Breaking Tamil LIVE: ஜம்மு காஷ்மீர் பூஞ்ச் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல்!
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் காண, ஏபிபி இணைய செய்தி தளத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள்
புல்வாமா தாக்குதலை போன்று ஜம்மு மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில், இந்திய விமான படையை சேர்ந்த 5 வீரர்கள் காயம் அடைந்துள்ளனர்.
காங்கிரஸ் மாவட்ட தலைவர் மரண வழக்கு குறித்து விசாரிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
டெல்லி முன்னாள் காங்கிரஸ் தலைவர் அரவிந்தர்சிங் லவ்லி பா.ஜ.க.வில் இணைந்தார்.
கர்நாடக ஆபாச வீடியோ வழக்கில், பிரஜ்வல் மற்றும் அவரது தந்தை ரேவண்ணா மீது பாலியல் வன்கொடுமை வழக்கு தொடரப்பட்ட நிலையில், இன்று மாலை சிபிஐ முன் ரேவண்ணா ஆஜராக உள்ளதாக, அவரது வழக்கறிஞர் தகவல் தெரிவித்துள்ளார்.
ரேவண்ணாவால் பாதிக்கப்பட்ட பெண்களை ரேவண்ணா வீட்டிற்கு நேரில் அழைத்துச் சென்று புலனாய்வுத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுமட்டும் இல்லாமல் ரேவண்ணா வீட்டில் இருந்த லேப்டாப் உள்ளிட்டவற்றை புலனாய்வுத்துறையினர் கைப்பற்றினர்.
அமேதி தோல்விக்கு பயந்து வயநாடு போனார்.. வயநாடு தோற்கும் என பயந்து ரேபரேலியில் நிற்கிறார் ராகுல் - அமித்ஷா
சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு 104 டிகிரி வரை வெயில் சுட்டெரிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், தேனி, திண்டுக்கல், கோவை, திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
ராமநாதபுரம் அருகே இலங்கைக்கு கடத்துவதற்காக கொண்டு செல்லப்பட்ட 2.50 கோடி மதிப்புள்ள வலி நிவாரண மாத்திரைகளை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், ஒருவரை கைது செய்து ஒருங்கிணைந்த குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெங்களூரில் இருந்து புறப்பட்டு சென்னை மற்றும் பெரம்பூர் வரும் ரயில்கள் 2 மணி நேரத்திற்கு மேல் நேற்று தாமதமாக வந்துள்ளது. ரயில் கிளம்பும் நேரமும் பயணிக்கும் நேரமும் தொடர்ந்து தாமதமாகி வருகிறது. சிக்னல் உள்ளிட்ட தொழில்நுட்ப பிரச்னையால் இத்தகைய தாமதம் கடந்த 4,5 நாட்களாக ஏற்பட்டுள்ளதாக ரயில்வே தரப்பு தெரிவித்துள்ளது.
கொடைக்கானலில் இன்று முதல் மேல்மலை கிராமங்களுக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. காட்டுத் தீ ஏற்பட்டமையால் கடந்த 3 நாட்களாக மேல்மலை கிராமங்களுக்கு செல்ல வனத்துறை தடை விதித்திருந்தது. தற்போது மன்னவலூட் சுற்றுலா தலம், மன்னவலூர் ஆட்டுப் பண்ணை, கூடக்கால் ஏரிக்கு செல்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 30ம் தேதி சத்தியமங்கலம் - மேட்டுப்பாளையம் சாலையில் இரு கார்கள் மோதிக்கொண்ட விபத்தில், சிறுமுகையைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு விபத்தை ஏற்படுத்தியதாக மற்றொரு காரை ஓட்டி வந்த கல்லூரி மாணவி அக்ஷராவை போலீசார் கைது செய்த நிலையில், இன்று சத்தியமங்கலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, ஜாமினில் விடுவிக்கப்பட்டார்
காவல் துறை அதிகாரிகள் குறித்தும், பெண் காவலர்கள் குறித்தும் அவதூறாக சமூகவலைதளங்களில் பேசிய விவகாரத்தில் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டுள்ளார். தேனியில் இருந்த சவுக்கு சங்கரை கைது செய்த கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் அவரை கோவை அழைத்து வருகின்றனர்.
தமிழ்நாட்டில் இன்று கத்திரி வெயில் தொடங்கியுள்ள நிலையில் மே 6 ஆம் தேதி வரை வெப்ப அலை வீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேசமயம் அடுத்த 5 தினங்களுக்கு வெப்பச்சலன மழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் பெட்ரோல், டீசல் விலை கடந்த மார்ச் மாதம் மாற்றம் செய்யப்பட்ட நிலையில், தொடர்ச்சியாக ஒரே விலையில் 50 நாட்களை கடந்துள்ளது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.100.75க்கும், டீசல் ரூ. 92.34க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கொடைக்கானல் மேல் மலை கிராமங்களுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி வழங்கியது வனத்துறை - காட்டுத்தீ காரணமாக கடந்த 3 நாட்களாக செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. தீ பெருமளவு கட்டுப்பட்டதை தொடர்ந்து அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
Background
- தமிழ்நாட்டில் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் இன்று தொடங்குகிறது. ஏற்கனவே பருவநிலை மாறுபாடு காரணமாக வழக்கத்தை விட வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இன்று தொடங்கும் அக்னி நட்சத்திரம் மே 28 ஆம் தேதி வரை இருக்கும். வழக்கமாக இந்த நாட்களில் குறைந்தது 100 டிகிரி அளவில் வெயில் தாக்கம் இருக்கும். ஆனால் நடப்பாண்டு ஏப்ரல் மாதம் தொடக்கத்தில் இருந்தே 100 டிகிரி வெயில் கொளுத்தி வருகிறது. எனவே பொதுமக்கள் அவசிய தேவையின்றி வெளியே வர வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை வெளியே வர வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுளது. நீராகாரம், குளிர்ந்த உணவுகளை எடுத்துக் கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
- ஐபிஎல் தொடரில் இன்றைய ஆட்டத்தில் பெங்களூரு - குஜராத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றது. இந்த ஆட்டம் பெங்களூரு அணி பிளே ஆஃப் வாய்ப்பில் நீடிக்குமா அல்லது வெளியேறுமா என்பதை நிர்ணயிக்கும் முக்கியமான போட்டியாகும். முன்னதாக நேற்று கொல்கத்தா அணியிடம் தோற்ற்ற மும்பை அணி பிளே ஆஃப் வாய்ப்பை இழந்ததால் ரசிகர்கள் சோகமடைந்தனர்.
- கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு இலவச இருதய பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என அகிலேஷ் யாதவ் கோரிக்கை விடுத்துள்ளார். முன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன் கோவிஷீல்ட் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு ஒரு சில பக்க விளைவுகள் ஏற்பட அதன் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்திருந்தது. இது மக்களிடையே மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்தியது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -