Breaking News LIVE: புதுச்சேரி - விஷவாயு தாக்கி 3 பேர் பலி: பொதுமக்கள் சாலை மறியல்
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் காண, ஏபிபி இணைய செய்தி தளத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
புதுச்சேரியில் விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழந்த நிலையில் அப்பகுதி மக்கள் உரிய விசாரணை நடத்தக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். ஒரு கிலோமீட்டர் தூரத்துக்கு புதுச்சேரி விழுப்புரம் இடையே நெடுஞ்சாலையின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.
2018 ஆம் ஆண்டு சட்டவிரோதமாக துப்பாக்கி வாங்கிய வழக்கில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மகன் ஹண்டர் பைடன் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. என் மகன் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டால் அவரை மன்னிக்க மாட்டேன் என அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
ஆட்சியில் உள்ள அதிபரின் மகன் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கு குற்றவாளி என தீர்ப்பு வந்தது இதுவே முதல்முறை.
குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளதால் ஹண்டர் பைடனுக்கு 25 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கப்படும்.
பாஜக தமிழகத்தில் வளர கலவரம் செய்ய வேண்டும் என பேசிய இந்து மக்கள் கட்சி மாநில துணைத்தலைவர் பாளையங்கோட்டை போலீசாரால் கைது. மத ரீதியான பிரச்சனையை தூண்டியது, பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தது உள்ளிட்ட நான்கு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
காதலி குறித்து ஆபாசமாக பதிவு செய்த இளைஞரை கொலை செய்த வழக்கில் கன்னட நடிகர் தர்ஷனை 6 நாட்கள் போலீஸ் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
கன்னட நடிகர் தர்ஷன், கன்னட நடிகை பவித்ரா கவுடா உள்ளிட்ட 13 பேரை 6 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்திய மக்கள் பாசத்தின் அடையாளமாக தங்களது சமூக ஊடகங்களில் வைத்துள்ள மோடியின் குடும்பம் என்ற பெயரை நீக்க வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தேர்தல் பிரச்சாரத்தின் மூலம், இந்தியா முழுவதும் உள்ள மக்கள் தங்கள் சமூக ஊடகங்களில் என் மீதான பாசத்தின் அடையாளமாக 'மோடி கா பரிவார்'(மோடியின் குடும்பம்) என பதிவிடுகின்றனர். எனக்கு அதன் மூலம் உத்வேகம் கிடைத்துள்ளது. இந்திய மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு தொடர்ந்து மூன்றாவது முறையாக பெரும்பான்மையை வழங்கியுள்ளனர், இது ஒரு வகையான சாதனை. மேலும் நமது தேசத்தின் முன்னேற்றத்திற்காக தொடர்ந்து பணியாற்றுவதற்கான ஆணையை எங்களுக்கு வழங்கியுள்ளனர்.
நாம் அனைவரும் ஒரே குடும்பம் என்ற செய்தி திறம்பட தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்திய மக்களுக்கு மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் உங்கள் சமூக ஊடகங்களில் இருந்து 'மோடி கா பரிவார்' என்பதை நீக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். காட்சிப் பெயர் மாறலாம், ஆனால் இந்தியாவின் முன்னேற்றத்திற்காக பாடுபடும் ஒரு பரிவார் என்ற நமது பந்தம் வலுவாகவும் உடைக்கப்படாமலும் உள்ளது.
ஒடிசாவில் பாஜக சட்டமன்றக் கட்சியின் தலைவராக மோகன் சரண் மாஜி தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் மாநிலத்தின் புதிய முதல்வராக பதவியேற்கவுள்ளார்.
ஜப்பான்-இந்தியா இருதரப்பு கடல்சார் பயிற்சி 2024-ன் (JIMEX 24) எட்டாவது பதிப்பில் பங்கேற்பதற்காக இந்திய கடற்படையின் உள்நாட்டு ஸ்டெல்த் போர்க் கப்பல் INS ஷிவாலிக் ஜப்பானின் யோகோசுகாவை வந்தடைந்தது.
கப்பலுக்கு VAdm ITO ஹிரோஷி, கமாண்டர் ஜேஎம்எஸ்டிஎஃப் யோகோசுகா மாவட்ட & தூதர் சிபி ஜார்ஜ், ஜப்பானுக்கான இந்திய தூதர் ஆகியோர் அன்பான வரவேற்பு அளித்தனர்.
ஒடிசா மாநிலத்தின் முதலமைச்சராக மோகன் மாஜியை, பாஜக தேர்வு செய்துள்ளதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
கலவரம் செய்தால் தான் பாஜக வளரும் என்று தொலைபேசி உரையாடலில் இந்து மக்கள் கட்சியின் மாநில துணைத்தலைவரும் முன்னாள் மாவட்ட தலைவருமான உடையார் பேசியது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் கூறியுள்ளார்.
விமான நிலையத்தில் இனிமேல் செய்தியாளர் சந்திப்பு கிடையாது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
பாஜக கட்சி அலுவலகத்தில் இனிமேல் திட்டமிடப்பட்டு செய்தியாளர் சந்திப்பு நடைபெறும் எனவும் விமானத்தில் வருவதற்கு 3 மணி நேரம் ஆவதால் அந்த நேரத்தில் என்ன நடக்கிறது என தெரியவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
ஆந்திராவின் தலைநகர் இனி அமராவதிதான் எனவும் 3 தலைநகரங்கள் கிடையாது எனவும் முதல்வராக பொறுப்பேற்கவுள்ள சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
கூட்டணிக்கட்சி எம்.எல்.ஏக்களிடையே சந்திரபாபு நாயுடு பேசுகையில், “ஆந்திராவின் தலைநகர் இனி அமராவதிதான். 3 தலைநகரங்கள் கிடையாது. பொருளாதார நகரமாக விசாகப்பட்டினம் தரம் உயர்த்தப்படும்” எனத் தெரிவித்தார்.
ஆந்திராவின் தலைநகர் இனி அமராவதிதான் எனவும் 3 தலைநகரங்கள் கிடையாது எனவும் முதல்வராக பொறுப்பேற்கவுள்ள சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
கூட்டணிக்கட்சி எம்.எல்.ஏக்களிடையே சந்திரபாபு நாயுடு பேசுகையில், “ஆந்திராவின் தலைநகர் இனி அமராவதிதான். 3 தலைநகரங்கள் கிடையாது. பொருளாதார நகரமாக விசாகப்பட்டினம் தரம் உயர்த்தப்படும்” எனத் தெரிவித்தார்.
திருக்கோவிலூரில் தெரு நாய் கடித்து 20 பேர் படுகாயமடைந்தனர். திருக்கோவிலூர் பேருந்து நிலையம் அருகே தெரு நாய் கடித்து படுகாயமடைந்தவர்கள் திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
டெல்லி: ரயில்வே அமைச்சகத்தின் இணை அமைச்சராக (MoS) வி சோமண்ணா பொறுப்பேற்றுக் கொண்டார்.
நீட் தேர்வில் குளறுபடி நடந்துள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையில், தேசியத் தேர்வுகள் முகமைக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதேநேரத்தில் மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வுக்குத் தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது.
புதுச்சேரியில் விஷவாயு தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரண நிதி அறிவித்தார் முதலமைச்சர் ரங்கசாமி. உயிரிழந்த சிறுமி குடும்பத்துக்கு ரூ.30 லட்சம், உயிரிழந்த இரு பெண்களின் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டது
தமிழ்நாடு முழுவதும் பொறியியல் படிப்புகளில் சேர இணையம் மூலம் விண்ணப்பிக்க இன்று ( ஜூன் 11) கடைசித் தேதி ஆகும். இதற்கு மேல் சேர்க்கை அவகாசம் நீட்டிக்கப்படாது என பொறியியல் சேர்க்கை தலைவர் தெரிவித்துள்ளார்.
நடிகர் அர்ஜூனின் மகள் ஐஸ்வர்யா அர்ஜூனுக்கும், நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையாவுக்கும் நேற்று (10 ஜூன்) கெருகம்பாக்கத்தில் உள்ள ஶ்ரீ யோக ஆஞ்சநேயர் கோவிலில் திருமணம் நடைபெற்றது.
“திட்டங்களில் தனிக்கவனம் செலுத்தி, புதிய உத்வேகத்துடன் செயல்படுங்கள்..” மாவட்ட ஆட்சியர்கள் ஆய்வுக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கிய உரை
எத்தனை நாட்கள்தான் சார்ந்து இருக்கப்போகிறோம்? சுயமாக இருப்போமா சார்ந்து இருப்போமா என்பதற்கான விடை தொண்டர்களிடம் உள்ளது - செல்வப்பெருந்தகை பேச்சு
ஜூலை 10ம் தேதி விக்ரவாண்டியில் சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறும் என நேற்று அறிவிப்பு வெளியானது. இந்தநிலையில், தேர்தல் ஆணையம் தேதியை வெளியிட்ட மறுநாளே அதிரடியாக வேட்பாளரை அறிவித்தது திமுக. அதன்படி, விக்ரவாண்டியில் திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்டி நிலவுவதால் தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
ஜப்பானில் நடந்த பாரா தடகள சாம்பியன்ஷிப் தொடரில் தங்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலுவுக்கு ஊக்கத் தொகையாக ₹75 லட்சத்திற்கான காசோலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
சொரிமுத்தையனார் கோவிலுக்கு செல்வதற்கு வனத்துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தாலும் தமிழ்நாடு அரசும் மாவட்ட நிர்வாகமும் பக்தர்கள் செல்வதற்கு அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்துள்ளது - சபாநாயகர் அப்பாவு
வருகின்ற ஜூன் 20ம் தேதியே சட்டப்பேரவை கூடும் என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். இதையடுத்து 24ம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், முன்கூட்டியே கூடுகிறது.
“நீட் ரத்தாகும் என்ற நம்பிக்கை உள்ளது. நாம் சொல்வதை அவர்கள் கேட்டுத்தான் ஆகவேண்டும். இல்லையென்றால், அந்த ரெண்டு பேரிடம் சொன்னால் போதும்... செய்துவிடுவார்கள்” - சத்யராஜ்
Neet - Student Protest : நீட் தேர்வு குளறுபடிகள் : மாணவர்கள் போராட்டம்
சென்னை, திருச்சி மற்றும் சில பகுதிகளில் நீட் தேர்வு குளறுபடிகளை எதிர்த்து இந்திய மாணவர் சங்கத்தினர் போராட்டம்
ரெட்டியார்பாளையம் பகுதியில் வீடுகளில் உள்ள பொதுமக்களுக்கு விஷவாயு தாக்கும் அபாயம் உள்ளதால் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். விஷவாயு பரவல் தொடர்பாக போலீசார் மற்றும் நகராட்சி அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். புதுச்சேரியில் கழிவறைக்கு சென்ற மூவர் விஷவாயு தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தலைமை செயலகத்தில் மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஸ்டாலின், தமிழ்நாடு அரசு அறிவித்த திட்டங்களின் நிலை, புதிய அறிவிப்புகள் தொடர்பாக ஆலோசனை நடத்த இருக்கிறார்.
பீகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், விளிம்புநிலை மக்களுக்கு அதிகாரமளிக்க லாலு பிரசாத் யாதவ் மேற்கொண்ட முயற்சி அளப்பரியது என தெரிவித்தார்.
புதுச்சேரி ரெட்டியார்பாளையத்தில் விஷ வாயு தாக்கியதில் செந்தாமரை(80), காமாட்சி (55), மற்றும் சிறுமி செல்வராணி(15) உயிரிழப்பு
புதுநகரில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து வெளியான Gas வீடுகளின் கழிவறை வழியாக வெளியேறியதால் உயிரிழப்பு
உடல்நலம் பாதிக்கப்பட்ட மேலும் சிலர் மருத்துவமனையில் அனுமதி
புதுச்சேரி ரெட்டியார்பாளையம் பகுதியில் கழிவறைக்குச் சென்ற மூதாட்டி செந்தாமரை (72) மயங்கி விழுந்து உள்ள நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது உயிரிழந்தார்.
மயங்கி விழுந்த செந்தாமரை காப்பாற்ற சென்ற அவரது மகள் காமாட்சியும் மயங்கி விழுந்ததால் ,அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்ததால் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருச்சி விமான நிலையத்தின் புதிய முனையம் இன்று முதல் பயன்பாட்டிற்கு வந்ததை தொடர்ந்து விமான நிலைய இயக்குனர் சுப்பிரமணி மத்திய தொழில் பாதுகாப்பு படை துணை கமிஷனர் ஹரி சிங் நயால் ஆகியோர் பயணிகளுக்கு பூச்செண்டு கொடுத்து வரவேற்றனர்.
புதிய முனையத்திற்கு வந்த முதல் விமானத்திற்கு வாட்டர் சல்யூட் முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஜூலை 1 முதல் மின் கட்டணம் உயர்வு என்ற செய்தி தவறானது' - தமிழ்நாடு உண்மை கண்டறியும் குழு பதிவு
20 மாவட்டங்களில் இன்று மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
பரந்தூர் புதிய விமான நிலைய திட்டத்திற்கு மேலும் நிலம் எடுப்பதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 30 நாட்களுக்குள் நிலம் எடுப்பு அலுவலகத்தில் மக்கள் ஆட்சேபம் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விருதுநகரில் 18 நாட்கள் நீடித்த சிறு பட்டாசு ஆலைகளின் வேலை நிறுத்தம் முடிந்ததால் உற்பத்தி மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. சரவெடி உற்பத்தி செய்யும் சிறு பட்டாசு ஆலைகள் மீது நடவடிக்கை எடுப்பதை கண்டித்து போராட்டம் நடத்தினர்.
பாலஸ்தீனத்தில் உள்ள காசாவில் போர் நிறுத்தத்தை ஆதரிக்கும் அமெரிக்காவின் முன்மொழிவுக்கு ஐ.நா. ஒப்புதல் அளித்துள்ளது.
தமிழ்நாடு காங்கிரஸ் பொதுக்குழுக் கூட்டம் செல்வப்பெருந்தகை தலைமையில் சென்னையில் இன்று நடக்கிறது. சென்னை காமராஜர் அரங்கில் நடைபெறும் இந்த கூட்டத்தில் சுமார் 711 பொதுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்க உள்ளனர். தமிழகத்தில் காங்கிரஸின் கட்டமைப்பை பலப்படுத்த தேவையான உத்திகள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட இருப்பதாக தகவல்.
பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது. எனவே, இன்னும் அப்ளை செய்யலாம் பொறியியல் படிக்க ஆர்வம் உள்ள மாணவர்கள் உடனடியாக இன்றே அப்ளை செய்து பொறியியலில் தங்களுக்கு பிடித்த மேஜரை தேர்வு செய்து படியுங்கள்.
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடத்திய தமிழர் முன்னேற்ற படை தலைவர் வீரலட்சுமி மீது வழக்குப்பதிவு. வீரலட்சுமி உள்பட 60 பேர் மீது சென்னை நுங்கம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
Background
- திமுக நாடாளுமன்ற குழுத்தலைவராக கனிமொழி நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு.
- மாநிலங்களுக்கான வரிப் பகிர்வு நிதியாக ரூ. 1.39 லட்சம் கோடியை மத்திய அரசு விடுவித்தது. அதன்படி, உத்தரப்பிரதேசத்துக்கு ரூ. 25, 069 கோடியும், தமிழ்நாட்டுக்கு ரூ. 5,700 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
- ஜெ.பி. நட்டாவின் பதவிக்காலம் முடிவடைவதால், அவர் இம்முறை அமைச்சரவையில் இடம்பெறுவார் என ஏற்கனவே கணிக்கப்பட்டது. தற்போதைய சூழலில் சுனில் பன்சால், வினோத் தாவ்டே, அனுராக்சிங் தாக்குர் மற்றும் ஓம் பிர்லா ஆகியோரில் ஒருவர், பாஜகவின் அடுத்த தலைவராக நியமிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
- டி20 உலகக் கோப்பை 2024ல் முதலில் பேட்டிங் செய்த தென்னாப்ரிக்கா அணி, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 113 ரன்களை எடுத்தது. இதையடுத்து களமிறங்கிய வங்கதேச அணி, தென்னாப்ரிக்காவின் துல்லியமான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. இதனால் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து வெறும் 109 ரன்களை மட்டுமே சேர்த்தது. அதன்படி, தென்னாப்ரிக்கா அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
- தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமராக மோடி நேற்று முன் தினம் பதவியேற்றார். டெல்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகையில் நடந்த பதவியேற்பு நிகழ்ச்சியில் மோடியை தவிர்த்து 71 பேர் மத்திய அமைச்சர்களாக பதவியேற்றனர். இந்த நிலையில், பிரதமர் அலுவலகத்தின் அதிகாரிகளையும் ஆட்சி பணி அதிகாரிகளையும் பாராட்டி பேசிய பிரதமர் மோடி, "உலகளாவிய தரவரிசையை கடக்கும் திசையை நோக்கி நாடு செல்ல அதிக முயற்சிகளை மேற்கொள்ளுமாறு கேட்டு கொள்கிறேன்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -