Breaking News LIVE: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்கு மதிமுகவை அழைத்த திமுக
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் கீழே காணலாம்.
மத்திய உள்துறை அமைச்சரும் தெலுங்கானா ஆளுநரான தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோர் சந்தித்து பேசியுள்ளனர். இதில் பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து விவாதித்தாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே வரும் மக்களவைத் தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் தமிழிசை போட்டியிடப்போவதாக பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
மக்களவைத் தேர்தலில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடத்த மதிமுகவை திமுக அழைத்துள்ளது. தொகுதிப் பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நாளை அதாவது பிப்ரவரி 4ஆம் தேதி காலை 11 மணிக்கு அண்ணா அறிவாலயத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.
மக்களவைத் தேர்தல் தொகுதிப் பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த திமுகவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பேச்சுவார்த்தை திமுக தலைமை அலுவலகமான அண்ணா அலுவலகத்தில் நடைபெற்று வருகின்றது.
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே தமிழ்நாடு அரசு பேருந்தும் கேரள அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதி பலர் படுகாயம் அடைந்துள்ளனர். காயம் அடைந்தவர்களை மீட்கும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். விபத்தில் படுகாயம் அடைந்தவர்கள் அருகில் இருக்கும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Breaking News Live: தமிழக உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு. நாளை முதல் வரும் 9ஆம் தேதி வரை தமிழகம், புதுவை, காரைக்காலில் வறண்ட வானிலையே நிலவும் என வானிலை மையம் அறிவிப்பு
தமிழ்நாடு வெள்ள பாதிப்பு நிவாரணம் வழங்காத மத்திய அரசை கண்டித்து பிப்ரவரி 8 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என திமுக எம்.பி., டி.ஆர்.பாலு அறிவித்துள்ளார். நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு கருஞ்சட்டை அணிந்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்து சமய அறநிலையத்துறை செயல்பாட்டில் திருப்தியில்லை என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது.
முன்னாள் துணை பிரதமர் எல்.கே.அத்வானிக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
சென்னையில் சி.எம்.டி.ஏ. மற்றும் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினர் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டில் சோதனை நடத்த போலீசார் வருகை தந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சம்பா பயிர் சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து இன்று 2 டி.எம்.சி தண்ணீர் திறக்கப்படுகிறது. திருவாரூரில் 4,715 ஏக்கருக்கும், நாகையில் 18,058 ஏக்கரும் தண்ணீர் பற்றாக்குறையால் சம்பா நெல் பயிர்கள் பாதிக்கப்பட்ட நிலையில், டெல்டா மாவட்டங்களில் சம்பா பயிர்களை காத்திட மேட்டூர் அணையில் இருந்து நீர் திறக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
புதிய அரசியல் கட்சி ஆரம்பித்துள்ள விஜய்க்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார். விஜய் எடுத்துள்ள முடிவுக்கு பாராட்டுகளும், 2026ல் தேர்தலில் பங்கேற்கும் முடிவுக்கு வாழ்த்துகளும் தெரிவித்துள்ளார் கமல்ஹாசன்.
ராஜஸ்தான் முன்னாள் முதலமைச்சர் அசோக் கெலாட்டுக்கு கொரோனா, பன்றிக்காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, ஜெய்ப்பூரில் உள்ள மருத்துவமனையில் அசோக் கெலாட் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்தநிலையில், அசோக் கெலாய் உடல்நிலை சீராக உள்ளது. அவர் மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் உள்ளார் என்று மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் திமுக தொகுதிப் பங்கீட்டுக் குழு இன்று ஆலோசனை நடத்த உள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தொகுதி பங்கீட்டுக் குழு இன்று பிற்பகல் ஆலோசனை நடத்த உள்ளது.
மகாராஷ்டிரா முதலமைச்சர் ஹிண்டே கட்சி நிர்வாகியை கூட்டணி கட்சியாக பாஜக எம்.எல்.ஏ சுட்டதால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில், துப்பாக்கியால் சுடப்பட்ட முன்னாள் கவுன்சிலரின் ஆதரவாளர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றன.
அல்காஸ் நகர் காவல் நிலைய ஆய்வாளர் அறைக்குள் நடத்த பேச்சுவார்த்தையின்போதே பாஜக எம்.எல்.ஏ துப்பாக்கிச்சூடு நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த மகேஷ் கெய்க்வாட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Background
பெட்ரோல், டீசல்:
உலகமே எரிபொருளை மையமாகக் கொண்டு தான் இயங்கி வரும் வேளையில் முழுமையான மின்சார சக்தியில் செயல்படும் அளவிற்கு உலக நாடுகள் தங்களை உயர்த்திக் கொள்ள முயற்சித்து வருகின்றன. அந்த வரிசையில் இந்தியாவும் முழுமையாகக் களம் கண்டுள்ளது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் சம்பந்தமான பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன. அதேசமயம் வெகு விரைவில் முற்றிலுமான மின்மயமான நாட்டினை நோக்கி இந்தியா தன்னை நகர்த்திக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவை பொறுத்தவரை 80% வாகனங்கள் பெட்ரோல், டீசல் ஆகியவற்றில் இயங்கி வருகிறது. இதன் காரணமாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு மக்களின் அன்றாட வாழ்க்கையில் பெரும் மாற்றத்தினை ஏற்படுத்துகிறது. அதேபோல் எரிபொருட்களின் விலை உயர்வு என்பது அன்றாட அத்தியாவசியப் பொருட்களின் மீதான விலை உயர்வில் மிகப்பெரிய அளவில் பிரதிபலிக்கும். எனவே சாமானிய மக்களும் எரிபொருள் விலை நிலவரத்தை ஒவ்வொரு நாளும் கண்காணித்து வருகிறார்கள்.
இன்றைய விலை நிலவரம்
இந்நிலையில் சென்னையில் இன்று (பிப்ரவரி 3ஆம் தேதி) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63 க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை நிர்ணயமானது தொடர்ந்து மாற்றமின்றி 623வது நாளாக தொடர்கிறது. அதாவது, விலை மாற்றமின்றி பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்படுவது 20 மாதங்களை பூர்த்தி செய்துள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். முன்னதாக கடந்த 2020, 2021 ஆம் ஆண்டுகளில் பரவிய கொரோனா வைரஸ் தொற்றால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் மிகப்பெரிய பொருளாதார பாதிப்பை சந்தித்தனர்.
அப்போது கலால் வரி குறைப்பால் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை 6 ரூபாய்க்கும் குறைந்தது. இத்தகைய சூழலில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி 16 மாதங்களை கடந்துள்ளது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேசிய உயிரி எரிபொருள் கொள்கை
கடந்த 2018ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்த தேசிய உயிரி எரிபொருள் கொள்கை 2030ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனாலைக் கலந்து விற்க இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், அந்த இலக்கு தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக 2025 ஆம் ஆண்டு என மாற்றியமைக்கப்பட்டது.
இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, ”இருபது சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் டிசம்பர் அல்லது ஜனவரி முதல் நாட்டில் கிடைக்கும்” எனத்தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எத்தனால் உற்பத்தியை நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். ஏப்ரல் 2023க்கு முன்னதாக டிசம்பர் அல்லது ஜனவரியில் 20 சதவீதம் கலப்பு எரிபொருள் சந்தைக்கு வரும் என்று நான் நம்புகிறேன்" என் கூறினார்.
நெகிழ்வான எரிபொருள் வாகனங்கள் (கலப்பு எரிபொருளில் இயங்கும் வாகனங்கள்) கிடைக்கும் பிரேசிலை உதாரணமாக மேற்கோள் காட்டி பேசிய ஹர்தீப் சிங் பூரி, "நுகர்வோர் விருப்பப்படி எத்தனால் அல்லது பெட்ரோலை எடுத்துக் கொள்ளலாம். இது அரசாங்கத்தின் இறுதி இலக்காக இருக்கும்.
இருப்பினும், அந்த நிலையை அடைய, சில தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. அதற்கான, பணிகள் நடந்து வருகின்றன. எத்தனால் கலப்படம் தொடர்பாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுடன் ஒரு முக்கிய சந்திப்பை நடத்த உள்ளோம். பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலப்பதை அடைவதற்கான இலக்கு தேதியை 2025ஆம் ஆண்டுக்கு ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியா முன்னெடுத்துள்ளது.
பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதற்கு, நமது நாட்டிற்கு 1,000 கோடி லிட்டர் கொள்ளளவு தேவைப்படுகிறது. 450 கோடி லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 400 கோடி லிட்டருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 20 சதவிகித கலப்பிற்கான போதுமான எத்தனால் கைவசம் உள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து பெட்ரோலிலும் 20 சதவீதம் எத்தனால் இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -