Breaking News LIVE: புதுச்சேரி சிறுமி கொலை வழக்கு; மேலும் 8 காவலர்கள் பணியிடமாற்றம்
Breaking News Live: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே உடனுக்குடன் காணலாம்.
புதுச்சேரி சிறுமி கொலை வழக்கில் மேலும் 8 காவலர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
வரவிருக்கும் மக்களவை தேர்தலில், ராஜ்நந்த்கான் தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக களமிறங்கியுள்ளார் சத்தீஸ்கர் முன்னாள் முதலமைச்சர் பூபேஷ் பாகல்.
பிரதமர் மோடியை தோற்கடிக்க அதிகபட்ச தொகுதிகளில் வெற்றி பெறுவதே எங்கள் முன்னுரிமை மற்றும் இலக்கு. என காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் வயநாடு தொகுதியின் மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி மீண்டும் வயநாடு தொகுதியில் போட்டியிடவுள்ளார்.
சிவராத்திரி விழாவை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள சிவாலயங்களில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
உடல்நலக்குறைவு காரணமாக நாகை எம்.பி. செல்வராஜ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழக வெற்றிக்கழகத்தில் உறுப்பினர் சேர்க்கையை அக்கட்சியின் தலைவர் நடிகர் விஜய் தொடங்கி வைத்துள்ளார்.
பழனி கிரிவலப் பாதையில் வணிக நோக்கில் எந்த நடவடிக்கைகளும் இருக்கக்கூடாது என்று உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
அ.தி.மு.க. கூட்டணியில் மாநிலங்களவை தொகுதியை ஒதுக்கீடு செய்து தருமாறு கேட்டுள்ளதாகவும், விரைவில் நல்ல முடிவு வரும் என்று தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட்டால் அமெரிக்க தூதரக அதிகாரிகள் வெளியேற்றப்படுவார்கள் என்று ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது. ரஷ்யாவுக்கான அமெரிக்க தூதர் லைனி டிரேசியை வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கு வரவழைத்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பாஜகவுடன் அதிமுக கூட்டணியை முறித்துக் கொள்வதாக எடுத்த முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
வழக்குகளில் தொடர்புடையவர்களுக்கு பட்டப்பெயர் வைக்கக் கூடாது. பட்டப்பெயர் வைக்கும் நடைமுறையை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று காவல்துறைக்கு சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மக்களவைத் தேர்தலில் வி.சி.க.வுக்கு சிதம்பரம் மற்றும் விழுப்புரம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
தி.மு.க. - வி.சி.க. இடையே இன்னும் சற்று நேரத்தில் தொகுதிப் பங்கீடு கையெழுத்தாக உள்ளது. இதற்காக, அண்ணா அறிவாலயம் வந்துள்ளார் வி.சி.க. தலைவர் திருமாவளவன்
இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தியின் மனைவி சுதாமூர்த்தி மாநிலங்களவை எம்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
மக்களவைத் தொகுதியில் எந்த தொகுதியில் போட்டி என்பது விரைவில் அறிவிக்கப்படும் என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.
மக்களவை தேர்தலில் கோவை, பொள்ளாச்சி, நீலகிரியில் பாஜக வெல்லும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். தேர்தல் முடிந்த பிறகு பாஜகவின் வளர்ச்சி என்ன என்பது புரியும் என கூறியுள்ளார்.
பாஸ்போர்ட் பெற இலங்கை தூதரகத்திற்கு நேர்காணல் வர ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட முருகன் முன் அனுமதி பெற வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் போராட்டம் நடத்தி வரும் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்களுடன் தமிழ்நாடு அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இந்திய இளைஞர்கள் 35 பேர் ஆட்கடத்தல் செய்து ரஷ்ய ராணுவத்தில் வலுகட்டாயமாக சேர்ப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் சிபிஐ அதிகாரிகள் விசா நிறுவனங்கள் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.
மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தரப்பில் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த விசிக தலைவர் திருமாவளவன், முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்துள்ளார்.
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, “நமது வாழ்வில் பெண்களின் பங்களிப்பும் தியாகமும் அளவீடற்றவை.அவர்களின் கண்ணியத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்வேன் என ஒவ்வொரு ஆணும் உறுதிமொழி எடுத்துக்கொள்ளவேண்டும். எதிலும் சளைக்காத பெண்ணினத்தை எல்லா விஷயங்களிலும் இணைத்துக்கொண்டு அனைத்திலும் சம உரிமை கிடைக்கச் செய்வோம். சாதிக்கத் துடிக்கும் பெண்கள் அனைவரையும் சர்வதேச மகளிர் தினத்தில் வாழ்த்தி மகிழ்கிறேன்” என ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகம் உறுப்பினர் சேர்க்கைக்கான செயலியை இன்று நடிகரும், அக்கட்சியின் தலைவருமான விஜய் அறிமுகம் செய்து வைக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.முன்னதாக உறுப்பினர் சேர்க்கைக்கு பெண்கள் தலைமையிலான குழுவை அமைத்து விஜய் உத்தரவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
புதுச்சேரியில் 9 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை கண்டித்தும் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்றும் இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது.
கனடாவில் நடந்த கத்திக்குத்து தாக்குதல் சம்பவத்தில் இலங்கையை சேர்ந்த 6 பேர் உயிரிழப்பு
கனடா தலைநகர் ஒட்டாவாவில் இலங்கையை சேர்ந்த குடும்பம் வசித்து வருகிறது. 35 வயதான தர்ஷினி தனது கணவர் மற்றும் 4 குழந்தைகளுடன் வசித்து வந்தார். இந்நிலையில், பார்ஹெவன் பகுதியில் வசித்துவந்த தர்ஷினி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது நேற்று இரவு கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
Background
Petrol Diesel Price Today, March 8: கிட்டத்தட்ட மாற்றம் இல்லாமல் 20 மாதங்களை விட்ட நிலையில், சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரத்தை அறியலாம்.
பெட்ரோல், டீசல்:
உலகமே எரிபொருளை மையமாகக் கொண்டு தான் இயங்கி வரும் வேளையில் முழுமையான மின்சார சக்தியில் செயல்படும் அளவிற்கு உலக நாடுகள் தங்களை உயர்த்திக் கொள்ள முயற்சித்து வருகின்றன. அந்த வரிசையில் இந்தியாவும் முழுமையாகக் களம் கண்டுள்ளது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் சம்பந்தமான பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன. அதேசமயம் வெகு விரைவில் முற்றிலுமான மின்மயமான நாட்டினை நோக்கி இந்தியா தன்னை நகர்த்திக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவை பொறுத்தவரை 80% வாகனங்கள் பெட்ரோல், டீசல் ஆகியவற்றில் இயங்கி வருகிறது. இதன் காரணமாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு மக்களின் அன்றாட வாழ்க்கையில் பெரும் மாற்றத்தினை ஏற்படுத்துகிறது. அதேபோல் எரிபொருட்களின் விலை உயர்வு என்பது அன்றாட அத்தியாவசியப் பொருட்களின் மீதான விலை உயர்வில் மிகப்பெரிய அளவில் பிரதிபலிக்கும். எனவே சாமானிய மக்களும் எரிபொருள் விலை நிலவரத்தை ஒவ்வொரு நாளும் கண்காணித்து வருகிறார்கள்.
இன்றைய விலை நிலவரம்
இந்நிலையில் சென்னையில் இன்று ( மார்ச் 8ஆம் தேதி) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63 க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை நிர்ணயமானது தொடர்ந்து மாற்றமின்றி 657வது நாளாக தொடர்கிறது. அதாவது, விலை மாற்றமின்றி பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்படுவது 21 மாதங்களை பூர்த்தி செய்துள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். முன்னதாக கடந்த 2020, 2021 ஆம் ஆண்டுகளில் பரவிய கொரோனா வைரஸ் தொற்றால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் மிகப்பெரிய பொருளாதார பாதிப்பை சந்தித்தனர்.
அப்போது கலால் வரி குறைப்பால் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை 6 ரூபாய்க்கும் குறைந்தது. இத்தகைய சூழலில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி 16 மாதங்களை கடந்துள்ளது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேசிய உயிரி எரிபொருள் கொள்கை
கடந்த 2018ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்த தேசிய உயிரி எரிபொருள் கொள்கை 2030ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனாலைக் கலந்து விற்க இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், அந்த இலக்கு தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக 2025 ஆம் ஆண்டு என மாற்றியமைக்கப்பட்டது.
இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, ”இருபது சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் டிசம்பர் அல்லது ஜனவரி முதல் நாட்டில் கிடைக்கும்” எனத்தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எத்தனால் உற்பத்தியை நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். ஏப்ரல் 2023க்கு முன்னதாக டிசம்பர் அல்லது ஜனவரியில் 20 சதவீதம் கலப்பு எரிபொருள் சந்தைக்கு வரும் என்று நான் நம்புகிறேன்" என் கூறினார்.
நெகிழ்வான எரிபொருள் வாகனங்கள் (கலப்பு எரிபொருளில் இயங்கும் வாகனங்கள்) கிடைக்கும் பிரேசிலை உதாரணமாக மேற்கோள் காட்டி பேசிய ஹர்தீப் சிங் பூரி, "நுகர்வோர் விருப்பப்படி எத்தனால் அல்லது பெட்ரோலை எடுத்துக் கொள்ளலாம். இது அரசாங்கத்தின் இறுதி இலக்காக இருக்கும்.
இருப்பினும், அந்த நிலையை அடைய, சில தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. அதற்கான, பணிகள் நடந்து வருகின்றன. எத்தனால் கலப்படம் தொடர்பாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுடன் ஒரு முக்கிய சந்திப்பை நடத்த உள்ளோம். பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலப்பதை அடைவதற்கான இலக்கு தேதியை 2025ஆம் ஆண்டுக்கு ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியா முன்னெடுத்துள்ளது.
பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதற்கு, நமது நாட்டிற்கு 1,000 கோடி லிட்டர் கொள்ளளவு தேவைப்படுகிறது. 450 கோடி லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 400 கோடி லிட்டருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 20 சதவிகித கலப்பிற்கான போதுமான எத்தனால் கைவசம் உள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து பெட்ரோலிலும் 20 சதவீதம் எத்தனால் இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -