Breaking News LIVE: புகைப்பட கலைஞர்களை புகைப்படம் எடுத்த முதல்வர் ஸ்டாலின்
Breaking News LIVE:நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.
அதிமுக மாநாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரையில் நூற்றுக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
2,300ஆக இருந்த ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் எண்ணிக்கை தற்போது 3 மடங்காக அதிகரித்துள்ளன என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கோவைதான் தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்றார் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கோவை கொடீசியா வளாகத்தில் தொடங்கி உள்ள ஸ்டார்ட் அப் திருவிழா குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் காணொலி மூலம் உரையாற்றினார்.
உலக புகைப்பட தினத்தையொட்டி பத்திரிகை புகைப்பட கலைஞர்களை புகைப்படம் எடுத்து முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மதுரையில் இருந்து பெங்களூரு செல்ல வேண்டிய இண்டிகோ விமானம் தொழில்நுட்ப கோளாறால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
கலைஞர் நூற்றாண்டு விழா தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது. ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள், நூற்றாண்டு விழா குழு உறுப்பினர்கள், 23 அணிகளின் செயலாளர்கள் பங்கேற்றனர்.
சென்னையில் முதலமைச்சர் ஸ்டாலின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆழ்வார்பேட்டையில் உள்ள முதலமைச்சர் வீட்டில் வெடிகுண்டு வெடிக்கும் என அதிகாலையில் தொலைபேசியில் மிரட்டல் வந்தது. இதுதொடர்பான விசாரணையில், காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்புகொண்டு செல்போனில் பேசிய கன்னியாகுமரியை சேர்ந்த இசக்கிமுத்து என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். பூதப்பாண்டி காவல் நிலையத்தில் வைத்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
சென்னை அடுத்த மணலி அருகே உள்ள மாத்தூர் எம்.எம்.டி.ஏ. பகுதியில் கொச்டு விரட்டும் லிக்வ்ட் இயந்திரத்தால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்துள்ளனர். கொசு விரட்டும் லிக்விட் இயந்திரம் சூடாகி உருகியதுடன் அட்டைப்பெட்டியின் மீது விழுந்து தீப்பிடித்துள்ளது. இதனால் வீடுமுழுவதும் புகைமூட்டம் ஏற்பட்டுள்ளது. அப்போது, வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த மூதாட்டி சந்தான லட்சுமி மற்றும் அவரது பேத்திகளான சிறுமிகள் பிரியதரிதா, சங்கிதா மற்றும் பவித்ரா ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.
மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 12,523 கனஅடியாக உயர்ந்துள்ளது.
கலைஞர் நூற்றாண்டு விழா தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று திமுக ஆலோசனை மேற்கொள்ள உள்ளது.
கர்நாடக அணைகளில் இருந்து தமிழ்நாட்டிற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து விநாடிக்கு 14000 கன அடியில் இருந்து 15 ஆயிரம் கன அடியாக உயர்வு. இதையடுத்து நான்காவது நாளாக ஒகேனக்கலில் பரிசில் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை.
மழைநீர் வடிகால் பணிகள் நடைபெற உள்ளதால் சென்னை ஈவெரா சாலையில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம். ரித்தர்டன் சாலை சந்திப்பு அருகே மழைநீர் வடிகால் பணி நடக்கவுள்ளதால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஈவெரா சாலையில் காந்தி இர்வின் மேம்பாலத்தில் இருந்து தாசபிரகாஷ் சந்திப்பை நோக்கி நேராக செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ரித்தர்டன் சாலை சந்திப்பில் இருந்து ஈவிகே சம்பத் சாலை நோக்கி நேராக செல்லவும் அனுமதியில்லை.
ஈரோடு: பவானி சாகர் அணையிலிருந்து 200 கன அடி தண்ணீர் பாசனத்திற்காக இன்று திறக்கப்படுகிறது. கீழ்பவானி வாய்க்கால் மற்றும் அதன் கிளை வாய்க்காலில் சீரமைப்பு பணிகள் முடிந்த நிலையில் இன்று நீர் திறக்கப்படுகிறது.
Background
Petrol Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலை 450 நாட்களை கடந்தும் மாற்றமின்றி விற்பனையாகி வரும் சூழலில், இன்றைய நிலவரத்தை அறியலாம்.
பெட்ரோல், டீசல்:
உலகமே எரிபொருளை மையமாகக் கொண்டு தான் இயங்கி வரும் வேளையில் முழுமையான மின்சார சக்தியில் செயல்படும் அளவிற்கு உலக நாடுகள் தங்களை உயர்த்திக் கொள்ள முயற்சித்து வருகின்றன. அந்த வரிசையில் இந்தியாவும் முழுமையாகக் களம் கண்டுள்ளது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் சம்பந்தமான பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன. இதனால் வெகு விரைவில் முற்றிலுமான மின்மயமான நாட்டினை நோக்கி இந்தியா தன்னை நகர்த்திக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவை பொறுத்தவரை 80% வாகனங்கள் பெட்ரோல், டீசல் ஆகியவற்றில் இயங்கி வருகிறது. இதன் காரணமாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு மக்களின் அன்றாட வாழ்க்கையில் பெரும் மாற்றத்தினை ஏற்படுத்துகிறது. அதேபோல் எரிபொருட்களின் விலை உயர்வு என்பது அன்றாட அத்தியாவசியப் பொருட்களின் மீதான விலை உயர்வில் மிகப்பெரிய அளவில் பிரதிபலிக்கும். எனவே சாமானிய மக்களும் எரிபொருள் விலை நிலவரத்தை ஒவ்வொரு நாளும் கண்காணித்து வருகிறார்கள்.
இன்றைய விலை நிலவரம்
இந்நிலையில் சென்னையில் இன்று (ஆகஸ்ட் 19) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை நிர்ணயமானது தொடர்ந்து மாற்றமின்றி 455வது நாளாக தொடர்கிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். முன்னதாக கடந்த 2020, 2021 ஆம் ஆண்டுகளில் பரவிய கொரோனா வைரஸ் தொற்றால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் மிகப்பெரிய பொருளாதார பாதிப்பை சந்தித்தனர்.
அப்போது கலால் வரி குறைப்பால் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை 6 ரூபாய்க்கும் குறைந்தது. இத்தகைய சூழலில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி 10 மாதங்களை கடந்துள்ளது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேசிய உயிரி எரிபொருள் கொள்கை
கடந்த 2018ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்த தேசிய உயிரி எரிபொருள் கொள்கை 2030ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனாலைக் கலந்து விற்க இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், அந்த இலக்கு தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக 2025 ஆம் ஆண்டு என மாற்றியமைக்கப்பட்டது.
இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, ”இருபது சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் டிசம்பர் அல்லது ஜனவரி முதல் நாட்டில் கிடைக்கும்” எனத்தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எத்தனால் உற்பத்தியை நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். ஏப்ரல் 2023க்கு முன்னதாக டிசம்பர் அல்லது ஜனவரியில் 20 சதவீதம் கலப்பு எரிபொருள் சந்தைக்கு வரும் என்று நான் நம்புகிறேன்" என் கூறினார்.
நெகிழ்வான எரிபொருள் வாகனங்கள் (கலப்பு எரிபொருளில் இயங்கும் வாகனங்கள்) கிடைக்கும் பிரேசிலை உதாரணமாக மேற்கோள் காட்டி பேசிய ஹர்தீப் சிங் பூரி, "நுகர்வோர் விருப்பப்படி எத்தனால் அல்லது பெட்ரோலை எடுத்துக் கொள்ளலாம். இது அரசாங்கத்தின் இறுதி இலக்காக இருக்கும்.
இருப்பினும், அந்த நிலையை அடைய, சில தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. அதற்கான, பணிகள் நடந்து வருகின்றன. எத்தனால் கலப்படம் தொடர்பாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுடன் ஒரு முக்கிய சந்திப்பை நடத்த உள்ளோம். பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலப்பதை அடைவதற்கான இலக்கு தேதியை 2025ஆம் ஆண்டுக்கு ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியா முன்னெடுத்துள்ளது.
பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதற்கு, நமது நாட்டிற்கு 1,000 கோடி லிட்டர் கொள்ளளவு தேவைப்படுகிறது. 450 கோடி லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 400 கோடி லிட்டருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 20 சதவிகித கலப்பிற்கான போதுமான எத்தனால் கைவசம் உள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து பெட்ரோலிலும் 20 சதவீதம் எத்தனால் இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -