Breaking News LIVE: குவைத் தீ விபத்து உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் நாளை கொண்டுவரப்படும்
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் காண, ஏபிபி இணைய செய்தி தளத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
குவைத் தீ விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல் நாளை கொச்சி கொண்டுவரப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
குவைத்தில் 50 பேர் உயிரிழந்த தீ விபத்திற்கு காரணம் மின் கசிவு என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஜூன் 26ம் தேதி மக்களவை சபாநாயகர் தேர்தல் நடைபெறும் என்று தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
தமிழ்நாட்டில் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், நாமக்கல், ராணிப்பேட்டை, வேலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை ஆகிய மாவட்டங்களில் இன்று இரவு மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளை இயக்க திங்கட்கிழமை வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக அஜித் தோவல் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பாவுக்கு போக்சோ வழக்கில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஆந்திர முதலமைச்சராக பொறுப்பேற்ற சந்திரபாபு நாயுடு, முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார்.
குவைத்தில் நடைபெற்ற தீ விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் குடும்பங்களுக்கு நடிகர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.
குவைத் தீ விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது.
நீட் தேர்வு வினாத்தாள் எதுவும் கசியவில்லை என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
Chandrababu Naidu Heritage : ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு குடுபத்தினருக்கு அடித்த ஜாக்பாட்!
ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு குடும்பத்தினரால் நடத்தப்படும் ஹெரிடேஜ் உணவுகள் பங்குகளின் மதிப்பு அதிகரித்ததால், அக்குழுமத்தின் மதிப்பு ரூ.1225 கோடி லாபம் ஈட்டியுள்ளது
Spicy Ramen-க்கு தடை விதித்த அரசு!
அளவுக்கு அதிகமாக காரம் சேர்க்கப்பட்டுள்ளதால், தயாரிப்புகளான Buldak 3X spicy, Hot chicken 2X spicy, Hot Chicken Stew ஆகிய 3 ஃப்ளேவர் கொரியன் ரேமன் நூடுல்ஸ் வகைகளை திரும்பப் பெற்றது டென்மார்க் அரசு.
Breaking News LIVE: Pradeep Vijayan : நடிகர் பிரதீப் விஜயன் உயிரிழப்பு..
Breaking News LIVE: நடிகர் பிரதீப் விஜயன் உயிரிழப்பு.. குளியலறையில் காயங்களுடன் உடல் மீட்கப்பட்டுள்ளது. மாரடைப்பால் உயிரிழந்திருக்கலாம் எனத் தகவல்.
தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் ஜூன் 19 வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்றும், ஜூன் 19 வரை புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், நகரின் ஒரு சில இடங்களில் மாலை, இரவு வேளைகளில் இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"கழிவுநீர் சுத்திகரிப்பு மையத்தில் இருந்து விஷவாயு வெளியே வர வாய்ப்பு இல்லை" புதுச்சேரி ரெட்டியார் பாளையத்தில் விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழந்த பகுதியில் ஆய்வு செய்த உதவி பொறியாளர் வைத்தியநாதன் கருத்து
நீட் - கருணை மதிப்பெண் ஒரு மோசடி : அமைச்சர் மா. சுப்ரமணியன்
ஒரே நேரத்தில் 67 பேர் முழு மதிப்பெண் பெற்றதால் சந்தேகம் எழுந்தது. நீட் கருணை மதிப்பெண் ஒரு மோசடி. முறைகேடுகள் நடைபெற்றுள்ளன. நீட் தேர்வு ரத்தே ஒரு தீர்வு
திமுக மக்களவை கொறடாவாக நியமிக்கப்பட்டுள்ள நீலகிரி எம்.பி., ஆ.ராசா முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்றார்
குவைத் தீ விபத்தில் 5 தமிழர்கள் உயிரிழந்து இருக்கலாம் என அங்குள்ள தமிழ்சங்கம் மூலம் தகவல் கிடைத்துள்ளது - அமைச்சர் செஞ்சி மஸ்தான்
கருணை மதிப்பெண்கள் பெற்ற 1,563 மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்தப்படும் என்று தேசியத் தேர்வுகள் முகமை உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 160 குறைந்து ரூ. 53, 280க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 20 குறைந்து ரூ. 6,600க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அமெரிக்காவில் உள்ள ஓக்லே கவுண்டியில் உள்ள லாஸ்ட் லேக்கில் தற்கொலை செய்ய முயற்சி செய்த நபர், தடுக்க முயன்ற மூன்று காவல்துறை அதிகாரிகள் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக, வேறு வழியின்றி தங்களது தற்காப்புக்காக காவல் துறை அதிகாரிகள் அந்த நபரை சுட்டு தடுத்தனர்.
இதையடுத்து, சுடப்பட்ட குற்றவாளியுடன், காயம் பட்ட மூன்று அதிகாரிகள் மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
"இதயத்தின் மெல்லிய தசைகள் மெழுகாய் உருகுகின்றன" - குவைத் தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு கவிஞர் வைரமுத்து இரங்கல்
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் ஆட்டுச் சந்தையில் விற்பனை அமோகம்!
பிரதமராக பதவியேற்ற பின்பு முதல் வெளிநாட்டுப் பயணமாக இன்று இத்தாலி செல்கிறார் பிரதமர் மோடி.
குவைத் தீ விபத்தில் உயிரிழந்த இந்தியர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 2 லட்சம் நிவாரணம் அறிவித்த முதலமைச்சர் ஸ்டாலின்
நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 80 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து மேற்கிந்திய தீவுகள் திணறல்
Background
- குவைத் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட தமிழர்களின் விவரத்தை பெற்று உடனே மருத்துவ உதவிகளை செய்ய வேண்டும் - அயலக தமிழக நலத்துறைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு
- குவைத்தில் நடைபெற்ற தீ விபத்தில் 40-க்கும் அதிகமானோர் பலி - 50 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி - பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
- தமிழ்நாடு பாஜகவில் நிலவும் உட்கட்சி பூசல் குறித்து அதிருப்தியை வெளிப்படுத்திய அமித் ஷா - சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழாவில் தமிழிசையிடம் காட்டம்
- விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைதேர்தலுக்கான திமுக தேர்தல் பணிக்குழு அறிவிப்பு - 9 அமைச்சர்கள் உட்பட 11 பேர் கொண்ட தொகுதி வாரியாக நியமனம்
- சென்னையில் 89வது நாளாக பெட்ரோ, டீசல் விலை மாற்றமின்றி தொடர்கிறது - பெட்ரோல் - ரூ.100.75, டீசல் - ரூ.92.34
- உக்ரைன் போர், சூழலியல் மாற்றம், செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட முக்கிய பிரச்னைகள் குறித்து ஜி7 மாநாட்டில் உலகத் தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்த வாய்ப்பு
- பூரி ஜெகன்நாதர் கோயிலில் கூட்ட நெரிசலை தவிர்க்க நடவடிக்கை - நான்கு வாசல்களையும் பக்தர்களுக்கு திறக்க முதலமைச்சர் மோகன் மஜி உத்தரவு
- எந்த தொகுதி எம்.பி., ஆக தொடர்வது என மக்களை கேட்டு முடிவு செய்வதாக ராகுல் காந்தி அறிவிப்பு - மோடியிடம் பேசுவது போல தன்னிடம் பேச பரமாத்மா இல்லையே என கிண்டல்
- நிட் தேர்வு முறைகேட்டிற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேலும் ஒரு வழக்கு - தேர்வை ரத்து செய்துவிட்டு மறுதேர்வு நடத்த வலியுறுத்தல்
- உலக பெரும் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் மீது பாலியல் குற்றச்சாட்டு - தனக்கு குழந்தை பெற்று தருவாயா? என பெண் ஊழியரிடம் கேட்டதாக தகவல்
- டி-20 உலகக் கோப்பையில் அமெரிக்காவை வீழ்த்தி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றது இந்திய அணி
- - - - - - - - - Advertisement - - - - - - - - -