Breaking News LIVE: 'இந்தியாவே எனது வீடுதான்' - எம்.பி. ராகுல் காந்தி நெகிழ்ச்சி!
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.
இந்தியா முழுவதுமே என் வீடுதான் என்று டெல்லியில் மீண்டும் அரசு இல்லம் தரப்பட்டது பற்றி ராகுல்காந்தி பேட்டி அளித்துள்ளார்.
கணவன் முருகன் இலங்கை துணை தூதரகத்திற்கு செல்ல அனுமதி கோரிய வழக்கில் நளினியின் வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆடி கிருத்திகையையொட்டி ராணிப்பேட்டை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மணிப்பூர் விவகாரம் தொடர்பாக மாநிலங்களவையில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்துள்ளனர்.
மீண்டும் எம்.பி. பதவி கிடைத்த நிலையில், தனது தொகுதியான வயநாட்டிற்கு வரும் 12,13ஆம் தேதி ராகுல் காந்தி செல்கிறார்.
மணிப்பூர் எரியும்போது எகிப்து பிரமிடுகளைப் பார்க்கச் சென்றார் பிரதமர் மோடி, மணிப்பூர் ஆட்சியை உடனே கலைத்துவிட்டு குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தவேண்டும் - கார்கே
மணிப்பூரில் வன்முறை வெடித்து 80 நாட்களுக்கு பிறகுதான் பிரதமர் வாயைத் திறக்கிறார் - கார்கே
சேது சமுத்திர திட்டத்தை திமுக - காங்கிரஸ் கொண்டுவந்த திட்டம் என்பதால் மட்டுமே கிடப்பில் போட்டீர்கள் - பாஜக மீது குற்றம்சாட்டிய டி.ஆர் பாலு
”வேலைவாய்ப்பு குறுத்து கொடுக்கப்பட்ட உறுதிகள் என்ன ஆனது? சேது சமுத்திர திட்டம் என்ன ஆனது? “ நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது திமுக எம்.பி டி.ஆர் பாலு பேச்சு
நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது இன்று நாள் முழுவதும் விவாதம் நடத்த முடிவு
நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான காரசார விவாதம், 1 மணிநேரத்துக்கும் மேலாக தொடர்ந்து வருகிறது
நீங்கள் நினைத்தால் 24 மணி நேரத்தில் வேலையை முடிப்பீர்கள், 24 வருடமானாலும் வேலையை முடிக்காமல் இழுத்தடிப்பீர்கள், அரசுகள் எப்படி செயல்படும் என்பது தெரியும் என நீதிபதிகள் காட்டம்.
பிரதமர் மணிப்பூர் ஏன் செல்லவில்லை? மணிப்பூர் மாநில முதலமைச்சர் ஏன் பதவி விலகவில்லை? அநீதிக்கு தீர்வு கேட்கிறோம் - கவுரவ் கோகோய் கேள்வி
Parliament Session : மணிப்பூர் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதி, ஒட்டுமொத்த இந்தியாவுக்குமான அநீதி - கவுரவ் கோகோய்
பிரதமர் மோடியின் மெளனத்தைக் கலைக்கத்தான் நம்பிக்கையில்லா தீர்மானம் - காங்கிரஸ்
Parliamentary Session LIVE : பிரதமர் மோடி ஏன் அவைக்கு வரவில்லை? காங்கிரஸ் எம்.பிக்கள் முழக்கமிட்டனர்
Parliamentary Session LIVE : நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது இன்னும் சற்றுநேரத்தில் விவாதம் தொடங்க இருக்கிறது
மாநிலங்களவையில் இருந்து திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி டெரிக் ஓ பிரையன் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து முழக்கங்களை எழுப்பியதால் அவரை இடைநீக்கம் செய்து அவைத் தலைவர் உத்தரவிட்டுள்ளார். கூட்டத்தொடரில் உள்ள எஞ்சிய நாட்கள் முழுவது டெரிக் ஓ பிரையன் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
நாடாளுமன்ற வளாகத்தில் பாஜக எம்.பி.க்கள் குழு கூட்டம் தொடக்கம் :
மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் மக்களவையில் இன்று தொடங்குகிறது. மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி தொடங்கி வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
”அம்பேத்கரின் குரலை ஓங்கி ஒலிக்க விட்டேன்.. அணைத்துக்கொண்டீர்கள்..” : ஃபகத் ஃபாசிலுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்த மாரி செல்வராஜ்
மக்களாட்சியின் கருப்பு நாள் இது : முதலமைச்சர் ஸ்டாலின் ட்வீட் :
மணிப்பூர் பற்றி எரிகிறது. அதை அணைக்க முடியாமல் டெல்லி சேவைகள் மசோதாவை கையிலெடுத்த பாஜகவின் தந்திரத்தை மக்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்
அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பிரதமர் தலைமையில் பாஜக நாடாளுமன்ற குழு கூட்டம் இன்று நடைபெறும்
தலைநகர் டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சியின் அதிகாரங்களை குறைக்கும் வகையில், மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வந்தது. இந்த மசோதா கடந்த 3ம் தேதி மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. காங்கிரஸ் மற்றும் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும், இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில் நேற்று மாநிலங்களவையிலும் டெல்லி நிர்வாக மசோதாவை உள்துறை அமைச்சர் அமித் ஷா தாக்கல் செய்தார்.
இன்று முதல் 10-ஆம் தேதி வரை பிரதமர் மோடி மீது கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் நடத்தப்படுகிறது. மேலும் இந்த விவாதங்களுக்கு பிரதமர் மோடி 10 ஆம் தேதி பதிலளிப்பார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நம்பிக்கை இல்லா தீர்மானம் மீதான விவாதங்களை ராகுல் காந்தி தொடங்கி வைப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது
உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜியை, அமலாக்கத்துறை 5 நாட்கள் விசாரணைக் காவலில் எடுத்து விசாரிக்க சென்னை முதன்மை செசன்ஸ் நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதனால், சற்றும் தாமதிக்காமல் அமலாக்கத்துறை அதிகாரிகள் உடனடியாக புழல் சிறைக்கு சென்று செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரணை செய்து வருகின்றனர். சாஸ்திரி பவனின் மூன்றாவது மாடியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் அதிகாரிகள் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
ஜூன் மாதம் முதல் தக்காளியின் விலை அதிகரிக்க தொடங்கிய நிலையில் கடந்த வாரம் உச்சத்தில் இருந்தது. ஒரு கிலோ தக்காளி ரூ.150 வரை விற்பனை செய்யப்பட்டது. ஆனால் இந்த வாரம் தொடக்கத்திலிருந்து தக்காளியின் விலை மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. இன்றைய நிலவரப்படி ஒரு கிலோ தக்காளி 50 முதல் 90 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
Background
Petrol Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலை 14 மாதங்களை கடந்தும் மாற்றமின்றி விற்பனையாகி வரும் சூழலில் , இன்றைய நிலவரத்தை அறியலாம்.
உலகமே எரிபொருளை மையமாகக் கொண்டு தான் இயங்கி வரும் வேளையில் முழுமையான மின்சார சக்தியில் செயல்படும் அளவிற்கு உலக நாடுகள் தங்களை உயர்த்திக் கொள்ள முயற்சித்து வருகின்றன. அந்த வரிசையில் இந்தியாவும் முழுமையாகக் களம் கண்டுள்ளது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் சம்பந்தமான பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன. இதனால் வெகு விரைவில் முற்றிலுமான மின்மயமான நாட்டினை நோக்கி இந்தியா தன்னை நகர்த்திக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவை பொறுத்தவரை 80% வாகனங்கள் பெட்ரோல், டீசல் ஆகியவற்றில் இயங்கி வருகிறது. இதன் காரணமாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு மக்களின் அன்றாட வாழ்க்கையில் பெரும் மாற்றத்தினை ஏற்படுத்துகிறது. அதேபோல் எரிபொருட்களின் விலை உயர்வு என்பது அன்றாட அத்தியாவசியப் பொருட்களின் மீதான விலை உயர்வில் மிகப்பெரிய அளவில் பிரதிபலிக்கும். எனவே சாமானிய மக்களும் எரிபொருள் விலை நிலவரத்தை ஒவ்வொரு நாளும் கண்காணித்து வருகிறார்கள்.
இன்றைய விலை நிலவரம்
இந்நிலையில் சென்னையில் இன்று (ஆகஸ்ட் 8) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை நிர்ணயமானது தொடர்ந்து மாற்றமின்றி 444வது நாளாக தொடர்கிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். முன்னதாக கடந்த 2020, 2021 ஆம் ஆண்டுகளில் பரவிய கொரோனா வைரஸ் தொற்றால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் மிகப்பெரிய பொருளாதார பாதிப்பை சந்தித்தனர்.
அப்போது கலால் வரி குறைப்பால் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை 6 ரூபாய்க்கும் குறைந்தது. இத்தகைய சூழலில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி 10 மாதங்களை கடந்துள்ளது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேசிய உயிரி எரிபொருள் கொள்கை
கடந்த 2018ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்த தேசிய உயிரி எரிபொருள் கொள்கை 2030ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனாலைக் கலந்து விற்க இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், அந்த இலக்கு தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக 2025 ஆம் ஆண்டு என மாற்றியமைக்கப்பட்டது.
இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, ”இருபது சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் டிசம்பர் அல்லது ஜனவரி முதல் நாட்டில் கிடைக்கும்” எனத்தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எத்தனால் உற்பத்தியை நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். ஏப்ரல் 2023க்கு முன்னதாக டிசம்பர் அல்லது ஜனவரியில் 20 சதவீதம் கலப்பு எரிபொருள் சந்தைக்கு வரும் என்று நான் நம்புகிறேன்" என் கூறினார்.
நெகிழ்வான எரிபொருள் வாகனங்கள் (கலப்பு எரிபொருளில் இயங்கும் வாகனங்கள்) கிடைக்கும் பிரேசிலை உதாரணமாக மேற்கோள் காட்டி பேசிய ஹர்தீப் சிங் பூரி, "நுகர்வோர் விருப்பப்படி எத்தனால் அல்லது பெட்ரோலை எடுத்துக் கொள்ளலாம். இது அரசாங்கத்தின் இறுதி இலக்காக இருக்கும்.
இருப்பினும், அந்த நிலையை அடைய, சில தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. அதற்கான, பணிகள் நடந்து வருகின்றன. எத்தனால் கலப்படம் தொடர்பாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுடன் ஒரு முக்கிய சந்திப்பை நடத்த உள்ளோம். பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலப்பதை அடைவதற்கான இலக்கு தேதியை 2025ஆம் ஆண்டுக்கு ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியா முன்னெடுத்துள்ளது.
பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதற்கு, நமது நாட்டிற்கு 1,000 கோடி லிட்டர் கொள்ளளவு தேவைப்படுகிறது. 450 கோடி லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 400 கோடி லிட்டருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 20 சதவிகித கலப்பிற்கான போதுமான எத்தனால் கைவசம் உள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து பெட்ரோலிலும் 20 சதவீதம் எத்தனால் இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -