Breaking News LIVE: மேற்கு வங்கத்தில்  நடந்த ஊழலில் இழந்த ரூ. 3,000 கோடியை திரும்பக் கொண்டு வருவேன் - பிரதமர் மோடி

Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் காண, ஏபிபி இணைய செய்தி தளத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.

பேச்சி ஆவுடையப்பன் Last Updated: 28 May 2024 08:45 PM
PM MODI Exclusive: எதிர்க்கட்சி தலைவர்களில் உங்களுக்கு யாரை பிடிக்கும்?

 


பிரதமர் மோடி பதில் தெரிவித்ததாவது, எதிர்க்கட்சி தலைவர்களுடன் நல்ல உறவு உள்ளது. சோனியா காந்தியின் உடல்நலம் குறித்தான  கவலை எழுந்த போது ஆறுதல் தெரிவித்தேன். மேலும் 2019 தேர்தலின் போது முன்னாள் காங்கிரஸ் தலைவர் பிரணாப் முகர்ஜியை பலமுறை அணுகியதாகவும் பிர்தமர் மோடி குறிப்பிடுகிறார்.

மேற்கு வங்கத்தில்  நடந்த ஊழலில் இழந்த ரூ. 3,000 கோடியை திரும்பக் கொண்டு வருவேன் - பிரதமர் மோடி

இப்பேட்டியில் மூன்றாவது முறையாக அமோக பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சிக்கு வருவோம் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தியிருக்கிறார். மேலும், தனது நிர்வாக பாணி குறித்தும் , அவரது அணி குறித்தும், எதிர்க்கட்சிகள் குறித்தும் வெளிப்படையாக பேசியிருக்கிறார். மேலும் பிரம்மோஸ் ஏவுகணைகள் ஏற்றுமதியில் ஏற்பட்ட தாமதத்திற்கான காரணங்கள் குறித்தும், மேற்கு வங்கத்தில்  நடந்த ஊழலில் இழந்த ரூ. 3,000 கோடியை" திரும்பக் கொண்டு வருவேன் என்ற வாக்குறுதி குறித்தும் பிரதமர் மோடி பேசியிருக்கிறார்.

கத்திரி வெயிலின் கடைசி நாளின் சென்னையில் கொளுத்திய வெயில்

தமிழ்நாட்டில் அதிகபட்சமாக சென்னை மீனம்பாக்கத்தில்  106 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் கொளுத்தியது. நடப்பாண்டில் சென்னையில் அதிகபட்ச அளவாக வெயில் பதிவாகியுள்ளது.இதனால் மக்கள் மிகவும் அவதி அடைந்தனர்.

Breaking News LIVE: சுமத்ரா தீவுக்கு அருகே நிலநடுக்கம்

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவுக்கு அருகே இன்று மாலை 5.22 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 5.5 என்ற அளவு பதிவாகியுள்ளதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. 





முல்லை பெரியாற்றின் குறுக்கே அணை கட்ட அனுமதிக்க கூடாது - பி.ஆர். பாண்டியன்

கேரள அரசு முல்லைப் பெரியாற்றின் அருகே புதிய அணை கட்ட மத்திய அரசு அனுமதி அளிக்கக் கூடாது என தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்க ஒருகிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர். பாண்டியன் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார். 

கலைஞரின் கனவு இல்லம் திட்டம் - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

தமிழ்நாடு முழுவதும் கலைஞர் கனவு இல்லம் திட்டப் பணிகளுக்கு ஒரு லட்சம் வீடுகள் கட்ட தமிழ்நாடு அரசு ஏற்கனவே ரூபாய் 3,100 கோடியை ஒதுக்கி இருந்தது. இந்நிலையில், அந்த வீடுகள் எவ்வாறு கட்டப்படவேண்டும் என்ற வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, வீடு சமையல் அறையுடன் 360 சதுர அடியில் கட்டப்படவேண்டும். வீடு செங்கல், இண்டர்லாக், ஏசிசி பிளாக் போன்றவைகளால் கட்டப்படவேண்டும் உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது. 

விவேகானந்தர் பாறையில் இரவு, பகலாக தியானம் செய்ய பிரதமர் மோடி ப்ளான்

கன்னியாகுமரி விவேகானந்தர் பாறையில் இரவு, பகலாக தியானம் செய்ய பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார்.

TN Bus Transport : இலவச பயணம் மேற்கொள்ளலாம்: போக்குவரத்து துறை
புதிய பஸ் பாஸ் வழங்கும் வரை பழைய பஸ் பாஸை காட்டி மாணவர்கள் பேருந்துகளில் இலவச பயணம் மேற்கொள்ளலாம்: போக்குவரத்து துறை
நாட்டில் சர்வாதிகார ஆட்சியை நடத்திக்கொண்டிருக்கிறார்கள் - அரவிந்த் கெஜ்ரிவால் பரப்புரை

நடிகர் பஹத் பாசிலுக்கு ஏடிஹெச்டி என்னும் கவனக் குறைபாட்டு பிரச்சனை இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது

கருணை காட்டாமல் இர்ஃபான் மீது சட்ட நடவடிக்கை எடுங்கள் - ஜவாஹிருல்லா, மமக

தவறான முன்னுதாரணமாக இருந்த காரணத்துக்காக, கருணை காட்டாமல் இர்ஃபான் மீது சட்ட நடவடிக்கை எடுங்கள் - ஜவாஹிருல்லா, மமக

ஜூன் 4-ஆம் தேதி, எங்கள் ஆட்சி அமையும் - லாலு பிரசாத் யாதவ்

Breaking News LIVE: ஜாமீனை நீட்டிக்கக்கோரி அரவிந்த் கெஜ்ரிவால் மனு - உத்தவிட நீதிபதிகள் மறுப்பு

மருத்துவ காரணங்களுக்காக ஜாமீனை மேலும் 7 நாட்கள் நீட்டிக்கக்கோரி அரவிந்த் கெஜ்ரிவால் அளித்த மனு மீது உத்தரவிட உச்சநீதிமன்ற நீதிபதிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தலைமை நீதிபதி தான் முடிவெடுப்பார் என தெரிவித்துள்ளனர். ஜூன் 2 ஆம் தேதி அவர் சரணடைய வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Breaking News LIVE: மிசோரம்: கல்குவாரி விபத்தில் 10 பேர் உயிரிழப்பு..!

மிசோரம் மாநிலம் ஜஸ்வாலில் கனமழை காரணமாக கல்குவாரியில் பாறைகள் சரிந்து 10 பேர் உயிரிழந்துள்ளனர். ரெமல் புயல் காரணமாக ஐஸ்வால் மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக கல்குவாரியில் பாறைகள் சரிந்து விபத்து ஏற்பட்டது. இந்த கல்குவாரி விபத்தில் மிசோரத்தை சேர்ந்த 7 தொழிலாளர்கள், மற்ற மாநிலத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர். 


பாறைகள் சரிந்த இடத்தில் சிக்கியிருந்த தொழிலாளர்களின் உடல்கள் மீட்கப்பட்டு வரும் நிலையில், மேலும் பலர் சிக்கியிருக்கலாம் என தகவல் வெளியாகி வருகிறது. 

PM Modi : சிறுபான்மையினரின் மிகப்பெரிய எதிரி காங்கிரஸ் - மோடி

NTR Anniversary : என்.டி.ஆரின் 101வது பிறந்தநாளில், மரியாதை செலுத்திய ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் கல்யாண்ராம் நந்தமுரி

Breaking News LIVE: தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 உயர்வு - தொடர்ந்து அதிகரிப்பதால் மக்கள் கவலை!

தங்கம் விலை கிராமுக்கு ரூ.20ம், சவரனுக்கு ரூ.160ம் அதிகரித்துள்ளது. சென்னையில் 22 கிராம் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.6,740க்கு விற்பனையாகிறது. சவரன் ரூ.53,920க்கு விற்பனௌ செய்யப்படுகிறது. 

உலக பட்டினி தினம்

உலக பட்டினி தினம் விழிப்புணர்வை முன்னிட்டு, ஒரு நாள் மதிய உணவு சேவையகம் 2000 நபர்களுக்கு சமபந்தி விருந்து வழங்கும் விழாவை, சென்னை திருவான்மியூரில் தமிழக வெற்றி கழகம் நடத்துகிறது

Vandalur Zoo : அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா இன்று வழக்கம்போல் செயல்படும் என அறிவிப்பு

Vandalur Zoo : அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா இன்று வழக்கம்போல் செயல்படும் என அறிவிப்பு.


பொதுவாக செவ்வாய்க்கிழமைகளில் வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு விடுமுறை விடப்படும். கோடை விடுமுறைகளின் காரணமாக இன்றும் பூங்கா செயல்படும்

Breaking News LIVE: புதுக்கோட்டையில் பாதிரியார் வீட்டில் 80 சவரன் நகை கொள்ளை

புதுக்கோட்டை மாவட்டம் கணேஷ் நகர் பகுதியில் வசிக்கும் பாதிரியான் ஜான் தேவசகாயம் வீட்டில் 80 சவரன் நகையை கொள்ளையடித்த மர்ம நபர்கள் - வீட்டில் ஆளில்லாத நேரத்தில் இந்த சம்பவம் நடந்ததாகவும், விசாரணை நடைபெற்று வருவதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Mayonnaise Kerala Death : கேரளா: திருச்சூரில் குழிமந்தி சிக்கனை மயோனைஸ் உடன் சாப்பிட்ட பெண் உயிரிழப்பு!

Mayonnaise Kerala Death : கேரளா: திருச்சூரில் குழிமந்தி சிக்கனை மயோனைஸ் உடன் சாப்பிட்ட பெண் உயிரிழந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Breaking News LIVE: தமிழ்நாடு முழுவதும் சிறப்பு வாகன தணிக்கை - ரூ.1.10 கோடி வசூல்

தமிழ்நாடு முழுவதும் போக்குவரத்து போலீசார் நேற்று சிறப்பு வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். இதில் விதிகளை மீறியதாக வாகன ஓட்டிகளிடம் இருந்து ரூ.1.10 கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Background


  • பிரதமர் மோடி வரும் 30ஆம் தேதி கன்னியாகுமரி வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கான பாதுகாப்பு பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மக்களவை தேர்தலுக்கான கடைசி கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1 ஆம் தேதி நடக்கவுள்ள நிலையில் மே 30 ல் இருந்து 3 நாட்கள் விவேகானந்தர் மண்டபத்தில் பிரதமர் மோடி தியானம் மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. அதன்பின்னர் திருவனந்தபுரம் விமானநிலையம் சென்று, அங்கிருந்து டெல்லிக்கு புறப்பட்டுச் செல்கின்றார்.இந்த பயணம் முழுக்க முழுக்க பிரதமரின் தனிப்பட்ட பயணமாக அமையவுள்ளது. 

  • உலகப்புகழ்பெற்ற சபரிமலை கோயில் கேரள மாநிலம் பத்தினம்திட்டாவில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்வது வழக்கம். இதனிடையே பக்தர்களுக்கான திட்டங்களை அமல்படுத்துவதில் திருவாங்கூர் தேவஸ்தானம் மிகுந்த கவனம் கொண்டுள்ளது. அந்த வகையில் பக்தர்களுக்கு விரைவில் காப்பீட்டு திட்டம் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான முன்பதிவு செய்யும்போது பக்தர்களிடம் இருந்து ரூ.10 கட்டணமாக வசூல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரின் முதல் சுற்றிலேயே தோல்வியுற்று, ரஃபேல் நடால் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். 14 முறை சாம்பியனான அவரின் தோல்வி ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் விரைவில் நடால் ஓய்வு பெறப்போகிறார் என தகவலும் வெளியாகியுள்ளது. 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.