Breaking News LIVE: மத்திய அரசு மாநிலங்களுக்கு ரூ. 1. 39 லட்சம் கோடி நிதி விடுவிப்பு; தமிழ்நாட்டிற்கு ரூ. 5, 700 கோடி
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் காண, ஏபிபி இணைய செய்தி தளத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
மத்திய அரசு மாநிலங்களுக்கு வரி பகிர்வு நிதியாக ரூ. 1. 39 லட்சம் கோடி நிதியை விடுவித்துள்ளது. தமிழ்நாட்டிற்கு ரூ. 5, 700 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக உத்தர பிரதேச மாநிலத்திற்கு ரூ. 25, 069 கோடி நிதி விடுவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த மத்திய இணை அமைச்சருக்கு எல்.முருகனுக்கு இரண்டு துறைகள் ஒதுக்கீடு. இதற்கு முன்பு இருந்த தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை இருந்த நிலையில் கூடுதலாக நாடாளுமன்ற விவகார துறையும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மீண்டும் மத்திய நிதி அமைச்சராகிறார் நிர்மலா சீதாராமன்
ஜார்கண்ட் மாநில பாஜக எம்.பி அன்னபூர்ணா தேவிக்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
மத்திய அமைச்சரவையில் துறை குறித்தான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அமித்ஷாவுக்கு உள்துறை, ஜெய்சங்கருக்கு வெளியுறவுத்துறை, அமித்ஷாவுக்கு மீண்டும் உள்துறை , ராஜ்நாத் சிங்கிற்கு பாதுகாப்பு துறையும், நிதின் கட்கரிக்கு சாலைப் போக்குவரத்து துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலம் பலோதா பஜாரில் வழிபாட்டு தலத்தை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து அரசு அலுவலகங்கள் சூறையாடப்பட்டதால் வன்முறை வெடித்துள்ளது.
சென்னையில் உள்ள பல்வேறு இடங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது.
சட்ட விரோதமாக பணப்பரிமாற்றம் நடந்ததாக கூறப்படும் காலங்களில், பணியாற்றிய வங்கி அதிகாரிகளின் தகவல்களை வழங்க கோரிய செந்தில்பாலாஜி தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்ட நிலையில், இம்மனு மீது, வரும் ஜூன் 14 ஆம் தேதி தீர்ப்பு வழங்குகிறது சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம்.
டெல்லியில் பிரதமர் அலுவலக ஊழியர்கள் மத்தியில், பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது, “நாட்டின் 140 கோடி மக்களும் எனக்கு கடவுள் போன்றவர்கள். நாட்டின் வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கும் வகையில் பிரதமர் அலுவலக ஊழியர்கள் பணியாற்ற வேண்டும். நாளை செய்வோம் என எதையும் ஒத்திவைக்கமால், இன்றே அனைத்து பணிகளையும் செய்ய வேண்டும்” என வலியுறுத்தினார்.
மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்ற நரேந்திர மோடிக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷபாஷ் ஷெரீஃப் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மணிப்பூர் மாநில முதலமைச்சர் பைரேன் சிங்கின் பாதுகாப்பு வாகனம் மீது வன்முறை கும்பல் துப்பாக்கிச்சூடு நடத்தியதால் பதற்றம் நிலவி வருகிறது.
கோவையில் நடைபெற உள்ள திமுக முப்பெரும் விழாவுக்கான தேதி மாற்றம் வரும் 14ம் தேதிக்கு பதிலாக, 15ம் தேதி கொடிசியா மைதானத்தில் முப்பெரும் விழா நடைபெறும் என திமுக தலைமை அறிவிப்பு
தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் செயல்படுத்தி வரும் மாநில அரசின் நலத்திட்டங்கள் மற்றும் பல்வேறு திட்ட பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆய்வு செய்ய உள்ளார் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா
மத்திய மோட்டார் வாகன விதிப்படி, இனி 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் பதிவு பெற்ற மருத்துவரிடம் மருத்துவச் சான்றிதழ் பெற்ற பின்னரே ஓட்டுநர் உரிமம் பெற இயலும் என தமிழ்நாடு போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையர் அறிவிப்பு புதிய ஓட்டுநர் உரிமம் பெறவோ அல்லது பழைய ஓட்டுநர் உரிமத்தை புதுப்பிக்கவோ இயலும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
பிரதமர் மோடி நேற்று ரகசிய காப்பு மூலம் 3வது முறையாக பிரதமர் பதவி ஏற்றுக்கொண்ட நிலையில், இன்று முறைப்படி பதவி ஏற்றுக்கொண்டார். பதவியெற்ற பின் முதல் காப்பாக பிரதமர் கிசான் நிதியின் 17வது தவனையை கையெழுத்திட்டார். இதன் மூலம் நாடு முழுவதும் உள்ள 9.3 கோடி விவச்சயிகள் பயன்பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விக்கிரவாண்டிக்கு வரும் ஜூலை 10 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஜூலை 13 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோரின் உத்தரவின்பேரில், நடப்பாண்டில் 01.01.2024 முதல் 09.06.2024 வரை சென்னை பெருநகரில் கொலை, கொலை முயற்சி மற்றும் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் சட்டம் ஒழுங்கு குற்றங்களில் ஈடுபட்ட 330 குற்றவாளிகள், திருட்டு, சங்கிலி பறிப்பு, வழிப்பறி மற்றும் பணமோசடி குற்றங்களில் ஈடுபட்ட 111 குற்றவாளிகள், கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்த 156 குற்றவாளிகள், குட்கா புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 23 குற்றவாளிகள், சைபர் குற்றத்தில் ஈடுபட்ட 5 குற்றவாளிகள், மதுவிலக்கு அமலாக்கப்பிரிவில் 7 குற்றவாளிகள், பாலியல் தொழில் நடத்திய 12 குற்றவாளிகள், பெண்களை மானபங்கம்படுத்திய 4 குற்றவாளிகள் மற்றும் உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவில் 3 குற்றவாளிகள் என மொத்தம் 651 குற்றவாளிகள் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோரின், உத்தரவின்பேரில் கடந்த 27.05.2024 முதல் 09.06.2024 வரையிலான 14 நாட்களில் 1 பெண் உட்பட 66 குற்றவாளிகள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
மக்களவைத் தேர்தலில் 8.19 விழுக்காடு வாக்குகள் பெற்றுத் தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் பெற்ற நாம் தமிழர் கட்சியையும் அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானையும் பாராட்டுகிறேன் ஆலின் விதையொன்று தனித்து நின்று ஓசையின்றித் துளிர்விடுவதும் இலைவிடுவதும்போல சீமானின் வளர்ச்சி கவனம் பெறுகிறது இந்த வளர்ச்சியால் தமிழ்நாட்டு அரசியலில் அவரைப் பழிப்பது குறையாது ஆனால் இனி - கழிப்பது இயலாது வாழ்த்துகிறேன் : வைரமுத்து
கோடை விடுமுறை முடிந்து பள்ளி திரும்பும் குழந்தைகள் அனைவருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், “கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளி திரும்பும் குழந்தைகள் அனைவருக்கும் இக்கல்வியாண்டு இனிதே அமைய வாழ்த்துகிறேன்!
பெற்றோர்களும், ஆசிரியர்களும் மீண்டும் வகுப்பறைக்குள் அடியெடுத்து வைக்கும் மாணவச் செல்வங்களின் மனநிலை - உடல்நிலை ஆகியவற்றில் கவனம் செலுத்தி, வாசிப்பிலும் விளையாட்டிலும் மாணவர்களுக்கு ஊக்கமூட்டி மகிழ்ச்சியோடு இருக்கும்படி பார்த்துக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.” என பதிவிட்டுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 21 மாவட்ட மாணவர்களுக்கு வருகின்ற ஜூன் 28ம் தேதி முதற்கட்டமாக பரிசுகளை வழங்குகிறார் நடிகர் விஜய். அதன்படி அரியலூர், கோவை, தருமபுரி, திண்டுக்கல், ஈரோடு, கன்னியாகுமரி, கரூர், கிருஷ்ணகிரி, நீலகிரி உள்ளிட்ட 21 மாவட்ட மாணவர்களுக்கு ஜூன் 28ம் தேதி பரிசு வழங்கப்பட இருக்கிறது.
இரண்டாம் கட்டமாக 19 மாவட்ட மாணவர்களுக்கு வருகின்ற ஜூலை 3ம் தேதி பரிசுகளை நடிகர் விஜய் வழங்குகிறார். அதன்படி ஜூன் 3ம் தேதி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், புதுச்சேரி, கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, நாகப்பட்டிணம், தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் முதல் மதிப்பெண் பெரும் மாணவர்களுக்கு பரிசுகளை வழங்குகிறார்.
தங்கம் விலை கிராமுக்கு ரூ.20 -ம், சவரனுக்கு ரூ.160 -ம் குறைந்துள்ளது. சென்னையில் 22 கிராம் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.6,630 க்கு விற்பனையாகிறது. சவரன் ரூ.53,040 க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த மூன்று நாட்களாக தங்கம் விலை குறைந்து வரும் நிலையில், மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் கலை அறிவியல் கல்லூரிகளில் பொதுப் பிரிவினருக்கான முதல் கட்ட கலந்தாய்வு இன்று தொடங்குகிறது. 2024-25ம் ஆண்டுக்கான முதல் கட்ட கலந்தாய்வு ஜூன் 15ம் தேதி வரை நடைபெற உள்ளது.
பொறியியல் கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கைக்கான கால அவகாசம் நாளையுடன் முடிவடைகிறது. பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க நாளை வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தொழில்நுட்ப கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.
பரந்தூர் விமான நிலையத்துக்கு 59 ஹெக்டேர் நிலங்களை கையகப்படுத்த முதல் நிலை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 59 ஹெக்டேர் நிலத்தை கையகப்படுத்த அறிவிப்பை வெளியிட்டது தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் நீர்வளத்துறை. இதையடுத்து, ஸ்ரீபெரும்புத்தூர் வட்டம் எடையார்பாக்கம் கிராமத்தில் உள்ள நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன.
ஜூலை 1 முதல் 296 ரயில்களின் எண்கள் மாற்றப்பட உள்ளதாக ரயில்வே தெரிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் பல்வேறு ரயில்களின் சேவைகள் நிறுத்தப்பட்டது. கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு, மீண்டும் வழக்கம்போல ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதையடுத்து, சிறப்பு ரயில்களுக்கு தற்காலிகமாக பூஜ்ஜியத்தில் தொடங்கும் எண்கள் வழங்கப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
லஞ்ச புகாரில் சேலம் மாநகர க்ரைம் பிரிவு ஆய்வாளர் கணேசன் பணியிடை நீக்கம் செய்து உள்துறை செயலாளர் அமுதா உத்தரவு.
2016 ஆம் ஆண்டு திண்டுக்கல் மாவட்டம் பழனி டவுன் காவல் நிலையத்தில் பணியாற்றியபோது, லஞ்சம் கேட்டதாக கூறி புகார் எழுந்தது.
இந்த நிலையில் புகார் உண்மைத்தன்மை கண்டறியப்பட்டு க்ரைம் பிரிவு ஆய்வாளர் கணேசன் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சிவராஜ் சிங் சவுகான், மனோகர் கால் கட்டார், ஜிதன்ராம் மஞ்சி, குமாரசாமி ஆகியோர் முதல்முறையாக மத்திய அமைச்சர்களாக பதவி ஏற்றுள்ளனர்.
இரண்டு மாத கோடை விடுமுறைக்கு பிறகு தமிழ்நாட்டில் இன்று பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இதற்காக, தமிழ்நாடு அரசு வளாக பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு முன்னேற்பாடுகள் பள்ளிகள் தரப்பில் முடிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளன.
Background
- நாட்டின் பிரதமராக தொடர்ந்து 3வது முறையாக நரேந்திர மோடி பதவியேற்றுக் கொண்டார். நேற்று இரவு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். பிரதமர் மோடியை தொடர்ந்து மத்திய அமைச்சர்களாக 71 பேர் பதவியேற்றுக் கொண்டனர். 7.30 மணிக்கு தொடங்கிய இந்த பதவியேற்பு நிகழ்ச்சியானது இரவு 10 மணியளவில் முடிவடைந்தது.
- இரண்டு மாத கோடை விடுமுறைக்கு பிறகு தமிழ்நாட்டில் இன்று பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இதற்காக, தமிழ்நாடு அரசு வளாக பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு முன்னேற்பாடுகள் பள்ளிகள் தரப்பில் முடிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளன.
- பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “ பிரதமராக தொடர்ந்து மூன்றாவது முறையாக பதவியேற்றுள்ள மோடிக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
- நியூயார்க் நகரில் உள்ள நாசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் 19 வது லீக் போட்டி நேற்று (ஜூன் 9) நடைபெற்றது. இதில், பாகிஸ்தான் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியிடம் வீழ்ந்தது.
- நேற்று இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான நாசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கு மேல், 'இம்ரான் கானை விடுதலை செய்’ என்ற வாசகத்துடன் விமனம் ஒன்று பறந்துள்ளது. இது தொடர்பான வீடியோதான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -