Breaking News LIVE: 34 மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி வரை மழை இருக்கும் - வானிலை மையம்
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் காண, ஏபிபி இணைய செய்தி தளத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள்
தமிழ்நாட்டில் உள்ள 34 மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
திருச்செந்தூர் கோவில் வளாகத்தில் அசைவ உணவு சமைக்க தடை. உலகப்புகழ்பெற்ற திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வைகாசி விசாகத்தையொட்டி விரதம் இருக்கும் பக்தர்கள் கோவில் வளாகத்தில் அசைவ உணவுகளை சமைக்க தடை விதித்து கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
சேலத்தில் உள்ள எடப்பாடியில் கடந்த ஒரு மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்து வருகிறது.
மதுரையில் நாளை அரசு சித்திரை பொருட்காட்சி நடைபெற உள்ளது.
முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது முன்னாள் மனைவி பீலா வெங்கடேஷ் புகார் அளித்தையடுத்து, 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
காஞ்சிபுரம், திருவள்ளூர், தருமபுரி புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 30வது கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், சென்னையில் பல்வேறு இடங்களில் லேசான மழை பெய்து வருகிறது. ஆயிரம் விளக்கு, தேனாம்பேட்டை, சைதாப்பேட்டை, சின்னமலை, கிண்டி, அண்ணா சாலை ஆகிய பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
பட்டா மாறுதலுக்கு லஞ்சம் கேட்ட வி.ஏ.ஓ சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் அருகே பட்டா மாறுதலுக்கு லஞ்சம் கேட்ட கிராம நிர்வாக அலுவலர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். பட்டா மாறுதலுக்கு செல்வகாந்தன் என்பவரிடம் பரணி புதூர் வி.ஏ.ஓ கிரண்ராஜ் ரூ.5000 லஞ்சம் கேட்டதாக வந்த புகாரையடுத்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
விழுப்புரம் திரு.வி.க சாலையில் உள்ள பத்திரப்பதிவுத்துறை இணை சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை. இதில் இணை சார் பதிவாளர் தையல் நாயகி லஞ்சம் வாங்கும் போது கையும் களவுமாக சிக்கினார்.
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் நாளை கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி தொடங்க உள்ளது. இதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் ஏற்காட்டில் குவிந்து வருகின்றனர். இந்த நிலையில், ஏற்காட்டில் உள்ள உணவகங்களில் சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
ஒமைக்ரான் வகை கொரோனா தொற்றின் புதிய வகை கே.பி. 2 சிங்கப்பூரில்தான் அதிகம் பதிவாகி வருகிறது. சிங்கப்பூரில் பரவி வரும் கே.பி. 2 புதிய கொரோனா வைரஸ் குறித்து தமிழ்நாட்டில் யாரும் அச்சப்பட தேவையில்லை என பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
Rain Death Toll: தொடர் கனமழை: 11 பேர் உயிரிழந்த சோகம் - முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்தும் பேரிடர் மேலாண்மை..
குழந்தையின் பாலினத்தை வெளியிட்ட விவகாரத்தில் யூடியூபர் இர்ஃபான் மீது நடவடிக்கை எடுக்க சுகாதாரத்துறை, காவல்துறையிடம் பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
தமிழ்நாட்டில் கோடை மழை இன்று காலை வரை இயல்பை விட 9 சதவீதம் கூடுதலாக பெய்துள்ளது. மார்ச் 1 முதல் இன்று வரை வழக்கமாக கோடை மழை 105.5 மி.மீ பதிவாகும் நிலையில் இன்று காலை வரை 114.7 மி.மீ பதிவாகியுள்ளது.
கோவை சாய்பாபா காலனியில் உள்ள தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் இருவர் வீட்டில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றன. பெங்களூரு ராமேஸ்வரம் ஹோட்டல் குண்டு வெடிப்பு தொடர்பாக மருத்துவர்கள் ஜாபர் இக்பால், நயன் சாதிக் வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது.
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 320 குறைந்துள்ளது. இதன் காரணமாக, ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ. 6,860க்கும், சவரன் ரூ. 54,880க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை இரு கிராம் ரூ. 2 குறைந்து ரூ. 99க்கு விற்பனை செய்யப்படுகிறது.
நவீன வசதிகளுடன் கட்டமைக்கப்படும் பிராட்வே பேருந்து நிலையத்தின் மாதிரி புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. ரூ.823 கோடி செலவில் வணிக வளாகத்துடன் கூடிய புதிய பேருந்து நிலையம் அமைக்க சென்னை மாநகராட்சி நிா்வாகம் முடிவு செய்துள்ளது. இதையடுத்து, பிராட்வே பேருந்து நிலையம் தற்காலிகமாக தீவுத்திடலுக்கு ஜூன் மாதம் முதல் இடமாற்றம் செய்யப்பட உள்ளது.
கோடை மழையால் முழு கொள்ளளவான 126.28 அடியை எட்டிய சோத்துப்பாறை அணை அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்படுவதால் மக்கள் ஆற்றில் குளிக்கவோ கடக்கவோ வேண்டாம் என பொதுப்பணித்துறையினர் எச்சரிக்கை
டெல்லியில் இன்று காவிரி மேலாண்மை ஆணையத்தின் 30வது கூட்டம் இன்று நடைபெறுகிறது. இதில் கடந்த மாதத்துக்கான தண்ணீரை திறந்து விடக்கோரி கர்நாடகாவை தமிழ்நாடு அரசு வலியுறுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நெல்லையில் பசுபதி பாண்டியன் ஆதரவாளர் தீபக் ராஜா மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 6 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை போலீசார் தேடி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ள்ளது.
Background
- தமிழகத்தில் இன்று 3 மாவட்டத்தில் மிக கனமழையும்,13 மாவட்டங்களில் கனமழைக்கும் வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திருச்சி, ராமநாதபுரம், கரூர் ஆகிய மாவட்டங்களில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகப்பட்சமாக 10 செ.மீ., மழையானது பதிவாகியுள்ளது.பல நீர் நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகளுக்கும், உள்ளூர் மக்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. கொடைக்கானலில் கோடை விழாவை முன்னிட்டு இன்று நடக்கவிருந்த படகுப்போட்டி முன்னெச்சரிக்கை காரணமாக ரத்து செய்யப்பட்டு மே 25 ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
- முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 33வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
- ஐபிஎல் தொடரில் இன்று நடக்கும் முதல் பிளே ஆஃப் சுற்றில் கொல்கத்தா - ஹைதராபாத் அணிகள் மோதுகின்றது. இதில் ஜெயிக்கும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். தோற்கும் அணிக்கு மேலும் ஒரு வாய்ப்பு வழங்கப்படும். நாளை நடைபெறும் எலிமினேட்டர் போட்டியில் ராஜஸ்தான், பெங்களூரு அணிகள் மோதுகிறது. இதில் ஜெயிக்கும் அணியுடன் முதல் பிளே ஆஃப் போட்டியில் தோற்ற அணி விளையாடும் .
- - - - - - - - - Advertisement - - - - - - - - -