Breaking News LIVE: டம்மி அரசை நடத்திக்கொண்டிருக்கிறது பாஜக - முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் காண, ஏபிபி இணைய செய்தி தளத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள்
பாஜக தேசிய தலைவர் நட்டாவின் வாகன பேரணி திருச்சியில் தொடங்கியது.
நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் மாட்டிய ரூ.4 கோடி பணத்துக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்றும், தனக்குச் சொந்தமான இடத்தில் பணம் கைப்பற்றப்படவில்லை எனவும் திருநெல்வேலி நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் விளக்கம் அளித்துள்ளார்.
நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் ஆதரவாளர் வீட்டில் ரூபாய் இரண்டு லட்சம் மற்றும் பரிசுப் பொருட்களை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
நடிகையும் பாரதிய ஜனதா கட்சி பிரமுகருமான குஷ்பு நடப்பு மக்களவைத் தேர்தலில் பிரச்சாரத்தில் ஈடுபடுவதில் இருந்து ஓய்வு அளிக்குமாறு பாரதிய ஜனதா கட்சித் தலைவர் ஜே.பி. நட்டாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதில், ”எழும்பு முறிவு காரணமாக ஏற்கனவே சிகிச்சை மேற்கொண்டு இருந்தேன். கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்த பிரச்னையுடன் இருந்து வருகின்றேன். இந்நிலையில் எனது மருத்துவர்கள் எனது உடல் நிலையை மனதில் கொண்டு, பிரச்சாரத்தில் ஈடுபடவேண்டாம் என அறிவுறுத்தியுள்ளனர். எலும்பு முறிவு பிரச்னையால் என்னால் நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர முடியாத நிலையும், நீண்ட தூரம் பயணம் மேற்கொள்ள முடியாத சூழலும் ஏற்பட்டுள்ளது. எனவே எனது உடல் நிலையை கருத்தில் கொண்டு என்னால் தொடர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதற்கான என்னை மன்னிக்கவேண்டும். பிரச்சாரத்தில் ஈடுபடமுடியாதது மிகவும் மனவருத்ததை அளிக்கின்றது.
தற்போது உள்ள பிரச்னை உயிருக்கு ஆபத்தான நிலை இல்லை என்றாலும், மருத்துவர்கள் சிகிச்சை மேற்கொள்ள அறிவுருத்தியதால் என்னால் பிரச்சாரத்தில் ஈடுபட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் நான் தொடர்ந்து சமூக வலைதளங்களில் பாஜகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யவுள்ளேன்” இவ்வாறு குஷ்பு தனது கடித்தத்தில் குறிப்பிட்டுள்ளார்.
நிர்மலா சீதாராமன், ஜெய்ஷங்கர் ஆகியோர் பிரதமர் மோடி பின்னால் ஒளிந்துகொள்ளாமல் தமிழ்நாட்டில் போட்டியிட வேண்டும்
- எம்.பி ப.சிதம்பரம்
தாம்பரம் ரயில் நிலையத்தில் சுமார் ₹4 கோடி ரொக்கம் பறிமுதல். நெல்லை பா.ஜ.க வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான பணம் என அதிகாரிகள் தகவல். நைனார் நாகேந்திரனுக்கு சொந்தமான புரசைவாக்கத்தில் உள்ள ப்ளூ டைமண்ட் ஹோட்டல் பணியாளர்கள் பணத்தை எடுத்துச் சென்றபோது சிக்கியது.
தாம்பரம் ரயில் நிலையத்தில் உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்ற ரூ.4 கோடி பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர் - இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Background
- சிதம்பரத்தில் மக்களவை தேர்தலுக்கான பரப்புரையில் ஈடுபட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மோடி மீண்டும் இந்தியாவின் பிரதமரானால் ஜனநாயகம் என்ற ஒன்றே இருக்காது என விமர்சித்துள்ளார். மேலும் இடஒதுக்கீட்டால் சிலர் முன்னேறியதை பாஜகவால் பொறுக்க முடியவில்லை. எரியுதடி மாலா.. ஃபேனை போடு என்ற வடிவேலு வசனத்தை பேசி பாஜகவை கிண்டல் செய்தார். திமுக செய்த நலத்திட்டங்கள் அதிமுகவின் தொகுதிகளையும் வரும் சட்டமன்ற தேர்தலில் பறிக்கும் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
- மக்களவை தேர்தலில் போட்டியிடும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா இன்று தமிழ்நாட்டில் பரப்புரை மேற்கொள்கிறார். தமிழ்நாட்டில் பாஜக கூட்டணியில் பாமக, தமாகா, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட பல கட்சிகள் இணைந்து தேர்தலை சந்திக்கிறது. இதற்காக நேற்று இரவு கேரளாவில் இருந்து ஜே.பி.நட்டா திருச்சிக்கு வருகை தந்தார். காலை சிதம்பரம், கரூர், விருதுநகர், திருச்சி ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொள்கிறார்.
- ஐபிஎல் போட்டிகளில் இன்று விடுமுறை நாள் என்பதால் 2 ஆட்டங்கள் நடக்கிறது. மாலை 3.30 மணிக்கு தொடங்கும் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி, டெல்லி கேப்பிடல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இப்போட்டியில் எப்படியாவது வெற்றி பெற்று வெற்றி கணக்கை தொடங்கும் முனைப்பில் மும்பை அணி உள்ளது. இதேபோல் இரவு 7.30 மணிக்கு தொடங்கும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
- உடல்நலக்குறைவால் உயிரிழந்த விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏ., புகழேந்தி உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு நேரில் அஞ்சலி செலுத்தினார். அவரது உடலானது இன்று மாலை நல்லடக்கம் செய்யப்படுகிறது.
- தமிழ்நாட்டில் இன்று மற்றும் நாளை வெப்ப அலை வீசும் என்பதால் பொதுமக்கள் பகல் நேரங்களில் வெளியே செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -