Breaking News LIVE: வயநாட்டில் பயங்கர விபத்து.. ஜீப் கவிழ்ந்து பள்ளத்தாக்கில் மோதியதில் 9 பேர் உயிரிழப்பு
Breaking News LIVE:நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.
கேரள மாநிலம் வயநாட்டில் ஜீப் கவிழ்ந்து 25 மீட்டர் ஆழமான பள்ளத்தாக்கில் மோதியதில் 9 பேர் உயிரிழந்தனர். மானந்தவாடியில் உள்ள தோட்டமொன்றுக்கு தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற ஜீப் தலாப் பகுதியில் கண்ணோத் மலைக்கு அருகில் விபத்துக்குள்ளானது. முதற்கட்ட தகவல்களின்படி, உயிரிழந்தவர்கள் அனைவரும் வயநாட்டை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 10ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆனது. இந்நிலையில் படத்தின் ஒட்டுமொத்த கலெக்ஷன் குறித்து படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் தனது அதிகாரப்பூர்வ பக்கத்தில் இதுவரை அதாவது ஆகஸ்ட் 25ஆம் தேதி வரை மொத்தம் ரூபாய் 525 கோடி வசூல் செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.
Neeraj Chopra: ஈட்டி எறிதல் சாம்பியனான நீரஜ் சோப்ரா 88.77 மீட்டர் எறிந்து உலக சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு நுழைந்தது மட்டும் இல்லாமல், 2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பாரிஸ் ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றுள்ளார்.
ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் நடைபெற்று வரும் உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய அணியின் நீரஜ் சோப்ரா 88.77 மீட்டருக்கு ஈட்டி எறிந்து இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். இதன் மூலம் அடுத்த ஆண்டு பாரீஸில் நடைபெறவுள்ள ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றுள்ளார். சோப்ரா இப்போது 90 மீட்டர் என்ற அளவை ஈட்டி எறிதலில் எட்ட முயற்சித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
காவிரி நீர்ப்பங்கீடு விவகாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு, செப்டம்பர் 1ஆம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்தது.
மழைப்பொழிவு குறைவாக இருப்பதால் மிகக் கடுமையான வறட்சி சூழலை சந்தித்து வருகிறோம். உரிய நீரை வழங்காவிட்டால் கர்நாடக அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர நேரிடும் என்று தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறது.
நாங்கள் திறந்துவிட்ட தண்ணீரை தமிழ்நாடு வீணடித்துவிட்டது. போதிய மழை இல்லாததால் கர்நாடக அணைகளில் தண்ணீர் அளவும் மிகக் குறைவாகவே இருக்கிறது என்று கர்நாடக அரசு தெரிவித்திருக்கிறது.
காவிரி நீர்ப்பங்கீடு தொடர்பான வழக்கின் விசாரணையை தொடங்கியது உச்சநீதிமன்ற புதிய அமர்வு.
காவிரி நதிநீர் விவகாரத்தில் திமுக அரசு மவுனம் காக்கிறது என்று ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
கட்சிக்கு எதிரானவர்களை அதிமுக ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது என்று பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
பிறந்தநாளையொட்டி சென்னையில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் தொண்டர்களை சந்தித்தார் விஜய்காந்த்.
சிறையில் இருந்து அமைச்சர் செந்தில் பாலாஜி காணொலி வாயிலாக எம்.எல்.ஏ., மற்றும் எம்.பி.,களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரான நிலையில், அவரின் நீதிமன்ற காவல் ஆகஸ்ட் 28 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக பொறுப்பு நீதிபதி சிவகுமார் தெரிவித்தார்.
அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த வழக்கில் ஓபிஎஸ் தரப்பு தாக்கல் செய்த மனுக்களை ஆர்.மகாதேவன், முகமது ஷபீக் ஆகிய இரு நீதிபதிகள் அமர்வு தள்ளுபடி செய்தது.
தமிழ்நாட்டில் இந்தாண்டு கூடுதலாக 50 அரசு பள்ளிகள் பசுமை பள்ளிகளாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மெய்யநாதன் தகவல் - பள்ளி மாணவர்கள் பிளாஸ்டிக் பாட்டில் பயன்படுத்துவது குறைந்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் கோபி அருகே கணக்கம்பாளையம் சுண்டக்கரடு மலைப்பகுதி குடியிருப்புகளில் ஒற்றை காட்டு யானை புகுந்தது. உணவு தேடி வந்துள்ளதால் பொதுமக்கள் அச்சம்
நாகை மாவட்டத்தில் காலை சிற்றுண்டி விரிவாக்க திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார் - திருக்குவளை பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு பரிமாறி திட்டத்தை தொடங்கி வைத்தார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். தனது சமூக வலைத்தளப்பக்கத்தில், “தே.மு.தி.க நிறுவனத் தலைவரும், எனது தோழருமான திரு. விஜயகாந்த் அவர்களுக்கு உளங்கனிந்த பிறந்தநாள் வாழ்த்துகள். முழு உடல்நலத்துடன் புத்துணர்ச்சியையும் பெற்றுப் பல்லாண்டு நீங்கள் மகிழ்ச்சியோடும் நிறைவோடும் வாழ விழைகிறேன்” என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
Background
Petrol Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலை 450 நாட்களை கடந்தும் மாற்றமின்றி விற்பனையாகி வரும் சூழலில், இன்றைய நிலவரத்தை அறியலாம்.
பெட்ரோல், டீசல்:
உலகமே எரிபொருளை மையமாகக் கொண்டு தான் இயங்கி வரும் வேளையில் முழுமையான மின்சார சக்தியில் செயல்படும் அளவிற்கு உலக நாடுகள் தங்களை உயர்த்திக் கொள்ள முயற்சித்து வருகின்றன. அந்த வரிசையில் இந்தியாவும் முழுமையாகக் களம் கண்டுள்ளது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் சம்பந்தமான பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன. இதனால் வெகு விரைவில் முற்றிலுமான மின்மயமான நாட்டினை நோக்கி இந்தியா தன்னை நகர்த்திக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவை பொறுத்தவரை 80% வாகனங்கள் பெட்ரோல், டீசல் ஆகியவற்றில் இயங்கி வருகிறது. இதன் காரணமாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு மக்களின் அன்றாட வாழ்க்கையில் பெரும் மாற்றத்தினை ஏற்படுத்துகிறது. அதேபோல் எரிபொருட்களின் விலை உயர்வு என்பது அன்றாட அத்தியாவசியப் பொருட்களின் மீதான விலை உயர்வில் மிகப்பெரிய அளவில் பிரதிபலிக்கும். எனவே சாமானிய மக்களும் எரிபொருள் விலை நிலவரத்தை ஒவ்வொரு நாளும் கண்காணித்து வருகிறார்கள்.
இன்றைய விலை நிலவரம்
இந்நிலையில் சென்னையில் இன்று (ஆகஸ்ட் 25) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை நிர்ணயமானது தொடர்ந்து மாற்றமின்றி 461வது நாளாக தொடர்கிறது. அதாவது, விலை மாற்றமின்றி பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்படுவது நேற்றுடன் 16 மாதங்கள் பூர்த்தியடைந்து இன்றுடன் 17வது மாதம் தொடங்கியுள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். முன்னதாக கடந்த 2020, 2021 ஆம் ஆண்டுகளில் பரவிய கொரோனா வைரஸ் தொற்றால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் மிகப்பெரிய பொருளாதார பாதிப்பை சந்தித்தனர்.
அப்போது கலால் வரி குறைப்பால் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை 6 ரூபாய்க்கும் குறைந்தது. இத்தகைய சூழலில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி 10 மாதங்களை கடந்துள்ளது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேசிய உயிரி எரிபொருள் கொள்கை
கடந்த 2018ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்த தேசிய உயிரி எரிபொருள் கொள்கை 2030ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனாலைக் கலந்து விற்க இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், அந்த இலக்கு தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக 2025 ஆம் ஆண்டு என மாற்றியமைக்கப்பட்டது.
இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, ”இருபது சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் டிசம்பர் அல்லது ஜனவரி முதல் நாட்டில் கிடைக்கும்” எனத்தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எத்தனால் உற்பத்தியை நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். ஏப்ரல் 2023க்கு முன்னதாக டிசம்பர் அல்லது ஜனவரியில் 20 சதவீதம் கலப்பு எரிபொருள் சந்தைக்கு வரும் என்று நான் நம்புகிறேன்" என் கூறினார்.
நெகிழ்வான எரிபொருள் வாகனங்கள் (கலப்பு எரிபொருளில் இயங்கும் வாகனங்கள்) கிடைக்கும் பிரேசிலை உதாரணமாக மேற்கோள் காட்டி பேசிய ஹர்தீப் சிங் பூரி, "நுகர்வோர் விருப்பப்படி எத்தனால் அல்லது பெட்ரோலை எடுத்துக் கொள்ளலாம். இது அரசாங்கத்தின் இறுதி இலக்காக இருக்கும்.
இருப்பினும், அந்த நிலையை அடைய, சில தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. அதற்கான, பணிகள் நடந்து வருகின்றன. எத்தனால் கலப்படம் தொடர்பாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுடன் ஒரு முக்கிய சந்திப்பை நடத்த உள்ளோம். பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலப்பதை அடைவதற்கான இலக்கு தேதியை 2025ஆம் ஆண்டுக்கு ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியா முன்னெடுத்துள்ளது.
பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதற்கு, நமது நாட்டிற்கு 1,000 கோடி லிட்டர் கொள்ளளவு தேவைப்படுகிறது. 450 கோடி லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 400 கோடி லிட்டருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 20 சதவிகித கலப்பிற்கான போதுமான எத்தனால் கைவசம் உள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து பெட்ரோலிலும் 20 சதவீதம் எத்தனால் இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -