Breaking News LIVE: ஜவஹர்லால் நேரு பை-பை சொன்னதை அசாம் மக்கள் மறக்க மாட்டார்கள் : லக்கிம்பூரில் அமித்ஷா பேச்சு
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் காண, ஏபிபி இணைய செய்தி தளத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள்
"டெல்லி மதுபானக் கொள்கை உருவாக்கத்தில் மனுதாரர் அரவிந்த் கெஜ்ரிவால் முக்கிய பங்காற்றியுள்ளார்; கெஜ்ரிவாலின் பங்கு இருப்பது, அமலாக்கத்துறை ஆதாரங்களில் இருந்து தெரியவருகிறது; காணொலியில் விசாரித்திருக்கலாம் என்ற வாதம் நிராகரிக்கப்படுகிறது; எப்படி விசாரிப்பது என்பதை குற்றம்சாட்டப்பட்ட நபர் முடிவு செய்ய முடியாது; முதலமைச்சர் என்பதால் தனிச்சலுகை அளிக்க முடியாது" - டெல்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி
திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் காரில் பறக்கும் படையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். நயினார் நாகேந்திரனின் மேலாரிடம் சமீபத்தில் ரூ. 4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், இந்த சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ்குமாருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
போதைப்பொருள் கடத்தல் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட ஜாஃபர் சாதிக் வழக்கில் இயக்குநர் அமீரை மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணைக்கு அழைத்துள்ளனர். முன்னதாக கடந்த வாரம் டெல்லியில் உள்ள அலுவலகத்தில் நேரில் ஆஜராகி அமீர் விளக்கமளித்திருந்தார்.
மகாராஷ்ட்ராவில் இந்தியா கூட்டணிக்கான தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ் 17 தொகுதிகளிலும், சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் 10 தொகுதிகளிலும், உத்தவ் தாக்கரேவின் 21 தொகுதிகளிலும் சிவசேனா தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. நாட்டின் மிகவும் முக்கியமான மாநிலமான மகாராஷ்ட்ராவில் இந்தியா கூட்டணி இன்று இறுதி செய்யப்பட்டதையடுத்து, அரசியல் கட்சிகள் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட உள்ளனர்.
சென்னை வில்லிவாக்கத்தில் போலி ஆவணங்கள கொடுத்து தேர்தல் பணிமனை திறந்த பா.ஜ.க. நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழ் சினிமாவின் பிரபல காமெடி நடிகை ஆர்த்தி மற்றும் அவரது கணவர் கணேஷ் இருவரும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தனர்.
மதுரை மீனாட்சியம்மன் - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவம் ஏப்ரல் 21 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான முன்பதிவு ஆன்லைனில் தொடங்கியது.
திரைப்பட இயக்குனர் அமீர் அலுவலகத்தில் அமலாக்கத்துறையினர் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் அறிக்கை இன்று வெளியாகியுள்ளது.
ஹைதராபாத்தில் உள்ள நச்சரம் பகுதியைச் சேர்ந்த அர்பத், கடந்த ஆண்டு மே மாதம் கிளீவ்லேண்ட் பல்கலைக்கழகத்தில் தகவல் தொழில்நுட்பத்தில் முதுகலைப் படிப்பதற்காக அமெரிக்கா சென்றார். கடந்த மாதம் அவர் காணாமல் போன நிலையில், தற்போது அர்பத்தின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக இந்திய துணை தூதரகம் தெரிவித்துள்ளது. அண்மை காலமாக அமெரிக்காவில் இந்திய் மாணவர்கள் உயிரிழப்பது தொடர்கதையாகி வருகிறது.
மக்களவை தேர்தலுக்கான தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - இன்று மதுரை, சிவகங்கை தொகுதியில் ஆதரவு திரட்டுகிறார்.
வரும் 19 ஆம் தேதி நடைபெற இருக்கும் மக்களவை தேர்தலுக்காக அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள 2 தொழிலதிபர்கள் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் வல்லம் அருகே காரில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.74.50 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
தமிழ்நாட்டிலும், அண்டை மாநிலங்களிலும் வாழும் தெலுங்கு, கன்னட மொழி பேசும் திராவிட உடன்பிறப்புகள் அனைவருக்கும் உகாதி - புத்தாண்டு நல்வாழ்த்துகள்! புத்தாண்டு புதிய தொடக்கங்களுக்கு வித்திடட்டும்! தென்னகத்தின் உரிமைகள் மீட்கப்பட்டு நமக்குரிய வரிப்பகிர்வைப் பெறும் ஆண்டாக அமையட்டும்! என முதலமைச்சர் ஸ்டாலின் தெலுங்கு வருடப்பிறப்பு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மெக்காவில் உள்ள அல்-சஃபா அரண்மனையில் பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் மற்றும் சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் இடையேயான சந்திப்பு நடைபெற்றது. அதன் பின் வெளியான கூட்டறிக்கையில், ”இந்தியா - பாகிஸ்தான் இடையே நிலுவையில் உள்ள பிரச்சினைகளை தீர்க்க, குறிப்பாக ஜம்மு-காஷ்மீர் பிரச்சனையை தீர்க்க, பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்த, பாகிஸ்தானுகம், இந்தியாவும் இடையே பேச்சுவார்த்தை நடத்த” வலியுறுத்தப்பட்டுள்ளது.
ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்க சென்ற மெக்கான்ஸ், தங்கம் ஆகிய இருவரை நடுக்கடலில் வைத்து இலங்கை கடற்படையினர் சரமாரியாக தாக்கியதில் இருவருக்கும் தலை மற்றும் உடம்பில் பலத்த காயம் ஏற்பட்டு ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர்.
மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டது தொடர்பாக காயமடைந்த மீனவர்களிடம் ராமேஸ்வரம் மீன் வளத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Background
நாடாளுமன்ற தேர்தல் வரும் 19 ஆம் தேதி தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதற்காக தேர்தல் ஆணையமும் அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகிறது. அரசியல் கட்சி தலைவர்கள் அனைவரும் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக பாஜக தமிழ்நாட்டில் காலூன்ற வேண்டும் என தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் பாஜக தேசிய தலைவர்கள், மத்திய அமைச்சர்கள் தமிழ்நாட்டிற்கு வருகை தந்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். நடப்பாண்டில் 7வது முறையாக பிரதமர் மோடி இன்று இரண்டு நாள் பயணமாக தமிழகம் வருகிறார். இந்த பயணத்தின் போது சென்னை மற்றும் வேலூர் உள்ளிட்ட மக்களவை தொகுதிகளில் போட்டியிடும், பாஜக வேட்பாளர்களுக்காக ஆதரவாக வாக்கு சேகரிக்கிறார்.
கேரளாவில் இருந்து புறப்பட்டு இன்று மாலை சென்னை விமான நிலையம் வந்தடைகிறார் பிரதமர் மோடி. விமான நிலையத்தில் இருந்து தேனாம்பேட்டை காமராஜர் அரங்கம், ஜி.என்.டி., சாலை வழியாக பனகல் பார்க் செல்கிறார். அங்கு தொண்டர்களின் வரவேற்பை ஏற்கும் மோடி 6 மணியளவில் ரோட் ஷோவில் பங்கேற்று, பாஜக சார்பில் தென் சென்னை தொகுதியில் போட்டியிடும் தமிழிசை சவுந்தரராஜன், வடசென்னையில் போட்டியிடும் பால்கனகராஜ் மற்றும் மத்திய சென்னையில் போட்டியிடும் வினோஜ் செல்வம் ஆகியோருகாக வாக்கு சேகரிக்க உள்ளார். ரோட் ஷோவுடன் இன்றைய பரப்புர முடிய, இரவு சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஒய்வெடுக்கிறார். நாளை காலை சென்னையில் இருந்து தனி ஹெலிகாப்டரில் பயணம் செய்து வேலூர் சென்றடைகிறார்.
இந்நிலையில், விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்து வந்தவர் திமுகவைச் சேர்ந்த புகழேந்தி. இவர் உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த வாரம் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதன் காரணமாக விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது போன்ற சூழலில் நாட்டில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் காணலாம்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -