Breaking News LIVE: ”மணிப்பூர் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அரசியலாக்குகின்றனர்' - நாடாளுமன்றத்தில் அமித்ஷா பேச்சு
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.
மணிப்பூர் விவகாரத்தை எதிர்க்கட்சிகள் அரசியலாக்குவது வெட்கக்கேடானது. மணிப்பூர் மாநிலத்தில் நடைபெற்ற சம்பவங்களை யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாது என்று நாடாளுமன்றத்தில் அமித்ஷா பேசியுள்ளார்.
பயங்கரவாதம் இல்லாத காஷ்மீரே உருவாக்க மோடி அரசு பணியாற்றி கொண்டிருக்கிறது. காஷ்மீரில் பயங்கரவாதிகள் ஊர்வலம் நடப்பதில்லை. அவர்கள் கொல்லம்படும் இடத்திலேயே புதைக்கப்படுகிறார்கள் என்று நாடாளுமன்றத்தில் அமித்ஷா பேசியுள்ளார்.
யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழக அரசு மாணவர்களுக்கு ரூ.25 ஆயிரம் ஊக்கத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் திட்டங்களை அறிவிப்பதோடு நின்றுவிடுகிறது. பாஜக அரசுதான் செயல்படுத்துகிறது. பொருளாதாரத்தில் 11வது இடத்தில் இருந்த இந்தியா தற்போது ஐந்தாவது இடத்திற்கு உயர்ந்துள்ளது. 2027ல் இந்தியா உலகின் 3வது பெரிய பொருளாதார நாடாக உயரும் என நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளார்.
காங்கிரஸ் திட்டங்களை அறிவிப்பதோடு நின்றுவிடுகிறது. பாஜக அரசுதான் செயல்படுத்துகிறது. பொருளாதாரத்தில் 11வது இடத்தில் இருந்த இந்தியா தற்போது ஐந்தாவது இடத்திற்கு உயர்ந்துள்ளது. 2027ல் இந்தியா உலகின் 3வது பெரிய பொருளாதார நாடாக உயரும் என நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளார்.
காங்கிரஸ் திட்டங்களை அறிவிப்பதோடு நின்றுவிடுகிறது. பாஜக அரசுதான் செயல்படுத்துகிறது. பொருளாதாரத்தில் 11வது இடத்தில் இருந்த இந்தியா தற்போது ஐந்தாவது இடத்திற்கு உயர்ந்துள்ளது. 2027ல் இந்தியா உலகின் 3வது பெரிய பொருளாதார நாடாக உயரும் என நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளார்.
காங்கிரஸ் திட்டங்களை அறிவிப்பதோடு நின்றுவிடுகிறது. பாஜக அரசுதான் செயல்படுத்துகிறது. பொருளாதாரத்தில் 11வது இடத்தில் இருந்த இந்தியா தற்போது ஐந்தாவது இடத்திற்கு உயர்ந்துள்ளது. 2027ல் இந்தியா உலகின் 3வது பெரிய பொருளாதார நாடாக உயரும் என நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளார்.
அரசியில் உள்நோக்கங்களுக்காக இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. நம்பிக்கையில்லா தீர்மானம் எதிர்க்கட்சிகளின் உண்மையான முகத்தை வெளிக்கொணர்ந்துள்ளது. மக்களிடம் ஒரு மாயையை உருவாக்கவே நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்துள்ளனர் என்றார் உள்துறை அமைச்சர் அமித்ஷா.
மோடி ஆட்சியில் ஏழைகளுக்கான நிதி முழுமையாக சென்றடைகிறது. காங்கிரஸ் ஆட்சியில் அப்படி இல்லை. காங்கிரஸ் ஆட்சியில் 1 கோடி ரூபாய் ஒதுக்கினால் ஏழைகளுக்கு 15 பைசா மட்டுமே சென்றடைந்தது என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளார்.
நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தில் மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசி வருகிறார்.
நாட்டு மக்களுக்கு ஒரு நாளைக்கு 17 மணி நேரம் ஓய்வின்றி உழைக்கிறார் பிரதமர் மோடி என்றும் ஒருநாள் கூட விடுமுறை இன்றி ஓய்வின்றி உழைப்பதால் மக்கள் மோடி மீது நம்பிக்க வைத்துள்ளனர் என்றும் நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளார்
மணிப்பூரில் படுகொலைகளைத் தடுக்க மாநில அரசும் மத்திய அரசும் தவறிவிட்டன. மணிப்பூரில் உணவு, தண்ணீர் என அடிப்படை தேவைகள் கூட மக்கள் இல்லாமல் தவித்து வருகின்றனர். புதிய நாடாளுமன்றத்தில் செங்கோலை வைத்துள்ளீர்கள். மதுரையில் பாண்டிய மன்னனின் செங்கோல் தகர்ந்த கதை உங்களுக்கு தெரியுமா? கண்ணகி மதுரையை எரித்த கதை தெரியுமா உங்களுக்கு? எங்களை ஹிந்தி படிக்கச் சொல்வதைவிட நீங்கள் சிலப்பதிகாரம் படியுங்கள் அதில் உங்களுக்கான பாடம் உள்ளது என எம். பி. கனிமொழி கருணாநிதி ஆவேசமாக பேசினார்.
கேரள மாநிலத்தின் பெயரை ‛கேரளம்' என பெயர் மாற்ற அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. அரசியல்சாசனம் மற்றும் அரசு ஆவணங்களில் மாநிலத்தின் பெயர் ‛கேரளம்' என மாற்றம் செய்ய மாநில அரசு விரும்புகிறது. இதற்காக கேரளாவின் பெயரை மாற்றம் செய்வதற்கான தீர்மானத்தை சட்டசபையில், முதலமைச்சர் பினராயி விஜயன் நிறைவேற்றியுள்ளார்.
செந்தில் பாலாஜி பணப்பரிவர்த்தனை முறைகேடு வழக்கில் அவரது சகோதரரின் மனைவிக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது.
கேரளா என்ற பெயரை கேரளம் என்று மாற்றம் செய்ய தீர்மானம் நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஊழலைப் பற்றி பேசும்போது உங்கள் கூட்டணியில் இருக்கும் திமுகவை பாருங்கள் - ஸ்மிருதி இரானி
காஷ்மீர் சிறப்பு பிரிவு 370 நீக்கப்பட்டதால் பெண்கள் பாதுகாப்புடன் இருக்கிறார்கள் - ஸ்மிருதி இரானி
மணிப்பூர் நமது நாட்டின் ஒருங்கிணைந்த பகுதி. மணிப்பூர் ஒருபோதும் பிரிக்கப்படவில்லை.. இனியும் இருக்காது - ஸ்மிருதி இரானி
ராமாயணத்தில் மேகநாதன், கும்பகர்ணன் மற்றும் மக்களின் பேச்சுகளை ராவணன் கேட்டார். ஆனால், அமிஷ்தா மற்றும் அதானி ஆகியோர் சொல்வதையே பிரதமர் மோடி கேட்கிறார் - ராகுல் காந்தி
மணிப்பூரில் ராணுவத்தை பயன்படுத்தினால் ஒரே நாளில் அமைதியை கொண்டு வரலாம் - ராகுல் காந்தி
மணிப்பூரில் நான் சந்தித்த பெண்கள், குழந்தைகளின் கதைகள் அவ்வளவு கொடுமையாக உள்ளன. மணிப்பூரில் மகனை இழந்த பெண் அந்த சடலத்துடன் இரவு முழுவதும் இருந்ததை கண்ணீருடன் கூறினார் - ராகுல் காந்தி
மணிப்பூரில் பாரத மாதாவை கொன்றீர்கள், இந்தியா படுகொலை செய்யப்பட்டுள்ளது என ராகுல் காந்தி ஆக்ரோஷமாக பேசினார்.
மணிப்பூரில் தான் சந்தித்தாக சில விஷயங்களை ராகுல் காந்தி அவையில் பகிர்ந்தபோது பாஜக எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து, ராகுல் பொய் சொல்வதாக பாஜகவினர் குரல் எழுப்பியதற்கு, பொய் சொல்வது உங்கள் வேலை என ராகுல் அதிரடியாக பதில் கொடுத்தார்.
இந்தியா என்பது அனைவருக்கு ஒரே குரல். வெறுப்பை ஒழிக்க வேண்டும். சில நாட்களுக்கு முன்பு நான் மணிப்பூர் சென்றிருந்தேன். நமது பிரதமர் மணிப்பூருக்கு இன்று வரை செல்லவில்லை. ஏனென்றால் மணிப்பூர் அவர்களுக்கு இந்தியா அல்ல. இன்று மணிப்பூர் மணிப்பூராகவே இல்லை. மணிப்பூரை உடைத்து விட்டீர்கள் - ராகுல் காந்தி
சபாநாயகரே, என்னை மீண்டும் மக்களவை எம்.பி.யாக பதவியில் அமர்த்தியதற்கு முதலில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த முறை பேசியபோது, நான் கவனம் செலுத்தியதால் உங்களுக்கு சிரமம் கொடுத்திருக்கலாம். அதானி, ஒருவேளை உங்கள் மூத்த தலைவர் காயப்பட்டிருக்கலாம்... அந்த வலி உங்களையும் பாதித்திருக்கும்.இதற்கு நான் உங்களிடம் மன்னிப்பு கேட்கிறேன், ஆனால் நான் உண்மையை மட்டுமே சொன்னேன். இன்று பாஜகவில் உள்ள எனது நண்பர்கள் பயப்படத் தேவையில்லை, ஏனென்றால் இன்று எனது பேச்சு அதானியை மையமாகக் கொண்டிருக்கவில்லை. மாறாக, மணிப்பூரை பற்றி மட்டுமே பேச போகிறேன் - ராகுல் காந்தி
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான எனது நடைபயணம் இன்னும் முடியவில்லை. நான் அன்பை செலுத்துவதற்குதான் இந்த நடைபயணத்தை மேற்கொண்டேன் என்பதை புரிந்துகொண்டேன். என் மனதில் இருந்த வெறுப்பை அகற்றிவிட்டு அன்பை நிறைந்து வைத்துள்ளேன் - ராகுல் காந்தி
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான எனது நடைபயணம் இன்னும் முடியவில்லை. நான் அன்பை செலுத்துவதற்குதான் இந்த நடைபயணத்தை மேற்கொண்டேன் என்பதை புரிந்துகொண்டேன் என்றார் ராகுல்காந்தி
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான எனது நடைபயணம் இன்னும் முடியவில்லை என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
மணிப்பூர் பற்றியே பேச போகிறேன்; மோடி - அதானி உறவு குறித்து நான் பேச மாட்டேன், நீங்கள் அமைதியாக இருங்கள் என ராகுல் காந்தி பேசி வருகிறார்.
நான் பேசுவதை கேட்டு பாஜக உறுப்பினர்கள் அச்சப்பட வேண்டாம் என ராகுல் காந்தி பேச்சு.
ராகுல் காந்தி அதானி குறித்து பேசத் தொடங்கிய உடனே பாஜக எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
டெல்லி நிர்வாக சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்ததற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் நன்றி தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக மாநிலங்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் அறிவிப்பு - எதிர்க்கட்சிகளின் நடத்தை வருத்தம் அளிப்பதாக மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கர் தெரிவித்துள்ளார்.
கைது செய்தால் சிறைக்கு செல்ல வேண்டும், கலவரம் செய்யக்கூடாது என பாமக தலைவர் அன்புமணிக்கு அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் பதில் அளித்துள்ளார். மத்திய அமைச்சரவையில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தபோது மக்களுக்கு அன்புமணி என்ன செய்தார் என்றும் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் கேள்வியெழுப்பியுள்ளார்.
மத்திய அரசு கொண்டு வரும் மசோதாக்களுக்கு ஆதரவு தரும் அதிமுகவை திமுக விமர்சிப்பது வெட்கக்கேட்டானது என அண்ணாமலை விமர்சித்துள்ளார். காங்கிரஸ் கட்சிக்கு உற்ற அடிமையாக இருக்கும் கட்சி தான் திமுக என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
மத்திய அரசு மீது கொண்டு வரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது இன்று இரண்டாவது நாளாக விவாதம் நடத்தப்படுகிறது. இன்றைய தினத்தில் ராகுல் காந்தி தனது வாதத்தை முன்வைப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை இந்த விவாதங்களுக்கு பிரதமர் மோடி பதிலளிப்பார் என கூறப்பட்டுள்ளது.
சபரிமலை கோயிலில் நாளை அதிகாலை 5 மணிக்கு நிறைபுத்தரிசி பூஜை நடைபெறுகிற்து. இதற்கான இன்று மாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்படுகிறது.
ஜெயிலர் படம் நாளை ரிலீசாகவுள்ள நிலையில், நடிகர் ரஜினிகாந்த் இமயமலைக்கு புறப்பட்டு சென்றார். 4 ஆண்டுகளுக்குப் பின் இமயமலை செல்வதால் மகிழ்ச்சியுடன் இருப்பதாக தெரிவித்தார்.
தமிழ்நாடு ஹஜ் குழு மூலம் புனிதப்பயணம் மேற்கொள்ளும் 3,987 பேருக்கு இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மானியம் வழங்குகிறார். நிகழ்ச்சியின் தொடக்கமாக ஹஜ் பயணிகள் 5 பேருக்கு தலா ரூ.25,070 காசோலை வழங்க உள்ளார்.
ஆடி கிருத்திகையை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது - ராணிப்பேட்டை மாவட்டத்திலும் பள்ளி, கல்லூரிக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
திருநெல்வேலி ரயில்வே யார்டு பகுதியில் பாலம் பராமரிப்பு பணி காரணமாக இன்று ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நெல்லை - திருச்செந்தூர்(06675), திருச்செந்தூர் - வாஞ்சி மணியாச்சி முன்பதிவில்லா சிறப்பு வண்டி முழுமையாக ரத்து, நாகர்கோயில் - தாம்பரம் அந்தித்யோ சிறப்பு ரயில் விருதுநகரில் இருந்து புறப்படும் என அறிவிப்பு
Background
Petrol Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலை 14 மாதங்களை கடந்தும் மாற்றமின்றி விற்பனையாகி வரும் சூழலில் , இன்றைய நிலவரத்தை அறியலாம்.
உலகமே எரிபொருளை மையமாகக் கொண்டு தான் இயங்கி வரும் வேளையில் முழுமையான மின்சார சக்தியில் செயல்படும் அளவிற்கு உலக நாடுகள் தங்களை உயர்த்திக் கொள்ள முயற்சித்து வருகின்றன. அந்த வரிசையில் இந்தியாவும் முழுமையாகக் களம் கண்டுள்ளது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் சம்பந்தமான பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன. இதனால் வெகு விரைவில் முற்றிலுமான மின்மயமான நாட்டினை நோக்கி இந்தியா தன்னை நகர்த்திக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவை பொறுத்தவரை 80% வாகனங்கள் பெட்ரோல், டீசல் ஆகியவற்றில் இயங்கி வருகிறது. இதன் காரணமாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு மக்களின் அன்றாட வாழ்க்கையில் பெரும் மாற்றத்தினை ஏற்படுத்துகிறது. அதேபோல் எரிபொருட்களின் விலை உயர்வு என்பது அன்றாட அத்தியாவசியப் பொருட்களின் மீதான விலை உயர்வில் மிகப்பெரிய அளவில் பிரதிபலிக்கும். எனவே சாமானிய மக்களும் எரிபொருள் விலை நிலவரத்தை ஒவ்வொரு நாளும் கண்காணித்து வருகிறார்கள்.
இன்றைய விலை நிலவரம்
இந்நிலையில் சென்னையில் இன்று (ஆகஸ்ட் 9) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை நிர்ணயமானது தொடர்ந்து மாற்றமின்றி 445வது நாளாக தொடர்கிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். முன்னதாக கடந்த 2020, 2021 ஆம் ஆண்டுகளில் பரவிய கொரோனா வைரஸ் தொற்றால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் மிகப்பெரிய பொருளாதார பாதிப்பை சந்தித்தனர்.
அப்போது கலால் வரி குறைப்பால் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை 6 ரூபாய்க்கும் குறைந்தது. இத்தகைய சூழலில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி 10 மாதங்களை கடந்துள்ளது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேசிய உயிரி எரிபொருள் கொள்கை
கடந்த 2018ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்த தேசிய உயிரி எரிபொருள் கொள்கை 2030ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனாலைக் கலந்து விற்க இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், அந்த இலக்கு தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக 2025 ஆம் ஆண்டு என மாற்றியமைக்கப்பட்டது.
இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, ”இருபது சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் டிசம்பர் அல்லது ஜனவரி முதல் நாட்டில் கிடைக்கும்” எனத்தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எத்தனால் உற்பத்தியை நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். ஏப்ரல் 2023க்கு முன்னதாக டிசம்பர் அல்லது ஜனவரியில் 20 சதவீதம் கலப்பு எரிபொருள் சந்தைக்கு வரும் என்று நான் நம்புகிறேன்" என் கூறினார்.
நெகிழ்வான எரிபொருள் வாகனங்கள் (கலப்பு எரிபொருளில் இயங்கும் வாகனங்கள்) கிடைக்கும் பிரேசிலை உதாரணமாக மேற்கோள் காட்டி பேசிய ஹர்தீப் சிங் பூரி, "நுகர்வோர் விருப்பப்படி எத்தனால் அல்லது பெட்ரோலை எடுத்துக் கொள்ளலாம். இது அரசாங்கத்தின் இறுதி இலக்காக இருக்கும்.
இருப்பினும், அந்த நிலையை அடைய, சில தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. அதற்கான, பணிகள் நடந்து வருகின்றன. எத்தனால் கலப்படம் தொடர்பாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுடன் ஒரு முக்கிய சந்திப்பை நடத்த உள்ளோம். பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலப்பதை அடைவதற்கான இலக்கு தேதியை 2025ஆம் ஆண்டுக்கு ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியா முன்னெடுத்துள்ளது.
பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதற்கு, நமது நாட்டிற்கு 1,000 கோடி லிட்டர் கொள்ளளவு தேவைப்படுகிறது. 450 கோடி லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 400 கோடி லிட்டருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 20 சதவிகித கலப்பிற்கான போதுமான எத்தனால் கைவசம் உள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து பெட்ரோலிலும் 20 சதவீதம் எத்தனால் இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -