Breaking News LIVE: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியுடன் சி.பி. ராதாகிருஷ்ணன் சந்திப்பு..
Breaking News LIVE:நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.
சென்னை ஆளுநர் மாளிகையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியை, ஜார்கண்ட் மாநில ஆளுநர் சி.பி ராதாகிருஷ்ணன் சந்தித்தார். மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நடைபெற்றதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் அள்ளிய வழக்கை வரும் 22ஆம் தேதிக்கு விழுப்புரம் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
கடந்த மாதம் 14ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்ட சந்திரயான் 3 விண்கலம், பல கட்ட பயணத்திற்கு பிறகு நிலவின் சுற்றுவட்டப்பாதைக்கு கொண்டு செல்லப்பட்டது. அதன்படி நேற்று, நிலவிற்கும் சந்திரயான்-3 விண்கலத்திற்கும் இடையிலான குறைந்தபட்ச தூரம் 153 கிலோ மீட்டராகவும், அதிகபட்ச தூரம் 163 கிலோ மீட்டராகவும் நிலைநிறுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து இன்று சந்திரயான் 3 விண்கலத்தில் இருந்து விக்ரம் எனும் லேண்டர் பாகம் வெற்றிகரமாக தனியாக பிரிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான டிவிட்டர் பதிவில் “ நிலவை நோக்கி லேண்டரை உந்தித்தள்ளும் அடுத்தகட்ட பணி, நாளை மாலை 4 மணிக்கு நடைபெறும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், புரபல்சன் அமைப்பு தொடர்ந்து தற்போதுள்ள சுற்றுவட்டப் பாதையிலேயே சில மாதங்கள் அல்லது வருடங்களுக்கு பயணிக்கும். இந்த பயணத்தின் போது அதில் உள்ள ஸ்பெக்ட்ரோஸ்கோபிக் மூலம் பூமியின் வளிமண்டலத்தை ஆய்வு செய்து மேகங்களிலிருந்து துருவமுனைப்பு மாறுபாடுகளை அளவிடும் எனவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.
நாங்குனேரி சமபவம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்திய மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சின்னராசு பள்ளிக்கல்வித்துறை அமைச்சரிடம் ஒப்படைத்துள்ளார்.
சென்னையில், மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்க விடுபட்டவர்களுக்கு நாளை முதல் 20ஆம் தேதி வரை சிறப்பு முகாம் நடத்தப்படவுள்ளது.
கோவையில் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் காலில் கைக்குழந்தையுடன் விழுந்து பணியிட மாறுதல் கேட்ட ஓட்டுநருக்கு, பணியிட மாறுதல் வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.
மேற்கு ஆப்பிரிக்க நாடான செனகல் நாட்டைச் சேர்ந்த அகதிகள் சுமார் 101 பேர் ஸ்பெயினின் கேனரி தீவுகள் நோக்கி கடந்த ஜுலை மாதம் 101 பேர் படகில் புறப்பட்டனர். அவர்கள் கேப் வெர்டே தீவு அருகே சென்று கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக திடீரென படகு கவிழ்ந்தது விபத்துக்குள்ளாகி தலைகீழாக கவிழ்ந்தது. இதில் படகில் இருந்த அனைவரும் நீரில் மூழ்கினர். தகவலறிந்து மீட்புப் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். 38 பேரை பேர் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில், 63 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் 2 புலிக்குட்டிகள் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளது. தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் வழிகாட்டுதல்படி பிரேத பரிசோதனை நடைபெற்று வருகிறது
சமூகநீதிக்கான போராட்டத்தில் தீரத்தோடு களமாடும் என் அன்புச் சகோதரர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் நல்ல ஆரோக்யத்துடன் நீடூழி வாழ பிறந்த நாளில் வாழ்த்துகிறேன்.
இன்று (ஆகஸ்ட் 17 ஆம் தேதி) சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 312 குறைந்து ரூ. 43,648 ஆகவும் 22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு 39 ரூபாய் குறைந்து ரூ.5,456 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் 24 காரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 47,408 ஆகவும் கிராமுக்கு ரூ. 5,926 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
இம்மண்ணில் ஆழ விதைக்கப்பட்டுள்ள தந்தை பெரியார் - புரட்சியாளர் அம்பேத்கர் கருத்துகளைத் தனது பேச்சாலும் செயல்களாலும் வளப்படுத்திடும் அன்புச் சகோதரர் திருமாவளவனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!
கடந்த மாதம் ஓடும் ரயிலில் 4 பயணிகளை சுட்டுக் கொன்ற RPF கான்ஸ்டபிள் சேத்தன்சிங் சவுத்ரி, பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டதாக அதிகாரி ஒருவர் வியாழக்கிழமை தெரிவித்துள்ளார். சவுத்ரியை பணிநீக்கம் செய்வதற்கான உத்தரவை ரயில்வே பாதுகாப்புப் படை (ஆர்பிஎஃப்) மூத்த பிரிவு பாதுகாப்பு ஆணையர் திங்கள்கிழமை பிறப்பித்ததாக அந்த அதிகாரி தெரிவித்ததாக பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது.
குரூப்-1 தேர்வு முடிவுகள், குரூப்-2, 2ஏதேர்வு முடிவுகள் இந்தாண்டு டிசம்பர் மாதம் வெளியிடப்படும் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு
வனத்துறை அதிகாரி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தேர்வு ஆகியவற்றிற்கான கால அட்டவணையும் வெளியிட்டுள்ளது
மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கான ஒப்பந்தம் கோரி, மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியுடைய ஒப்பந்ததாரர்கள், நிறுவனங்கள் செப்டம்பர் 18ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை 33 மாதங்களில் கட்டி முடிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அறிக்கையின் படி, 2026ம் ஆண்டு ஜூன் மாதத்திற்குள் மருத்துவமனை கட்டி முடிக்கப்படும், அதேநேரம், மருத்துவமனை முழுமையான பயன்பாட்டிற்கு வர 2028ம் ஆண்டு ஜுன் மாதம் வரை காலம் தேவைப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமான பணிக்காக ஜப்பானின் ஜெய்கா நிறுவனத்திடமிருந்து கடன் பெறப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ராமநாதபுரத்தில் இன்று முதலமைச்சர் சுற்றுப்பயணம் மேற்கொள்வதால் முன்னெச்சரிக்கை காரணங்களுக்காக பரமக்குடி ஒன்றிய பாஜக தலைவர் முத்துலிங்கம் வீட்டுக்காவலில் அடைக்கப்பட்டுள்ளார்.
ஜம்மு - காஷ்மீரில் உள்ள ரஜோரியில் அதிகாலை 3.49 மணியளவில் 3.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
காவிரி ஆற்றில் நீர் வரத்து அதிகமாகியுள்ளதால் 2வது நாளாக இன்றும் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
Background
Petrol Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலை 450 நாட்களை கடந்தும் மாற்றமின்றி விற்பனையாகி வரும் சூழலில், இன்றைய நிலவரத்தை அறியலாம்.
பெட்ரோல், டீசல்:
உலகமே எரிபொருளை மையமாகக் கொண்டு தான் இயங்கி வரும் வேளையில் முழுமையான மின்சார சக்தியில் செயல்படும் அளவிற்கு உலக நாடுகள் தங்களை உயர்த்திக் கொள்ள முயற்சித்து வருகின்றன. அந்த வரிசையில் இந்தியாவும் முழுமையாகக் களம் கண்டுள்ளது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் சம்பந்தமான பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன. இதனால் வெகு விரைவில் முற்றிலுமான மின்மயமான நாட்டினை நோக்கி இந்தியா தன்னை நகர்த்திக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவை பொறுத்தவரை 80% வாகனங்கள் பெட்ரோல், டீசல் ஆகியவற்றில் இயங்கி வருகிறது. இதன் காரணமாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு மக்களின் அன்றாட வாழ்க்கையில் பெரும் மாற்றத்தினை ஏற்படுத்துகிறது. அதேபோல் எரிபொருட்களின் விலை உயர்வு என்பது அன்றாட அத்தியாவசியப் பொருட்களின் மீதான விலை உயர்வில் மிகப்பெரிய அளவில் பிரதிபலிக்கும். எனவே சாமானிய மக்களும் எரிபொருள் விலை நிலவரத்தை ஒவ்வொரு நாளும் கண்காணித்து வருகிறார்கள்.
இன்றைய விலை நிலவரம்
இந்நிலையில் சென்னையில் இன்று (ஆகஸ்ட் 17) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை நிர்ணயமானது தொடர்ந்து மாற்றமின்றி 453வது நாளாக தொடர்கிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். முன்னதாக கடந்த 2020, 2021 ஆம் ஆண்டுகளில் பரவிய கொரோனா வைரஸ் தொற்றால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் மிகப்பெரிய பொருளாதார பாதிப்பை சந்தித்தனர்.
அப்போது கலால் வரி குறைப்பால் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை 6 ரூபாய்க்கும் குறைந்தது. இத்தகைய சூழலில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி 10 மாதங்களை கடந்துள்ளது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேசிய உயிரி எரிபொருள் கொள்கை
கடந்த 2018ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்த தேசிய உயிரி எரிபொருள் கொள்கை 2030ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனாலைக் கலந்து விற்க இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், அந்த இலக்கு தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக 2025 ஆம் ஆண்டு என மாற்றியமைக்கப்பட்டது.
இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, ”இருபது சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் டிசம்பர் அல்லது ஜனவரி முதல் நாட்டில் கிடைக்கும்” எனத்தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எத்தனால் உற்பத்தியை நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். ஏப்ரல் 2023க்கு முன்னதாக டிசம்பர் அல்லது ஜனவரியில் 20 சதவீதம் கலப்பு எரிபொருள் சந்தைக்கு வரும் என்று நான் நம்புகிறேன்" என் கூறினார்.
நெகிழ்வான எரிபொருள் வாகனங்கள் (கலப்பு எரிபொருளில் இயங்கும் வாகனங்கள்) கிடைக்கும் பிரேசிலை உதாரணமாக மேற்கோள் காட்டி பேசிய ஹர்தீப் சிங் பூரி, "நுகர்வோர் விருப்பப்படி எத்தனால் அல்லது பெட்ரோலை எடுத்துக் கொள்ளலாம். இது அரசாங்கத்தின் இறுதி இலக்காக இருக்கும்.
இருப்பினும், அந்த நிலையை அடைய, சில தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. அதற்கான, பணிகள் நடந்து வருகின்றன. எத்தனால் கலப்படம் தொடர்பாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுடன் ஒரு முக்கிய சந்திப்பை நடத்த உள்ளோம். பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலப்பதை அடைவதற்கான இலக்கு தேதியை 2025ஆம் ஆண்டுக்கு ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியா முன்னெடுத்துள்ளது.
பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதற்கு, நமது நாட்டிற்கு 1,000 கோடி லிட்டர் கொள்ளளவு தேவைப்படுகிறது. 450 கோடி லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 400 கோடி லிட்டருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 20 சதவிகித கலப்பிற்கான போதுமான எத்தனால் கைவசம் உள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து பெட்ரோலிலும் 20 சதவீதம் எத்தனால் இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -