Breaking News LIVE: வண்டலூர் உயிரியல் பூங்கா நாளை செயல்படும் என பூங்கா நிர்வாகம் அறிவிப்பு
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை ஏபிபி நாடு லைவ் ப்ளாக் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம்.
சேலம் ஏற்காடு நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்த தந்தை, மகள் உயிரிழப்பு; நீர் வீழ்ச்சிக்கு அருகாமையில் இருந்த பாறைகள் மீது ஏற முயன்ற போது தவறி விழுந்து உயிரிழந்தனர்.
கோயம்புத்தூர் - இருகூர் இடையே தண்டவாள பணி, தொழில்நுட்ப பணிகள் காரணமாக பாசஞ்சர் ரயில்சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே தெரித்துள்ளது.
தொடர் விடுமுறையை முன்னிட்டு நாளை வண்டலூர் உயிரியல் பூங்கா செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக செவ்வாய்க்கிழமை தோறும் சென்னை வண்டலூர் அண்ணா உயிரியல் பூங்காவானது செயல்படாது. இந்த நிலையில் மே ஒன்றாம் தேதி மற்றும் சனி ஞாயிறு ஆகிய மூன்று தினங்கள் தொடர் விடுமுறை என்பதாலும் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை தொடங்கியிருப்பதாலும் அதிக அளவு பார்வையாளர்கள் வந்த வண்ணம் உள்ளனர். இந்த நிலையில் நாளை பூங்கா செயல்படும் என பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது
தமிழ்நாட்டில் திமுக அரசு அமைந்து இரண்டு ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டங்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மே 7, 8, 9 ஆகிய நாட்களில் “திராவிட மாடல் அரசின் இரண்டு ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டங்கள்" நடைபெறும்.
திமுக கட்சி சார்பில் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பட்டியல், பழங்குடி குடும்ப பெண்கள் வங்கியில் ரூ.10000 வைப்புத் தொகை செலுத்தினால், கூடுதலாக 10 ஆயிரம் தரப்படும்.
- வேலைக்குச் செல்லும் பெண்கள் மற்றும் மாணவிகள் 30 லட்சம் பேருக்கு இலவச பஸ் பாஸ் வழங்கப்படும்.
- வயதானவர்களுக்கு ஆண்டு தோறும் இலவசமாக முழு உடல் பரிசோதனை மேற்கொள்ளப்படும்
- வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு, யுகாதி, விநாயகர் சதுர்த்தி, தீபாவளி ஆகிய பண்டிகைகளுக்கு இலவச கேஸ் சிலிண்டர் வழங்கப்படும்
அரசு அதிகாரிகளின் ஊழல் சொத்துகளை பறிமுதல் செய்ய நடைமுறைகளை வகுப்பது குறித்து அறிக்கை தர சென்னை உயர் நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. மேலும் ஊழலுக்கு எதிராக அரசு போதிய நடவடிக்கை எடுக்காததால் தான் லஞ்சம் பெறுவது அதிகரித்துள்ளதாகவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
- ஏழை குடும்பங்களுக்கு தினந்தோறும் அரை லிட்டர் பால் இலவசமாக வழங்கப்படும்
- மாதந்தோறும் ஐந்து கிலோ ரேஷன் பருப்பு ஆகியவை ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவசமாக வழங்கப்படும்
- வீடு இல்லாத 10 லட்சம் பேருக்கு இலவச வீட்டுமனைகள் வருவாய்த்துறை மூலம் வழங்கப்படும்
தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் நலம் காக்கும் அணி சார்பில் போட்டியிட்ட தேனாண்டாள் ஃபில்ம்ஸ் முரளி வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் முரளி இரண்டாம் முறையாக தயாரிப்பாளர் சங்கத் தலைவராகியுள்ளார்.
தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் நலம் காக்கும் அணி சார்பில் போட்டியிட்ட தேனாண்டாள் ஃபில்ம்ஸ் முரளி வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் முரளி இரண்டாம் முறையாக தயாரிப்பாளர் சங்கத் தலைவராகியுள்ளார்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே வடமாநில தொழிலாளர் என நினைத்து நேபாள இளைஞர் மீது சரமாரி தாக்குதல் - அன்புமணி, வீரமணி ஆகியோர் மீது காவல்துறையில் புகாரளிக்கப்பட்டுள்ளது.
மதிமுகவை திமுகவுடன் இணைக்க வேண்டும் என அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி எழுதிய கடிதத்தை புறக்கணிக்க வேண்டுமென மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இந்நிலையில் மதிமுகவுக்கு எதிர்காலம் இல்லை என்றும், அதனால் இப்போதே திமுகவில் இணைவது நல்லது என திருப்பூர் துரைசாமி பதிலடி கொடுத்துள்ளார்.
கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் வெற்றிக்கு கர்நாடகா திமுகவின் பாடுபட வேண்டும் - திமுக பொதுச்செயலாளர் துரை முருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார். அங்கு மே 10 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலுக்காக பாஜக தேர்தல் அறிக்கை வெளியீடு - அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது.
உழைப்பாளர் தினத்தையொட்டி சிவப்பு சட்டை அணிந்து சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை சிந்தாதிரிப்பேட்டையிலுள்ள மே தின பூங்காவில் இருக்கும் நினைவுச்சின்னத்துக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி உடல்நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி - இருதய குறைபாடு காரணமாக சிசியு என்ற சிகிச்சை பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாக தகவல்
உலகப் புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோயில் தேரோட்டம் கோலாகலமாக நடந்து வருகிறது. மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தேரோட்டத்தை தொடங்கி வைத்தார். லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்பு
Background
உலகமே எரிபொருளை மையமாகக் கொண்டு தான் இயங்கி வரும் வேளையில் முழுமையான மின்சார சக்தியில் செயல்படும் அளவிற்கு உலக நாடுகள் தங்களை உயர்த்திக் கொள்ள முயற்சித்து வருகின்றன. அந்த வரிசையில் இந்தியாவும் முழுமையாகக் களம் கண்டுள்ளது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் சம்பந்தமான பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன. இதனால் வெகு விரைவில் முற்றிலுமான மின்மயமான நாட்டினை நோக்கி இந்தியா தன்னை நகர்த்திக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவை பொறுத்தவரை 80% வாகனங்கள் பெட்ரோல், டீசல் ஆகியவற்றில் இயங்கி வருகிறது. இதன் காரணமாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு மக்களின் அன்றாட வாழ்க்கையில் பெரும் மாற்றத்தினை ஏற்படுத்துகிறது. அதேபோல் எரிபொருட்களின் விலை உயர்வு என்பது அன்றாட அத்தியாவசியப் பொருட்களின் மீதான விலை உயர்வில் மிகப்பெரிய அளவில் பிரதிபலிக்கும். எனவே சாமானிய மக்களும் எரிபொருள் விலை நிலவரத்தை ஒவ்வொரு நாளும் கண்காணித்து வருகிறார்கள்.
இன்றைய விலை நிலவரம்
இந்நிலையில் சென்னையில் இன்று (மே.1) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை நிர்ணயமானது தொடர்ந்து மாற்றமின்றி இன்றோடு 345ஆவது நாளாக நீடித்து வருகிறது. முன்னதாக கடந்த 2020, 2021 ஆம் ஆண்டுகளில் பரவிய கொரோனா வைரஸ் தொற்றால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் மிகப்பெரிய பொருளாதார பாதிப்பை சந்தித்தனர்.
இதனைக் கருத்தில் கொண்டு 2021ஆம் ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி மத்திய அரசு பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ. 5ம், டீசல் விலையை ரூ.10ம் குறைத்தது மக்களை சற்று நிம்மதியில் ஆழ்த்தியது. அன்றைய தினம் சென்னையில் லிட்டர் பெட்ரோல் ரூ 101.40க்கும் டீசல் விலை ரூ 91.43க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதன் பின்னர் 5 மாதங்கள் கழித்து கடந்த ஆண்டு மே மாதம் 22ஆம் தேதி பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் ஏற்பட்டது.
அப்போது கலால் வரி குறைப்பால் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை ரூபாய்க்கு 6ம் குறைந்தது. இத்தகைய சூழலில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி 10 மாதங்களை கடந்துள்ளது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேசிய உயிரி எரிபொருள் கொள்கை
கடந்த 2018ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்த தேசிய உயிரி எரிபொருள் கொள்கை 2030ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனாலைக் கலந்து விற்க இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், அந்த இலக்கு தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக 2025 ஆம் ஆண்டு என மாற்றியமைக்கப்பட்டது.
இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, ”இருபது சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் டிசம்பர் அல்லது ஜனவரி முதல் நாட்டில் கிடைக்கும்” எனத்தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எத்தனால் உற்பத்தியை நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். ஏப்ரல் 2023க்கு முன்னதாக டிசம்பர் அல்லது ஜனவரியில் 20 சதவீதம் கலப்பு எரிபொருள் சந்தைக்கு வரும் என்று நான் நம்புகிறேன்" என் கூறினார்.
நெகிழ்வான எரிபொருள் வாகனங்கள் (கலப்பு எரிபொருளில் இயங்கும் வாகனங்கள்) கிடைக்கும் பிரேசிலை உதாரணமாக மேற்கோள் காட்டி பேசிய ஹர்தீப் சிங் பூரி, "நுகர்வோர் விருப்பப்படி எத்தனால் அல்லது பெட்ரோலை எடுத்துக் கொள்ளலாம். இது அரசாங்கத்தின் இறுதி இலக்காக இருக்கும்.
இருப்பினும், அந்த நிலையை அடைய, சில தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. அதற்கான, பணிகள் நடந்து வருகின்றன. எத்தனால் கலப்படம் தொடர்பாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுடன் ஒரு முக்கிய சந்திப்பை நடத்த உள்ளோம். பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலப்பதை அடைவதற்கான இலக்கு தேதியை 2025ஆம் ஆண்டுக்கு ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியா முன்னெடுத்துள்ளது.
பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதற்கு, நமது நாட்டிற்கு 1,000 கோடி லிட்டர் கொள்ளளவு தேவைப்படுகிறது. 450 கோடி லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 400 கோடி லிட்டருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 20 சதவிகித கலப்பிற்கான போதுமான எத்தனால் கைவசம் உள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து பெட்ரோலிலும் 20 சதவீதம் எத்தனால் இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -