Breaking News LIVE: வாக்கு இயந்திரங்களை நம்பியே பாஜக தேர்தலை சந்தித்துள்ளது - செல்வப்பெருந்தகை 

Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் காண, ஏபிபி இணைய செய்தி தளத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள்

பேச்சி ஆவுடையப்பன் Last Updated: 19 May 2024 06:10 PM
வாக்கு இயந்திரங்களை நம்பியே பாஜக தேர்தலை சந்தித்துள்ளது - செல்வப்பெருந்தகை 

மக்களை நம்பாமல் வாக்கு இயந்திரங்களை நம்பியே பாஜக தேர்தலை சந்தித்துள்ளது என காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்தார். 

ஆட்சிக்கு வந்ததும் 100 நாள் வேலை திட்டத்திற்கு ரூ. 400 ஊதியம் நிச்சயம் - ராகுல் காந்தி

ஆட்சிக்கு வந்ததும் 100 நாள் வேலை திட்டத்திற்கு ரூ. 400 ஊதியம் நிச்சயம் வழங்கப்படும் என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, உத்தரபிரதேசத்தில் உள்ள பிரயாக்ராஜ் பகுதியில் பரப்புரை மேற்கொண்டார். 

இஸ்கானையும், ராமகிருஷ்ண மடத்தையும் மம்தா மிரட்டுகிறார் - மோடி பேச்சு

PM Modi :எதிர்கட்சிகளின் கூட்டணி பொதுச் சொத்தை திருடுவார்கள் - பிரதமர் மோடி பேச்சு

Breaking News LIVE: கும்மிடிபூண்டி சிப்காட்டில் தீ விபத்து; சூழ்ந்த புகை மூட்டம்

கும்மிடிப்பூண்டி சிப்காட் வளாகத்தில் உள்ள அரசு திடக்கழிவு மேலாண்மை நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் புகை மூட்டம் சூழ்ந்தது. இந்நிலையில், தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன

அரவிந்த் கெஜ்ரிவால் ஏன் குற்றவாளியைக் காப்பாற்றுகிறார்? : பாஜக, மனோஜ் திவாரி

Breaking News LIVE: போதை பழக்கத்தால் பல குடும்பங்கள் சீரழிந்திருக்கின்றன - நடிகர் சூரி

போதை பழக்கத்தால் பல குடும்பங்கள் சீரழிந்திருக்கின்றன எனவே இளைஞர்கள் போதை பழக்கத்திலிருந்து வெளியே வரவேண்டும் என்ற சூரி, கதை களத்திற்காக மட்டுமே திரைப்படங்களில் போதை பொருட்கள் காட்டப்படுவதாகவும், சினிமாவில் நிறைய நல்ல விஷயங்கள் உள்ளபோது அதை மட்டுமே மக்கள் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் நடிகர் சூரி கேட்டுக் கொண்டுள்ளார்.

Breaking News LIVE: தாய்லாந்து ஓபன்: பட்டம் வென்றது இந்திய இணை..!

தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்திய ஜோடி பட்டம் வென்றது. 21-15, 21-15 என்ற நேர் செட் கணக்கில் சீன ஜோடியை வீழ்த்தியது இந்திய இணை. இறுதிப் போட்டியில் இந்தியாவின் சிராக் ஷெட்டி மற்றும் சாத்விக் சாய்ராஜ் ஜோடி வெற்றிபெற்று பட்டம் வென்றது.

ஆருத்ரா கோல்ட் மோசடி வழக்கில் மேலும் இருவர் கைது

ஆருத்ரா கோல்ட் மோசடி வழக்கில் அருண்குமார் உள்ளிட்ட மேலும் இரண்டு பேரை காவல்துறை கைது செய்துள்ளது. இருவரும் ஆவடியில் கிளை நிறுவனம் தொடங்கி, 134 கோடி ரூபாய் மோசடி செய்தது அம்பலமாகியுள்ளது. இருவரிடமிருந்து 5 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.  ஜாமினில் வெளியே வந்து தலைமறைவாக இருந்த ரூசோவும் கைது செய்யப்பட்டுள்ளார்.

Breaking News LIVE: 8 மாவட்டங்களில் 2 கோடி பேருக்கு மழை எச்சரிக்கை குறுந்தகவல்..!

கனமழை எச்சரிக்கை தொடர்ந்து தமிழ்நாடு பேரிடன் மீட்புப்படையின் 9 குழுக்கள் தயார் நிலையில் உள்ளன. கன்னியாகுமரி, கோவை, நெல்லை, நீலகிரி மாவட்டங்களில் பேரிடர் மீட்புப்படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். 


கனமழை முன்னெச்சரிக்கை தொடர்பாக 8 மாவட்டங்களில் உள்ள 2 கோடி செல்போன்களுக்கு நேற்றும் இன்றும் குறுந்தகவல் அனுப்பப்பட்டுள்ளது. 

வங்கக் கடலில் புயல் உருவாக வாய்ப்பு..!

வங்கக் கடலில் மே 22ம் தேதி உருவாகும் காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி புயலாக மாற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அடுத்த 7 நாட்களுக்கு தமிழ்நாட்டில் கோடை மழை நீடிக்க வாய்ப்பு எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

Breaking News LIVE: போதைப் பொருள் நடமாட்டம் - டிடிவி தினகரன் தமிழக அரசுக்கு கண்டனம்

ஆளுங்கட்சி, ஆண்ட கட்சி என இரு கட்சிகளும் போதைப் பொருள் நடமாட்டத்தை ஊக்குவிப்பது கடும் கண்டனத்திற்குரியது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் பரவியிருக்கும் போதைப் பொருட்கள் புழக்கத்தை அடியோடு அழித்தொழிப்பதோடு, ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என பாரபட்சம் பார்க்காமல் போதைப் பொருள் கடத்தலுக்கு உறுதுணையாக செயல்படுவோர் யாராக இருந்தாலும், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலினை வலியுறுத்தியுள்ளார். 

Breaking News LIVE: ஜவ்வாது மலைத்தொடரில் கனமழை - வேலூர் உத்திர காவிரி ஆற்றில் வெள்ளம்

வேலூரில் ஜவ்வாது மழைத்தொடரில் பெய்த கனமழை காரணமாக உத்திர காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அங்குள்ள தரைப்பாலம் நீரில் மூழ்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. 

Background


  • பாஜகவின் பிளவுவாதக் கனவுகள் ஒருபோதும் பலிக்காது என்று தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான பிரச்சாரத்தில் பிரதமர் மோடி வெறுப்பை தூண்டும் விதமாக பேசுவதாக தொடர் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்பிரதமரின் பொறுப்பற்ற பேச்சுகளையும் - அதனைத் தடுக்க வேண்டிய தேர்தல் ஆணையத்தின் அமைதியையும் நாட்டு மக்கள் அதிர்ச்சியோடும் வேதனையோடும் பார்த்து வருகிறார்கள் என தெரிவித்துள்ளார். 

  •  தமிழ்நாட்டில் கன்னியாகுமரி, தென்காசி மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இன்று அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக  தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. எனவே மழை காலங்களில்  நீர்நிலைகளுக்கு செல்வதையும், செல்பி எடுப்பதையும் தவிர்க்க வேண்டும் என பொதுமக்களுக்கு மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

  • ஐபிஎல் தொடரில் இன்று நடக்கும் 2 ஆட்டங்களில் ராஜஸ்தான் - கொல்கத்தா, ஹைதராபாத் - பஞ்சாப் அணிகள் மோதுகின்றது. முன்னதாக நேற்று நடந்த ஆட்டத்தில் சென்னை அணியை 27 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூரு அணியை பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்தது குறிப்பிடத்தக்கது. 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.