Lok Sabha Election 5th Phase LIVE : நாடு முழுவதும் 5ம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு - ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் காண, ஏபிபி இணைய செய்தி தளத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
நாடு முழுவதும் 49 தொகுதிகளில் நடைபெற்ற 5வது கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு பெற்றது.
ஈரான் அதிபர் மறைவு இப்ராஹிம் ரைசி மறைவையொட்டி, நாளை இந்தியாவில் உள்ள அரசு கட்டடங்களில் உள்ள தேசிய கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்க விட முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
உதகையில் மலர் கண்காட்சி வரும் 26ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
1 மணி நிலவரப்படி, 5ஆம் கட்ட வாக்குப்பதிவில் 36.73 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தகவல் வெளியிட்டுள்ளது.
இமாச்சல பிரதேசம்: இன்று லாஹவுல் & ஸ்பிதி மாவட்டத்தின் காசாவிற்கு வருகை தந்த பாஜக மண்டி வேட்பாளர் கங்கனா ரணாவத்துக்கு எதிராக காங்கிரஸ் தொண்டர்கள் கருப்புக் கொடி காட்டி முழக்கங்களை எழுப்பினர்.
கங்கனா ரனாவத் மற்றும் முன்னாள் முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் இன்று காசாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றினர்.
ஐந்தாம் கட்ட தேர்தலில் வாக்களிக்க நடிகை பிரியா தத் தனது குடும்பத்தினருடன் மும்பையில் உள்ள வாக்குச்சாவடிக்கு வந்தார்.
Lok Sabha Election 5th Phase LIVE : 5-ஆம் கட்ட வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம் - 23.66% ஆக பதிவானது. மும்பை உள்ளிட்ட நகர்ப்பகுதிகளில் வாக்கு சதவிகிதம் குறைந்ததாக பதிவாகியுள்ளது. மேற்கு வங்கம் - 32.70% , பீகார் - 21.11% ஜம்மு காஷ்மீர் - 21.37%, ஜார்கண்ட் - 26.18% , ஒடிசா - 21.07% , உத்தர பிரதேசம்- 27.76%
Lok Sabha Election 5th Phase LIVE : 5-ஆம் கட்ட வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம் - 23.66% ஆக பதிவானது
5-ஆம் கட்ட வாக்குப்பதிவு நிலவரமானது காலை 9 மணி நிலவரப்படி, 10 சதவிகிதமாக இருந்த நிலையில், 11 மணி நிலவரம் - 23.66% ஆக பதிவானது
5th Phase Lok sabha election vote percentage : 5-ஆம் கட்ட வாக்குப்பதிவு: 9 மணி நிலவரம் - 10.28% ஆக பதிவானது
இந்த விபத்தில் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி மற்றும் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியன் உட்பட ஹெலிகாப்டரில் இருந்த பயணிகள் அனைவரும் உயிரிழந்ததாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன
Iran President Ibrahim Raisi Dies : ஹெலிகாப்டர் பாகங்கள் கண்டெடுப்பு.. ஈரான் அதிபர் விபத்தில் உயிரிழப்பு..
ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்துவிட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அண்டை நாடான அஜர்பைஜானில் ஒரு விழாவில் கலந்துகொண்டு விட்டு, டெக்ரானுக்கு திரும்பும் வேளையில் இவ்விபத்து நிகழ்ந்துள்ளது.
தமிழ்நாட்டில் அதி கன மழைக்கான ரெட் அலெர்ட்ம் விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, தென் மாவட்டங்களான தேனி, மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களிலும், டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களிலும் மிக கன மழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் காலை 10 மணிக்குள் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி சென்னை , திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் காலை 10 மணிக்குள் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேசம்: ஃப்ரூக்காபாத் தொகுதியில் சிறுவன் 8 முறை வாக்களித்த விவகாரத்தில் மறுவாக்குப்பதிவுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஃப்ரூக்காபாத் தொகுதியில் நடந்த தேர்தலில் பாஜகவுக்கு 8 முறை சிறுவன் வாக்களித்த வீடியோ வெளியானது.
நாடாளுமன்றத் தேர்தலுடன் சேர்த்து ஒடிசா சட்டமன்றத்துக்கும் தேர்தல் நடைபெறுகிறது. ஒடிசாவில் 2வது கட்டமாக 35 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஒடிசாவில் மொத்தம் உள்ள 147 தொகுதிகளில் முதல் கட்டமாக 28 தொகுதிகளுக்கு கடந்த 13ம் தேதி வாக்குப்பதிவு நடந்தது.
ஈரான் அதிபருக்காக உலகம் முழுவதும் பல இடங்களில் பிரார்த்தனை நடந்து வருகிறது. இரவு முழுவதும் தேடலை முடுக்கிவிட Night Vision ஹெலிகாப்டர்களை அனுப்பி உள்ளது துருக்கி அரசாங்கம்.
மேலும், பிரதமரை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈராக் மற்றும் அஜர்பைஜான் உள்ளிட்ட நாடுகளும் மீட்பு பணியில் இறங்கி உள்ளன. இதுவரை 40 மீட்பு குழுக்கள், 8 ஆம்புலன்ஸ்கள் ஹெலிகாப்டர் விழுந்ததாக கருதப்படும் இடத்தில் முகாமிட்டு தேடி வருகின்றனர். மேலும், செஞ்சிலுவை சங்கம் சம்பவ இடத்தில் மீட்பு பணியை தலைமையேற்று நடத்தி வருகிறது.
நேபாள பிரதமர் பிரசண்டா தலைமையிலான அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. பிரதமர் பிரசண்டா தலைமையிலான நேபாள கம்யூனிஸ்ட் கட்சி அரசில் அங்கம் வகித்த ஜேஎஸ்பி ஆதரவை திரும்ப பெற்றது. 30 நாட்களில் பிரதமர் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற வேண்டும் என்ற நிலையில் இன்று வாக்கெடுப்பு நடைபெறுகிறது.
Background
- நாடாளுமன்ற மக்களவை தேர்தலின் ஐந்தாம் கட்டத்தில், 6 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் வாக்குப்பதிவு நடைபெறுவதை ஒட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ராகுல் காந்தி போட்டியிடும் ரேபரேலி, ராஜ்நாத் சிங் போட்டியிடும் லக்னோ தொகுதிகளின் வாக்குப்பதிவு தொடங்கியது. மும்பை வடக்கில் பியூஸ் கோயல், அமேதி தொகுதியில் ஸ்மிருதி இரானி உள்ளிட்ட முக்கிய வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
- நாடாளுமன்றத் தேர்தலுடன் சேர்த்து ஒடிசா சட்டமன்றத்துக்கும் தேர்தல் நடைபெறுகிறது. ஒடிசாவில் 2வது கட்டமாக 35 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஒடிசாவில் மொத்தம் உள்ள 147 தொகுதிகளில் முதல் கட்டமாக 28 தொகுதிகளுக்கு கடந்த 13ம் தேதி வாக்குப்பதிவு நடந்தது.
- ஜார்க்கண்ட் மாநிலம் கண்டே சட்டசபை தொகுதிக்கும் இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
- ஈரானில் அதிபர் இப்ராஹிம் ரைசி பயணித்த ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது. தற்போது வரை அவரது நிலைமை என்னவென்று தெரியவில்லை.
ஈரான் அதிபருக்காக உலகம் முழுவதும் பல இடங்களில் பிரார்த்தனை நடந்து வருகிறது. இரவு முழுவதும் தேடலை முடுக்கிவிட Night Vision ஹெலிகாப்டர்களை அனுப்பி உள்ளது துருக்கி அரசாங்கம்.
மேலும், பிரதமரை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈராக் மற்றும் அஜர்பைஜான் உள்ளிட்ட நாடுகளும் மீட்பு பணியில் இறங்கி உள்ளன. இதுவரை 40 மீட்பு குழுக்கள், 8 ஆம்புலன்ஸ்கள் ஹெலிகாப்டர் விழுந்ததாக கருதப்படும் இடத்தில் முகாமிட்டு தேடி வருகின்றனர். மேலும், செஞ்சிலுவை சங்கம் சம்பவ இடத்தில் மீட்பு பணியை தலைமையேற்று நடத்தி வருகிறது.
- சென்னையில் நடைபெறும் ஐபிஎல் இறுதிப் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடங்குகிறது. ரூபே கார்டுகள் வைத்திருப்பவர்களுக்கு இன்று மாலை 6 மணிக்கு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
- ஐபிஎல் 2024ன் நேற்றைய கடைசி லீக் போட்டியில் மோத இருந்த கொல்கத்தா - ராஜஸ்தான் இடையிலான ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -