Breaking News LIVE: இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் முடக்கம் - பயனாளர்கள் அதிர்ச்சி

Breaking News Live: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே உடனுக்குடன் காணலாம்.

குலசேகரன் முனிரத்தினம் Last Updated: 05 Mar 2024 09:45 PM
இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் முடக்கம்

இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் சமூக வலைதளங்கள் முடங்கியதால் பயனாளர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

திருக்கோவில

திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதி காலியானதாக சட்டப்பேரவை செயலாளர் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளார்.

குஜராத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகளவில் உள்ளது - அமைச்சர் ரகுபதி

குஜராத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகளவில் இருக்கிறது என்று அமைச்சர் ரகுபதி பேசியுள்ளார்.

ராமநாதபுரத்தில் ரூபாய் 108 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்

ராமநாதபுரத்தில் ரூபாய் 108 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பா.ஜ.க.வுக்கு தாமரை சின்னம் ஒதுக்கிய வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு

பா.ஜ.க.வுக்கு தாமரை சின்னம் ஒதுக்கிய வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது.

தெலங்கானாவில் 10 மக்களவைத் தொகுதிகளில் வி.சி.க. போட்டி - திருமாவளவன் அறிவிப்பு

தெலங்கானாவில் 10 மக்களவைத் தொகுதிகளில் போட்டியிடுகிறோம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் மாயமான சிறுமி சடலமாக மீட்பு

புதுச்சேரியில் 3 நாட்களாக மாயமான சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

பாதுகாப்பான இடங்களுக்கு இந்தியர்கள் செல்க - இஸ்ரேலுக்கான இந்திய தூதர்

இந்தியர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு இஸ்ரேலுக்கான இந்திய தூதர் அறிவுறுத்தியுள்ளார்.

பழனி கிரிவலப்பாதையில் 8ம் தேதி முதல் தனியார் வாகனங்களுக்கு செல்ல தடை

பழனி கிரிவலப்பாதையில் வரும் 8ம் தேதி முதல் தனியார் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

டி. கே. சிவக்குமார் மீதான வழக்கு ரத்து

கர்நாடகா துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமாருக்கு எதிராக, அமலாக்கத்துறை கடந்த 2018ம் ஆண்டு தொடர்ந்த பணமோசடி வழக்கை உச்சநீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.  இந்த வழக்கு தொடர்பாக அவர் 2019ம் ஆண்டு செப்டம்பர் மாதம் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் வெளியே வந்தது குறிப்பிடத்தக்கது.

தெலுங்கானாவில் ரயிலில் தீ விபத்து

தெலங்கானா மாநிலம் காசிபேட் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த ரயிலில் பயங்கர தீ விபத்து. பயணிகள் ரயிலின் பல பெட்டிகள் தீப்பிடித்து எரிந்து சேதம். விபத்துக்கான காரணம் தொடர்பான தகவல் எதுவு இதுவரை வெளியாகவில்லை.

Breaking News LIVE: புதுச்சேரியில் புதிய அமைச்சராக திருமுருகன் நியமனம்..!

புதுச்சேரியில் புதிய அமைச்சராக என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ திருமுருகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். காரைக்கால் வடக்கு தொகுதியிலிருந்து சட்டமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் திருமுருகன். 

விழுப்புரம் நீதிமன்றத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி.சண்முகம் நேரில் ஆஜர்

கடந்த ஆண்டு ஜூலை மாதம் விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் தமிழ்நாடு அரசையும் முதல்வர் ஸ்டாலினையும் தரக்குறைவாக பேசியதாக அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி.சண்முகம் மீது விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கில் இன்று சிவி.சண்முகம் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.
இந்த வழக்கு மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி பூர்ணிமா முன்பாக விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பூர்ணிமா வருகின்ற 19ஆம் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்தார்.

Breaking News LIVE: எய்ம்ஸ் கட்டுமான பணி தொடக்கம் தேர்தலுக்கான நாடகம் - சு.வெங்கடேசன் எம்.பி

மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணியை மத்திய அரசு தொடங்கியுள்ளது தேர்தலுக்கான நாடகம். இந்த ஆண்டு டிசம்பரில் பொதுத்தேர்தலாக இருந்திருந்தால் நவம்பரில் கட்டுமான பணியை தொடங்கி இருப்பார்கள். 2 மாதங்களில் 4 முரை தமிழ்நாட்டுக்கு வந்த பிரதமர், எய்ம்ஸ் கட்டுமான பணியை ஏன் தொடங்கி வைக்கவில்லை என சு.வெங்கடேசன் எம்.பி கேள்வி எழுப்பியுள்ளார். 

ஜாபர் சாதிக்கின் சகோதரர் விசிக-விலிருந்து நீக்கம்

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் திமுக முன்னாள் பிரமுகர் ஜாபர் சாதிக்கை காவல்துறை தேடி வருகிறது. இந்நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியிலிருந்த அவரது சகோதரர் சலீமை அக்கட்சி தலைமை நீக்கியுள்ளது.

சென்னையில் தங்கம் விலை புதிய உச்சம்

சென்னையில் நேற்று கிராம் ரூ. 5,930 இருந்த நிலையில் கிராமுக்கு ரூ. 85 உயர்ந்து இன்று ரூ. 6,015 ஆக புதிய உச்சத்தை தொட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை சவரன் ரூ.46,720 ஆக இருந்த நிலையில், இன்று ரூ. 48,120ஆக உயர்ந்துள்ளது. கடந்த 4 நாட்களில் ரூ.1400 தங்கம் விலை உயர்ந்துள்ளது. 

இந்தோனேசியாவில் முதல் இந்து பல்கலைக்கழகம் உருவாக்கம்

இந்தோனேசியாவின் முதல் இந்து பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டுள்ளது. பாலித்தீவில் 1993ஆம் ஆண்டு இந்து மத ஆசிரியர்களால் கல்வி நிறுவனம் தொடங்கப்பட்டது. 1999ஆம் ஆண்டு இது இந்த மத அரசு கல்லூரியாக தரம் உயர்த்தப்பட்டது. 2004ஆம் ஆண்டு இந்து ட்பர்ம அரசு நிறுவனமாக தரம் உயர்த்தப்பட்டது. 


இந்நிலையில்தான் இந்நிறுவனம் பல்கலைக்கழக அந்தஸ்து பெற்றுள்ளது. இதற்கு அதிபர் ஜோகோவிவிடோடோ கையெழுத்திட்டுள்ளார். அதிபர் ஒழுங்குமுறை அதிகாரத்தின் கீழ் இந்தப் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டுள்ளது. 

பூண்டி ஏரியில் இருந்து நீர்திறப்பு அதிகரிப்பு

பூண்டி ஏரியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு திறக்கப்படும் நீர் 150 கன அடியில் இருந்து 250 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 


3231 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட பூண்டி ஏரியில் நீர் இருப்பு 2259 மில்லியன் கன அடியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. 

சென்னையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை

பெங்களூருவில் இருந்து வந்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் சென்னையில் மண்ணடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.  பெங்களூரு சிறையில் உள்ள தீவிரவாதியின் வங்கி கணக்குக்கு ரூ.1 லட்சம் ஹவாலா பணம் பரிமாற்றம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.  பெங்களூரு சிறை கைதிகளை தீவிரவாத இயக்கத்தில் சேர்த்த வழக்கு தொடர்பாக 7 மாநிலங்களில் என்.ஐ.ஏ சோதனை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Background

Petrol Diesel Price Today, March 5: கிட்டத்தட்ட மாற்றம் இல்லாமல் 18 மாதங்களை விட்ட நிலையில், சென்னையில்  இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரத்தை அறியலாம்.


பெட்ரோல், டீசல்:


உலகமே எரிபொருளை மையமாகக் கொண்டு தான் இயங்கி வரும் வேளையில் முழுமையான மின்சார சக்தியில் செயல்படும் அளவிற்கு உலக நாடுகள் தங்களை உயர்த்திக் கொள்ள முயற்சித்து வருகின்றன. அந்த வரிசையில் இந்தியாவும்  முழுமையாகக் களம் கண்டுள்ளது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் சம்பந்தமான பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன.  அதேசமயம் வெகு விரைவில் முற்றிலுமான மின்மயமான நாட்டினை நோக்கி இந்தியா தன்னை நகர்த்திக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


இந்தியாவை பொறுத்தவரை 80% வாகனங்கள் பெட்ரோல், டீசல் ஆகியவற்றில் இயங்கி வருகிறது. இதன் காரணமாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு மக்களின் அன்றாட வாழ்க்கையில் பெரும் மாற்றத்தினை ஏற்படுத்துகிறது. அதேபோல் எரிபொருட்களின் விலை உயர்வு என்பது அன்றாட அத்தியாவசியப் பொருட்களின் மீதான விலை உயர்வில் மிகப்பெரிய அளவில் பிரதிபலிக்கும். எனவே சாமானிய மக்களும் எரிபொருள் விலை நிலவரத்தை ஒவ்வொரு நாளும் கண்காணித்து வருகிறார்கள்.


இன்றைய விலை நிலவரம்


இந்நிலையில் சென்னையில் இன்று ( மார்ச் 5ஆம் தேதி) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63 க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை நிர்ணயமானது தொடர்ந்து மாற்றமின்றி 654வது நாளாக தொடர்கிறது. அதாவது, விலை மாற்றமின்றி பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்படுவது 21 மாதங்களை பூர்த்தி செய்துள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். முன்னதாக கடந்த 2020, 2021 ஆம் ஆண்டுகளில் பரவிய கொரோனா வைரஸ் தொற்றால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் மிகப்பெரிய பொருளாதார பாதிப்பை சந்தித்தனர்.









அப்போது கலால் வரி குறைப்பால் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை 6 ரூபாய்க்கும் குறைந்தது. இத்தகைய சூழலில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி 16 மாதங்களை கடந்துள்ளது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தேசிய உயிரி எரிபொருள் கொள்கை


கடந்த 2018ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்த தேசிய உயிரி எரிபொருள் கொள்கை 2030ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனாலைக் கலந்து விற்க இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், அந்த இலக்கு தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக 2025 ஆம் ஆண்டு என மாற்றியமைக்கப்பட்டது.


இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, ”இருபது சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் டிசம்பர் அல்லது ஜனவரி முதல் நாட்டில் கிடைக்கும்” எனத்தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எத்தனால் உற்பத்தியை நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். ஏப்ரல் 2023க்கு முன்னதாக டிசம்பர் அல்லது ஜனவரியில் 20 சதவீதம் கலப்பு எரிபொருள் சந்தைக்கு வரும் என்று நான் நம்புகிறேன்" என் கூறினார். 


நெகிழ்வான எரிபொருள் வாகனங்கள் (கலப்பு எரிபொருளில் இயங்கும் வாகனங்கள்) கிடைக்கும் பிரேசிலை உதாரணமாக மேற்கோள் காட்டி பேசிய ஹர்தீப் சிங் பூரி, "நுகர்வோர் விருப்பப்படி எத்தனால் அல்லது பெட்ரோலை எடுத்துக் கொள்ளலாம். இது அரசாங்கத்தின் இறுதி இலக்காக இருக்கும். 


இருப்பினும், அந்த நிலையை அடைய, சில தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. அதற்கான, பணிகள் நடந்து வருகின்றன. எத்தனால் கலப்படம் தொடர்பாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுடன் ஒரு முக்கிய சந்திப்பை நடத்த உள்ளோம். பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலப்பதை அடைவதற்கான இலக்கு தேதியை 2025ஆம் ஆண்டுக்கு ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியா முன்னெடுத்துள்ளது.


பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதற்கு, நமது நாட்டிற்கு 1,000 கோடி லிட்டர் கொள்ளளவு தேவைப்படுகிறது. 450 கோடி லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 400 கோடி லிட்டருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 20 சதவிகித கலப்பிற்கான போதுமான எத்தனால் கைவசம் உள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து பெட்ரோலிலும் 20 சதவீதம் எத்தனால் இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.