Breaking News LIVE: ஆளுநர் மாளிகையில் பாரதியார் மண்டபமாக மாறிய தர்பார் ஹால்

Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.

பேச்சி ஆவுடையப்பன் Last Updated: 06 Aug 2023 07:41 PM
ஆளுநர் மாளிகையில் பாரதியார் மண்டபமாக மாறிய தர்பார் ஹால்

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையின் தர்பார் ஹால் பெயர் பாரதியார் மண்டபம் என பெயர் மாற்றப்பட்டுள்ளது.

வடமாநிலத்தவர்களுக்கு வேலை - விளக்கம் அளித்த என்.எல்.சி.

ராஜஸ்தானில் என்.எல்.சி. நிறுவனத்திற்கு நிலம் வழங்கிய 28 பேருக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக என்.எல்.சி. நிறுவனம் தெரிவித்துள்ளது.

வடமாநிலத்தவர்களுக்கு வேலை - விளக்கம் அளித்த என்.எல்.சி.

ராஜஸ்தானில் என்.எல்.சி. நிறுவனத்திற்கு நிலம் வழங்கிய 28 பேருக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக என்.எல்.சி. நிறுவனம் தெரிவித்துள்ளது.

Breaking News LIVE: பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் விரிவாக்கம்

1 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த காலை உணவு திட்டம் ஆகஸ்ட் 25 ஆம் தேதி முதல் மேலும் விரிவாக்கம் செய்யப்படுகிறது - ரூ.404 கோடி செலவில் திட்டம் விரிவாக்கம் செய்யப்படுகிறது. 

Breaking News LIVE: அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 508 ரயில் நிலையங்கள் சீரமைப்பு


அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் ரூ.24,470 கோடியில் 508 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட உள்ளது. தமிழ்நாட்டில் 18 ரயில் நிலையங்கள் உட்பட, தெற்கு ரயில்வேயில் 25 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட உள்ளது. 

Breaking News LIVE: சென்னை பல்கலைக்கழகத்தில் திருவள்ளுவர், வேலுநாச்சியார் சிலை


சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் திருவள்ளுவர், வீரமங்கை வேலுநாச்சியார் சிலை அமைக்கப்பட உள்ளது என சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பேசிய துணைவேந்தர் கௌரி தெரிவித்துள்ளார்.

Breaking News LIVE: சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவுக்கு குடியரசுத்தலைவர் வந்திருப்பது சிறப்புக்குரியது. இந்நாள் வரலாற்றின் முக்கியமான நாள். மேலும் பல்கலைக்கழகத்தின் சீனியர் என்ற முறையில் நானும் இங்கு வந்துள்ளேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு 

Breaking News LIVE: கின்னஸ் சாதனைப் படைத்த கலைஞர் நூற்றாண்டு நினைவு மாரத்தான்

சென்னையில் நடைபெற்ற கலைஞர் கருணாநிதி நினைவு பன்னாட்டு மாரத்தான் போட்டி மிக நீண்ட தூர பிரிவில் கின்னஸ் சாதனை படைத்தது - போட்டியில் பங்கேற்றவர்களிடமிருந்து பதிவு கட்டணமாக பெறப்பட்ட தொகை ராயப்பேட்டை அரசு மருத்துமனைக்கு வழங்கப்பட்டது. 

Breaking News LIVE: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கை அகற்றப்பட்ட குழந்தை உயிரிழப்பு

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கை அகற்றப்பட்டு, எழும்பூர் அரசு குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்தது

Breaking News LIVE: மாற்றுக்கட்சி நிகழ்ச்சிகளில் மக்கள் இயக்கக் கொடியோடு வந்த நபர்கள் - புஸ்ஸி ஆனந்த் விளக்கம்

தளபதி விஜய் மக்கள் இயக்கக் கொடியோடு மாற்றுக்கட்சி நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டதாக ஊடகங்கள் மற்றும் சமூக ஊடக செய்திகளில் வெளியான நபர்கள் தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் எந்த பொறுப்பிலும் இல்லை, மற்றும் அவர்களுக்கும் தளபதி மக்கள் இயக்கத்திற்க்கும் எந்த தொடர்பும் இல்லை என மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் விளக்கமளித்துள்ளார். 

Breaking News LIVE: சென்னை ரயில் நிலையத்தில் பெண்ணுக்கு கத்திக்குத்து - பொதுமக்கள் அதிர்ச்சி

தாம்பரம் அருகே பெருங்களத்தூர் ரயில் நிலையத்தில் செங்கல்பட்டு செல்வதற்காக காத்திருந்த  தமிழ்ச்செல்வி என்ற பெண்ணை மர்ம நபர் கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடினார். போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

Background

சென்னையில் பெட்ரோல், டீசல் விலை 14 மாதங்களை கடந்தும் மாற்றமின்றி விற்பனையாகி வரும் சூழலில் , இன்றைய நிலவரத்தை அறியலாம்.


உலகமே எரிபொருளை மையமாகக் கொண்டு தான் இயங்கி வரும் வேளையில் முழுமையான மின்சார சக்தியில் செயல்படும் அளவிற்கு உலக நாடுகள் தங்களை உயர்த்திக் கொள்ள முயற்சித்து வருகின்றன. அந்த வரிசையில் இந்தியாவும்  முழுமையாகக் களம் கண்டுள்ளது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் சம்பந்தமான பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன.  இதனால்  வெகு விரைவில்  முற்றிலுமான மின்மயமான நாட்டினை நோக்கி இந்தியா தன்னை நகர்த்திக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


இந்தியாவை பொறுத்தவரை 80% வாகனங்கள் பெட்ரோல், டீசல் ஆகியவற்றில் இயங்கி வருகிறது. இதன் காரணமாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு மக்களின் அன்றாட வாழ்க்கையில் பெரும் மாற்றத்தினை ஏற்படுத்துகிறது. அதேபோல் எரிபொருட்களின் விலை உயர்வு என்பது அன்றாட அத்தியாவசியப் பொருட்களின் மீதான விலை உயர்வில் மிகப்பெரிய அளவில் பிரதிபலிக்கும். எனவே சாமானிய மக்களும் எரிபொருள் விலை  நிலவரத்தை ஒவ்வொரு நாளும் கண்காணித்து வருகிறார்கள்.


இன்றைய விலை நிலவரம்


இந்நிலையில் சென்னையில் இன்று (ஆகஸ்ட் 6) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை நிர்ணயமானது தொடர்ந்து மாற்றமின்றி 442வது நாளாக தொடர்கிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.  முன்னதாக கடந்த 2020, 2021 ஆம் ஆண்டுகளில் பரவிய கொரோனா வைரஸ் தொற்றால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் மிகப்பெரிய பொருளாதார பாதிப்பை சந்தித்தனர்.









அப்போது கலால் வரி குறைப்பால் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை 6 ரூபாய்க்கும் குறைந்தது.   இத்தகைய சூழலில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி 10 மாதங்களை கடந்துள்ளது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தேசிய உயிரி எரிபொருள் கொள்கை


கடந்த 2018ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்த தேசிய உயிரி எரிபொருள் கொள்கை 2030ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனாலைக் கலந்து விற்க இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், அந்த இலக்கு தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக 2025 ஆம் ஆண்டு என மாற்றியமைக்கப்பட்டது.


இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, ”இருபது சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் டிசம்பர் அல்லது ஜனவரி முதல் நாட்டில் கிடைக்கும்” எனத்தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எத்தனால் உற்பத்தியை நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். ஏப்ரல் 2023க்கு முன்னதாக டிசம்பர் அல்லது ஜனவரியில் 20 சதவீதம் கலப்பு எரிபொருள் சந்தைக்கு வரும் என்று நான் நம்புகிறேன்" என் கூறினார். 


நெகிழ்வான எரிபொருள் வாகனங்கள் (கலப்பு எரிபொருளில் இயங்கும் வாகனங்கள்) கிடைக்கும் பிரேசிலை உதாரணமாக மேற்கோள் காட்டி பேசிய ஹர்தீப் சிங் பூரி, "நுகர்வோர் விருப்பப்படி எத்தனால் அல்லது பெட்ரோலை எடுத்துக் கொள்ளலாம். இது அரசாங்கத்தின் இறுதி இலக்காக இருக்கும். 


இருப்பினும், அந்த நிலையை அடைய, சில தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. அதற்கான, பணிகள் நடந்து வருகின்றன. எத்தனால் கலப்படம் தொடர்பாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுடன் ஒரு முக்கிய சந்திப்பை நடத்த உள்ளோம். பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலப்பதை அடைவதற்கான இலக்கு தேதியை 2025ஆம் ஆண்டுக்கு ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியா முன்னெடுத்துள்ளது.


பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதற்கு, நமது நாட்டிற்கு 1,000 கோடி லிட்டர் கொள்ளளவு தேவைப்படுகிறது. 450 கோடி லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 400 கோடி லிட்டருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 20 சதவிகித கலப்பிற்கான போதுமான எத்தனால் கைவசம் உள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து பெட்ரோலிலும் 20 சதவீதம் எத்தனால் இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.