Breaking News LIVE: மக்களவைத் தேர்தலுக்காக ஏப்ரல் 19ம் தேதி தமிழ்நாட்டில் பொது விடுமுறை
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் காண, ஏபிபி இணைய செய்தி தளத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள்
மக்களவைத் தேர்தலுக்காக தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 19ம் தேதி பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இன்று ஈரோட்டில் மட்டும் 106 டிகிரி பாரன்ஹூட் வெயில் கொளுத்தியது. இதனால், மக்கள் அவதிக்குள்ளாகினர்.
நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் பேசியுள்ளார்.
அடுத்த 3 மணி நேரத்தில் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னையில் 100 டிகிரி பாரன்ஹூட் சுட்டெரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தைவானை தொடர்ந்து ஜப்பானில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.3ஆக பதிவாகியுள்ளது.
மணப்பாறையில் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியை ஆதரித்து அமைச்சர் உதயநிதியும், விருதுநகரில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை ஆதரித்து கனிமொழி எம்.பி.,யும் தீவிர தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர்.
மோடியின் 'புதிய இந்தியா'வில் டிஜிட்டல் வழிப்பறி செய்யப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். எக்ஸ் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள அவர், “ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் என்று எளிய மக்களின் ஆசையைத் தூண்டி ஆட்சிக்கு வந்தவர்கள் செய்தது என்ன? சிறுகச் சிறுகச் சேர்த்த பணத்தையும் செல்லாததாக்கி, வங்கிகளில் வரிசையில் நிற்க வைத்து வதைத்தார்கள். சுருக்குப் பையில் இருக்கும் பணத்தையும் பறித்துக் கொள்ளும் ஆட்சியாக, மினிமம் பேலன்ஸ் இல்லை என அபராதம் விதித்தே ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் ஏழைகளிடம் உருவியிருக்கிறார்கள். கார்ப்பரேட்களுக்குப் பல லட்சம் கோடி கடன் தள்ளுபடி, கார்ப்பரேட் வரியை 30 விழுக்காட்டில் இருந்து 22 விழுக்காடாக குறைத்து, ஆண்டுதோறும் லட்சக்கணக்கான கோடிகளை வரிச்சலுகையாக அள்ளித் தந்துவிட்டு, அதை ஈடுகட்ட, மனதில் ஈரமே இல்லாமல், அல்லற்படும் ஏழை மக்களிடம் அரசே இப்படி டிஜிட்டல் வழிப்பறி செய்வதை அனுமதிக்கலாமா? இது பணக்காரர்கள், கோடீஸ்வரர்களுக்கான அரசு அல்ல; ஏழைகளுக்கான அரசு எனக் கூசாமல் புளுகுகிறார் பிரதமர் மோடி” என தெரிவித்துள்ளார்.
மக்களவை தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை நாளை வெளியாகிறது - காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் ராகுல் காந்தி இருவரும் இணைந்து தேர்தல் அறிக்கையை வெளியிடுகின்றனர்.
இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணியில் பரப்புரையில் ஈடுபட்ட முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தில் காரில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்தனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு மண்டபம் அருகே ஓபிஎஸ் கார் சோதனை செய்யப்பட்டிருந்தது.
மக்களவை தேர்தலில் வாக்களிக்க பூத் சிலிப்பை அடையாள அட்டையாக பயன்படுத்த முடியாது என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஆதார் அட்டை உள்ளிட்ட 12 ஆவணங்களை பயன்படுத்தி வாக்களிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Background
- காவிரி மேலாண்மை ஆணையத்தில் 29வது கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பெங்களூரு நகரத்தில் நிலவி வரும் தண்ணீர் பஞ்சம் மற்றும் இதற்கு தீர்வாக கட்டப்பட்டு வரும் மேகதாது அணையின் முக்கியத்துவம் என பல நிகழ்வுகளை எழுப்ப கர்நாடகா அரசு திட்டமிட்டுள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்குமாறு 4 மாநில அதிகாரிகளுக்கும், காவிரி மேலாண்மை வாரியத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தார் அழைப்பு விடுத்துள்ளார்.
- மயிலாடுதுறை மாவட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் இருக்கும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 7 பள்ளிகளிக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது. அங்குள்ள செம்மங்குள பகுதிகளில் சிறுத்தை சுற்றித்திரியும் காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சிறுத்தையை பிடிக்க தேவையான நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் எடுத்துள்ளது. எனவே மக்கள் பயப்பட தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 10 ஆம் வகுப்பு தேர்வு நடைபெறும் பள்ளிகளில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
- ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் பஞ்சாப் மற்றும் குஜராத் அணிகள் நேருக்கு நேர் மோதுகின்றது. அஹமதாபாத்தில் உள்ள நரேந்திரமோடி ஸ்டேடியத்தில் இந்த போட்டி இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது. குஜராத் அணி 3 போட்டிகளில் விளையாடி 4 புள்ளிகளுடன் 5வது இடத்தில் உள்ளது. பஞ்சாப் 4 போட்டிகளில் விளையாடி 2 புள்ளிகள் பெற்று தற்போது 8வது இடத்தில் உள்ளது.
- மக்களவை தேர்தலுக்கான தபால் வாக்குப்பதிவு சேகரிக்கும் பணி இன்று முதல் தொடங்கியுள்ளது. முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டவர்களும் தபால் வாக்களிப்பார்கள் என்பதால் துப்பாக்கி ஏந்திய காவல்துறையினர் பாதுகாப்புடன் வாக்குகள் வீடு, வீடாக சேகரிக்கப்பட்டு வருகிறது. ஒருவேளை தபால் வாக்குகள் செலுத்த முடியாதவர்களுக்கு ஏப்ரல் 8 ஆம் தேதி மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்படும் என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -