Breaking News LIVE: “வரும் 24ஆம் தேதி மாவட்டச் செயலாளர் கூட்டம்; தவறாமல் பங்கேற்க வேண்டும்” - தேமுதிக அறிவிப்பு

Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.

ஜான்சி ராணி Last Updated: 20 Jul 2023 09:57 PM
மணிப்பூர் விவகாரம் - 4 பேர் கைது..

மணிப்பூர் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.

மணிப்பூர் சம்பவத்திற்கு சீமான் கண்டனம்

மணிப்பூரில் நிர்வாணமாக்கப்பட்டது பழங்குடியின பெண்கள் அல்ல, பாரத தாய் தான் என சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். 

சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் விடுவிப்பு

சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் கே.கே. எஸ். எஸ். ஆர். ராமச்சந்திரனை விடுவித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பான வழக்கில் இருந்து அமைச்சர், அவரது மனைவி மற்றும் தொழிலதிபர் சண்முக மூர்த்தி ஆகியோரை விடுவித்து விருதுநகர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அதிமுக காலத்தில் தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு.

நாடளுமன்ற கூட்டத்தொடர் - இரு அவைகளும் ஒத்திவைப்பு

மணிப்பூரில் பெண்களுக்கு நேர்ந்த கூட்டுப்பாலியல் வன்கொடுமை தொடர்பாக உடனே விவாதிக்க வேண்டும் என, எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.

Breaking News LIVE: பிரிஜ் பூஷண் மீதான ஜாமீன் மனுவின் தீர்ப்பு ஒத்துவைப்பு..!

பாலியல் புகாரில் முன்னாள் WFL தலைவரும், பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷண் ஜாமீன் மனு தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. 

வரும் 24ஆம் தேதி தேமுதிக மாவட்டச் செயலாளர் கூட்டம்

”தேமுதிக முக்கிய ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட கழக செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளவேண்டும். வரும் 24.07.2023 அன்று காலை 10 மணிக்கு தலைமை கழகத்தில் இருக்க வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்" என தேமுதிக தலைமை கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

Breaking News LIVE: எடப்பாடி பழனிசாமி உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல்!

டெண்டர் முறைகேடு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார். 

Breaking News LIVE: மணிப்பூர் விவகாரம் - மீண்டும்மாநிலங்களவை ஒத்திவைப்பு

மணீப்பூர் வன்முறை தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி அவைக்கு வந்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறித்துள்ளன. மேலும், இது தொடர்பாக விவாதிக்க குறுகிய காலம் மட்டுமே அவகாசம் அளிக்கப்படும் என்றதும் மாநிலங்களவையில் அமளி ஏற்பட்டது. இதனால், மாநிலங்களவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. 

Breaking News LIVE: குற்றம் செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை தப்பிக்க விட மாட்டோம் - பிரதமர் மோடி



Breaking News LIVE: மணிப்பூரில் அமைதி திரும்ப மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்!



Breaking News LIVE: மணிப்பூர் கலவரம் - மத்திய அரசு நடவடிக்கை எடுக்க உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல்!

மணிப்பூர் கலவரம் தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தீவிரமாக வலியுறுத்தல்!

Breaking News LIVE: மெட்ராஸ் தொழில்நுட்பக் கல்லூரி பவள விழா - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!

இந்தியாவின் முன்னணி கல்வி நிறுவனங்கள் பட்டியலில், தமிழ்நாட்டின் எம்.ஐ.டி இடம் பெறுவது தமிழ்நாட்டிற்கு கிடைக்கக்கூடிய பெருமை; இளைஞர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கிய முன்னாள் குடியரசுத் தலைவர் ‘ஏவுகணை மனிதர்’ என்று போற்றப்படும் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் படித்த கல்லூரி என்பதை விட வேறு பெருமை தேவையில்லை” - சென்னை குரோம்பேட்டை மெட்ராஸ் தொழில்நுட்பக் கல்லூரி பவள விழாவினை தொடங்கி வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை

Breaking News LIVE: அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் தொடங்கியது!



மக்களவை, மாநிலங்களவை ஒத்திவைப்பு..!

இறந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மறியாதை செலுத்தும் வகையில் மக்களவை மதியம் 2 மணி வரையிலும் மாநிலங்களவை மதியம் 12 மணி வரையிலும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

நாட்டுக்கு அவமானம்..அக்கிரமத்தை பொறுத்த கொள்ள முடியாது..மணிப்பூர் விவகாரத்தில் கொந்தளித்த பிரதமர் மோடி 

மணிப்பூரில் குகி சோ பழங்குடியின வகுப்பை சேர்ந்த பெண்களை நிர்வாணமாக்கிய கும்பல், அவர்களை சாலையில் ஊர்வலமாக அழைத்து சென்ற சம்பவம் வீடியோவாக வெளியாகி நாட்டை உலுக்கி வருகிறது. 


இதற்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில், இது நாட்டுக்கு ஏற்பட்ட அவமானம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 

மணிப்பூர் விவகாரத்தை நாடாளுமன்றத்தில் விவாதிக்க தயார்: மத்திய அரசு

மணிப்பூர் வன்முறை நாட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் நிலையில், இதுகுறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க தயார் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மணிப்பூர் விவகாரம்...கொந்தளிக்கப்போகும் நாடாளுமன்றம்

குகி பழங்குடியின பெண்கள் நிர்வாணமாக அழைத்து செல்லப்பட்ட விவகாரம் நாட்டை உலுக்கிய நிலையில், இதை நாடாளுமன்றத்தில் எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு வருகிறது.

Breaking News LIVE: இன்றைய தங்கம் விலை நிலவரம்!

சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின்  சவரனுக்கு விலை ரூ.160 அதிகரித்து  ரூ.44,880 ஆகவும் 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.5,610 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.


24 காரட் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ. 6,077ஆகவும், ஒரு சவரன் ரூ. 48,616 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.


வெள்ளி விலை நிலவரம்: (Silver Rate In Chennai)


ஒரு கிராம் வெள்ளி விலை 40 காசுகள் உயர்ந்து ரூ.82.40- க்கு விற்பனையாகிறது.  வெள்ளி கிலோ ரூ.82,400-க்கு விற்பனையாகிறது.

Breaking News LIVE:மகாராஷ்டிராவில் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவு..

மகாராஷ்டிரா மாநிலம் ராய்காட் மாவட்டத்தில் நேற்று இரவு ஏற்பட்ட நிலச்சரிவில் 30-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் சிக்கியுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது. பழங்குடியின கிராமத்தின் பல வீடுகள் அமைந்துள்ள காலாபூர் அருகே இந்த சம்பவம் நடந்துள்ளது. இதுவரை 25 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர் அவர்களில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். மீதமுள்ள 21 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Breaking News LIVE: மகளிர் உரிமைத் தொகை விண்ணப்ப டோக்கன்கள் விநியோகம் தொடங்கியது!

தமிழ்நாடு அரசின் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் மாதம் ரூ. 1000 வழங்கும் திட்டத்திற்காக பதிவு செய்வதற்கான விண்ணப்பம், டோக்கன்கள் விநியோகம் தொடங்கியது

Background

பரபரப்பான அரசியல் சூழலில் இன்று தொடங்குகிறது நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர். வழக்கமாக நாடாளுமன்ற கூட்டம் ஆண்டுக்கு மூன்று முறை நடக்கும். பட்ஜெட் கூட்டத்தொடர், மழைக்கால கூட்டத்ட்தொடர், குளிர்கால கூட்டத்தொடர். அந்த வகையில் பட்ஜெட் நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஏற்கனவே நடைபெற்று முடிந்தது.


நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 20ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11ஆம் தேதி நிறைவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர் பிரகலாத் ஜோஷி வெளியிட்டுள்ளார். மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு, நாடாளுமன்ற கூட்டத்திற்கான தேதிகளை இறுதி செய்தது.


இன்று கூடும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மேற்கொள்ள வேண்டிய அலுவலகள் குறித்து சபா நாயகர் ஓம் பிர்லா தலைமையில் நேற்று அலுவல் ஆய்வு கூட்டம் நடைப்பெற்றது.  நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. தேசிய நிதித் தகவல் பதிவேடு, டிஜிட்டல் தனிநபர் தரவுப் பாதுகாப்பு மசோதா, திவால் திருத்தச் சட்டம் என 31 மசோதாக்கள் நாடாளுமன்ற அமர்வில் விவாதிக்கப்பட்டு, நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


அதேபோல் டெல்லியில் கொண்டு வரப்பட்ட அவசர சட்டம், மணிப்பூர் கலவரம், விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் என நாட்டில்  பல்வேறு பிரச்சனைகள் இருப்பதாக எதிர்கட்சிகள் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்றைய முன் தினம் பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ’INDIA’ என்ற கூட்டணி அமைத்தது. இந்த மழைக்கால கூட்டத்தொடரில் நாட்டில் நடைபெறும் பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகள் தரப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


நேற்று மாலை நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை முன்னிட்டு இந்த தொடர் சுமூகமாக நடதுவது தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் 44 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துக்கொண்டனர்.


கடந்த 2021 ஆம் ஆண்டு மழைக்கால கூட்டத்தொடர், பெகாசஸ் விவகாரத்தாலும் 2022ஆம் ஆண்டு கூட்டத்தொடர் விலைவாசி உயர்வு பிரச்சனையாலும் பெரும் பாதிப்படைந்தது. இந்தாண்டு பட்ஜெட் கூட்டத்தொடரில் அதானி விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதில், நாடாளுமன்ற கூட்டு விசாரணை நடத்த வேண்டும் எதிர்க்கட்சிகள் முதல் பாதியை முடக்கியது.


பிரிட்டனில் ராகுல் காந்தி பேசியதற்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என ஆளுங்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுப்பட்டனர். இதனால், பட்ஜெட் கூட்டதொடரும் பெரும் பாதிப்பை சந்தித்தது. பல முக்கியமான சட்டங்கள் விவாதிக்கப்படாமல் நிறைவேற்றப்பட்டன. இதனால் இன்று கூடும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் தரப்பில் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.  


Senthil Balaji Case: மேல் முறையீட்டு மனுவை அவசரமாக விசாரிங்க.. செந்தில் பாலாஜி வழக்கறிஞர்கள் இன்று உச்சநீதிமன்றத்தில் முறையிட திட்டம்!








அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் ஜூன் மாதம் 13ஆம் தேதி காலை 8 மணிக்கு அமலாக்கத்துறை சோதனை செய்தது. 17 மணி நேர சோதனைக்குப் பின்னர் அமலாக்கத்துறை அவரை விசாரணைக்கு அழைத்துச் சென்றது. அப்போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்படவே, உடனே ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில், செந்தில் பாலாஜி ஓமந்துரார் அரசு மருத்துவமனையில் இருந்து, காவேரி மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டார். 






 




- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.