Breaking News LIVE: முதலமைச்சர் ஸ்டாலின் வருகை - ட்ரோன்கள் பறக்க தடை
Breaking News LIVE:நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்காக வீடு, வீடாக விண்ணப்பங்களை சரிபார்க்கும் பணி தொடங்கியது. இம்மாத இறுதிக்குள் தகுதியுள்ள குடும்ப தலைவிகளின் பட்டியலை அரசு இறுதி செய்யும் என தகவல் வெளியாகியுள்ளது.
தனது பிறந்தநாளை முன்னிட்டு நாளை தேமுதிக அலுவலகத்தில் தொண்டர்களை சந்திக்க உள்ளதாக விஜயகாந்த் அறிவித்துள்ளார். தனது உடல்நலம் குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளார்
பிரிக்ஸ் கூட்டமைப்பில் 6 புதிய நாடுகள் இணையவுள்ளதாக பிரதமர் மோடி அறிவிப்பு - அர்ஜென்டினா, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், எகிப்து, எத்தியோப்பியா, ஈரான் நாடுகளை கூட்டமைப்பில் இணைக்க முடிவு
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சின்ன பள்ளப்பட்டியில் தேனீக்கள் கொட்டியதில் 50 பேர் காயம் - 100 நாள் திட்டத்தில் பணியில் ஈடுபட்டிருந்த பெண்களை தேனீக்கள் கொட்டியது.
காவிரி வழக்கு தொடர்பாக கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. தமிழ்நாடு அரசின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என கர்நாடக அரசு கோரிக்கை
கோவையில் பாரதியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவிற்கு வருகை தரும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக அனைத்து முற்போக்கு அமைப்புகளின் சார்பில் கருப்பு கொடி போராட்டம் நடைபெற்றது - போராட்டக்காரர்கள் கைது
ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனை ஒருபோதும் தலைமைச் செயலகமாக மாறாது, 500க்கு மேற்பட்ட முறை இந்த பதிலை கூறிவிட்டேன் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கலில் தொடர்ந்து 9வது நாளாக பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது - காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பால் பரிசல் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
திருச்சியில் இருந்து சாலை மார்க்கமாக திருவாரூர், நாகை மாவட்டத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செல்லவுள்ள நிலையில் திருச்சியில் 2 நாட்களுக்கு ட்ரோன்கள் பறக்க தடை - தடையை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் எச்சரிக்கை
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க 4 பயணமாக இன்று திருவாரூர், நாகை மாவட்டத்துக்கு செல்கிறார். சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி செல்லும் முதலமைச்சர், அங்கிருந்து மயிலாடுதுறை செல்கிறார்.
Background
Petrol Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலை 450 நாட்களை கடந்தும் மாற்றமின்றி விற்பனையாகி வரும் சூழலில், இன்றைய நிலவரத்தை அறியலாம்.
பெட்ரோல், டீசல்:
உலகமே எரிபொருளை மையமாகக் கொண்டு தான் இயங்கி வரும் வேளையில் முழுமையான மின்சார சக்தியில் செயல்படும் அளவிற்கு உலக நாடுகள் தங்களை உயர்த்திக் கொள்ள முயற்சித்து வருகின்றன. அந்த வரிசையில் இந்தியாவும் முழுமையாகக் களம் கண்டுள்ளது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் சம்பந்தமான பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன. இதனால் வெகு விரைவில் முற்றிலுமான மின்மயமான நாட்டினை நோக்கி இந்தியா தன்னை நகர்த்திக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவை பொறுத்தவரை 80% வாகனங்கள் பெட்ரோல், டீசல் ஆகியவற்றில் இயங்கி வருகிறது. இதன் காரணமாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு மக்களின் அன்றாட வாழ்க்கையில் பெரும் மாற்றத்தினை ஏற்படுத்துகிறது. அதேபோல் எரிபொருட்களின் விலை உயர்வு என்பது அன்றாட அத்தியாவசியப் பொருட்களின் மீதான விலை உயர்வில் மிகப்பெரிய அளவில் பிரதிபலிக்கும். எனவே சாமானிய மக்களும் எரிபொருள் விலை நிலவரத்தை ஒவ்வொரு நாளும் கண்காணித்து வருகிறார்கள்.
இன்றைய விலை நிலவரம்
இந்நிலையில் சென்னையில் இன்று (ஆகஸ்ட் 24) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை நிர்ணயமானது தொடர்ந்து மாற்றமின்றி 460வது நாளாக தொடர்கிறது. அதாவது, விலை மாற்றமின்றி பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்படுவது நேற்றுடன் 16 மாதங்கள் பூர்த்தியடைந்து இன்றுடன் 17வது மாதம் தொடங்கியுள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். முன்னதாக கடந்த 2020, 2021 ஆம் ஆண்டுகளில் பரவிய கொரோனா வைரஸ் தொற்றால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் மிகப்பெரிய பொருளாதார பாதிப்பை சந்தித்தனர்.
அப்போது கலால் வரி குறைப்பால் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை 6 ரூபாய்க்கும் குறைந்தது. இத்தகைய சூழலில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி 10 மாதங்களை கடந்துள்ளது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேசிய உயிரி எரிபொருள் கொள்கை
கடந்த 2018ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்த தேசிய உயிரி எரிபொருள் கொள்கை 2030ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனாலைக் கலந்து விற்க இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், அந்த இலக்கு தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக 2025 ஆம் ஆண்டு என மாற்றியமைக்கப்பட்டது.
இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, ”இருபது சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் டிசம்பர் அல்லது ஜனவரி முதல் நாட்டில் கிடைக்கும்” எனத்தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எத்தனால் உற்பத்தியை நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். ஏப்ரல் 2023க்கு முன்னதாக டிசம்பர் அல்லது ஜனவரியில் 20 சதவீதம் கலப்பு எரிபொருள் சந்தைக்கு வரும் என்று நான் நம்புகிறேன்" என் கூறினார்.
நெகிழ்வான எரிபொருள் வாகனங்கள் (கலப்பு எரிபொருளில் இயங்கும் வாகனங்கள்) கிடைக்கும் பிரேசிலை உதாரணமாக மேற்கோள் காட்டி பேசிய ஹர்தீப் சிங் பூரி, "நுகர்வோர் விருப்பப்படி எத்தனால் அல்லது பெட்ரோலை எடுத்துக் கொள்ளலாம். இது அரசாங்கத்தின் இறுதி இலக்காக இருக்கும்.
இருப்பினும், அந்த நிலையை அடைய, சில தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. அதற்கான, பணிகள் நடந்து வருகின்றன. எத்தனால் கலப்படம் தொடர்பாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுடன் ஒரு முக்கிய சந்திப்பை நடத்த உள்ளோம். பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலப்பதை அடைவதற்கான இலக்கு தேதியை 2025ஆம் ஆண்டுக்கு ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியா முன்னெடுத்துள்ளது.
பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதற்கு, நமது நாட்டிற்கு 1,000 கோடி லிட்டர் கொள்ளளவு தேவைப்படுகிறது. 450 கோடி லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 400 கோடி லிட்டருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 20 சதவிகித கலப்பிற்கான போதுமான எத்தனால் கைவசம் உள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து பெட்ரோலிலும் 20 சதவீதம் எத்தனால் இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -