்படும் என உங்களில் ஒருவன் நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார்.
மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் பிப்ரவரி 22 முதல் 28 ஆம் தேதி வரை திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்கான டிக்கெட்டுகள் ஆன்லைனில் இன்று வெளியீடு - www.tirupatibalaji.gov.in என்ற இணையதளம் மூலம் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம்
வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக சென்னையில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை
கடந்த பிப்ரவரி 6 ஆம் தேதி ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் உருக்குலைந்த துருக்கி, சிரியா - 9வது நாளாக மீட்பு பணி தொடரும் நிலையில் பலி எண்ணிக்கை 37 ஆயிரமாக உயர்வு
Background
தமிழ்நாட்டில் தொடர்ந்து 269வது நாளாக பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையாகி வருகிறது.
கொரோனா வைரஸ் தொற்றால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்த நிலையில், கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பர் 4 ஆம் தேதி, பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 5ஆம், டீசல் விலை ரூ. 10ம் மத்திய அரசால் குறைக்கப்பட்டது. அன்றைய தினம் தமிழ்நாட்டில் லிட்டர் பெட்ரோல் ரூ 101.40க்கும் டீசல் விலை ரூ 91.43க்கும் விற்பனையானது.
இதனைத் தொடர்ந்து ஐந்து மாநிலத் தேர்தல் நடைபெற்றதால் விலை உயர்த்தப்படாமல் இருந்தது. குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுக்கு பின்னர் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதன் பின்னரும் விலையில் எந்தவிதமான மாற்றமும் ஏற்படவில்லை.
இதன் பின்னர் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் கடந்த ஆண்டு மே மாதம் 22ஆம் தேதி மாற்றம் ஏற்பட்டது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை ரூபாய்க்கு 6ம் கலால் வரி குறைப்பால் இறக்கம் கண்டது. இச்சூழலில் பெட்ரோல், டீசல் விலை 269வது நாளாக தொடர்ந்து விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது.
அதன்படி இன்று (பிப்ரவரி.14) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. முன்னதாக எரிபொருள் விலை உயர்வால் பால், டீ, காய்கறிகள், இதர உணவுப் பொருள்களின் விலை ஏறியிருந்தது. இச்சூழலில், விலை மாற்றமின்றி பெட்ரோல், டீசல் விலை இருநூற்று ஐம்பது நாள்களை கடந்துள்ளது.
கடந்த 2018ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்த 'தேசிய உயிரி எரிபொருள் கொள்கை 2030ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனாலைக் கலந்து விற்க இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், அந்த இலக்கு தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக 2025ஆம் ஆண்டு என மாற்றியமைக்கப்பட்டது.
இருபது சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் டிசம்பர் அல்லது ஜனவரி முதல் நாட்டில் கிடைக்கும் என பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எத்தனால் உற்பத்தியை நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். ஏப்ரல் 2023க்கு முன்னதாக டிசம்பர் அல்லது ஜனவரியில் 20 சதவீதம் கலப்பு எரிபொருள் சந்தைக்கு வரும் என்று நான் நம்புகிறேன்" என்றார்.
நெகிழ்வான எரிபொருள் வாகனங்கள் (கலப்பு எரிபொருளில் இயங்கும் வாகனங்கள்) கிடைக்கும் பிரேசிலை உதாரணமாக மேற்கோள் காட்டி பேசிய ஹர்தீப் சிங் பூரி, "நுகர்வோர் விருப்பப்படி எத்தனால் அல்லது பெட்ரோலை எடுத்துக் கொள்ளலாம். இது அரசாங்கத்தின் இறுதி இலக்காக இருக்கும்.
இருப்பினும், அந்த நிலையை அடைய, சில தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. அதற்கான, பணிகள் நடந்து வருகின்றன. எத்தனால் கலப்படம் தொடர்பாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுடன் ஒரு முக்கிய சந்திப்பை நடத்த உள்ளோம். பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலப்பதை அடைவதற்கான இலக்கு தேதியை 2025ஆம் ஆண்டுக்கு ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியா முன்னெடுத்துள்ளது.
பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதற்கு, நமது நாட்டிற்கு 1,000 கோர் லிட்டர் கொள்ளளவு தேவைப்படுகிறது. 450 கோடி லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 400 கோடி லிட்டருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 20 சதவிகித கலப்பிற்கான போதுமான எத்தனால் கைவசம் உள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து பெட்ரோலிலும் 20 சதவீதம் எத்தனால் இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -