Breaking News LIVE: உச்சநீதிமன்ற தீர்ப்பு எதிரொலி; என்ன நடந்தாலும் கடமை தவற மாட்டேன் - ராகுல் காந்தி ட்வீட்
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.
இந்திய மதிப்பில் 14.74 ரூபாய் மதிப்புள்ள அமெரிக்க டாலரை கடத்தி வரப்பட்டதை திருச்சி விமானநிலைய சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
உச்சநீதிமன்ற தீர்ப்புக்குப் பின்னர் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் காங்கிரஸ் தலைவர் கார்கே கூறுகையில் ஜனநாயகம் வென்றுள்ளது என தெரிவித்துள்ளார்.
உச்சநீதிமன்ற தீர்ப்பு ராகுல் காந்திக்கு சாதகமாக வந்துள்ள நிலையில், ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் ‘என்ன நடந்தாலும் கடமை தவற மாட்டேன்’ என ட்வீட் செய்துள்ளார்.
ராகுல் காந்தி வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு என்பது ஜனநாயகத்தைக் காக்கும் முக்கியத்துவம் வாய்ந்த முடிவு என திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி தெரிவித்துள்ளார்.
ஜனநாயகத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி என ராகுல் காந்தி வழக்கு தீர்ப்பு குறித்து திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
ராகுல் காந்தி வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு பாஜக தலையில் விழுந்த மரண அடி என தமிழ்நாடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.
ராகுல் காந்தி வழக்கு குறித்தான உச்சநீதிமன்ற தீர்ப்பு நகல் கிடைத்ததும், இன்றே மக்களவை சபாநாயகருக்கு கடிதம் எழுதப்போவதாக மக்களவை காங்கிரஸ் குழுத் தலைவர் அதீர் ரஞ்சன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று செப்டம்பர் மாதம் முதல் தேதியில் இருந்து நெல் கொள்முதல் செய்ய மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் தேனி மக்களவைத் தொகுதி உறுப்பினர் ரவீந்திரநாத் வெற்றி செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ரவீந்திரநாத் தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டிருந்தது. இது குறித்தான விசாரணைக்குப் பின்னர், உயர்நீதிமனற தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ராகுல் காந்தி வழக்கில் நீதி வென்றுள்ளது என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில், உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்று பதிவிட்டுள்ளார்.
அவதூறு வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறை தண்டனையை நிறுத்தி வைத்து, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பதை எதிர்த்த வழக்குகளில் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அதிமுக முன்னாள் எம்.பி. ஜெயவர்தன் உள்ளிட்டவர்கள் தொடர்ந்த வழக்குகளில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு
காவிரி விவகாரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் நடைபெற்ற என்.எல்.சி. போராட்ட கலவரத்தில் கைது செய்யப்பட்ட பாமகவினர் 40 பேரின் ஜாமீன் மனு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வழக்கை ஆகஸ்ட் 7 ஆம் தேதிக்கு கடலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
சென்னை தலைமை செயலகத்தில் முத்திரை பதிக்கும் முத்திரைத்தாள் திட்டம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார் - மேலும் அரசின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்தும் ஆலோசனை நடைபெறுகிறது.
எதிர்க்கட்சிகளின் “இந்தியா” கூட்டணி பெயரை பயன்படுத்த தடைவிதிக்கக்கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் மத்திய அரசு மற்றும் தலைமை தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு
முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா மீண்டும் அதிமுகவில் இணைந்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இணைந்துள்ளார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘ நான் எப்போது அதிமுகவை சேர்ந்தவன் தான்’ என குறிப்பிட்டுள்ளார்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சதுரகிரி கோயிலுக்குச் செல்ல 6 நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. ஆடி அமாவாசையை முன்னிட்டு ஆகஸ்ட் 12 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 20 ஆம் தேதி மதுரையில் நடைபெறும் மாநாடு குறித்து ஆலோசனை நடத்துவதற்காக அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தொடங்கியது.
தமிழ்நாட்டின் உணவுக்கூடங்கள் உள்ளிட்ட எந்த இடத்திலும் புகைபிடிக்கும் அறை திரக்க தடை விதித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மதுபான கடைகளை தவிர்த்து இத்தகைய அறை எங்கும் திறக்கப்பட கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
னி மாவட்டத்தில் உள்ள சுருளி அருவிக்கு செல்லும் வழியில் காட்டு யானைகள் உலா வருவதால் சுற்றுலாப்பயணிகளுக்கு 3வது நாளாக குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் பூங்குடியில் நாட்டு வெடி தயாரிக்கும் கூடத்தில் கடந்த ஜூலை 30 ஆம் தேதி வெடி விபத்து - மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 2 பேர் பலி
அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடக்கவுள்ள நிலையில், கட்சியில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா மீண்டும் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் இணைந்தார்
கரூரில் தனலட்சுமி மார்பிள் நிறுவனத்தில் கடந்த 24 மணி நேரமாக நடந்த அமலாக்கத்துறை சோதனை நிறைவு - நிறுவன உரிமையாளர் பிரகாஷ் இல்லத்தில் அமலாக்கத்துறை சோதனை தொடர்கிறது.
மணிப்பூர் கலவரம் தொடர்பாக அம்மாநில டிஜிபி இன்று மதியம் 2 மணிக்கு உச்சநீதிமன்றத்தில் ஆஜராகிறார் - அவர் தனிப்பட்ட முறையில் விளக்கமளிக்க நீதிமன்றம் உத்தவிடப்பட்டிருந்தது
பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நீதிமன்ற உத்தரவின்படி இன்று முதல் இழப்பீட்டு தொகை வழங்கப்படும் என என்.எல்.சி நிர்வாகம் அறிவிப்பு - ஏற்கனவே ரூ.30 ஆயிரம் வழங்கப்பட்ட நிலையில் மீதம் ரூ.10 ஆயிரம் வழங்கப்படுகிறது.
பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நீதிமன்ற உத்தரவின்படி இன்று முதல் இழப்பீட்டு தொகை வழங்கப்படும் என என்.எல்.சி நிர்வாகம் அறிவிப்பு - ஏற்கனவே ரூ.30 ஆயிரம் வழங்கப்பட்ட நிலையில் மீதம் ரூ.10 ஆயிரம் வழங்கப்படுகிறது.
தென்காசி ராமநதி அணையில் இருந்து பாசனத்திற்காக இன்று முதல் தண்ணீர் திறப்பு - நவம்பர் 16 ஆம் தேதி வரை உரிய இடைவெளியோடு 60 கன அடி தண்ணீர் திறக்கப்பட உள்ளது
வார இறுதி நாட்களையொட்டி தமிழ்நாட்டில் இன்று முதல் கூடுதலாக 400 சிறப்பு பேருந்துகள் இயக்கம் - சென்னையில் இருந்து 200, பிற ஊர்களில் இருந்து 200 பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துதுறை அறிவிப்பு
வார இறுதி நாட்களையொட்டி தமிழ்நாட்டில் இன்று முதல் கூடுதலாக 400 சிறப்பு பேருந்துகள் இயக்கம் - சென்னையில் இருந்து 200, பிற ஊர்களில் இருந்து 200 பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துதுறை அறிவிப்பு
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் ஒரு கிலோ தக்காளி ரூ.20 குறைந்து ரூ.80க்கு விற்பனை - தக்காளி வரத்து தொடர்ச்சியாக அதிகரிப்பதால் விலை விரைவில் குறையும் என வியாபாரிகள் கருத்து
Background
சென்னையில் பெட்ரோல், டீசல் விலை 14 மாதங்களை கடந்தும் மாற்றமின்றி விற்பனையாகி வரும் சூழலில் , இன்றைய நிலவரத்தை அறியலாம்.
உலகமே எரிபொருளை மையமாகக் கொண்டு தான் இயங்கி வரும் வேளையில் முழுமையான மின்சார சக்தியில் செயல்படும் அளவிற்கு உலக நாடுகள் தங்களை உயர்த்திக் கொள்ள முயற்சித்து வருகின்றன. அந்த வரிசையில் இந்தியாவும் முழுமையாகக் களம் கண்டுள்ளது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் சம்பந்தமான பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன. இதனால் வெகு விரைவில் முற்றிலுமான மின்மயமான நாட்டினை நோக்கி இந்தியா தன்னை நகர்த்திக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவை பொறுத்தவரை 80% வாகனங்கள் பெட்ரோல், டீசல் ஆகியவற்றில் இயங்கி வருகிறது. இதன் காரணமாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு மக்களின் அன்றாட வாழ்க்கையில் பெரும் மாற்றத்தினை ஏற்படுத்துகிறது. அதேபோல் எரிபொருட்களின் விலை உயர்வு என்பது அன்றாட அத்தியாவசியப் பொருட்களின் மீதான விலை உயர்வில் மிகப்பெரிய அளவில் பிரதிபலிக்கும். எனவே சாமானிய மக்களும் எரிபொருள் விலை நிலவரத்தை ஒவ்வொரு நாளும் கண்காணித்து வருகிறார்கள்.
இன்றைய விலை நிலவரம்
இந்நிலையில் சென்னையில் இன்று (ஆகஸ்ட் 4) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை நிர்ணயமானது தொடர்ந்து மாற்றமின்றி 440வது நாளாக தொடர்கிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். முன்னதாக கடந்த 2020, 2021 ஆம் ஆண்டுகளில் பரவிய கொரோனா வைரஸ் தொற்றால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் மிகப்பெரிய பொருளாதார பாதிப்பை சந்தித்தனர்.
அப்போது கலால் வரி குறைப்பால் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை 6 ரூபாய்க்கும் குறைந்தது. இத்தகைய சூழலில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி 10 மாதங்களை கடந்துள்ளது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேசிய உயிரி எரிபொருள் கொள்கை
கடந்த 2018ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்த தேசிய உயிரி எரிபொருள் கொள்கை 2030ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனாலைக் கலந்து விற்க இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், அந்த இலக்கு தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக 2025 ஆம் ஆண்டு என மாற்றியமைக்கப்பட்டது.
இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, ”இருபது சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் டிசம்பர் அல்லது ஜனவரி முதல் நாட்டில் கிடைக்கும்” எனத்தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எத்தனால் உற்பத்தியை நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். ஏப்ரல் 2023க்கு முன்னதாக டிசம்பர் அல்லது ஜனவரியில் 20 சதவீதம் கலப்பு எரிபொருள் சந்தைக்கு வரும் என்று நான் நம்புகிறேன்" என் கூறினார்.
நெகிழ்வான எரிபொருள் வாகனங்கள் (கலப்பு எரிபொருளில் இயங்கும் வாகனங்கள்) கிடைக்கும் பிரேசிலை உதாரணமாக மேற்கோள் காட்டி பேசிய ஹர்தீப் சிங் பூரி, "நுகர்வோர் விருப்பப்படி எத்தனால் அல்லது பெட்ரோலை எடுத்துக் கொள்ளலாம். இது அரசாங்கத்தின் இறுதி இலக்காக இருக்கும்.
இருப்பினும், அந்த நிலையை அடைய, சில தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. அதற்கான, பணிகள் நடந்து வருகின்றன. எத்தனால் கலப்படம் தொடர்பாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுடன் ஒரு முக்கிய சந்திப்பை நடத்த உள்ளோம். பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலப்பதை அடைவதற்கான இலக்கு தேதியை 2025ஆம் ஆண்டுக்கு ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியா முன்னெடுத்துள்ளது.
பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதற்கு, நமது நாட்டிற்கு 1,000 கோடி லிட்டர் கொள்ளளவு தேவைப்படுகிறது. 450 கோடி லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 400 கோடி லிட்டருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 20 சதவிகித கலப்பிற்கான போதுமான எத்தனால் கைவசம் உள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து பெட்ரோலிலும் 20 சதவீதம் எத்தனால் இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -