Breaking News LIVE: கரூர் பரமத்தியில் அதிகபட்சமாக 104 டிகிரி வெயில் பதிவு
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் காண, ஏபிபி இணைய செய்தி தளத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள்
தமிழ்நாட்டில் அதிகபட்சமாக கரூர் பரமத்தியில் இன்று 104 டிகிரி வெயில் பதிவானது.
எஸ் தங்கராஜின் தங்கம் சினிமாஸ் மற்றும் சி வி குமாரின் திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் K A ஆண்ட்ரூஸ் இயக்கத்தில் அபி ஹாசன், தெலுங்கு பிக் பாஸ் புகழ் ரத்திகா முதன்மை வேடங்களில் நடிக்கும் 'பீட்சா 4' 'பீட்சா 1' கதையுடன் நேரடி தொடர்பு கொண்ட 'பீட்சா 4' திகில் மற்றும் திரில் நிறைந்த பரபர பயணமாக இருக்கும் என படக்குழு தகவல் தமிழ் திரையுலகில் திகில் திரைப்படங்களுக்கான புதிய டிரெண்டை ஏற்படுத்தி தக்க வைத்துள்ள 'பீட்சா' வரிசையின் முதல் மூன்று பாகங்களின் ஹாட்ரிக் வெற்றியை தொடர்ந்து அதன் நான்காம் பாகமான 'பீட்சா 4' -ஐ K A ஆண்ட்ரூஸ் இயக்குகிறார்.
எஸ். தங்கராஜின் தங்கம் சினிமாஸ் மற்றும் சி.வி. குமாரின் திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரிக்கும் இத்திரைப்படத்தில் பிரபல நடிகர் நாசரின் மகனும் 'கடாரம் கொண்டான்' மற்றும் 'சில நேரங்களில் சில மனிதர்கள்' உள்ளிட்ட படங்களில் நடித்தவருமான அபி ஹாசன் முதன்மை வேடத்தில் நடிக்கிறார். தெலுங்கு பிக் பாஸ் புகழ் ரத்திகா நாயகி ஆவார். 'எல் கே ஜி', 'மூக்குத்தி அம்மன்', 'கொரில்லா', 'களத்தில் சந்திப்போம்', 'அயலி', 'சூது கவ்வும் 2', 'யங் மங் சங்', 'ஃபிளாஷ்பேக்', சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 'வேட்டையன்' உள்ளிட்ட படங்களில் இணை மற்றும் துணை இயக்குநராக பணியாற்றியுள்ள K A ஆண்ட்ரூஸ், 'பீட்சா 4' திரைப்படத்தை இயக்குவது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
"எத்தனையோ திறமையான இயக்குநர்களையும் இதர கலைஞர்களையும் உலகுக்கு அடையாளம் காட்டியுள்ள தயாரிப்பாளர் சி வி குமார் அவர்களின் திருக்குமரன் என்டெர்டெயின்மென்ட் நிறுவனம் மற்றும் தங்கம் சினிமாஸ் தயாரிப்பில், 'பீட்சா' வெற்றி வரிசையின் நான்காம் பாகத்தை இயக்குவது மிகவும் பெருமையாக உள்ளது. முதல் பாகத்திற்கும் நான்காம் பாகத்திற்கும் நேரடி தொடர்பு இருக்கும். அது என்ன என்பது சஸ்பென்ஸ்," என்று இயக்குநர் ஆண்ட்ரூஸ் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், "'ராட்சசன்', 'மார்க் ஆண்டனி' உள்ளிட்ட படங்களின் திரைக்கதையில் பணியாற்றிய எஸ் ஜே அர்ஜுன் 'பீட்சா 4' திரைப்படத்தின் கதை மற்றும் திரைக்கதையை எழுதியுள்ளார். வலுவான குழு இப்படத்திற்காக இணைந்துள்ளது. திரில் மற்றும் திகில் கலந்து ரசிகர்களை பரபரப்பின் உச்சிக்கே கொண்டு செல்லும் வகையில் 'பீட்சா 4' அமையும்," என்று தெரிவித்தார்.

பாஜக மீண்டும் ஆட்சியமைத்தால் சமூக நீதிக்கு சவக்குழி. இட ஒதுக்கீடு, சமூகநீதி ஆகியவற்றுக்கு எதிரான கட்சியாக பாஜக இருக்கிறது. மத்திய அரசு செயலாளர்களின் மூன்று சதவிகிதம் பேர் கூட ஓபிசி பிரிவினர் இல்லை - விழுப்புரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு
நாமக்கல் அருகே மரத்தின் மீது கார் மோதிய விபத்தில் சீராம்பாளையத்தைச் சேர்ந்த 4 இளைஞர்கள் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
திருப்பூர் பாராளுமன்ற வேட்பாளர் ஏ.பி. முருகானந்தம் மீது குன்னத்தூர் காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. காரை சோதனையிட்ட தேர்தல் பறக்கும் படையினரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டது மட்டுல் இல்லாமல் தேர்தல் பறக்கும் படையினரை பணி செய்ய விடாமல தடுக்க முயன்றதன் பேரில் அவர்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோபிச்செட்டிபாளையம் அருகே பறக்கும் படை அதிகாரிகளுக்கு மிரட்டல் விடுத்த பா.ஜ.க. வேட்பாளர் முருகானந்தம் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகா மாநிலத்தில் காங்கிரஸ் தொண்டரை பாஜகவில் சேரும்படி கடத்தி வைத்து மிரட்டியதாக பாஜக எம்.எல்.ஏ மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பெயிண்டர் வேலை செய்யும் சாமுவேலை கடத்தி பாஜகவில் சேரும்படி மிரட்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் தொண்டர் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மக்களவை தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி தரப்பில் இன்று தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. அதில் குறிப்பாக வேளாண் விலை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை சட்டரீதியாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பட்டியலின மாணவர்கள் மீதான துன்புறுத்தல்களைத் தடுக்க ரோஹித் வெமுலா சட்டம் இயற்றப்படும்! -காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் அறிவிப்பு!
அக்னிபாத் திட்டம் ரத்து, நீட் -க்யூட் தேர்வு மாநில விருப்பத்திற்கு உட்பட்டது, மூத்த குடிமக்களுக்கு ரயிலில் மீண்டும் கட்டண சலுகை, 12 ஆம் வகுப்பு வரை இலவச கல்வி, 100 நாட்கள் வேலை திட்ட சம்பளம் ரூ.400 ஆக உயர்வு, தனி நபர் சுதந்திரத்தில் தலையிட மாட்டோம் என ஏகப்பட்ட தேர்தல் வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சி வழங்கியுள்ளது.
திமுக வேட்பாளர் முரசொலிக்கு ஆதரவாக பட்டுக்கோட்டையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். பரப்புரையின் போது, “ பெண்களுக்கு சொத்துரிமை வழங்கியது திமுக தான்” என குறிப்பிட்டு பேசி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.
கோபிச்செட்டிப்பாளையம் அருகே பறக்கும் படையினரை பாஜக வேட்பாளர் மிரட்டியதால் பரபரப்பு நிலவியது. கோபி அருகே கெட்டி செவியூர் குறிச்சி பிரிவில் ஈரோடு - திருப்பூர் மாவட்ட எல்லையில், பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பாஜக வேட்பாளர் ஏ.பி. முருகானந்தம் கார் வந்தது. அப்போது சோதனைக்கு ஒத்துழைக்காமல், அதிகாரிகளை மிரட்டியுள்ளார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
வங்கிகளின் குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என ரிசர்வ் வங்கி அறிவிப்பு - ரெப்போ வட்டி விகிதம் 6.5% ஆக நீடிப்பதாக ஆளுநர் சக்தி காந்த தாஸ் தெரிவித்துள்ளார்
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்துள்ளது. ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.6,510க்கும் சவரனுக்கு ரூ.52,080க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளியின் விலை கிராமுக்கு 35 பைசா குறைந்து ரூ.85 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தேர்தல் நடத்தை விதியை மீறியதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது அதிமுக தேர்தல் ஆணியத்திடம் புகார் அளித்துள்ளது.
கரூரில் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியை ஆதரித்து அமைச்சர் உதயநிதி வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், மகளிர் உரிமைத்தொகை வரவில்லை என சிலர் கூறுகின்றனர். அதில் பிரச்சினை இருப்பது உண்மைதான். ஆனால் அது விரைவில் சரிசெய்யப்படும் என தெரிவித்தார்.
இதனால் மகளிர் உரிமைத் தொகை குறித்து பேசியது தேர்தல் நடத்தை விதிமீறல் என அதிமுக தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளது.
விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலையில் உள்ள மைதானத்தில் இன்று திமுக தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடக்கிறது. இதில் திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பிரச்சாரம் மேற்கொள்கிறார். இந்த பிரச்சாரத்தில் விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி விசிக வேட்பாளர் ரவிக்குமாரை ஆதரித்தும், கடலூர் நாடாளுமன்றத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத்தை ஆதரித்தும் வாக்கு சேகரிக்க உள்ளார்.
மயிலாடுதுறையில் வனக்காவலர்களால் தேடப்பட்டு வரும் சிறுத்தை மூன்று நாட்களாக போக்கு காட்டி வருகிறது. அந்த சிறுத்தையை பிடிக்க அதிகாரிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இதனால் மயிலாடுதுறையில் 9 பள்ளிகளுக்கு விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் மிகவும் பயத்தில் ஆழ்ந்துள்ளனர்.
இந்நிலையில் மாவட்ட நிர்வாகம், விரைவில் சிறுத்தை பிடிபடும் எனவும் மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளது. மேலும் சிறுத்தை பிடிக்க வனக்காவலர்கள் மலைப்பகுதியில் முகாமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Background
வரும் 19 ஆம் தேதி தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலை ஒட்டி அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திமுக, அதிமுக, பாஜக கூட்டணி கட்சிகள் மற்றும் நாம் தமிழர் கட்சி என தமிழ்நாட்டில் 4 முனை போட்டி நிலவுகிறது. அனைத்து கட்சிகளும் விமர்சனங்களை முன்வைத்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். தேர்தலை முன்னிட்டு பிரதமர் மோடி வரும் 9 ஆம் தேதி தமிழ்நாட்டிற்கு வருகை தருகிறார்.
மேலும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் இன்று விழுப்புரத்தில் பிரச்சாரம் மேற்கொள்கிறார். விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்கிறார். அதேபோல், திருச்சியில் உதயநிதி ஸ்டாலின், துரை வைகோவை ஆதரித்து பரப்புரை மேற்கொள்கிறார். ஏற்கனவே, கே.என்.நேரு தரப்பு துரை வைகோவிற்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்து வந்த நிலையில், உதயநிதி என்ன பேசப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
அதிமுக தரப்பில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் சேலத்தில் எடப்பாடி பழனிசாமி பரப்புரை மேற்கொள்கிறார். பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகிய நிலையில் இம்முறை தேமுதிக உடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறது. தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், இன்று காங்கிரஸ் கட்சி தரப்பில் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட உள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் சிறுத்தை புலி நடமாட்டம் இருப்பதால் 9 பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சிறுத்தை நடமாட்டத்தால் பாதுகாப்பு கருதி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் 10 குழுக்கள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. இது போன்ற நிலையில் நாட்டில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் காணலாம்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -