Breaking News LIVE: ஆசிய ஜூனியர் ஸ்குவாஷ் - இந்திய ஆண்கள் அணி பாகிஸ்தானிடம் தோல்வி
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் கீழே காணலாம்.
மகளிர் டி20 உலகக்கோப்பை போட்டியில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. இதனால் இந்திய அணி பந்துவீசவுள்ளது.
ஆசிய ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியிடம் இந்திய ஆண்கள் அணி தோல்வியை சந்தித்துள்ளது. இந்த போட்டியில் 2 - 0 என்ற கணக்கில் இந்திய அணியை வீழ்த்தி பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது.
ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஆளுநராக சி.பி.ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகேயுள்ள மஞ்சம்பட்டி கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது - புனித வனத்து அந்தோணியார் பொங்கல் விழாவையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பல ஏடிஎம் இயந்திரங்களை கேஸ் வெல்டிங் மூலம் உடைத்து 56 லட்ச ரூபாயை மர்ம நபர்கள் கொள்ளையடித்துள்ளனர். ஒரே நாளில் அடுத்தடுத்து பல ஏடிஎம்களை உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விபத்தில்லா பயணம், சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி தமிழகத்தின் பல்வேறு இடங்கலில் மினி மாராத்தான் போட்டி - சென்னை, ஈரோடு, மதுரை, கடலூர், விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் நடந்த மாராத்தானில் ஏராளமானோர் பங்கேற்பு
திருவண்ணாமலை மாரியம்மன் கோயில் 10வது தெருவில் உள்ள பாரத் ஸ்டேட் வங்கியின் ஏடிஎம் இயந்திரத்தில் ரூ.20 லட்சம் கொள்ளை - கேஸ் வெல்டிங் மூலம் இயந்திரத்தை உடைத்து மர்மநபர்கள் கைவரிசை
Background
மண்டல, மகர விளக்கு பூஜைகளை தொடர்ந்து கடந்த மாதம் அடைக்கப்பட்ட சபரிமலை ஐயப்பன் கோயில் நடை, மாசி மாத பூஜைக்காக இன்று திறக்கப்படுகிறது. கும்பம் மாத பூஜைக்காக இன்று மாலையில் திறக்கப்பட்டு வரும் 17ஆம் தேதி வரை, அதாவது 5 நாட்கள் சிறப்பு பூஜை மற்றும் வழிபாடுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயில்:
கேரள மாநிலம் பத்தினம்திட்டாவில் அமைந்துள்ளது சபரிமலை. உலகப்புகழ்பெற்ற சபரிமலை கோயிலில் ஐயப்பனை தரிசனம் செய்ய ஆண்டுதோறும் கோடிக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம். நடப்பாண்டிற்கான மகரஜோதியை தரிசிப்பதற்காக கடந்த 14-ந் தேதி லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். இதேபோன்று, ஒவ்வொரு தமிழ் மாத தொடக்கத்திலும் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்படும். அதன்படி மாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறக்கப்பட உள்ளது.
நடைதிறப்பு:
இதுதொடர்பான தேவஸ்தான அறிக்கையில், ”சபரிமலை கோயிலில் மாலை 5 மணிக்கு சிறப்பு பூஜைகளுடன் ஜெயராமன் நம்பூதிரி நடையை திறக்க உள்ளார். பின்னர், அன்றிலிருந்து 5 நாட்களுக்கு அதாவது 17-ந் தேதி வரை சிறப்பு பூஜைகளுடன், பக்தர்களும் வழிபாட்டிற்கும் அனுமதிக்கப்பட உள்ளனர். இறுதியாக, 17ம் தேதி இரவு 7 மணிக்கு படிபூஜை முடிந்ததும் இரவு 10 மணிக்கு ஹாரிவராசனம் சங்கீர்த்தனம் பாடப்பட்டு நடை அடைக்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறப்பு பூஜைகள்:
தினசரி ஆலயத்தில் அதிகாலை 5 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது. இந்த பூஜைகளை நேரில் கண்டு ஐயப்பனை தரிசனம் செய்ய இணையதளம் மூலமாக பக்தர்கள் பதிவு செய்து கொள்ளலாம். ஆன்லைனில் முன்பதிவு செய்யாத பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கும் வகையில், நிலக்கல் மற்றும் பம்பையில் உடனடி முன்பதிவு செய்யும் வசதியும் செய்யப்பட்டுள்ளது என தேவசம்போர்டு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் http://www.sabarimalaonline.org எனும் இணையதள முகவரியில் தரிசனத்திற்கான முன்பதிவை மேற்கொள்ளலாம். இதனிடையே, அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
உண்டியல் வசூல்:
சபரிமலையில் 2022-2023ஆம் ஆண்டுக்கான மண்டல மகரவிளக்கு சீசன் கடந்த ஜனவரி மாதம் 20ஆம் தேதி நிறைவடைந்தது. கொரோனா கட்டுப்பாடுகள் முழுமையாக தளர்த்தப்பட்டதால் தினசரி 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். கடந்த சீசனில் 50 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் சபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்தனர். இதன்மூலம் தேவஸ்தானத்திற்கு ரூ.380 கோடி வருமானம் கிடைத்தது. இதனிடையே, சன்னிதானத்தை சுற்றி பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டு இருந்த காணிக்கை பெட்டிகளில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை பணத்தை எண்ணும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த காணிக்கை பெட்டிகளில் இருந்து சுமார் 18 கோடி ரூபாய் கிடைக்கப்பெறலாம் என கூறப்படுகிறது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -