Breaking News LIVE: உதகையில் மண் சரிந்து 6 பேர் உயிரிழப்பு! சாலை மறியலில் ஈடுபட்ட உறவினர்கள்!
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் கீழே காணலாம்.
உதகையில் மண் சரிவால் 7 பேர் உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மண் சரிவால் 7 பேர் உயிரிழந்த நிலையில், அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளர்கள் மற்றும் ஒப்பந்ததாரரை கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
நாடாளுமன்ற தேர்தலில் அதிக தொகுதிகளை ஒதுக்கும் கட்சியுடனே தேமுதிக கூட்டணி. 14 மக்களவை தொகுதிகள் ஒரு ராஜ்ஜிய சபா சீட் தரும் கட்சியுடன் கூட்டணி என்று முடிவு எடுத்துள்ளோம் என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
உதகையில் மண் சரிவினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7ஆக உயிரிழந்துள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மேலும், மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.
Indo Myanmar Border : Breaking LIVE : இந்திய மியான்மர் எல்லையில் புகமுடியா வேலி அமைக்கப்படும் - அமித்ஷா
Fund Allotment to Tamilnadu By Central Government : நிதி ஒதுக்கீட்டு விவகாரத்தில், ரயில்வே உள்ளிட்ட திட்டங்களுக்கு தென் மாநிலங்களுக்கு மத்திய அரசு பாரபட்சம் காட்டுகிறது.
அதிமுக எம்.எல்.ஏக்கள் உட்பட மாற்றுக் கட்சியில் இருந்து மத்திய இணையமைச்சர், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆகியோர் முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர்.
பாஜகவுடனான கூட்டணிக் கதவுகள் சாத்தப்பட்டுவிட்டதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலில் அதிமுகவுடனான கூட்டணிக்கு பாஜகவின் கதவுகள் திறந்திருப்பதாக அமித்ஷா கூறியுள்ளது அவரது நல்ல எண்ணத்தைக் காட்டுகின்றது என ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
இசையமைப்பாளர் விஜய் ஆனந்த் உடல் நலக் குறைவால் சென்னையில் இன்று அதாவது பிப்ரவரி 7ஆம் தேதி காலமானார். இவருக்கு வயது 71.
Gold Rate : சென்னையில் ஆபரணத் தங்கத்தில் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்துள்ளது.
நடிகர் விஜயின் அரசியல் பயணத்தை வரவேற்கின்றேன் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Ajit Pawar Party :
ஸ்பெயின் பயணம் சாதனைப் பயணமாக அமைந்தது என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஸ்பெயினில் அரசுமுறை பயணத்தை முடித்துக் கொண்டு, முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அதாவது பிப்ரவரி 7ஆம் தேதி காலை 8 மணி அளவில் சென்னை திரும்பினார்.
மத்திய அரசை கண்டித்து கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் இன்று போராட்டம் நடைபெறுகிறது. டெல்லியில் உள்ள ஜந்தர்மந்தரில் இப்போராட்டம் நடைபெறவுள்ளது.
ஸ்பெயினில் அரசுமுறை பயணத்தை முடித்த முதலமைச்சர் ஸ்டாலின் இன்று சென்னைக்கு திரும்பவுள்ளார்.
ஜே.பி. நட்டா தமிழ்நாடு வரவுள்ள நிலையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை டெல்லி புறப்பட்டார்.
Background
Petrol Diesel Price Today, February 7: கிட்டத்தட்ட மாற்றம் இல்லாமல் 600 நாட்கள் கடந்து விட்ட நிலையில், சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரத்தை அறியலாம்.
பெட்ரோல், டீசல்:
உலகமே எரிபொருளை மையமாகக் கொண்டு தான் இயங்கி வரும் வேளையில் முழுமையான மின்சார சக்தியில் செயல்படும் அளவிற்கு உலக நாடுகள் தங்களை உயர்த்திக் கொள்ள முயற்சித்து வருகின்றன. அந்த வரிசையில் இந்தியாவும் முழுமையாகக் களம் கண்டுள்ளது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் சம்பந்தமான பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன. அதேசமயம் வெகு விரைவில் முற்றிலுமான மின்மயமான நாட்டினை நோக்கி இந்தியா தன்னை நகர்த்திக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவை பொறுத்தவரை 80% வாகனங்கள் பெட்ரோல், டீசல் ஆகியவற்றில் இயங்கி வருகிறது. இதன் காரணமாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு மக்களின் அன்றாட வாழ்க்கையில் பெரும் மாற்றத்தினை ஏற்படுத்துகிறது. அதேபோல் எரிபொருட்களின் விலை உயர்வு என்பது அன்றாட அத்தியாவசியப் பொருட்களின் மீதான விலை உயர்வில் மிகப்பெரிய அளவில் பிரதிபலிக்கும். எனவே சாமானிய மக்களும் எரிபொருள் விலை நிலவரத்தை ஒவ்வொரு நாளும் கண்காணித்து வருகிறார்கள்.
இன்றைய விலை நிலவரம்
இந்நிலையில் சென்னையில் இன்று (பிப்ரவரி 7ஆம் தேதி) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63 க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை நிர்ணயமானது தொடர்ந்து மாற்றமின்றி 626வது நாளாக தொடர்கிறது. அதாவது, விலை மாற்றமின்றி பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்படுவது 20 மாதங்களை பூர்த்தி செய்துள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். முன்னதாக கடந்த 2020, 2021 ஆம் ஆண்டுகளில் பரவிய கொரோனா வைரஸ் தொற்றால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் மிகப்பெரிய பொருளாதார பாதிப்பை சந்தித்தனர்.
அப்போது கலால் வரி குறைப்பால் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை 6 ரூபாய்க்கும் குறைந்தது. இத்தகைய சூழலில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி 16 மாதங்களை கடந்துள்ளது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேசிய உயிரி எரிபொருள் கொள்கை
கடந்த 2018ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்த தேசிய உயிரி எரிபொருள் கொள்கை 2030ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனாலைக் கலந்து விற்க இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், அந்த இலக்கு தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக 2025 ஆம் ஆண்டு என மாற்றியமைக்கப்பட்டது.
இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, ”இருபது சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் டிசம்பர் அல்லது ஜனவரி முதல் நாட்டில் கிடைக்கும்” எனத்தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எத்தனால் உற்பத்தியை நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். ஏப்ரல் 2023க்கு முன்னதாக டிசம்பர் அல்லது ஜனவரியில் 20 சதவீதம் கலப்பு எரிபொருள் சந்தைக்கு வரும் என்று நான் நம்புகிறேன்" என் கூறினார்.
நெகிழ்வான எரிபொருள் வாகனங்கள் (கலப்பு எரிபொருளில் இயங்கும் வாகனங்கள்) கிடைக்கும் பிரேசிலை உதாரணமாக மேற்கோள் காட்டி பேசிய ஹர்தீப் சிங் பூரி, "நுகர்வோர் விருப்பப்படி எத்தனால் அல்லது பெட்ரோலை எடுத்துக் கொள்ளலாம். இது அரசாங்கத்தின் இறுதி இலக்காக இருக்கும்.
இருப்பினும், அந்த நிலையை அடைய, சில தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. அதற்கான, பணிகள் நடந்து வருகின்றன. எத்தனால் கலப்படம் தொடர்பாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுடன் ஒரு முக்கிய சந்திப்பை நடத்த உள்ளோம். பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலப்பதை அடைவதற்கான இலக்கு தேதியை 2025ஆம் ஆண்டுக்கு ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியா முன்னெடுத்துள்ளது.
பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதற்கு, நமது நாட்டிற்கு 1,000 கோடி லிட்டர் கொள்ளளவு தேவைப்படுகிறது. 450 கோடி லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 400 கோடி லிட்டருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 20 சதவிகித கலப்பிற்கான போதுமான எத்தனால் கைவசம் உள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து பெட்ரோலிலும் 20 சதவீதம் எத்தனால் இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -