Breaking News LIVE: அடுத்த அதிரடி - திமுக நிர்வாகி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.
செந்தில்பாலாஜி வழக்கில் தனது தரப்பு வாதங்களை அமலாக்கத்துறை நிறைவு செய்துள்ளது. தனது வாதத்தில் குற்றம்சாட்டவரை காவலில் எடுத்து விசாரிப்பது மிக மிக முக்கியம் எனத் தெரிவித்துள்ளது.
காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் டெல்லியில் ஆகஸ்ட் 11ஆம் தேதி நடைபெறுகிறது.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் சாமிநாதன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது
தக்காளியை ரேசன் கடைகளில் விற்பதற்கு பதிலாக தள்ளுவண்டியில் விற்கலாம் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கருத்து தெரிவித்துள்ளார்.
மணிப்பூர் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மணிப்பூர் விவகாரம் தொடர்பாக குடியரசுத் தலைவரை எதிர்க்கட்சிகளின் கூட்டணியான ’இந்தியா’ கூட்டணிக் கட்சித் தலைவர்கள் குடியரசுத் தலைவரைச் சந்தித்தனர். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து குடியரசுத் தலைவரிடம் விவாதித்தது குறித்து கூட்டாக பேட்டி அளித்தனர். அப்போது தமிழ்நாடு சிதம்பரம் பாராளுமன்ற உறுப்பினர் திருமாவளவன் கூறியதாவது, கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூரில் இரு தரப்பினரும் இணைந்து சுமூகமாக வாழ அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும். பிரதமர் மணிப்பூருக்குச் செல்வது இன்றியமையாததாக உள்ளது. மணிப்பூரில் பெண்கள் எந்த அளவிற்கு பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை பெண் நாடாளுமன்ற உறுப்பினர் குடியரசுத் தலைவரிடம் விரிவாக எடுத்துரைத்தார். எல்லாவற்றையும் கேட்ட குடியரசுத் தலைவர் தலையசைத்துவிட்டு விடைபெற்றுச் சென்றார். குடியரசுத் தலைவர் எந்தவிதமான உறுதியும் அளிக்கவில்லை” இவ்வாறு அந்த செய்தியாளர் சந்திப்பில் திருமாவளவன் கூறினார்.
மயிலாடுதுறையில் பராமரிப்பு பணிகள் முடிவடைந்துவிட்டதால், இனி வழக்கம்போல் அனைத்து ரயில்களும் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
செந்தில் பாலாஜியை கஸ்டடியில் எடுக்க அனுமதிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை வழக்கறிஞர் வாதித்து வருகிறார்.
நீதிமன்றக் காவலில் இருந்த செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்த முடியவில்லை. விசாரணைக்கு இடையூறு செய்தார் என உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை வாதித்து வருகிறது.
அமைச்சர் செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை வாதித்து வருகிறது.
மணிப்பூர் வன்முறை தொடர்பாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுடன் எதிர்க்கட்சிகளின் இந்திய கூட்டணி தலைவர்கள் சந்தித்துள்ளனர்.
மணிப்பூர் விவகாரத்தால் எதிர்க்கட்சியினர் தொடர் அமளியில் ஈடுபட்டு வருவதால் மக்களவை மதியம் 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மணிப்பூர் விவகாரம் தொடர்பாக விவாதம் நடத்தக்கோரி எதிர்க்கட்சியினர் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு வருகின்றனர்.
மணிப்பூர் விவகாரத்தால் எதிர்க்கட்சியினர் தொடர் அமளியில் ஈடுபட்டு வருவதால் பிரதமர் மோடி மத்திய அமைச்சர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டுவருகிறார்.
நாமக்கல் அருகே 10ஆம் வகுப்பு மாணவன், தனது தந்தையின் இரு சக்கர வாகனத்தை ஓட்டிச் சென்றதில் விபத்துக்குள்ளாகி காயமடைந்து சிகிச்சையில் இருந்தார், இந்நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
ஹரியானாவில் ஏற்பட்ட கலவரம் தொடர்பாக இதுவரை 116 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களின் பயன்பாட்டிற்காக புதிய வாகனங்களை முதல்வர் ஸ்டாலின் கொடியசைத்து துவங்கி வைத்தார்.
காங்கிரஸ் 50 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தபோதும் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. இந்தியா கூட்டணியிலும் நாங்கள் இல்லை. என்.டி.ஏ கூட்டணியிலும் நாங்கள் இல்லை என தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார்.
சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ. 44,400 ஆகவும் 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 20 குறைந்து ரூ.5,550 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
திருவண்ணாமலை செல்லங்குப்பத்தில் பட்டியலின மக்கள் ஆலயம் புகும் போராட்டம் நடத்தியதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
நாமக்கல் அருகே பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த முன்னாள் ராணுவ வீரர் கைதாகி உள்ளார்.
ஆடி 18 பண்டிகையை முன்னிட்டு கள்ளக்குறிச்சி உளுந்தூர்பேட்டை வாரச் சந்தையில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டது.
சென்னை பள்ளிகரணையில் ரூ.5 கோடி மதிப்புள்ள சொத்தை போலி ஆவணம் மூலம் விற்பனை செய்த மகன் கைதாகி உள்ளார்.
தக்காளி விலை இன்று கிலோ ரூபாய் 10 குறைந்து ரூபாய் 160க்கு விற்பனை செய்யப்படுகிறன்றது. நேற்று கிலோ ரூபாய் 170க்கு விற்பனை செய்யப்பட்டது.
மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக விநாடிக்கு 12,000 கனஅடி நீர் திறந்துவிடப்படுகிறது.
ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கம் தொடர்பாக வழக்கை இன்று முதல் விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்.
தீபாவளி கங்கா ஸ்நான யாத்திரையையொட்டி தென்காசியில் இருந்து வாரணாசிக்கு பாரத் கௌரவு ரயில் இயக்கம். தென்காசியில் இருந்து நவம்பவர் 9ஆம் தேதி புறப்படும் ரயில் வாரணாசிக்கு நவம்பவர் 11ஆம் தேதி சென்றடைகிறது.
Background
Petrol Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலை 14 மாதங்களை கடந்தும் மாற்றமின்றி விற்பனையாகி வரும் சூழலில் , இன்றைய நிலவரத்தை அறியலாம்.
உலகமே எரிபொருளை மையமாகக் கொண்டு தான் இயங்கி வரும் வேளையில் முழுமையான மின்சார சக்தியில் செயல்படும் அளவிற்கு உலக நாடுகள் தங்களை உயர்த்திக் கொள்ள முயற்சித்து வருகின்றன. அந்த வரிசையில் இந்தியாவும் முழுமையாகக் களம் கண்டுள்ளது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் சம்பந்தமான பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன. இதனால் வெகு விரைவில் முற்றிலுமான மின்மயமான நாட்டினை நோக்கி இந்தியா தன்னை நகர்த்திக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவை பொறுத்தவரை 80% வாகனங்கள் பெட்ரோல், டீசல் ஆகியவற்றில் இயங்கி வருகிறது. இதன் காரணமாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு மக்களின் அன்றாட வாழ்க்கையில் பெரும் மாற்றத்தினை ஏற்படுத்துகிறது. அதேபோல் எரிபொருட்களின் விலை உயர்வு என்பது அன்றாட அத்தியாவசியப் பொருட்களின் மீதான விலை உயர்வில் மிகப்பெரிய அளவில் பிரதிபலிக்கும். எனவே சாமானிய மக்களும் எரிபொருள் விலை நிலவரத்தை ஒவ்வொரு நாளும் கண்காணித்து வருகிறார்கள்.
இன்றைய விலை நிலவரம்
இந்நிலையில் சென்னையில் இன்று (ஆகஸ்ட் 2) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை நிர்ணயமானது தொடர்ந்து மாற்றமின்றி 438வது நாளாக தொடர்கிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். முன்னதாக கடந்த 2020, 2021 ஆம் ஆண்டுகளில் பரவிய கொரோனா வைரஸ் தொற்றால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் மிகப்பெரிய பொருளாதார பாதிப்பை சந்தித்தனர்.
அப்போது கலால் வரி குறைப்பால் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை 6 ரூபாய்க்கும் குறைந்தது. இத்தகைய சூழலில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி 10 மாதங்களை கடந்துள்ளது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேசிய உயிரி எரிபொருள் கொள்கை
கடந்த 2018ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்த தேசிய உயிரி எரிபொருள் கொள்கை 2030ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனாலைக் கலந்து விற்க இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், அந்த இலக்கு தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக 2025 ஆம் ஆண்டு என மாற்றியமைக்கப்பட்டது.
இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, ”இருபது சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் டிசம்பர் அல்லது ஜனவரி முதல் நாட்டில் கிடைக்கும்” எனத்தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எத்தனால் உற்பத்தியை நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். ஏப்ரல் 2023க்கு முன்னதாக டிசம்பர் அல்லது ஜனவரியில் 20 சதவீதம் கலப்பு எரிபொருள் சந்தைக்கு வரும் என்று நான் நம்புகிறேன்" என் கூறினார்.
நெகிழ்வான எரிபொருள் வாகனங்கள் (கலப்பு எரிபொருளில் இயங்கும் வாகனங்கள்) கிடைக்கும் பிரேசிலை உதாரணமாக மேற்கோள் காட்டி பேசிய ஹர்தீப் சிங் பூரி, "நுகர்வோர் விருப்பப்படி எத்தனால் அல்லது பெட்ரோலை எடுத்துக் கொள்ளலாம். இது அரசாங்கத்தின் இறுதி இலக்காக இருக்கும்.
இருப்பினும், அந்த நிலையை அடைய, சில தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. அதற்கான, பணிகள் நடந்து வருகின்றன. எத்தனால் கலப்படம் தொடர்பாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுடன் ஒரு முக்கிய சந்திப்பை நடத்த உள்ளோம். பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலப்பதை அடைவதற்கான இலக்கு தேதியை 2025ஆம் ஆண்டுக்கு ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியா முன்னெடுத்துள்ளது.
பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதற்கு, நமது நாட்டிற்கு 1,000 கோடி லிட்டர் கொள்ளளவு தேவைப்படுகிறது. 450 கோடி லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 400 கோடி லிட்டருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 20 சதவிகித கலப்பிற்கான போதுமான எத்தனால் கைவசம் உள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து பெட்ரோலிலும் 20 சதவீதம் எத்தனால் இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -