Breaking News LIVE: இராயப்பேட்டையில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது!
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.
திருப்பூரில் காவல்துறை வாகனம் மோதியதில், 3ஆம் வகுப்பு படிக்கும் 6 வயது சிறுமி உயிரிழந்தார்.
அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் மாநாடு நடைபெற்று வருகிறது. மதுரையில் ஆகஸ்ட் மாதம் 20-ம் தேதி நடைபெறும் அதிமுக மாநில மாநாட்டிற்கான இலச்சினையை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.
சென்னை இராயப்பேட்டையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது.
குமரி மீனவர்கள் கடல் சீற்றம் காரணமாக கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் 2-வது நாளாக கடலுக்குச் செல்லவில்லை,
இராமநாதபுரம் மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. சூறைக்காற்று வீசுவதால் மீனவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
கேளராவில் கனமழை பெய்து வருவதால் கோட்டயம், கண்ணூர், எர்ணாகுளம், காசர்கோடி, திருச்சூர், இடுக்கி ஆகிய மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவமழை காரணமாக தமிழ்நாடு மற்றும் கேரளாவில் கனமழை பெய்ய தொடங்கியுள்ளது. கனமழை காரணமாக கோவை வால்பாறையில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 25 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை, ஈரோடு, நீலகிரி, திருவள்ளூர், ராணிபேட்டை, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருப்பத்தூர், வேலூர், தர்மபுரி, சேலம், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Background
சமத்துவத்தை கொண்டாட வைக்கும் மாமன்னன்: நேரில் அழைத்து பாராட்டிய ரஜினி; பதிலுக்கு மாரி போட்ட ட்வீட்!
மாமன்னன் படம் பார்த்துவிட்டு இயக்குநர் மாரிசெல்வராஜை நடிகர் ரஜினிகாந்த் நேரில் அழைத்து பாரட்டு தெரிவித்தார். இதுகுறித்து நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் “சமத்துவத்தை வலியுறுத்தும் மாரி செல்வராஜின் ஒரு அருமையான படைப்பு. அவருக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள். மிகச் சிறப்பாக நடித்திருக்கும் வடிவேலு, உதயநிதி, பகத் பாசில் ஆகியோருக்கு எனது வாழ்த்துகள்” எனத் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
தமிழ்நாடு:
- சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதலமைச்சர் ஸ்டாலின் - வழக்கமான மருத்துவ பரிசோதனைகள் முடிந்து நேற்று வீடு திரும்பினார்.
- 'மக்களை தேடி மேயர்' திட்டம்: மேயர் பிரியா அடையாறில் இன்று மக்களை சந்திக்கிறார்
- அமைச்சர் பொன்முடி மீதான வழக்கில் இன்று தீர்ப்பு - சென்னை சிறப்பு நீதிமன்றம் அறிவிப்பு
- சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்விக்கான விண்ணப்பதிவு இன்று தொடக்கம்
- கோவை, நீலகிரி, தென்காசிக்கு அலர்ட்; தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
- அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் 2 நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு : 3வது நீதிபதி விசாரிக்க பரிந்துரை
- மேல்பாதி திரெளபதி கோயில் விவகாரம்: 7ஆம் தேதி இரண்டாம் கட்ட விசாரணை
- கரூரில் மின்னனு வாக்குப் பதிவு இயந்திரங்கள் முதல் கட்ட பரிசோதனை - ஆட்சியர் தொடங்கி வைப்பு
- ஜூன், ஜூலை மாதத்திற்கு தர வேண்டிய காவிரி நீரை கர்நாடகா அரசு திறந்து விட வேண்டும்- காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு தமிழ்நாடு அரசு கடிதம்
- வேங்கை வயல் விவகாரம்: மறுப்பு தெரிவித்த 8 பேருக்கு டி.என்.ஏ சோதனை கட்டாயம் - புதுச்சேரி நீதிமன்றம் உத்தரவு
- இந்தி தேசிய மொழி அல்ல என்றும் அனைத்து அமைச்சகங்களிலும் இந்தி ஆலோசனைக் குழுக்களை கலைக்க வேண்டும் - பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்
விளையாட்டு:
- நட்சத்திர கால்பந்து வீரர் நெய்மாருக்கு 3.3 மில்லியன் டாலர்கள் அபராதம் விதித்த பிரேசில் அரசு
- பெண்கள் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை பட்டியல்: இலங்கை வீராங்கனை சமாரி அட்டப்பட்டு முதலிடம் பிடித்து சாதனை
- ஜெர்மனி, ஸ்பெயின் தொடருக்கான இந்திய பெண்கள் ஆக்கி அணி அறிவிப்பு தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப்: 9-வது முறையாக பட்டம் வென்றது இந்தியா
- இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவராக அஜித் அகர்கர் நியமனம் செய்து பிசிசிஐ உத்தரவு
- டிஎன்பிஎல்: திருப்பூர் அணியை வீழ்த்தி மதுரை அணி பிளே ஆஃப்க்கு முன்னேற்றம்
தமிழ்நாட்டில் கடந்த மே மாதம் மற்றும் ஜூன் மாதத்தின் நடுப்பகுதி வரை வெயில் மக்களை வாட்டி வதைத்து வந்தது. இதனால் பள்ளிகள் திறப்பு தள்ளிவைக்கப்பட்டது. மக்கள் பகல் நேரங்களில் வெளியே வரவே தயங்கும் அளவுக்கு கடுமையான அனல்காற்றும் வீசியது. ஆனால் ஜூன் மாதத்தின் 2ஆம் பாதி முதல் தொடர்ந்து தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
இதனிடையே தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 25 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை, ஈரோடு, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் இலேசான முதல் மிதமான மழை பெய்யலாம் என கணிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் திருவள்ளூர், ராணிபேட்டை, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருப்பத்தூர், வேலூர், தர்மபுரி, சேலம், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் இலேசான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -