Breaking Tamil LIVE : வெயிலூராக மாறிய வேலூர்; 111 டிகிரி ஃபாரன்ஹீட்டில் சுட்டெரிக்கும் சூரியனால் தவிக்கும் பொதுமக்கள்!
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் காண, ஏபிபி இணைய செய்தி தளத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள்
தமிழ்நாட்டில் மொத்தம் 20 இடங்களில் வெயில் 100 இடங்களைக் கடந்துள்ளது. அதிகபட்சமாக கரூர் பரமத்தி, வேலூர் ஆகிய இடங்களில் 111 டிகிரி ஃபாரன்ஹீட்டும் ஈரோட்டில் 110 டிகிரி ஃபாரன்ஹீட்டையும் வெயில் எட்டியுள்ளது. அதேபோல் சேலம், மதுரை மாநகரம், தர்மபுரி, திருச்சி, திருவள்ளூர், திருத்தனி, திருவண்ணாமலை உள்ளிட்ட இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை கடந்து வெயில் சுட்டெரித்துள்ளது.
ஆசிய நாடுகள் வெப்ப அலையால் கடும் பாதிப்படைந்துள்ளது. ஒட்டுமொத்தமாக ஆசிய மக்களின் வாழ்வும், வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது - முன்னாள் WHO விஞ்ஞானி செளமியா சுவாமிநாதன் தகவல்
நெல்லை மாவட்டம் மேல பாட்டம் அருகே முன்னாள் பாமக நிர்வாகி செல்லப்பா மீது பெட்ரோல் குண்டு வீச்சு.
சிறு காயங்களுடன் நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாளையங்கோட்டை தாலுகா காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிறையில் உள்ள தலைவர்கள் காணொலி வாயிலாக பரப்புரை செய்ய அனுமதி கோரிய மனுவை நிராகரித்தது டெல்லி உயர்நீதிமன்றம் .
தமிழகத்திலும் நாளுக்கு நாள் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிப்பு உள்ளாகி வருகிறது, வெப்பத்தின் தாக்கம் குறையவும் தமிழகத்தில் மழை பெய்ய வேண்டும் எனவும் சிதம்பரம் அருகே உள்ள பரங்கிப்பேட்டை வாத்தியாபள்ளி திடல் எதிரே உள்ள IEDC திடலில் எழுவதற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் வெப்பத்தின் தாக்கம் குறைந்து தமிழகத்தில் மழை பெய்ய வேண்டுமென சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.
விருதுநகர் அருகே காரியாபட்டியில் கல்குவாரியில் நிகழ்ந்த வெடி விபத்து தொடர்பான சிசிடிவி காட்சி வெளியானது. அதில் குவாரிக்கான வெடிபொருட்கள் இருப்பு வைக்கப்பட்டு இருந்த அறை வெடித்து சிதறியது.
டெல்லியில் 100 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்த நிலையில், பள்ளிகளில் மாணவர்களை வெளியேற்றி தீவிர சோதனை நடைபெற்று வருகிறது.
ஏற்காடு விபத்தில் 5 பேர் உயிரிழப்புக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இவ்விபத்தில் உற்றாரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அரசு நிவாரண உதவிகள், தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று வழங்கப்படும் எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அமலாக்கத்துறை சட்டத்திற்கு அப்பாற்பட்ட அமைப்பு இல்லை எனவும் சட்டத்திற்கு கட்டுப்பட்டுதான் அமலாக்கத்துறை நடக்க வேண்டும் எனவும் டெல்லி நீதிமன்றம் கண்டித்துள்ளது. சாமானிய மக்களுக்கு எதிராக அடாவடித்தனமாக அமலாக்கத்துறை நடந்து கொள்ளக்கூடாது எனவும் தெரிவித்துள்ளது.
மேற்கு வங்காளம், பீகார், ஒடிசா ஆகிய மாநிலங்களில், இன்றும் நாளையும் கடும் வெப்ப அலை வீசும் என ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.19 குறைக்கப்பட்டுள்ளதால் வியாபாரிகள் சற்று மகிழ்ச்சியடைந்துள்ளனர். வணிக சிலிண்டரை எடுத்துக் கொண்டால் கடந்த 3 மாதத்தில் ஏற்றம் இறக்கமாகவே காணப்படுகிறது. சென்னையில் மார்ச் 1 ஆம் தேதி வணிக சிலிண்டர் விலை ரூ.23.50 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ.1,960 ஆக விற்பனை செய்யப்பட்டது.
சென்னையில் இயங்கி வரும் பிரபல நகை கடையில் 222 கிலோ வெள்ளி மாயமான விவகாரத்தில் மேலும் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நகை கடை ஊழியர்கள் அஜ்மல் மற்றும் மகேந்திர சிங்கை கைது செய்துள்ளனர்.
கொடைக்கானலில் முக்கிய சுற்றுலா தளமாக இருக்கும் பேரிஜம் வனப்பகுதிக்கு செல்ல தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை தடை தொடரும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Background
மே 1 ஆம் தேதி முதல் 3 தேதி வரை வட தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 3°-5° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது. தொடர் வெப்ப அலை மற்றும் அதிகபட்ச வெப்பநிலை காரணமாக வட உள் தமிழக மாவட்டத்திற்கு மஞ்சள் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. பிற மாவட்டங்களை ஒப்பிடும் போது சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை பதிவாகவில்லை என்றாலும், காற்றின் ஈரப்பதம் காரணமாக வெளியே செல்லும் மக்களுக்கு அசௌகரியம் ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மக்கள் பகல் நேரங்களில் அதாவது காலை 11 மணி முதல் 3.30 மணி வரை வெளியே வர வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
இதற்கிடையில், வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.19 குறைக்கப்பட்டுள்ளதால் வியாபாரிகள் சற்று மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஒவ்வொரு மாதமும் சந்தை விலை நிலவரங்களுக்கு ஏற்ப வீட்டு உபயோக சிலிண்டர் மற்றும் வணிக சிலிண்டர் விலையானது மாற்றம் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் வணிக சிலிண்டரை எடுத்துக் கொண்டால் கடந்த 3 மாதத்தில் ஏற்றம் இறக்கமாகவே காணப்படுகிறது. சென்னையில் மார்ச் 1 ஆம் தேதி வணிக சிலிண்டர் விலை ரூ.23.50 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ.1,960 ஆக விற்பனை செய்யப்பட்டது.
ஒருவரின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தையும், ஏற்றத்தையும் தருவதாக ஜோதிடத்தில் கருதப்படுவது குரு பெயர்ச்சி ஆகும். நடப்பாண்டிற்கான குரு பெயர்ச்சி மே 1ம் தேதி அரங்கேறுகிறது. மே 1ம் தேதியில் (சித்திரை 20) மேஷ ராசியில் இருந்து குரு பகவான் ரிஷபத்திற்கு செல்கிறார். மாலை 5.30 மணியளவில் இந்த குரு பெயர்ச்சி நடைபெறுகிறது. இதனால் இன்று திரளான பக்தர்கள் கோயிலுக்கு சென்று வழிப்படுவார்கள். இந்நிலையில் நாட்டில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் காணலாம்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -