Breaking News LIVE: டெல்லி அரசு அதிகாரிகள் நியமனம் தொடர்பான மசோதா - காங்கிரஸ் கடும் எதிர்ப்பு

Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.

த. மோகன்ராஜ் மணிவேலன் Last Updated: 01 Aug 2023 02:40 PM
Breaking News LIVE: மணிப்பூர் வன்முறை - 6,532 எஃப்ஐஆர் பதிவு: மணிப்பூர் அரசு

மணிப்பூர் வன்முறை தொடர்பாக இதுவரை 6,532 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என மணிப்பூர் அரசு தெரிவித்துள்ளது.

டெல்லி சட்ட மசோதா - காங்கிரஸ் எதிர்ப்பு

டெல்லியில் அரசு அதிகாரிகள் நியமனம் தொடர்பான மசோதாவுக்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மக்களவையில் ஆளும் அரசான ஆம் ஆத்மி கட்சியின் கோரிக்கையை ஏற்று காங்கிரஸ் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. காங்கிரஸ் சார்பில் நாடாளுமன்ற குழு தலைவர் ரஞ்சன் சவுத்ரி மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். 

திமுக அமைதிப் பேரணி..!

கலைஞரின் 5ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு ஆகஸ்ட் 7இல் முதலமைச்சர் தலைமையில் திமுக அமைதிப் பேரணி நடத்தவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

நிலத்தடி நீரை வணிக ரீதியாக பயன்படுத்த திட்டம் உள்ளதா - உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி

நிலத்தடி நீரை வணிகரீதியாக பயன்படுத்தும் திட்டம் உள்ளதா என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தமிழ்நாடு அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது. 

அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு நாளையும் விசாரணை - உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஒப்புதல்..

அமைச்சர் செந்தில் பாலாஜியின் வழக்கை நாளையும் விசாரக்க உச்சநீதிமன்ற நீதிபதிகள் சம்மதம் தெரிவித்துள்ளனர். இன்றைய விசாரணையில், செந்தில் பாலாஜியின் உடல்நிலையை கருத்தில் கொண்டு தினமும் சிறிது நேரம் விசாரிக்கலாம் என செந்தில் பாலாஜி தரப்பு வாதம் முன்வைக்கப்பட்டது. அமலாக்கத்துறை தனது வாதத்தை முன்வைக்காத நிலையில், நாளை இந்த வழக்கை அதே அமர்வில் விசாரிக்க நீதிபதிகள் சம்மதம் தெரிவித்துள்ளனர். 

மணிப்பூருக்கு நிவாரணப் பொருட்கள் - முதலமைச்சர் ஸ்டாலின்

மணிப்பூரில் தற்போது நிலவி வரும் சூழ்நிலை காரணமாக பாதிக்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கு உதவிடும் பொருட்டு. 10 கோடி ரூபாய் மதிப்புள்ள அத்தியாவசியப் பொருட்களை அனுப்பி வைத்திட ஒப்புதல் வழங்கிடக் கோரி,  மணிப்பூர் மாநில முதலமைச்சர் பைரேன் சிங்கிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  கடிதம் எழுதியுள்ளார்.

ஜெய்ப்பூர் ரயில் கொலை வழக்கு - உயர்மட்ட குழு அமைப்பு

ஜெய்ப்பூரில் இருந்து மும்பை சென்ற அதிவிரைவு ரயிலில் பணியாற்றிய பாதுகாப்பு அதிகாரி கண்மூடித்தனமாக சுட்டதில்  ஒரு பாதுகாப்பு அதிகாரி உட்பட 4 பேர் கொல்லப்பட்ட விவகாரத்தை விசாரிக்க உயர்மட்டக்குழு அமைக்கப்பட்டுள்ளது. 

மணிப்பூர் விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

மணிப்பூர் வன்முறையின்போது கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட பெண்களின் வாக்குமூலத்தை, பதிவு செய்ய வேண்டாம் என சிபிஐக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பான மனுக்களை பிற்பகல் 2 மணிக்கு விசாரிக்க உள்ளதாகவும், அதுவரை பாதிக்கப்பட்ட பெண்களிடம் சிபிஐ விசாரணை நடத்த வேண்டாம் எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்மண்டலமாக வலுப்பெற்றுள்ளதால்,நாகை, காரைக்கால் உள்ளிட்ட 9, துறைமுகங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 1,ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

சிபிஎம் இரண்டு எம்எல்ஏக்கள் விவசாயிகளை சந்திக்க நேரில் நெய்வேலி வருகை -போலீசார் தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் சின்னதுரை மற்றும் நாகை மாவட்டம் கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி ஆகியோர் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகளோடு என்எல்சி நிறுவனம் விவசாய நிலங்களை அழித்து கால்வாய் வெட்டும் பணிகளை வளையமாதேவி கிராமத்தில் ஈடுபட்டு வருகிறது இதனை பார்வையிடுவதற்காகவும் விவசாயிகளை சந்திப்பதற்காகவும் வருகை தந்தனர் அவர்கள் சேத்தியாதோப்பு நான்கு முறை சந்திப்பில் போலீசார் தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்

விடாமல் துரத்தும் எதிர்க்கட்சிகள்.. முரண்டு பிடிக்கும் பாஜக.. நாடாளுமன்றம் 9வது நாளாக ஒத்திவைப்பு

மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறித்தி அமளியில் ஈடுபட்டதால் 9வது நாளாக நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

மகாராஸ்ட்ரா மாநில கிரேன் விபத்து.. உயிரிழந்தவர்களில் இருவர் தமிழர்கள்

மகாராஸ்ட்ரா மாநிலத்தில் இன்று காலை கிரேன் விழுந்து ஏற்பட்ட விபத்தில் மொத்தம் 17 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் இருவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்ற தகவல் இப்போது வெளியாகியுள்ளது. 

தமிழகம் - கர்நாடகா இடையே மெட்ரோ ரயில் சேவை

தமிழ்நாட்டின் ஓசூர் மற்றும் கர்நாடகாவின் பொம்ம்சந்திரா இடையே மெட்ரோ ரயில் சேவை தொடங்க திட்டம். சாத்தியக்கூறுகளை ஆராயும் பணி தொடங்கியுள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.  நாட்டிலேயே முதன்முறையாக இருமாநிலங்களுக்கு இடையே மெட்ரோ ரயில் சேவையை வழங்கும் திட்டம் இது தான். இதற்கான திட்டச்செலவை இரு மாநிலங்களும் பகிர்ந்துகொள்ள திட்டம். 

அமலாக்கத்துறையால் பறிமுதல் செய்யப்பட்ட லாலுபிரசாத் யாதவ் சொத்துகள்

லாலு பிரசாத் யாதவின் குடும்ப உறுப்பினர்களுக்குச் சொந்தமான காசியாபாத் மற்றும் பாட்னாவில் உள்ள 6 அசையா சொத்துக்களை அமலாக்கத்துறை தற்காலிகமாக பறிமுதல் செய்துள்ளது இதன் மதிப்பு ரூ. 6.02 கோடி மதிப்புடையது என அமலாக்கதுறை ட்வீட் செய்துள்ளது. 

7வது நாளாக தொடரும் சுரங்க விரிவாக்க பணி

7வது நாளாக இரவு நேரத்தில் 2வது சுரங்க விரிவாக்கப் பணிகளை என்.எல்.சி நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. 

மகாராஸ்ட்ராவில் 14 பேர் பரிதாபமாக உயிரிழப்பு;

மகாராஸ்ட்ராவில் பால கட்டுமானப் பணியின் போது கிரேன் சரிந்ததில் 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 6 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

சென்னையில் போலீஸ் என்கவுண்டர்; 2 ரவுடிகள் சுட்டுக்கொலை

தாம்பரம் ஊராப்பாக்கம் அருகே காவலரை தாக்கிவிட்டு தப்பிய சோட்டா வினோத், ரமேஷ் இரண்டு ரவுடிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர். 

சிலிண்டர் விலை குறைப்பு..!

வணிக சிலிண்டர் விலை ரூபாய் 92.50 குறைக்கப்பட்டுள்ளது. வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. 

Background

சென்னை அடுத்த தாம்பரத்தில் போலீசார் நடத்திய என்கவுண்டரில் இரண்டு ரவுடிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.


என்கவுண்டர்:


சென்னை தாம்பரம் அடுத்த ஊரப்பாக்கம் காரணி புதுச்சேரி செல்லும் பிரதான  சாலையில் போலீசாரை வெட்டிய நபரை கூடுவாஞ்சேரி போலீசார் சுட்டுக்கொன்றனர். என்கவுண்டர் செய்யப்பட்ட நபர் சோட்டா வினோத் என தகவல் வெளியாகியுள்ளது. அவர் மீது மீது 10 கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளன. ரமேஷ் என்ற ரவுடியையும் போலீசார் சுட்டுக் கொன்றனர்.


வாகன தணிக்கையின் போது தாக்குதல்:


காரணைபுதுச்சேரி அருகே போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்தபோது, ஒரு காரை இடைமறித்து சோதனையில் ஈடுபட்டனர். தாம்பரம் மாநகர காவல் கூடுவாஞ்சேரி காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட காரணைப்புதுச்சேரி அருகே சாலையில் இன்று அதிகாலை 3:30 மணி அளவில் காவல் ஆய்வாளர் முருகேசன் தலைமையில் உதவி ஆய்வாளர் சிவகுருநாதன் மற்றும் காவலர்கள் வாகன தணிக்கை செய்து கொண்டிருந்தனர். அப்போது,  அதிவேகமாக வந்த கருப்பு நிற காரை நிறுத்த முற்பட்டபோது நிற்காமல் முன்னேறிய கார் உதவி ஆய்வாளரை இடிப்பது போல் வந்து, போலீஸ் ஜீப் மீது மோதி நின்றது. அந்த காரின் அருகில் சென்ற போது உள்ளே  நான்கு நபர்கள் ஆயுதங்களுடன் இறங்கி உதவி ஆய்வாளரை தாக்கியதால், போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


2 பேர் சுட்டுக்கொலை:


இதுதொடர்பாக காவல்துறை வெளியிட்ட அறிக்கையில் “தாம்பரம் மாநகர காவல் கூடுவாஞ்சேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காரணை புதுச்சேரி அருங்கல் சாலையில் இன்று Cl-08-2023 ஆம் தேதி அதிகாலை 03.30 மணியளவில் காவல் ஆய்வாளர் முருகேசன் தலைமையில் உதவி ஆய்வாளர் சிவகுருநாதன் மற்றும் காவலர்கள் வாகன தணிக்கை செய்து கொண்டிருந்த போது அதி வேகமாக வந்த கருப்பு நிற SKODA காரை நிறுத்த முற்பட்ட போது நிறுத்தாமல் உதவி ஆய்வாளரை இடிப்பது போல் வந்து போலிஸ் ஜீப் மீது மோதி நின்ற கார் அருகில் சென்ற போது அதில் இருந்து நான்கு நபர்கள் ஆயுதங்களுடன் காரை விட்டு இறங்கி போலிசாரை நோக்கி தாக்க முற்பட்டனர். அதில் ஒருவர் அருவாளால் உதவி ஆய்வாளரின் இடது கையில் வெட்டி மீண்டும் தலையில் வெட்ட முற்பட்ட போது உதவி ஆய்வாளர் கீழே குனிந்ததால் அவரது தொப்பியில் வெட்டுபட்டது. இதை பார்த்த காவல் ஆய்வாளர் ஒரு நபரையும் உதவி ஆய்வாளர் ஒரு நபரையும் சுட்டனர். மீதி இருவர் அங்கிருந்த ஆயுதங்களுடன் தப்பி ஓடினார்கள். மேற்படி காயம்பட்ட இருவரை பற்றி விசாரிக்க அதில் ஒருவர் பெயர் வினோத் (எ) சோட்டா வினோத். வயது 35, த/பெ. சுப்பிரமணி என்றும் அவர் ஓட்டேரி காவல் நிலைய சரித்திர பதிவேடு (A+ Category, HS.No.04/15) குற்றவாளி எனவும் அவர் மீது 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் அதில் 10 கொலை, 15 கொலை முயற்சி. 10 கூட்டுக்கொள்ளை, 15 அடிதடி மற்றும் மிரட்டி பணம் பறித்தல் வழக்குகள் இருப்பதும் மற்றொரு நபர் பெயர் ரமேஸ். வயது 32. த/பெ. சுந்தரம் என்றும் அவர் ஓட்டேரி காவல் நிலைய சரித்திர பதிவேடு (A Category, H5.No.18/20) குற்றவாளி எனவும் அவர் மீது 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிறுவையில் உள்ளதாகவும் அதில் 5 கொலை, 7 கொலை முயற்சி, 8 அடிதடி மற்றும் மிரட்டி பணம் பறித்தல் வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. மேற்படி காயம்பட்ட உதவி ஆய்வாளர் சிவகுருநாதன் என்பவர் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டார். காயம்பட்ட எதிரிகளை செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்த போது எதிரிகள் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.