Breaking News LIVE: திருவள்ளூர் பெயிண்ட் தொழிற்சாலையில் தீ விபத்து - ஒருவர் பலி
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் காண, ஏபிபி இணைய செய்தி தளத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
Breaking News LIVE: திருவள்ளூர் அடுத்த காக்களூரில் பெயிண்ட் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
வரும் ஜூன் 2 ஆம் தேதி தமிழ்நாட்டில் உள்ள 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மின்தடையில்லாத மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் மின் துறை பல முனைப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
இளநிலை படிப்புகளுக்கு விண்ணபிக்க இன்று கடைசி நாள்
நீட் அல்லாத இளநிலை படிப்புகளுக்கு இதுவரை 16,459 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.விண்ணபிக்கும் காலம்
இன்றுடன் நிறைவு.
விடுபட்டவர்கள் www.centacpuducherry.in என்ற இணைய முகவரி விண்ணப்பிக்க அறிவுறுத்தல்.
தமிழ்நாட்டுக்கு இந்த ஆண்டின் முதல் 5 மாதங்களில் ரூ. 7 லட்சம் கோடி முதலீடு கிடைத்துள்ளது. இதையடுத்து, ரூ. 7 லட்சம் கோடி முதலீடுகள் மூலம் 36 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது.
கூகுள் தாய் நிறுவனமான ஆல்பாபெட் பிக்சல் போன், டிரோன் தயாரிக்க கடந்த வாரம் தமிழ்நாட்டில் நுழைந்தது. டெஸ்லா ரைவல் வின்பாஸ்ட், டாடா பவர், ஃபாக்ஸ்கான், டாடா எலக்ட்ரானிக்ஸ், பெகட்ரான் ஆகியவை தமிழ்நாட்டில் முதலீடு செய்துள்ளது.
‘என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்’ என்ற பெருமையைப் பெற்ற கூடுதல் காவல் கண்காணிப்பாளரும், 2004ல் வீரப்பனை சுட்டுக் கொன்ற பெருமைக்குரிய காவலருமான எஸ்.வெள்ளதுரை, ஓய்வு பெறுவதற்கு ஒரு நாள் முன்னதாகவே சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை மாதவரத்தில் சட்டவிரோதமாக பாட்டில்களில் தாய்ப்பால் விற்பனை செய்த கடைக்கு சீல் வைத்து சுகாதாரத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். 50 பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டது.
இளநிலை படிப்புகளுக்கு விண்ணபிக்க இன்று கடைசி நாள்
நீட் அல்லாத இளநிலை படிப்புகளுக்கு இதுவரை 16,459 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். விண்ணபிக்கும் காலம்
இன்றுடன் நிறைவு.
விடுப்பட்டவர்கள் www.centacpuducherry.in என்ற இணைய முகவரி விண்ணபிக்க அறிவுறுத்தல்.
கர்நாடகாவில் நாளை முதல் 4 நாட்கள் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், கேரளாவில் இன்று முதல் 5 நாட்கள் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கன்னியாகுமரியில் பிரதமர் மோடி தியானம் மேற்கொண்டுள்ள விவேகானந்தர் பாறைக்கு செல்ல பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அங்கு செல்லும் சுற்றுலா பயணிகள் செல்போன் மற்றும் உடைமைகள் எடுத்து செல்ல அனுமதியில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வைகை அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 153 கனஅடியில் இருந்து 14 கனஅடியாக குறைந்துள்ளாது. நீர் வரத்து குறைவால் நீர்மட்டமும் குறைந்துள்ளது.
Background
மக்களவை தேர்தல் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தமிழ்நாட்டிற்கு வருகை தந்துள்ளார் பிரதமர் மோடி. இந்தியாவை அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஆளப்போவது யார் என்பதை தீர்மானிக்கும் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி தொடங்கிய தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது.
நாளை கடைசிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஏற்கனவே, 6 கட்ட வாக்குப்பதிவில் நாடு முழுவதும் உள்ள 486 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. மக்களவை தேர்தல் பிரச்சாரம் நேற்று ஓய்ந்தது. இந்த நிலையில், கன்னியாகுமரி விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் உள்ள தியான மண்டபத்தில் தியானம் செய்வதற்காக பிரதமர் மோடி நேற்றுகன்னியாகுமரி வந்தடைந்தார். முன்னதாக, தேசிய தலைநகர் டெல்லியில் இருந்து விமானம் மூலம் திருவனந்தபுரத்துக்கு பிரதமர் மோடி வந்தார்.
கார் மூலம் மாலை 5.15 மணிக்கு கன்னியாகுமரியில் உள்ள பகவதி அம்மன் கோவிலை சென்ற பிரதமர், அங்கு சாமி தரிசனம் செய்தார். பிரதமர் மோடி தங்கியிருந்து தியானம் மேற்கொள்ள இருப்பதை முன்னிட்டு, கன்னியாகுமரியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நேற்று மாலை 6 மணிக்கு தியானத்தை தொடங்கிய அவர், நாளை மதியம் தியானத்தை முடித்து வைக்கிறார். அதன்பின் டெல்லிக்கு புறப்பட்டுச் செல்கிறார்.
இந்நிலையில் இந்தியா முழுவதும் வெப்பநிலை கடுமையாக உயரத்தொடங்கியுள்ளது. தலைநகர் டெல்லியில் கடந்த 2 நாட்களாக 50 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகி வருகிறது. இதனால் டெல்லி அரசாங்கம் வெப்பநிலைக்கான எச்சரிக்கை கொடுத்துள்ளது. அதேபோல் நேற்று பீகாரில் வெப்ப அலை தாக்கம் காரணமாக, 16 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டிலும் 42 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகி வருகிறது. நாட்டில் நடக்கும் முக்கிய சம்பவங்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளலாம்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -