Breaking News LIVE: நேபாளத்தில் 6 பேருடன் பயணித்த ஹெலிகாப்டர் மாயம்
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.
மேற்குவங்கத்தில் டைமண்ட் துறைமுகம் அருகில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தின் முன் நாட்டு வெடி குண்டு வீசப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நேபாளத்தில் 6 பேருடன் பயணித்த ஹெலிகாப்டர் மாயமாகியிருப்பது பெரும் வேதனையையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய பாஜக, அன்புமணி ராமதாஸ் மற்றும் ஜி.கே. வாசனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நேபாளத்தில் 6 பேருடன் சென்ற விமானத்தை காணவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
முன்னாள் அமைச்சர் காமராஜ் ரூபாய் 127 கோடி சொத்து குவித்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை 18 ஆயிரம் ஆவணங்களை திருவாரூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு எதிரான வழக்கினை ஆகஸ்ட் மாதம் 2ஆம் தேதி முதல் தினசரி விசாரணை நடத்தப்படும் உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் பள்ளி வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 7ஆம் வகுப்பு மாணவன் பரிதாபமாக உயிரிழந்தார்.
அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு விசாரணை மூன்றாவது நீதிபதியின் முன்னிலையில் தொடங்கியது. செந்தில் பாலாஜி தரப்பில் கபில் சிபில் வாதாடி வருகிறார்.
அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது.
சுதந்திர போராட்ட வீரர் அழகு முத்துக்கோன் பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு முதலமைச்சர் மரியாதை செலுத்தினார்.
Background
அமைச்சர் செந்தில் பாலாஜி வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். 17 மணி நேர சோதனைக்கு பின், அவரை கைது செய்த போது நெஞ்சு வலி ஏற்பட்டது. அதனை தொடர்ந்து அவர் ஓமந்துரார அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபப்ட்டார். பின் நீதிமன்றத்தின் அனுமதியுடன் காவிரி மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டார். அங்கு அவருக்கு பை பாஸ் சர்ஜரி மேற்கொள்ளப்பட்டது. தற்போது அவர் தொடர் சிகிச்சையில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் செந்தில் பாலாஜி கைது சட்டவிரோதமானது என கூறி அவரது மனைவி மேகலா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு முதலில் நீதிபதிகள் நிஷா மற்றும் பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் இரண்டு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பு வழங்கினார்கள்.
நீதிபதிகளில் மாறுபட்ட தீர்ப்பு:
நீதிபதி நிஷா பானு, “அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டது சட்டவிரோதம். எனவே, அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவிக்கலாம்” என தீர்ப்பு வழங்கினார். நீதிபதி பரத சக்கரவர்த்தி செந்தில் பாலாஜி மனைவி மேகலா தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். செந்தில் பாலாஜி சிகிச்சையில் இருக்கும் நாட்களை நீதிமன்றக் காவலில் இருக்கும் நாட்களாகக் கருத முடியாது எனவும் நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.
மூன்றாவது நீதிபதி விசாரணை:
இந்நிலையில் இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கியதால், இந்த வழக்கு மூன்றாவது நீதிபதி விசாரணைக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி சி.வி. கார்த்திகேயன் விசாரிப்பார் என தலைமை நீதிபதி கங்காபூர்வாலா தெரிவித்திருந்தார். ஜூலை 6 ஆம் தேதி நீதிபதி சி.வி. கார்த்திகேயன் அமர்வில் விசாரணை நடந்தது.
பிரபல வழக்கறிஞர் கபில் சிபல் வாதாட வர உள்ளதாக கூறி, வழக்கை ஜூலை 11 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்க வேண்டும் என்று செந்தில் பாலாஜி மனைவி தரப்பில் கோரப்பட்டது. இதனையடுத்து 3வது நீதிபதி சி.வி கார்த்திகேயன் இந்த வழக்கை ஒத்தி வைத்தார். வழக்கை எப்போது விசாரிக்கலாம் என குழப்பம் இருந்த நிலையில், ஜூலை 11 ஆம் தேதி அதாவது இன்று ஒத்திவைக்கப்பட்டது. இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் காலை விசாரணைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மாறுபட்ட தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதால், மூன்றாவது நீதிபதியின் தீர்ப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -