Breaking News LIVE: மாணவர்களுக்கு பள்ளிகள் மூலமே வங்கிக்கணக்கு - அமைச்சர் அன்பில் மகேஸ்

Breaking News Live: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே உடனுக்குடன் காணலாம்.

ஆர்த்தி Last Updated: 04 Mar 2024 08:21 PM
Breaking News LIVE: மாணவர்களுக்கு பள்ளிகள் மூலமே வங்கிக்கணக்கு - அமைச்சர் அன்பில் மகேஸ்

2024-25ம் கல்வியாண்டில் 6ம் வகுப்பில் சேரும் மாணவர்களுக்கு பள்ளிகள் மூலம் புதிய வங்கிக்கணக்கு தொடங்கப்படும். உதவித் தொகைகள், ஊக்கத் தொகைகள் தங்குதடையின்றி மாணவர்கள் சென்றடையும் வகையில் வங்கிக்கணக்கு என அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். 

Breaking News LIVE: மசூதிகளுக்கு பச்சரிசி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணை..!

ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க மசூதிகளுக்கு பச்சரிசி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும், மசூதிகளுக்கு தேவைப்படும் அரிசிக்கான மொத்த அனுமதியை வழங்க மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் அறிவுரை வழங்கியுள்ளார். 

Breaking News LIVE:தனி விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார் பிரதமர் மோடி..!

நந்தனத்தில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்திலும் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார். பல்வேறு நிகழ்ச்சியின் கலந்து கொள்வதற்காக தனி விமானம் மூலம் சென்னை வந்தார் பிரதமர் மோடி. 


 

Breaking News LIVE: செந்தில் பாலாஜி மீது பழிவாங்கும் நோக்கில் வழக்குப்பதிவு செய்யவில்லை - அமலாக்கத்துறை

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது பழிவாங்கும் நோக்கி வழக்குப்பதிவு செய்யவில்லை என அமலாக்கத்துறை தகவல் தெரிவித்துள்ளது. வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரிய முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என தெரிவித்தது.

3 தமிழர்களை இலங்கைக்கு அனுப்பத் தயார் - தமிழ்நாடு அரசு

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்து விடுதலையான முருகன், ஜெயக்குமார் மற்றும் ராபர்ட் பயஸ் ஆகிய 3 தமிழர்களையும் இலங்கைக்கு அனுப்பத் தயார் என தமிழ்நாடு அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.  தங்களை இலங்கை அனுப்ப உத்தரவிட வேண்டும் என, மேற்குறிப்பிடப்பட்ட 3 பேரும் தொடர்ந்த வழக்கு விசாரணையின் போது, தமிழக அரசு விளக்கம்.

Breaking News LIVE: ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்கள் சந்திப்பு

மார்ச் 7ஆம் தேதிக்குள் திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு நிறைவடையும். திமுக கூட்டணியில் பேச்சுவார்த்தை சுமூகமாக சென்று கொண்டிருக்கிறது. போதை பொருள் விற்பனையில் ஐ.டி. ஊழியர்கள் ஈடுபடுவதாக அபாண்டமான குற்றச்சாட்டை முன்வைக்கிறார் பழனிசாமி. திமுக கடும் கண்டனத்தை பதிவு செய்கிறது. பழனிசாமி மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால் வழக்கு தொடரப்படும்.

Breaking News LIVE: மக்களின் கருத்துகளை அறிய நீங்கள் நலமா திட்டம் - முதலமைச்சர் அறிவிப்பு

மக்களின் கருத்துகளை அறிய “நீங்கள் நலமா?” திட்டம் மார்ச் 6 ஆம் தேதி முதல் செயல்படுத்தப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஆட்சியர்கள், அமைச்சர்கள், முதலமைச்சர் நேரடியாக மக்களை தொடர்புக்கொண்டு கருத்துகளை கேட்டறிய உள்ளோம் எனவும் அவர் கூறியுள்ளார். 

Breaking News LIVE: ரூ.656 கோடியில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய முதலமைச்சர் ஸ்டாலின்

மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் ரூ.656 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டங்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். மேலும் ரூ.423 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட கட்டடங்களையும் அவர் திறந்து வைத்தார். 

Breaking News LIVE: மக்களவை தேர்தல்.. சென்னையில் பா.ஜ.க ஆலோசனை..

மக்களவை தேர்தலை முன்னிட்டு பாஜக மைய குழு இன்று சென்னையில் ஆலோசனை மேற்கொள்ள உள்ளது. எல்.முருகன், அண்ணாமலை, தேர்தல் பொறுப்பாளர் அரவிந்த் மேனன், சுதாகர் ரெட்டி, நயினார் நாகேந்திரன், வானதி உள்ளிட்டோர் கலந்துக்கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Breaking News LIVE: பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு வழக்கு என்.ஐ.ஏவிடம் ஒப்படைப்பு

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு வழக்கை தேசிய புலனாய்வு முகமையிடம் ஒப்படைத்தது கர்நாடக காவல்துறை. 

கோவை வடவள்ளி பள்ளிக்கு மீண்டும் வெடுகுண்டு மிரட்டல்

கோவை  வடவள்ளி பள்ளிக்கு மின்னஞ்சல் மூலம் மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் நேற்று இரவு முதல் வெடிகுண்டு பரிசோதகர்கள் பள்ளியில் தீவிர சோதனை நடத்தியது மட்டும் இல்லாமல், மாணவர்களின் பைகளையும் சோதனை நடத்தி பள்ளிக்குள் அனுமதித்து வருகின்றனர். 

11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு; 8 லட்சம் மாணவர்கள் தேர்வெழுத தயார்

தமிழ்நாட்டில் இன்று 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்குகின்றது. 8 லட்சம் மாணவர்கள் தேர்வெழுத ஆயத்தமாகி வருகின்றனர். பொதுத் தேர்வு எழுதும் அனைத்து மாணவ மாணவியர்களுக்கும் ஏபிபி நாடு சார்பாக வாழ்த்துகள். 

பிரதமர் மோடி இந்து இல்லை - லாலுபிரசாத் யாதவ் கடும் விமர்சனம்

பிரதமர் மோடி இந்து இல்லை என லாலு பிரசாத் யாதவ் மிகக் கடுமையான விமர்சனத்தை வைத்துள்ளார். 

Background

Petrol Diesel Price Today, March 4: கிட்டத்தட்ட மாற்றம் இல்லாமல் 18 மாதங்களை விட்ட நிலையில், சென்னையில்  இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரத்தை அறியலாம்.


பெட்ரோல், டீசல்:


உலகமே எரிபொருளை மையமாகக் கொண்டு தான் இயங்கி வரும் வேளையில் முழுமையான மின்சார சக்தியில் செயல்படும் அளவிற்கு உலக நாடுகள் தங்களை உயர்த்திக் கொள்ள முயற்சித்து வருகின்றன. அந்த வரிசையில் இந்தியாவும்  முழுமையாகக் களம் கண்டுள்ளது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் சம்பந்தமான பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன.  அதேசமயம் வெகு விரைவில் முற்றிலுமான மின்மயமான நாட்டினை நோக்கி இந்தியா தன்னை நகர்த்திக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


இந்தியாவை பொறுத்தவரை 80% வாகனங்கள் பெட்ரோல், டீசல் ஆகியவற்றில் இயங்கி வருகிறது. இதன் காரணமாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு மக்களின் அன்றாட வாழ்க்கையில் பெரும் மாற்றத்தினை ஏற்படுத்துகிறது. அதேபோல் எரிபொருட்களின் விலை உயர்வு என்பது அன்றாட அத்தியாவசியப் பொருட்களின் மீதான விலை உயர்வில் மிகப்பெரிய அளவில் பிரதிபலிக்கும். எனவே சாமானிய மக்களும் எரிபொருள் விலை நிலவரத்தை ஒவ்வொரு நாளும் கண்காணித்து வருகிறார்கள்.


இன்றைய விலை நிலவரம்


இந்நிலையில் சென்னையில் இன்று ( மார்ச் 4ஆம் தேதி) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63 க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை நிர்ணயமானது தொடர்ந்து மாற்றமின்றி 653வது நாளாக தொடர்கிறது. அதாவது, விலை மாற்றமின்றி பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்படுவது 21 மாதங்களை பூர்த்தி செய்துள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். முன்னதாக கடந்த 2020, 2021 ஆம் ஆண்டுகளில் பரவிய கொரோனா வைரஸ் தொற்றால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் மிகப்பெரிய பொருளாதார பாதிப்பை சந்தித்தனர்.









அப்போது கலால் வரி குறைப்பால் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை 6 ரூபாய்க்கும் குறைந்தது. இத்தகைய சூழலில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி 16 மாதங்களை கடந்துள்ளது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தேசிய உயிரி எரிபொருள் கொள்கை


கடந்த 2018ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்த தேசிய உயிரி எரிபொருள் கொள்கை 2030ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனாலைக் கலந்து விற்க இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், அந்த இலக்கு தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக 2025 ஆம் ஆண்டு என மாற்றியமைக்கப்பட்டது.


இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, ”இருபது சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் டிசம்பர் அல்லது ஜனவரி முதல் நாட்டில் கிடைக்கும்” எனத்தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எத்தனால் உற்பத்தியை நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். ஏப்ரல் 2023க்கு முன்னதாக டிசம்பர் அல்லது ஜனவரியில் 20 சதவீதம் கலப்பு எரிபொருள் சந்தைக்கு வரும் என்று நான் நம்புகிறேன்" என் கூறினார். 


நெகிழ்வான எரிபொருள் வாகனங்கள் (கலப்பு எரிபொருளில் இயங்கும் வாகனங்கள்) கிடைக்கும் பிரேசிலை உதாரணமாக மேற்கோள் காட்டி பேசிய ஹர்தீப் சிங் பூரி, "நுகர்வோர் விருப்பப்படி எத்தனால் அல்லது பெட்ரோலை எடுத்துக் கொள்ளலாம். இது அரசாங்கத்தின் இறுதி இலக்காக இருக்கும். 


இருப்பினும், அந்த நிலையை அடைய, சில தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. அதற்கான, பணிகள் நடந்து வருகின்றன. எத்தனால் கலப்படம் தொடர்பாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுடன் ஒரு முக்கிய சந்திப்பை நடத்த உள்ளோம். பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலப்பதை அடைவதற்கான இலக்கு தேதியை 2025ஆம் ஆண்டுக்கு ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியா முன்னெடுத்துள்ளது.


பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதற்கு, நமது நாட்டிற்கு 1,000 கோடி லிட்டர் கொள்ளளவு தேவைப்படுகிறது. 450 கோடி லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 400 கோடி லிட்டருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 20 சதவிகித கலப்பிற்கான போதுமான எத்தனால் கைவசம் உள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து பெட்ரோலிலும் 20 சதவீதம் எத்தனால் இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.