Breaking News LIVE: உத்தரகாண்டில் இஸ்லாமியர்களின் மதராசா இடிக்கப்பட்டதால் வன்முறை

Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் கீழே காணலாம்.

ABP NADU Last Updated: 08 Feb 2024 07:42 PM
உத்தரகாண்டில் இஸ்லாமியர்களின் மதராசா இடிக்கப்பட்டதால் வன்முறை

உத்தரகாண்டில் உள்ள ஹல்ட்வானியில் இஸ்லாமியர்களின் படிப்பகமான மதராசா இடிக்கப்பட்டதன் காரணமாக அங்கு வன்முறை ஏற்பட்டுள்ளது.

கோவை, பொள்ளாச்சி, நீலகிரி தொகுதிகளுக்கான நாம் தமிழர் வேட்பாளர் அறிவிப்பு

கோவை, நீலகிரி மற்றும் பொள்ளாச்சி தொகுதிகளுக்கான நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

காங்கிரஸ் அரசின் பொருளாதார நிலை, கொள்கைகள் குறித்து மக்களவையில் வெள்ளை அறிக்கை தாக்கல்

கடந்த காங்கிரஸ் அரசின் பொருளாதார நிலை மற்றும் கொள்ளைகள் குறித்து மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விவகாரத்தில் அச்சப்பட வேண்டாம் - காவல்துறை

சென்னையில் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட விவகாரத்தில் பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்திலே மிகவும் பின்தங்கிய மாவட்டம் தேனி - ஆளுநர் ஆர்.என்.ரவி

தமிழகத்திலே மிகவும் பின்தங்கிய மாவட்டமாக தேனி உள்ளது என்று ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியுள்ளார்.

விழுப்புரத்தில் மண் சரிந்து இருவர் உயிரிழந்த இடத்தில் 2 பேர் உயிரிழப்பு

விழுப்புரத்தில் மண் சரிந்து இருவர் உயிரிழந்த இடத்தில் வட்டாட்சியர் நேரில் ஆய்வு செய்துள்ளனர்.

ஜந்தர் மந்தரின் அரசுகளின் சுரண்டலுக்கு எதிரான நியாயம் கேட்கப்பட்டது. இப்போது கேரள முதல்வரே மத்திய அரசின் அநீதியை எதிர்த்து வந்துள்ளார் - அரவிந்த் கெஜ்ரிவால்

Breaking News LIVE: சென்னையில் பிரபல பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. யாரும் பீதியடைய வேண்டாம் - காவல்துறை தகவல்

சென்னையில் உள்ள 5 பிரபல தனியார் பள்ளிகளுக்கு மர்ம நபர், மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததால், பரபரப்பு ஏற்பட்டது. கோபாலபுரம், ஜெ.ஜெ.நகர், ஆர்.ஏ.புரம், அண்ணாநகர், பாரிமுனை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், காவல் துறையினர், மோப்ப நாய் உதவியுடன் சோதனைகளை நடத்தி வருகின்றனர்.

இதுதான் உதாரணம் - பிரதமர் மோடி

Breaking News LIVE: அண்ணாமலை தொடந்த மனு.. தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம்..

சிறுபான்மையினர் குறித்து அவதூறாக பேசியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை தொடர்ந்த மனு தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

Breaking News LIVE: கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி இல்லத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை!

கரூர் மாவட்டம் ராமேஸ்வரபட்டியில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி இல்லத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


ஒரு காரில் வந்த  5 க்கும் மேற்பட்ட அதிகாரிகள் தற்போது அமைச்சர் செந்தில்பாலாஜி இல்லத்தில் அவரது குடும்பத்தினரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Breaking LIVE : முதல்வர் மோடியின் எதிர்ப்பதம்தான் பிரதமர் மோடி - அமைச்சர் பி.டி.ஆர் ட்வீட்

Breaking News LIVE: சென்னையில் என்.ஐ.ஏ. சோதனை..!

சென்னை கொளத்தூரில் குறும்பட இயக்குநர் முகில் சந்திரா வீட்டில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மாவோயிஸ்ட்களுடன் தொடர்பு இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சோதனை நடைபெற்று வருவதாக தகவல். 

Breaking News LIVE: சேப்பாக்கம் மைதானத்தில் ரஞ்சி கோப்பை பார்க்க இலவச அனுமதி..!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தமிழ்நாடு மற்றும் கர்நாடகா இடையிலான போட்டி நடைபெற உள்ள ரஞ்சி கோப்பை போட்டியை காண பார்வையாளர்களுக்கு அனுமதி இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டியானது நாளை தொடங்குகிறது. 

Breaking News LIVE: அண்டர் 19 உலகக் கோப்பை: 2வது அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகள் இன்று மோதல்.

அண்டர் 19 உலகக் கோப்பை 2வது அரையிறுதி போட்டியில் இன்று ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ஏற்கனவே, இந்திய அணி முதல் அரையிறுதி போட்டியில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. 

Breaking News LIVE: பாகிஸ்தானில் இன்று நாடாளுமன்ற தேர்தல்..!

வன்முறை, பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் பாகிஸ்தானில் இன்று நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதையடுத்து, சுமார் 6 லட்சத்து 50 ஆயிரம் பாதுகாப்புப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Breaking News LIVE: மத்திய அரசை கண்டித்து இன்று முதலமைச்சர் பினராயி விஜயன் போராட்டம்..!

கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் டெல்லி ஜந்தர் மந்தரில் அம்மாநில எம்பிக்கள் போராட்டம் நடத்துகின்றனர். டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் திமுக எம்பிக்கள் கறுப்பு உடை அணிந்து போராட்டம் நடத்துகின்றனர்.

Background

Petrol Diesel Price Today, February 8: கிட்டத்தட்ட மாற்றம் இல்லாமல் 600 நாட்கள் கடந்து விட்ட நிலையில், சென்னையில்  இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரத்தை அறியலாம்.


பெட்ரோல், டீசல்:


உலகமே எரிபொருளை மையமாகக் கொண்டு தான் இயங்கி வரும் வேளையில் முழுமையான மின்சார சக்தியில் செயல்படும் அளவிற்கு உலக நாடுகள் தங்களை உயர்த்திக் கொள்ள முயற்சித்து வருகின்றன. அந்த வரிசையில் இந்தியாவும்  முழுமையாகக் களம் கண்டுள்ளது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் சம்பந்தமான பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன.  அதேசமயம் வெகு விரைவில் முற்றிலுமான மின்மயமான நாட்டினை நோக்கி இந்தியா தன்னை நகர்த்திக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


இந்தியாவை பொறுத்தவரை 80% வாகனங்கள் பெட்ரோல், டீசல் ஆகியவற்றில் இயங்கி வருகிறது. இதன் காரணமாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு மக்களின் அன்றாட வாழ்க்கையில் பெரும் மாற்றத்தினை ஏற்படுத்துகிறது. அதேபோல் எரிபொருட்களின் விலை உயர்வு என்பது அன்றாட அத்தியாவசியப் பொருட்களின் மீதான விலை உயர்வில் மிகப்பெரிய அளவில் பிரதிபலிக்கும். எனவே சாமானிய மக்களும் எரிபொருள் விலை நிலவரத்தை ஒவ்வொரு நாளும் கண்காணித்து வருகிறார்கள்.


இன்றைய விலை நிலவரம்


இந்நிலையில் சென்னையில் இன்று (பிப்ரவரி 8ஆம் தேதி) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63 க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை நிர்ணயமானது தொடர்ந்து மாற்றமின்றி 627வது நாளாக தொடர்கிறது. அதாவது, விலை மாற்றமின்றி பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்படுவது 20 மாதங்களை பூர்த்தி செய்துள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். முன்னதாக கடந்த 2020, 2021 ஆம் ஆண்டுகளில் பரவிய கொரோனா வைரஸ் தொற்றால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் மிகப்பெரிய பொருளாதார பாதிப்பை சந்தித்தனர்.









அப்போது கலால் வரி குறைப்பால் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை 6 ரூபாய்க்கும் குறைந்தது.   இத்தகைய சூழலில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி 16 மாதங்களை கடந்துள்ளது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தேசிய உயிரி எரிபொருள் கொள்கை


கடந்த 2018ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்த தேசிய உயிரி எரிபொருள் கொள்கை 2030ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனாலைக் கலந்து விற்க இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், அந்த இலக்கு தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக 2025 ஆம் ஆண்டு என மாற்றியமைக்கப்பட்டது.


இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, ”இருபது சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் டிசம்பர் அல்லது ஜனவரி முதல் நாட்டில் கிடைக்கும்” எனத்தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எத்தனால் உற்பத்தியை நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். ஏப்ரல் 2023க்கு முன்னதாக டிசம்பர் அல்லது ஜனவரியில் 20 சதவீதம் கலப்பு எரிபொருள் சந்தைக்கு வரும் என்று நான் நம்புகிறேன்" என் கூறினார். 


நெகிழ்வான எரிபொருள் வாகனங்கள் (கலப்பு எரிபொருளில் இயங்கும் வாகனங்கள்) கிடைக்கும் பிரேசிலை உதாரணமாக மேற்கோள் காட்டி பேசிய ஹர்தீப் சிங் பூரி, "நுகர்வோர் விருப்பப்படி எத்தனால் அல்லது பெட்ரோலை எடுத்துக் கொள்ளலாம். இது அரசாங்கத்தின் இறுதி இலக்காக இருக்கும். 


இருப்பினும், அந்த நிலையை அடைய, சில தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. அதற்கான, பணிகள் நடந்து வருகின்றன. எத்தனால் கலப்படம் தொடர்பாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுடன் ஒரு முக்கிய சந்திப்பை நடத்த உள்ளோம். பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலப்பதை அடைவதற்கான இலக்கு தேதியை 2025ஆம் ஆண்டுக்கு ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியா முன்னெடுத்துள்ளது.


பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதற்கு, நமது நாட்டிற்கு 1,000 கோடி லிட்டர் கொள்ளளவு தேவைப்படுகிறது. 450 கோடி லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 400 கோடி லிட்டருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 20 சதவிகித கலப்பிற்கான போதுமான எத்தனால் கைவசம் உள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து பெட்ரோலிலும் 20 சதவீதம் எத்தனால் இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.