Breaking News LIVE: ”நாடு உடைவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது' - நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேச்சு
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.
இந்தியா உடைவதை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். நாங்கள் தலைகுனியவும் மாட்டோம். எங்கள் பாதையில் இருந்து விலகவும் மாட்டோம் - பிரதமர் மோடி
மணிப்பூரில் வளர்ச்சியை ஏற்படுத்துவதே எங்களது தலையாய பணி. மணிப்பூர் முதல்வர் பிரேன்சிங் அமைதியை நிலைநிறுத்த உழைத்து வருகிறார் - பிரதமர் மோடி
மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி 2 மணி நேரத்தைக் கடந்து உரையாற்றி வருகிறார்.
மணிப்பூர் வன்முறை தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று விரிவான விவரங்களை அளித்துள்ளார் - பிரதமர் மோடி
மணிப்பூரில் விரைவில் அமைதி ஏற்படும் என உறுதி அளிக்கிறேன். மணிப்பூரில் தவறு செய்தோரை விட மாட்டோம். மணிப்பூர் மக்களுக்கு துணையாக இந்திய நாடு உள்ளது. மணிப்பூர் மாநில மக்களுடன் ஒட்டுமொத்த இந்தியாவும் உள்ளது. என்று பிரதமர் மோடி பேசியுள்ளார்.
மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் பேசாததைக் கண்டித்து எதிர்க்கட்சிகள் மக்களவையில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளனர்.
ராகுல் காந்தி 24 மணி நேரமும் என்னையே நினைத்துக் கொண்டிருக்கிறார் என்றார் மோடி.
ஒரு ஏழைத்தாயின் மகன் பிரதமராக இருப்பதை இவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றார் மோடி.
எதிர்க்கட்சிகளின் கூட்டணி இந்தியா கூட்டணி அல்ல; ஈகோ கூட்டணி என பிரதமர் மோடி விமர்ச்சித்துள்ளார்.
அம்பேத்கரின் ஆடை குறித்து காங்கிரஸ் கட்சி விமர்சனம் செய்தது. அம்பேத்கரையும், பாபு ஜக ஜீவன் ராமையும் விமர்சனம் செய்ததுதான் காங்கிரஸ் கட்சி - பிரதமர் மோடி
மக்களவையில் சுமார் ஒரு மணி நேரமாக பேசிவரும் பிரதமர் மோடி, மணிப்பூர் குறித்து ஒரு வார்த்தை கூட கூறவில்லை. இதனால் மக்களவையில் மணிப்பூர்..மணிப்பூர் என எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டு வருகின்றனர்.
பாஜகவிடம் என்ன கேள்வி கேட்க வேண்டும். எப்படி கேட்க வேண்டும் என்பது கூட எதிர்க்கட்சிகளுக்கு தெரியவில்லை. காங்கிரஸிடம் தெளிவான தேர்தல் வியூகம் இல்லை - பிரதமர் மோடி
எதிர்க்கட்சிகள் கடந்த 3 நாட்களாக என்னை மிக மோசமாக விமர்சித்தனர். விமர்சனம் செய்வதில் மிகக் கீழான நிலையை எதிர்க்கட்சிகள் அடைந்திருக்கின்றன. என்னை அவதூறாகப் பேசுவது எதிர்க்கட்சிகளுக்கு டானிக் குடிப்பது போல இருக்கிறது. எதிர்க்கட்சிகளின் வசை மொழிகளை நான் வாழ்த்துகளாக எடுத்துக் கொள்கிறேன் என்றார் பிரதமர் மோடி.
காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மீது மக்களவையில் தனது உரையில் பிரதமர் மோடி விமர்சித்துள்ளார். ஒரே ஒரு நாள் மட்டுமே மக்களவை அலுவல்களை எதிர்க்கட்சிகள் அனுமதித்தன. கூட்டணியில் உள்ள ஒரு கட்சியின் கட்டாயத்தால் மட்டுமே அதுவும் நடந்தது. கட்சியை விட தேசம் முக்கியம் என்பதை மனதில் கொள்ள வேண்டும் என்றார் மோடி.
பாஜகவுக்கு இந்தியாவின் இளைஞர்கள் மீது நம்பிக்கை இருக்கிறது. இளைஞர்களுக்காக பாஜக பல திட்டங்களை நிறைவேற்றியிருக்கிறது - பிரதமர் மோடி
ஏழைகளின் படி பற்றி எதிர்கட்சிகளுக்கு எந்தக் கவலையும் இல்லை. எதிர்கட்சிகளுக்கு பதவி பசிதான் முக்கியம் - பிரதமர் மோடி பேச்சு
நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது முதல் நாளில் ராகுல் காந்தி பேசாதது ஏன் என்று பிரதமர் மோடி கேள்வி எழுப்பியுள்ளார்.
நம்பிக்கையில்லா தீர்மானம் என்பது எதிர்க்கட்சிகளின் ’நோ பால்'. ஒருமுறை ’நோ பால்' போட்டால் பரவாயில்லை; நீங்கள் ஏன் மீண்டும் மீண்டும் ’நோ பால்' வீசுகின்றனர் என்று பிரதமர் மோடி கேள்வி எழுப்பியுள்ளார்.
மக்கள் எங்கள் ஆட்சியின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர். எதிர்க்கட்சிகளுக்கு மக்களின் மீது அக்கறை இல்லை. அதிகாரத்தின் மீதே ஆசை என்று நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.
2024ஆம் ஆண்டு தேர்தலில் அதிக இடங்களில் பாஜக வெற்றி பெறும் என்று நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை கடவுளின் ஆசிர்வாதமாக கருதுகிறேன் என்று பிரதமர் மோடி கூறினார்.
மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார். எதிர்க்கட்சிகளின் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு பிரதமர் மோடி மக்களவையில் பதிலளித்து வருகிறார்.
நாகை வேதாரண்யம் அருகே நடுக்கடலில் தமிழக மீனவர்களை தாக்கி இலங்கை கடற்கொள்ளையர்கள் அட்டூழியம். 5 படகுகளில் சென்ற 20 மீனவர்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் விரட்டியடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஜார்க்கண்ட முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மணிப்பூர் படுகொலைகளை வேடிக்கை பார்க்கிறது இரட்டை என்ஜின் அரசு. 3 மாதங்களாக மணிப்பூரில் கலவரங்கள், படுகொலைகளை தடுத்து நிறுத்த, பிரதமர் மோடி, அம்மாநில முதலமைச்சர் ஆகியோர் தவறிவிட்டனர். டபுள் எஞ்சின் அரசு என பெருமை பேசும் பாஜக மணிப்பூர் விவகாரத்தில் விளக்கம் தராதது ஏன்?. மணிப்பூருக்கு பிரதமர் ஏன் செல்லவில்லை? உச்சநீதிமன்றம் தலையிட்டு ஒரு மாநிலத்தை காப்பாற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது என கனிமொழி எம்.பி பேசினார்
நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உரையாற்றினார். அவரது பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், தி.மு.க. எம்.பி.க்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்துள்ளனர்..
சென்னையில் ஆலந்தூர், ஈக்காட்டுத்தாங்கல், அசோக் நகர் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது
மக்களவைக்கு வந்தார் பிரதமர் மோடி : நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது பதிலளிக்க மக்களவைக்கும் வந்தார் பிரதமர் மோடி
தலைமை தேர்தல் ஆணையர், இதர ஆணையர்களை நியமிக்கும் குழுவிலிருந்து தலைமை நீதிபதியை நீக்க சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டது. இதை எதிர்த்து எதிர்க்கட்சிகள் முழக்கம் காரணமாக மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லி செங்கோட்டை , ராஜ்காட் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக ஆகஸ்ட் 16 வரை டெல்லியில் டிரோன்கள் போன்றவை ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லாத தீர்மானத்தின் மீதான மூன்றாம் நாள் விவாதம் தொடங்கியது.
மாநிலங்களவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இணையசேவை இல்லாமல் UPI மூலம் பணப்பரிமாற்றம் செய்வதற்கான அதிகபட்ச தொகையை ₹200ல் இருந்து ₹500 ஆக அதிகரித்து ரிசர்வ் வங்கி அறிவிப்பு Near Field Communication மூலம் இவ்வகை பணப்பரிமாற்றம் நடக்கிறது
தி.மு.க. முன்னாள் பொதுச்செயலாளர் அன்பழகன் வெண்கல சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் 8 அடி உயரத்தில் அன்பழகனின் உருவச்சிலையை முதலமைச்சர் திறந்து வைத்தார்.
வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடன்களுக்கான வட்டி (ரெப்போ ரேட்) விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை; 6.5% விகிதமே தொடரும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் அறிவிப்பு
குறுகிய கடன்களுக்கான கடன் வட்டி விகிதம் ரூ.6.50% சதவீதமாக மாற்றமின்றி தொடரும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
சென்னையில் ஜேம்ஸ் வால்ட்டர் என்பவரின் ஏற்றுமதி நிறுவனம் தொடர்பான 13 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. மேற்கு தாம்பரம், வேளச்சேரி, சோழிங்கநல்லூர், கோடம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடைபெறுகிறது. ரூ. 225 கோடி நிதிமோசடி செய்ததாக சிபிஐ பதிவு செய்த வழக்கின் அடிப்படையில் அமலாக்கத்துறை சொதனை நடத்துகிறது.
சென்னையில் பெட்ரோல், டீசல் விலை 14 மாதங்களை கடந்தும் மாற்றமின்றி விற்பனையாகி வரும் சூழலில் , இன்றைய நிலவரத்தை அறியலாம்.இந்நிலையில் சென்னையில் இன்று (ஆகஸ்ட் 10) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதன்மை தேர்வில் இரண்டாயிரத்து 113 பேர் பங்கேற்க உள்ளனர்.
தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக டி.என்.பி.எஸ்.சி. சார்பில் குரூப் 1 முதன்மைத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அதன்படி துணை ஆட்சியர், காவல் துணை கண்காணிப்பாளர், வணிக வரித்துறை உதவி ஆணையர் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு குரூப் 1 தேர்வுகள் மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். அந்த வகையில் தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 95 பணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வுகள் இன்று தொடங்குகின்றன. ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-1 (தொகுதி-I) பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான முதன்மை எழுத்துத் தேர்வு 10.08.2023 (முற்பகல்) முதல் 13.08.2023 முற்பகல்) வரை சென்னை தேர்வு மையத்தில் மட்டும் நடைபெற உள்ளது.
மேட்டூர் அணை நிலவரம் நீர் வரத்து விநாடிக்கு 5026 கன அடி டெல்டா பாசனத்திற்காக நீர் வெளியேற்றம் விநாடிக்கு 7500 கன அடி நீர் இருப்பு 56 அடியாக உள்ளது
ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த நடிகர் ரஜினிகாந்த்தின் 'ஜெயிலர்' திரைப்படம் உலகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் வெளியானது; தமிழ்நாட்டில் காலை 9 மணிக்கு வெளியாகிறது!
ம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான பதிலுரையை பிரதமர் மோடி, நாடாளுமன்றத்தில் இன்று வழங்க உள்ளார்
சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை கிலோவுக்கு ரூ.20 குறைந்து ரூ.70-க்கு விற்பனையாகிறது. கோயம்பேடு சந்தைக்கு 700 டன் தக்காளி வந்துள்ளதால் விலை குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Background
டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதன்மை தேர்வில் இரண்டாயிரத்து 113 பேர் பங்கேற்க உள்ளனர்.
குரூப் 1 முதன்மை தேர்வு:
தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக டி.என்.பி.எஸ்.சி. சார்பில் குரூப் 1 முதன்மைத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அதன்படி துணை ஆட்சியர், காவல் துணை கண்காணிப்பாளர், வணிக வரித்துறை உதவி ஆணையர் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு குரூப் 1 தேர்வுகள் மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். அந்த வகையில் தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 95 பணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வுகள் இன்று தொடங்குகின்றன.
தேர்வு எழுதும் 2,113 பேர்:
குரூப் 1 தேர்வுக்கான அறிவிப்பை கடந்த ஆண்டு ஜுலை மாதம் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது. அதனை டொடர்ந்து, முதல்நிலைத் தோ்வு கடந்த ஆண்டு நவம்பர் 19 ஆம் தேதி நடைபெற்றது. அதன் முடிவுகள் கடந்த ஏப்ரல் மாதம் வெளியானது. தொடர்ந்து முதல்நிலைத் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான முதன்மைத் தேர்வுகள் இன்று தொடங்கி 13-ந்தேதி வரை நடைபெற உள்ளன. இதில் 1,333 ஆண்கள், 780 பெண்கள் என மொத்தம் 2,113 பேர் தேர்வு எழுத உள்ளனர். தேர்வுக்காக சென்னையில் மட்டும் 22 மையங்கள் இதற்காக அமைக்கப்பட்டு உள்ளன. இந்த தேர்வுக்கான நுழைவுச் சீட்டுகளை டிஎன்பிஎஸ்சி இணையதளமான https://www.tnpsc.gov.in/ இல் பதிவிறக்கம் செய்யலாம்.
தேர்வு முறை:
TNPSC குரூப் 1 முதன்மைத் தேர்வில் 3 தாள்கள் உள்ளன. இதில் ஒவ்வொரு தாளும் 250 மதிப்பெண்களைக் கொண்டுள்ளன. ஒவ்வொரு தாளுக்கும் 3 மணி நேர தேர்வு நடைபெறும். இதில் தேர்ச்சி பெற்றவர்கள், நேர்காணல் சுற்றுக்கு தகுதி பெறுவார்கள். அந்த தேர்வில் தேர்வாளர்களுக்கு 100 மதிப்பெண்கள் வழங்கப்படும்.
நேரக்கட்டுப்பாடு:
- விண்ணப்பதாரர் தேர்வு நடைபெறும் இடத்தில் தேர்வு தொடங்குவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பாகவே தவறாமல் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
- மேசையில் ஒட்டப்பட்டுள்ள பெயர், பதிவு எண் மற்றும் புகைப்படத்தை சரிபார்த்த பின், தேர்வர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் அமர வேண்டும். OMR விடைத்தாள்களை நிரப்புவது தொடர்பான வழிமுறைகள் தேர்வுக் கூடத்தில் வழங்கப்படும்.
- தேர்வர்கள் தேர்வு நடைபெறும் இடத்தில், ஆணையத்தின் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட சேர்க்கைக்கான மெமோராண்டத்துடன் (ஹால் டிக்கெட்) ஆஜராக வேண்டும், தவறினால் அவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். விண்ணப்பதாரர்கள் தங்களுடைய ஆதார் அட்டை / பாஸ்போர்ட் / ஓட்டுநர் உரிமம் / நிரந்தர கணக்கு எண் (பான்) அட்டை / வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றின் புகைப்பட நகலையும் கொண்டு வர வேண்டும்.
டி.என்.பிஎஸ்.சி., அறிக்கை:
தேர்வு தொடர்பாக சில தினங்களுக்கு முன்பாக டி.என்.பிஎஸ்.சி வெளியிட்ட அறிக்கையில் “தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் அறிவிக்கை எண்: 16/2022, நாள் 21.07.2022 - இன் வாயிலாக நேரடி நியமனத்திற்கு அறிவிக்கை செய்யப்பட்ட ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-1 (தொகுதி-I) பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான முதன்மை எழுத்துத் தேர்வு 10.08.2023 (முற்பகல்) முதல் 13.08.2023 முற்பகல்) வரை சென்னை தேர்வு மையத்தில் மட்டும் நடைபெற உள்ளது.
தேர்வு எழுத தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் தேர்வுக்கூட அனுமதிச்சீட்டுகள் (Hall Ticket) தேர்வாணையத்தின் இணையதளங்களான www.tnpsc.gov.in, www.tnpscexams.in ஆகியவற்றில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. விண்ணப்பதாரர்கள் தங்களுடைய ஒருமுறை பதிவின் விவரப்பக்கம் (OTR DASHBOARD) மூலமாக மட்டுமே விண்ணப்ப எண், பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து தேர்வுக்கூட அனுமதிச் சீட்டினை (Hall Ticket) பதிவிறக்கம் செய்ய முடியும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -