Breaking News LIVE:இந்தியா - இலங்கை நல்லுறவை பிரதிபலிக்கும் விதமாக கலாச்சார மையத்தை திறந்து வைத்தார் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் கீழே காணலாம்.
இந்தியா - இலங்கை நாடுகளின் நல்லுறவை பிரதிபலிக்கும் வகையில், இலங்கையில் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டிய யாழ்ப்பாண கலாச்சார மையத்தை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் திறந்து வைத்தார்.
துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இந்தியர் ஒருவர் பலியாகியுள்ளதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
6 வழிச்சாலை பணிகளை விரைந்து முடிக்கவும், சாலைகளை நல்லதரத்துடன் பராமரிக்க அறிவுறுத்த வேண்டும் என கூறி மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தமிழ்நாடு வருவதை முன்னிட்டு தலைமைச் செயலாளர் இறையன்பு ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து டிஜிபி உள்ளிட்ட காவல்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
ஈரோடு ஆட்சியர் கிருஷ்ணனுன்னி தலைமையில், பெல் நிறுவன ஊழியர்களால், வாக்கு இயந்திரங்கள் சரிபார்ப்பு
புழல் சிறையில், வங்கதேச விசாரணை கைதி ஆலம் ஷேக் உடல்நலக்குறைவால் உயிரிழப்பு
சிங்கார சென்னை திட்டத்தின் கீழ் ரூ.99.59 கோடி ஒதுக்கீடு..
42 பணிகளுக்கான தொகையை ஒதுக்கி அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் 42 பணிகளை மேற்கொள்ள ரூ.98.59 கோடி நிதி ஒதுக்கீடு - புதிதாக பூங்காக்கள், விளையாட்டு திடல்கள், பள்ளி கட்டிடங்கள் கட்ட நிதி ஒதுக்கீடு
பல்வேறு மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள, 106 நவீன நெல் சேமிப்புத் தளங்களை திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தலையொட்டி இதுவரை ரூ.25.33 லட்சத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வரும் 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
இடைத்தேர்தல் பாதுகாப்புப் பணி : 2 கம்பெனி ராணுவ வீரர்கள் ஈரோட்டுக்கு வந்திறங்கினர்
திருப்பதி அங்க பிரதட்சணம் : காலை 11 மணிமுதல் இணையதளத்தில் முன்பதிவு செய்ய தொடங்கலாம்..
நாளை சபரிமலை கோயில் நடைதிறப்பு.. தேவஸ்தான இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம் - தேவசம்போர்டு அறிவிப்பு
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகேயுள்ள என்.பூலாம்பட்டியில் கோலாகலமாக தொடங்கியது ஜல்லிக்கட்டு போட்டி - புனித அந்தோணியார் கோயில் பொங்கல் விழாவையொட்டி நடக்கும் ஜல்லிக்கட்டில் 700 காளைகள், 300 காளையர்கள் பங்கேற்பு
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள உச்சிமேட்டில் 2ஆம் கட்ட அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி - இதற்கான பணிகள் இம்மாத இறுதிக்குள் தொடங்கும் என தகவல்
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தேசிய ஒருங்கிணைப்புக்குழு அலுவககத்தில் கோழிப் பண்ணையாளர்கள் 2வது நாளாக உள்ளிருப்பு போராட்டம் - முட்டை விலை நிர்ணயத்தில் குளறுபடி உள்ளதாகவும், பண்ணையாளர்கள் நலனுக்கு எதிராக குழு செயல்படுவதாகவும் புகார்
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மார்ச் மாதத்திற்கான அங்க பிரதட்சணம் செய்வதற்காக டிக்கெட்களை இன்று காலை 11 மணி முதல் ஆன்லைனில் வெளியிடுவதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
Background
தமிழ்நாட்டில் தொடர்ந்து 265வது நாளாக பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையாகி வருகிறது.
கொரோனா வைரஸ் தொற்றால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்த நிலையில், கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பர் 4 ஆம் தேதி, பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 5ஆம், டீசல் விலை ரூ. 10ம் மத்திய அரசால் குறைக்கப்பட்டது. அன்றைய தினம் தமிழ்நாட்டில் லிட்டர் பெட்ரோல் ரூ 101.40க்கும் டீசல் விலை ரூ 91.43க்கும் விற்பனையானது.
இதனைத் தொடர்ந்து ஐந்து மாநிலத் தேர்தல் நடைபெற்றதால் விலை உயர்த்தப்படாமல் இருந்தது. குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுக்கு பின்னர் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதன் பின்னரும் விலையில் எந்தவிதமான மாற்றமும் ஏற்படவில்லை.
இன்றைய விலை
இதன் பின்னர் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் கடந்த ஆண்டு மே மாதம் 22ஆம் தேதி மாற்றம் ஏற்பட்டது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை ரூபாய்க்கு 6ம் கலால் வரி குறைப்பால் இறக்கம் கண்டது. இச்சூழலில் பெட்ரோல், டீசல் விலை 265வது நாளாக தொடர்ந்து விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது.
அதன்படி இன்று (பிப்ரவரி.11) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. முன்னதாக எரிபொருள் விலை உயர்வால் பால், டீ, காய்கறிகள், இதர உணவுப் பொருள்களின் விலை ஏறியிருந்தது. இச்சூழலில், விலை மாற்றமின்றி பெட்ரோல், டீசல் விலை இருநூற்று ஐம்பது நாள்களை கடந்துள்ளது.
எத்தனால் கலந்த பெட்ரோல்
கடந்த 2018ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்த 'தேசிய உயிரி எரிபொருள் கொள்கை 2030ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனாலைக் கலந்து விற்க இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், அந்த இலக்கு தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக 2025ஆம் ஆண்டு என மாற்றியமைக்கப்பட்டது.
இருபது சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் டிசம்பர் அல்லது ஜனவரி முதல் நாட்டில் கிடைக்கும் என பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எத்தனால் உற்பத்தியை நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். ஏப்ரல் 2023க்கு முன்னதாக டிசம்பர் அல்லது ஜனவரியில் 20 சதவீதம் கலப்பு எரிபொருள் சந்தைக்கு வரும் என்று நான் நம்புகிறேன்" என்றார்.
நெகிழ்வான எரிபொருள் வாகனங்கள் (கலப்பு எரிபொருளில் இயங்கும் வாகனங்கள்) கிடைக்கும் பிரேசிலை உதாரணமாக மேற்கோள் காட்டி பேசிய ஹர்தீப் சிங் பூரி, "நுகர்வோர் விருப்பப்படி எத்தனால் அல்லது பெட்ரோலை எடுத்துக் கொள்ளலாம். இது அரசாங்கத்தின் இறுதி இலக்காக இருக்கும்.
இருப்பினும், அந்த நிலையை அடைய, சில தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. அதற்கான, பணிகள் நடந்து வருகின்றன. எத்தனால் கலப்படம் தொடர்பாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுடன் ஒரு முக்கிய சந்திப்பை நடத்த உள்ளோம். பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலப்பதை அடைவதற்கான இலக்கு தேதியை 2025ஆம் ஆண்டுக்கு ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியா முன்னெடுத்துள்ளது.
பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதற்கு, நமது நாட்டிற்கு 1,000 கோர் லிட்டர் கொள்ளளவு தேவைப்படுகிறது. 450 கோடி லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 400 கோடி லிட்டருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 20 சதவிகித கலப்பிற்கான போதுமான எத்தனால் கைவசம் உள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து பெட்ரோலிலும் 20 சதவீதம் எத்தனால் இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -