Breaking News LIVE :வாக்கு சேகரிப்பில் தீவிரமாக ஈடுபடும் அரசியல் கட்சிகள்..! களைகட்டும் ஈரோடு கிழக்கு
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் கீழே காணலாம்.
ஈரோடு இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நாள் நெருங்கி வருவதால் அனைத்துக்கட்சிகளும் தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் நலமுடன் இருந்தால் மகிழ்ச்சியே. பழ.நெடுமாறன் வெளியிட்ட செய்தியை என்னுடன் தொடர்பில் இருக்கும் போராளிகள் உறுதிப்படுத்தவில்லை என வைகோ பேசியுள்ளார்.
மின் இணைப்புடன் ஆதாரை இணைப்பது பாதுகாப்பானது என உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் விவகாரத்தில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி கொடுத்துள்ளார்.
பொள்ளாச்சியில் பாலியல் வன்கொடுமையால் பெண்கள் பாதிக்கப்பட்ட விவகாரம் 2019 ஆம் ஆண்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
பாலியல் வன்கொடுமை வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றி தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.
பாதிக்கப்பட்டோரின் பெயர்களை வெளியிட்ட அப்போதைய எஸ்.பி.யை பணி நீக்கம் செய்யக்கோரி பாலசந்தர் வழக்கு தொடுத்தார்.
அரசாணையில் பெயர்களை இடம்பெறச் செய்தது குறித்து அப்போதைய முதல்வர் ஈபிஎஸ், தலைமைச் செயலரிடம் விசாரிக்கவும்
கோரிக்கை வைக்கப்பட்டது.
பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா தலைமையிலான சென்னை உயர்நீதிமன்ற அமர்வில் விசாரணை நடைப்பெற்றது.
காவல்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தமிழக அரசு தரப்பில் பதில் கொடுக்கப்பட்டுள்ளது.
உயர்நீதிமன்றக் கிளை ஏற்கனவே உத்தரவிட்டதை தெரிந்துகொள்ளாமல் தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
தென்காசியிலிருந்து கடத்தப்பட்டதாக கூறப்பட்ட குஜராத் பெண் கிருத்திகா போலீசில் தந்த வாக்குமூலத்தில் திடுக்கிடும் தகவலை கொடுத்துள்ளார். வினித் என்பவரை 6 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கிருத்திகா ஒப்புதல் அளித்துள்ளார்.
வினித்துடன் வீட்டை விட்டு வெளியேறி அவரை திருமணம் செய்து கொண்டதாகவும் கிருத்திகா வாக்குமூலம்.
தி.மு.க. கூட்டணி கட்சிகள் விதி மீறலில் ஈடுபட்டுள்ளனர் என்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் குற்றம் சாட்டியுள்ளார்.
திருவண்ணாமலையில் ஏடிஎம்-களில் கொள்ளையடித்த கும்பல் 3 நாட்களில் பிடிபடுவார்கள் என ஐ.ஜி. கண்ணன் தெரிவித்துள்ளார். சிசிடிவி காட்சிகளிலிருந்து சில தகவல்கள் கிடைத்துள்ளன என்றும் ஐ.ஜி. கண்ணன் தெரிவித்துள்ளார்
சென்னை சௌகார்பேட்டையில் போலீஸ் எனக் கூறி ரூ.1.40 கோடி கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் ரூ.70 லட்சம் மீட்பு - இம்ரான் என்பவரை கைது செய்து போலீசார் தீவிர விசாரணை
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஏடிஎம் கொள்ளை நடைபெற்ற சம்பவத்தில் ஏடிஎம் மையங்களுக்கு அருகில் உள்ள வீடுகள், கடைகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களின் ஹார்ட் டிஸ்குகளை போலீசார் கைப்பற்றினர்.
மாநிலங்களவை பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பகுதி நிறைவு பெற்ற நிலையில், மார்ச் 13 ஆம் தேதி வரை ஒத்திவைப்பு - எதிர்க்கட்சிகளின் தொடர் முழக்கம் காரணமாக அவை நடவடிக்கைகள் முடங்கியதால் அவை ஒத்திவைக்கப்பட்டது.
வேலூர் மாவட்டம் காட்பாடியில் கல்லூரி மாணவர்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக தனி பிரிவு போலீசாருக்கு வந்த ரகசிய தகவலை அடுத்து, காட்பாடி காங்கைநல்லூர் சாலையில் மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த கேசவராஜ் லகோட்டி , ஹர்ஷவர்தன் , அனீஸ் அகர்வால் ஆகியோரை கைது.160 கிராம் கஞ்சா பறிமுதல்.
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் வெளியான அரசாணையை எதிர்த்து வழக்கு - மனுவில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை விசாரிக்கக்கோரிய நிலையில், மனுவை ரூ.50 ஆயிரம் அபராதத்துடன் தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்
இலங்கையில் தற்போதைய சூழல் ஏதுவாக இருப்பதால் பிரபாகரன் உயிருடன் இருப்பதை கூறுகிறேன். அவர் உரிய நேரத்தில் வெளிப்படுவார் என பழ.நெடுமாறன் பேச்சு
உச்சநீதிமன்றத்தின் புதிய நீதிபதிகளான ராஜேஷ் பிண்டால், அரவிந்த்குமார் பதவியேற்றுக் கொண்டனர் - புதிய நீதிபதிகள் 2 பேருக்கும் தலைமை நீதிபதி சந்திரசூட் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் உரிய நேரத்தில் வெளிப்படுவார். அவர் எங்கே இருக்கிறார்? எப்போது வருவார்? என அறிய உலக தமிழர்கள் ஆவலாக இருக்கின்றனர். தமிழீழம் பற்றிய விரிவான திட்டத்தை பிரபாகரன் விரைவில் அறிவிப்பார் என பழ.நெடுமாறன் பேச்சு
கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே மேல்காடு பகுதியில் மின்சாரம் தாக்கி 15 வயதான ஆண் யானை பலி - வெங்கட்ராமன் என்பவரின் விவசாய நிலத்துக்கு செல்லும் மின் ஒயரை கடித்த போது மின்சாரம் தாக்கியது
கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் சர்வதேச விமான கண்காட்சியை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார் - எலஹங்கா விமானப்படை தளத்தில் 14வது ஏரோ இந்தியா கண்காட்சி நடைபெறுகிறது.
காதலர் தினம் நாளை கொண்டாடப்படும் நிலையில் ஒரு ரோஜா ரூ.35க்கு விற்பனை - முக்கிய நாட்களை விட அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் அதிர்ச்சி
சென்னையை அடுத்த மணிமங்கலம் சரஸ்வதி நகரில் வயதான தம்பதி தூக்கிட்டு தற்கொலை - முதுமையினால் உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில் மகன் சரிவர கவனிக்காததால் தற்கொலை செய்துக்கொண்டதாக தகவல்
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் திருச்சி நோக்கி சென்ற பேருந்து முன்னால் சென்ற கார் மீது மோதி விபத்து - இதில் கார் மரத்தின் மீது மோதியதால் 4 பேர் பலி
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகாலை தாண்டியும் கடும் பனிமூட்டம் நீடிப்பதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதி - சாலைகளில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு பனிமூட்டம்
Background
தமிழ்நாட்டில் தொடர்ந்து 267வது நாளாக பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையாகி வருகிறது.
கொரோனா வைரஸ் தொற்றால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்த நிலையில், கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பர் 4 ஆம் தேதி, பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 5ஆம், டீசல் விலை ரூ. 10ம் மத்திய அரசால் குறைக்கப்பட்டது. அன்றைய தினம் தமிழ்நாட்டில் லிட்டர் பெட்ரோல் ரூ 101.40க்கும் டீசல் விலை ரூ 91.43க்கும் விற்பனையானது.
இதனைத் தொடர்ந்து ஐந்து மாநிலத் தேர்தல் நடைபெற்றதால் விலை உயர்த்தப்படாமல் இருந்தது. குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுக்கு பின்னர் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதன் பின்னரும் விலையில் எந்தவிதமான மாற்றமும் ஏற்படவில்லை.
இதன் பின்னர் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் கடந்த ஆண்டு மே மாதம் 22ஆம் தேதி மாற்றம் ஏற்பட்டது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை ரூபாய்க்கு 6ம் கலால் வரி குறைப்பால் இறக்கம் கண்டது. இச்சூழலில் பெட்ரோல், டீசல் விலை 267வது நாளாக தொடர்ந்து விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது.
அதன்படி இன்று (பிப்ரவரி.13) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. முன்னதாக எரிபொருள் விலை உயர்வால் பால், டீ, காய்கறிகள், இதர உணவுப் பொருள்களின் விலை ஏறியிருந்தது. இச்சூழலில், விலை மாற்றமின்றி பெட்ரோல், டீசல் விலை இருநூற்று ஐம்பது நாள்களை கடந்துள்ளது.
கடந்த 2018ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்த 'தேசிய உயிரி எரிபொருள் கொள்கை 2030ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனாலைக் கலந்து விற்க இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், அந்த இலக்கு தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக 2025ஆம் ஆண்டு என மாற்றியமைக்கப்பட்டது.
இருபது சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் டிசம்பர் அல்லது ஜனவரி முதல் நாட்டில் கிடைக்கும் என பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எத்தனால் உற்பத்தியை நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். ஏப்ரல் 2023க்கு முன்னதாக டிசம்பர் அல்லது ஜனவரியில் 20 சதவீதம் கலப்பு எரிபொருள் சந்தைக்கு வரும் என்று நான் நம்புகிறேன்" என்றார்.
நெகிழ்வான எரிபொருள் வாகனங்கள் (கலப்பு எரிபொருளில் இயங்கும் வாகனங்கள்) கிடைக்கும் பிரேசிலை உதாரணமாக மேற்கோள் காட்டி பேசிய ஹர்தீப் சிங் பூரி, "நுகர்வோர் விருப்பப்படி எத்தனால் அல்லது பெட்ரோலை எடுத்துக் கொள்ளலாம். இது அரசாங்கத்தின் இறுதி இலக்காக இருக்கும்.
இருப்பினும், அந்த நிலையை அடைய, சில தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. அதற்கான, பணிகள் நடந்து வருகின்றன. எத்தனால் கலப்படம் தொடர்பாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுடன் ஒரு முக்கிய சந்திப்பை நடத்த உள்ளோம். பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலப்பதை அடைவதற்கான இலக்கு தேதியை 2025ஆம் ஆண்டுக்கு ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியா முன்னெடுத்துள்ளது.
பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதற்கு, நமது நாட்டிற்கு 1,000 கோர் லிட்டர் கொள்ளளவு தேவைப்படுகிறது. 450 கோடி லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 400 கோடி லிட்டருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 20 சதவிகித கலப்பிற்கான போதுமான எத்தனால் கைவசம் உள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து பெட்ரோலிலும் 20 சதவீதம் எத்தனால் இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -