Breaking News LIVE: மேற்கு வங்க நிலவரம் : “இது தேர்தலே இல்லை.. இது மரணம்” - சுவேந்து அதிகாரி

Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.

பேச்சி ஆவுடையப்பன் Last Updated: 08 Jul 2023 01:23 PM
Breaking News LIVE: மேற்கு வங்க உள்ளாட்சி தேர்தல் - வாக்குப்பெட்டி தீ வைத்து எரிப்பு

மேற்கு வங்கம் மாநிலம் கூச் பெஹார் மாவட்டத்தில் உள்ள தின்ஹாட்டாவில் உள்ள பரனாச்சினா என்ற இடத்தில் உள்ள வாக்குச் சாவடியில் போலி வாக்குப்பதிவு நடந்ததாக கூறி,  வாக்காளர்களால் வாக்குப்பெட்டியை தீ வைத்து எரித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

DIG Vijayakumar : பணியிலும் மன அழுத்தம் இல்லை.. குடும்பத்திலும் மன அழுத்தம் இல்லை. பிறகு ஏன் டிஐஜி தற்கொலை. சிபிஐ விசாரிக்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி

DIG Vijayakumar : பணியிலும் மன அழுத்தம் இல்லை.. குடும்பத்திலும் மன அழுத்தம் இல்லை. பிறகு ஏன் டிஐஜி தற்கொலை. சிபிஐ விசாரிக்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி

DIG Vijayakumar : ஏற்கெனவே மன அழுத்தத்தில் இருந்த டிஐஜி விஜயகுமாருக்கு, தொடர்ந்து பணி கொடுத்ததால் தற்கொலை முடிவு : எடப்பாடி பழனிசாமி பேச்சு

ஏற்கெனவே மன அழுத்தத்தில் இருந்த டிஐஜி விஜயகுமாருக்கு, தொடர்ந்து பணி கொடுத்ததால் தற்கொலை முடிவு எடுத்துள்ளார் : செய்தியாளர்களிடம் எடப்பாடி பழனிசாமி பேச்சு

Breaking News LIVE: மேற்கு வங்க உள்ளாட்சி தேர்தல் - வாக்குச்சாவடி மீது மர்ம நபர்கள் தாக்குதல்

மேற்கு வங்க உள்ளாட்சி தேர்தலில்  ஜல்பைகுரியில் நகரில் உள்ள வாக்குச்சாவடி மீது தாக்கப்பட்டதால் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

மேற்கு வங்க தேர்தல் : சுயேட்சை வேட்பாளரின் பூத் ஏஜெண்ட் கொலை.. திரிணாமூல் வேட்பாளரின் கணவர் மீது புகார்

Breaking News LIVE: வேளாண் வணிக திருவிழா - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் கண்காட்சி அரங்கை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்- உழவர் உற்பத்தி நிறுவனங்கள், விவசாயிகளுக்கு விருதுகளையும் வழங்குகிறார்.

Breaking News LIVE: மேற்கு வங்க உள்ளாட்சி தேர்தல் - பாஜக வேட்பாளரின் பூத் ஏஜெண்ட் கொலை

மேற்கு வங்க உள்ளாட்சி தேர்தலில் கூச் பெஹார் நகரின் ஃபலிமாரி கிராமப் பஞ்சாயத்தில் உள்ள வாக்குச் சாவடியில் பணியாற்றி வந்த பாஜக வேட்பாளரின் பூத் ஏஜெண்ட் மாதவ் விஸ்வாஸ் மர்ம நபர்களால் கொலை - வாக்குப்பதிவு நிறுத்தம்

மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிப்பு..!

மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகரித்துள்ளது

Breaking News LIVE: மேற்கு வங்க உள்ளாட்சி தேர்தல் - சுயேச்சை வேட்பாளரின் பூத் ஏஜென்ட் கொலை

வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தின் பிர்காச்சாவில் உள்ள வாக்குச்சாவடியில் சுயேச்சை வேட்பாளரின் பூத் ஏஜென்ட் அப்துல்லா கொலை - இதற்கு பின்னணியில் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் முன்னா பீபியின் கணவர் இருப்பதாகவும் குற்றம்சாட்டப்பட்டவர்களைக் கைது செய்யக் கோரியும் கிராம மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Breaking News LIVE: களக்காடு தலையணையில் சுற்றுலா பயணிகளுக்கு தடை 

நெல்லை மாவட்டம் களக்காடு தலையணையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் செல்ல தடை - கடந்த சில தினங்களாகவே நெல்லை மாவட்டத்தில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. 

Breaking News LIVE: மேற்கு வங்க உள்ளாட்சி தேர்தல் - மழைக்கு மத்தியில் ஆர்வத்துடன் வாக்களிக்கு மக்கள் 

மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெற்று வரும் உள்ளாட்சி தேர்தலில் South 24 Parganas மாவட்டத்தில் கொட்டும் மழையில் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். 

Breaking News LIVE: ரயிலில் இருந்து தவறி விழுந்த மாணவி உயிரிழப்பு 

சென்னை இந்திரா நகர் ரயில் நிலையம் அருகே கடந்த ஜூலை 2 ஆம் தேதி ரயிலில் இருந்து தவறி விழுந்த மாணவி ப்ரீத்தி மரணம் - ரயிலில் பயணித்த போது சிலர் செல்போனை பறிக்க முயன்றதால் ப்ரீத்தி தவறி கீழே விழுந்து பலத்த காயத்துடன் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணம் 

Background

கடும் வன்முறைக்கு மத்தியில் மேற்குவங்க மாநிலத்தில் துணை ராணுவத்தின் பாதுகாப்புடன், இன்று உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது.


பலத்த பாதுகாப்புடன் தேர்தல்:


பல்வேறு வன்முறைகளுக்கு மத்தியில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி செய்யும் மேற்குவங்க மாநிலத்தில் இன்று ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது.  5.67 கோடி வாக்காளர்கள் இந்த தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியானது முதலே அங்கு பல்வேறு வன்முறை மற்றும் கலவரங்கள் தொடர்ந்து அரங்கேறி வருவதால், பலத்த பாதுகாப்புடன் இன்று காலை 7 மணியளவில் வாக்குப்பதிவு தொடங்கியது. 65,000 துணை ராணுவப் படையினரும்,  மாநில காவல்துறை சார்பில் 70 ஆயிரம் காவலர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


வன்முறை அச்சத்திற்கு மத்தியிலும் காலை முதலே பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, வாக்குச்சாவடிகளில் வாக்களித்து தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினார். பல இடங்களில் வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடைபெறும் காட்சிகள் வெளியாகி வருகின்றன. மொத்தம் 63,229 கிராம பஞ்சாயத்து உறுப்பினர்கள்,  9,730 பஞ்சாயத்து உறுப்பினர்கள் மற்றும் 928 மாவட்ட உறுப்பினர் பதவிகளுக்கு இந்த தேர்தல் நடைபெறுகிறது.


வாக்குச்சாவடியில் வன்முறை:


இந்நிலையில் தான், கூச்பெஹார் அடுத்த சீதாயில் உள்ள ஆரம்பப் பள்ளியில் அமைக்கப்பட்டு இருந்த வாக்குச் சாவடி அடையாளம் தெரியாத நபர்களால் சேதப்படுத்தப்பட்டு வாக்குச் சீட்டுகள் தீ வைத்து எரிக்கப்பட்ட காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுதியுள்ளன. வாக்குச்சாவடியில் அமைக்கப்பட்டு இருந்த நாற்காலிகள் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் சூறையாடப்பட்டு அந்த இடமே கலவர பூமியாக காட்சியளிக்கிறது. இந்த செயலில் ஈடுபட்டது யார் என்பது தொடர்பான தகவல் இதுவரை வெளியாகவில்லை.


தொடரும் மோதல்:


தொடர் வன்முறை சம்பவங்கள் காரணமாக மேற்கு வங்கத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் களம் சூடிபிடித்து இருக்கிறது. ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி, பாரதிய ஜனதா கட்சி, இடதுசாரிகள் இடையே போட்டி நிலவி வருகிறது. இதுவரை அங்கு நடைபெற்ற மோதல்களில் 12 வயது சிறுவன் உட்ப்ட 12 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. 


கொல்லப்பட்ட காங்கிரஸ் பிரமுகர்:


நேற்று நள்ளிரவில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினருக்கும் காங்கிரஸ் தொண்டர்களுக்கும் இடையே முர்ஷிதாபாத்தில் வன்முறை ஏற்பட்டது. அதில் காங்கிரஸ் தொண்டர் அர்விந்தோ மொண்டல் கொல்லப்பட்டார். அவரது வீடும் கடுமையாக தாக்கப்பட்டு உள்ளது. இதனால்,  இரு கட்சியினருக்கும் இடையேயான மோதல் வலுவானது. இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக்கொண்டார்கள். அதே நேரம் அரவிந்தோ மொண்டலை தாங்கள் கொல்லவில்லை என திரிணாமூல் கட்சி தரப்பு விளக்கமளித்துள்ளது.

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.