Breaking News LIVE : டெல்லி மதுபான கொள்கை விவகாரம்; மேலும் ஒரு அமைச்சருக்கு அமலாக்கத்துறை சம்மன்
Breaking News Live : நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை ஏபிபி நாடு லைவ் ப்ளாக்கில் கீழே உடனுக்குடன் காணலாம்.
கொடைக்கானல் மலைப்பகுதியில் பறவைகள் கணக்கெடுப்பு தொடங்கியுள்ளது. இரண்டு நாட்கள் நடைபெறும் கணக்கெடுப்பில் பறவைகள் வருகை, இனப்பெருக்கம் உள்ளிட்டவைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை சென்றுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அம்மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 5 மாவட்ட காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். சட்டம்,ஒழுங்கை கவனத்துடன் சீராக பராமரியுங்கள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காவல்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
திருப்பத்தூர் வாணியம்பாடி அருகே வெளிதக்ரமணிபெண்டா மலை கிராமத்தில் 9 மாத கர்ப்பிணி சரண்யா உயிரிழப்பு. பொது மக்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.
கீழடி அருங்காட்சியகத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். கீழடியில் ரூ.18 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள அருங்காட்சியகத்தில் கீழடி, கொந்தகை, அகரம், மணலூரில் நடந்த அகழாய்வில் கிடைத்த பொருட்கள் காட்சிப்படுத்தப்படுள்ளன.
கடலூர் பெரியகாட்டுபாளையம் அருகே சிவனார்புரம் பகுதியிலுள்ள பட்டாசு கிடங்கில் வெடி விபத்து 7 தொழிலாளர்கள் காயமடைந்துள்ளனர். ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடலூர் பெரியகாட்டுபாளையம் அருகே சிவனார்புரம் பகுதியிலுள்ள பட்டாசு கிடங்கில் வெடி விபத்து 5 தொழிலாளர்கள் காயமடைந்துள்ளனர்
”மார்ச் 10ஆம் தேதி தமிழகம் முழுவதும் காய்ச்சல் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை காய்ச்சல் சிறப்பு முகாம்கள் நடைபெறும். இதில் சென்னையில் வார்டுக்கு ஒரு முகாம் வீதம் 200 வார்டுகளில் 200 முகாம்கள் நடத்தப்படும்” என்று மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
மதுரை சென்றுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அம்மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 5 மாவட்ட காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.
பா.ஜ.க.விலிருந்து பதவி விலகிய நிர்மல் குமாருக்கு பா.ஜ.க. மாநில தலைவர் கே. அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
வரும் புதன்கிழமை (மார்ச், 8) சர்வதேச உழைக்கும் மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இதனை கொண்டாடும் விதமாக பி.வி.ஆர். திரையங்குகளில் பெண்களுக்கு இலவசமாக 50 கி பாப்கார்ன் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பி.வி.ஆர். இணையதளம் அல்லது ஆப் மூலமாக முன்பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் ரம்மியில் ரூ.17 லட்சம் பணத்தை இழந்தவர் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
தமிழக பா.ஜ.க.வின் ஐ.டி. பிரிவுகளில் இருந்து நிர்மல்குமார் விலகியுள்ளார். அவர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அவரது கட்சியில் இணைந்தார்.
மதுரை ஆட்சியர் அலுவலகத்தில், தென்மாவட்ட பிரதிநிதிகளோடு முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
புலம்பெயர் தொழிலாளர்களின் பாதுகாப்பை தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள வட மாநில தொழிலாளர்கள் பீதியடைந்து பாதுகாப்பற்ற உணர்வுடன் இருக்க வேண்டாம் என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டு மக்கள் மிகவும் நல்லவர்கள் மற்றும் நட்பானவர்கள். தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதில் மாநில அரசு உறுதியுடன் இருப்பதாக ஆளுநர் தெரிவித்துள்ளார்.
அண்ணா பல்கலைக்கழக்கத்தில் போலி டாக்டர் பட்டம் வழங்கிய சம்பவத்தில் தனியார் அமைப்பைச் சேர்ந்த ஹரீஷ் என்பவர் கைது - அவரது முன்ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்திருந்தது
திருச்சியில் போலி சான்றிதழ்களை தயாரித்து விற்று வந்த லால்குடி தாசில்தார் அலுவலக ஒப்பந்த ஊழியர் குமாரவேல் கைது - அதிகாரிகளின் கையெழுத்தை போலியாக போட்டு சான்றிதழ் வழங்கியது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.
விருதுநகர் மாவட்டம் ஆவியூரில் இன்று நடக்கவிருந்த ஜல்லிக்கட்டு போட்டியை நிறுத்தியது மாவட்ட நிர்வாகம் - பொதுமக்கள் அதிர்ச்சி
ஜம்மு காஷ்மீர் மற்றும் ஆஃப்கானிஸ்தானில் மிதமான நிலநடுக்கம் இன்று காலை ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 3.9 மற்றும் 4.3 ஆக பதிவாகியுள்ளது.
துருக்கியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பலி எண்ணிக்கை 45,968 ஆக அதிகரித்துள்ளது என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
Background
சென்னையில் தொடர்ந்து 288வது நாளாக பெட்ரோல், டீசல் விலையானது மாற்றமில்லாமல் விற்பனை செய்யப்பட்டு வருவதால் பொதுமக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.
உலகமே எரிபொருளை மைய்யமாகக் கொண்டு தான் இயங்கி வருகிறது. ஆனாலும் முழுமையான மின்சார சக்தியில் செயல்படும் அளவிற்கு உலக நாடுகள் தங்களை உயர்த்திக் கொள்ளவில்லை. இந்தியாவும் அதற்கான முயற்சியில் முழு மூச்சாக களமிறங்கியுள்ளது. அதேசமயம் பெட்ரோல் டீசல் சம்பந்தமான பொருட்களை வெளிநாடுகளில் இருந்து இந்தியா இறக்குமதி செய்து வருகிறது. இதனால் முற்றிலுமான மின்மயமான நாட்டினை நோக்கி வெகு விரைவில் தன்னை நகர்த்திக் கொள்ளும் என எதிர்பார்க்கலாம்.
இந்தியாவில் 80% வாகனங்கள் பெட்ரோல், டீசல் ஆகியவற்றில் இயங்கி வருவதால் பெட்ரோல் டீசல் விலை உயர்வு மக்களின் அன்றாட வாழ்க்கையில் பெரும் மாற்றத்தினை ஏற்படுத்துகிறது. ஆக, எரிபொருட்களின் விலை உயர்வு என்பது அன்றாட அத்தியாவசியப் பொருட்களின் மீதான விலை உயர்வில் மிகப்பெரிய அளவில் பிரதிபலிக்கும் என்பதால் ஒவ்வொரு நாளும் விலை நிலவரத்தை மக்கள் கண்காணித்து வருகிறார்கள்.
தொடர்ந்து மாறாத விலை:
அதன்படி சென்னையில் இன்று (மார்ச் 4) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. இந்த விலை நிர்ணயம் தொடர்ந்து விலை மாற்றமின்றி 288வது நாளாக நீடித்து வருகிறது. முன்னதாக கடந்த 2020, 2021 ஆம் ஆண்டுகளில் பரவிய கொரோனா வைரஸ் தொற்றால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் மிகப்பெரிய பொருளாதார பாதிப்பை சந்தித்தனர்.
இதனை கருத்தில் கொண்டு 2021 ஆம் ஆண்டு நவம்பர் 4 ஆம் தேதி மத்திய அரசால் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 5ம், டீசல் விலை ரூ.10ம் குறைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. அன்றைய தினம் தமிழ்நாட்டில் லிட்டர் பெட்ரோல் ரூ 101.40க்கும் டீசல் விலை ரூ 91.43க்கும் விற்பனையானது. அதன் பின்னர் 5 மாதங்கள் கழித்து கடந்த ஆண்டு மே மாதம் 22 ஆம் தேதி பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் ஏற்பட்டது. அப்போது கலால் வரி குறைப்பால் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை ரூபாய்க்கு 6ம் குறைந்தது.
இத்தகைய சூழலில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி கிட்டதட்ட 9 மாதங்களை கடந்தது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எத்தனால் கலப்பு
கடந்த 2018 ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்த 'தேசிய உயிரி எரிபொருள் கொள்கை 2030ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனாலைக் கலந்து விற்க இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், அந்த இலக்கு தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக 2025 ஆம் ஆண்டு என மாற்றியமைக்கப்பட்டது.
இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, ”இருபது சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் டிசம்பர் அல்லது ஜனவரி முதல் நாட்டில் கிடைக்கும்” என தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எத்தனால் உற்பத்தியை நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். ஏப்ரல் 2023க்கு முன்னதாக டிசம்பர் அல்லது ஜனவரியில் 20 சதவீதம் கலப்பு எரிபொருள் சந்தைக்கு வரும் என்று நான் நம்புகிறேன்" என் கூறினார்.
நெகிழ்வான எரிபொருள் வாகனங்கள் (கலப்பு எரிபொருளில் இயங்கும் வாகனங்கள்) கிடைக்கும் பிரேசிலை உதாரணமாக மேற்கோள் காட்டி பேசிய ஹர்தீப் சிங் பூரி, "நுகர்வோர் விருப்பப்படி எத்தனால் அல்லது பெட்ரோலை எடுத்துக் கொள்ளலாம். இது அரசாங்கத்தின் இறுதி இலக்காக இருக்கும்.
இருப்பினும், அந்த நிலையை அடைய, சில தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. அதற்கான, பணிகள் நடந்து வருகின்றன. எத்தனால் கலப்படம் தொடர்பாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுடன் ஒரு முக்கிய சந்திப்பை நடத்த உள்ளோம். பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலப்பதை அடைவதற்கான இலக்கு தேதியை 2025ஆம் ஆண்டுக்கு ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியா முன்னெடுத்துள்ளது.
பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதற்கு, நமது நாட்டிற்கு 1,000 கோடி லிட்டர் கொள்ளளவு தேவைப்படுகிறது. 450 கோடி லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 400 கோடி லிட்டருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 20 சதவிகித கலப்பிற்கான போதுமான எத்தனால் கைவசம் உள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து பெட்ரோலிலும் 20 சதவீதம் எத்தனால் இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -